- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 25
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
இரவு மணி பதினொன்று ஐம்பதை தாண்டியிருந்தது.
வெளி மாநிலத்திலிருந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான் வேதா. வழக்கமாய் விளக்கை அணைத்திடாமலே உறங்கிடுவாள் அட்சரா.
ஆனால், இன்றைக்கோ அறை கும்மிருட்டு கொண்டிருந்தது. ஆணவனோ, இருட்டிய அறையின் விளக்கை தட்ட, மனம் கவர்ந்த கள்வனை துயில் கொள்ளாது வரவேற்றாள் வஞ்சியவள்.
வேதாவோ பெண்ணவள் கொண்டிருந்த கோலம் கண்டு ஆடிப்போனான் ஒரு நொடி.
ஏந்திழை அவளோ திருமண சேலையை அணிந்த வாக்கில், அவனைக் கண்டவுடன் உதடு மடக்கி பார்வைகளை அலைய விட்டாள, இனம் புரியா உணர்வொன்று உள்ளுக்குள் ஊற்றெடுக்க.
''அட்சரா..''
என்றவனோ இதயத்துடிப்பு எகிறி நிற்க, கதவில் ஒட்டி நின்றான் பல்லியாய்.
''உங்க மனைவியா வாழ..''
என்ற ஆரணங்கோ வார்த்தைகளை நிறுத்தி எதிரிலிருந்த ஆளனை ஏறெடுத்து,
''இந்த அட்சராக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுப்பீங்களா வேதரஞ்சகன்?!''
என்றப்படி அவனை காதலோடு நோக்க, சில்லிட்ட முதுகுத்தண்டு நனைய,
''உங்களுக்கு..''
என்ற வேதாவோ கேள்வியை கூட முழுதாய் கேட்க திரணியற்றவனாய் அழகு பதுமை அவளையே இமைக்காது வெறித்தான்.
''முயற்சி பண்ணேன்! ஆனா, வரலே!''
என்ற பனிமொழியோ, தலையணைக்கு ஓரம் ஒளித்திருந்த அவர்களின் கல்யாண பத்திரிகையை வேதா பார்க்க தள்ளிட, அதை கண்டவனுக்கோ ஏதேதோ தோன்றியது மூளைக்குள்.
''ஆன்ட்டி.. சோரி! அத்தைக்கிட்டே இதை காட்டி கேட்டேன்?! சொன்னாங்க! இத்தனை நாளா நான் தேடி புலம்பின என் ரஞ்சகன் யாருன்னு!''
என்ற முற்றிழையோ காதல் கண்களில் குளமாய் ததும்ப உரைத்தாள்.
''வேறென்னே சொன்னாங்க?!''
என்ற நாயகனோ பதைத்தான் எங்கே தாய் முன்னாடி நடந்த விஷயங்களை ஏதேனும் வதூ அவளிடத்தில் சொல்லிவிட்டாரோ என்றெண்ணி பயந்து.
''உன் ரஞ்சகன்கிட்டையே கேட்டுக்கோன்னு சொல்லிட்டாங்க!''
என்ற பொற்றொடியின் பதிலில் வேதாவிற்கோ நிம்மதி பிறந்தது.
''சொல்லுங்க வேதா?! ஏன் இத்தனை நாளா நீங்கதான் என் ரஞ்சகன்னு என்கிட்ட சொல்லாமே மறைச்சீங்க?!''
என்ற அம்மணியின் வேள்விக்கு, டவலை தூக்கி தோளில் போட்டவனோ,
''நீங்க எல்லாத்தையும் மொத்தமா மறந்த ஆளா இருந்திருந்தா, கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய எல்லாத்தையும் சொல்லிருப்பேன் அட்சரா! ஆனா, நீங்களே ரொம்ப பயந்து போய், இப்போதான் ஓரளவு தெறி வந்துக்கிட்டு இருக்கீங்க! இந்த நேரத்துலே போய், நான்தான் உங்க புருஷன், நீங்கதான் என் பொண்டாட்டின்னு சொல்றதெல்லாம் சரி வராதுன்னு தோணுச்சு! அதான், நீங்க முழுசா குணமான பின்னாடி சொல்லிக்கலாம்னு பொறுமையா இருந்திட்டேன்!''
என்றுக்கூறி குளியலறை நுழைய,
''இப்போதான் புரியுது! ஏன் எனக்கு உங்களை பார்த்த உடனே ரொம்ப நாள் பழகின உணர்வு வந்ததுன்னு! அதுவும் உங்களோட இருக்கும் போது ரொம்ப பாதுகாப்பா, சந்தோஷமா இருந்ததெல்லாம் முன்னாடியே எனக்கு அனுபவமான விஷயங்கள்தான் போலே!''
என்றவள் மென்புன்னகை கொள்ள, இதழோரம் சிறு முறுவல் பூத்தவனோ குளியலறை கதவை இழுத்து சாத்தினான்.
பகினி அவளோ மனதில் வேறொரு எண்ணங்கொண்டிருந்தாள் கள்ளியாய்.
ஆகவே, நித்திரா தேவியை விரட்டி அடித்து காத்திருந்தாள் அவள் ரஞ்சகனுக்காய்.
ஆளான் அவனும் வந்து சேர்ந்தான் படுக்கைக்கு. முதல் பத்து நிமிடங்களுக்கு அமைதியாய் இருந்த சேயிழை, பின் மெதுவாய் மல்லாக்க கிடந்தவன் முகம் பார்க்க திரும்பினாள்.
பொஞ்சாதியின் அசைவுகளை உணர்ந்தவன்,
''நீங்க இன்னும் தூங்கலையா?!''
''நீங்க சொல்லவே இல்லையே?! நான் சோலையிலே எப்படி இருந்தேன்னு?!''
''உங்களுக்கென்னே?! ரொம்ப அம்சமாதான் இருந்தீங்க!''
''அவ்ளோதானா?!''
''பேரழகி மாதிரி இருந்தீங்க போதுமா?!''
என்றவனோ குப்பிறத்திரும்பி பேடையின் முகம் பார்க்க,
''அத்தை சொன்னாங்க, அந்த கல்யாண புடவை நீங்க ஆசைப்பட்டு எடுத்ததுன்னு! ஆமாவா?!''
என்ற கோதையோ கன்னத்தில் கரம் பதித்து, ஒருக்களித்து வேதாவின் முகத்தை பார்க்க,
''ஹ்ம்ம்.. உங்க கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்னு தோணுச்சு அந்த குங்கும சிவப்பு!''
என்றவனோ முகத்துக்கு அடியில் கரங்கள் மடக்கி அதன் மீது முகம் பதித்து அட்சராவை பார்க்க,
''நேத்து வரைக்கும் யாரு என்னோட ரஞ்சகன்னு தெரியாமலேயே அவனை கொஞ்சங்கொஞ்சமா மறந்து இந்த வேதாவுலே மயங்க ஆரம்பிச்சேன்! இப்போ, நான் யாருன்னே தெரியாத நிலையிலே கூட என் எண்ணத்துலே இருந்த அந்த ஒரே ஒரு ரஞ்சகனும் இந்த நாள்லே, நான் கிறங்கி நிக்கறே என் வேதாவும் ஒன்னுதான்னு தெரியறப்போ என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்லே!''
என்ற ஒளியிழையோ மெதுவாய் அவன் உள்ளங்கையில் அவள் விரல்கள் பதிக்க,
''நாமே ஆழமா நேசிக்கறே ஒன்னு நமக்கானதுனா, எப்போதுமே அது நம்ப கையே விட்டு போகாது அட்சரா!''
என்ற வேதாவோ அவன் கரம் பற்றிய மங்கையின் கையை இறுக்கமாய் பற்றிக்கொள்ள,
''நான் ஒன்னு கேட்கவா?!''
என்ற வதுகையின் திடீர் நெருக்கத்தில் ஆணவனுக்கோ முதுகுத்தண்டு வேர்த்தது.
''என்ன?!''
என்றவனோ அடிக்குரலில் அச்சத்தை ஒழித்தவனாய் எச்சில் விழுங்கி சமாளிக்க,
''உங்க நெஞ்சுலே படுத்துக்கவா?!''
என்ற அட்சராவில் வினா முடியதான், நிம்மதியே வந்ததே வேதாவிற்கு.
''எப்போதுமே அப்படித்தானே படுக்கறீங்க?!''
என்றவனோ மெல்லிய முறுவலோடு சமாளிக்க,
''அது டி- ஷேர்ட் போட்டு! இப்போ, அது இல்லாமே!''
என்றவள் முகத்தை வேதாவோ இது எங்கு போய் முடியப்போகிறதோ என்ற கலவரத்தோடு குறுகுறுவென்று பார்க்க,
''குழந்தை மாதிரி, உங்க மார் சூட்டுலே புதைஞ்சு போக ஆசையா இருக்கு வேதா! நிம்மதியான ஒரு தூக்கம் தூங்கணும் போலே தோணுது!''
என்றவளின் எண்ணத்தை இதற்கு மேலும் எப்படி சந்தேகங்கொண்டிட முடியும் என்று வேதாவோ அவன் மனசாட்சியை கடிந்துக் கொண்டவனாய் அவன் ஆடையை அகற்றி, ஆணவனின் சரிப்பாதியை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
யார் நெருங்க யார் நொறுங்க...

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 25
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.