Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

யாரடி நீ?
நீயாக வந்தாய்!
எதற்கோ வந்து, எதையோ பேசி, இப்படி ஆக்கி விட்டாயே!
எனக்கு உன்னை எவ்வளவு பிடித்திருக்கிறதென்று உனக்கு புரியவில்லையடி!
உன்னை சொல்லி குற்றமில்லை!
உனக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது!
ஆனால், என்னை அறிந்தோருக்கு தெரியும்!
ஏன், எனக்கே தெரியும்.
கணக்கில்லா ஆச்சரியமே.
கேடியை சுற்றிய பெண்கள் ஏராளம். ஆனால், நான் சுற்றிய முதல் பெண் நீ.
என்னை அறிந்தோர் மட்டுமே இதை வியந்து பார்ப்பர். உனக்கோ இதெல்லாம் என்னவென்றே தெரியாது.
சிரிப்பால் அடித்த சுந்தரி நீ!
செருப்பால் அடிப்பாயோ என்று நானிருக்க, நாணி பம்பினாய் தெரியிழை நீ!
அந்நொடி தோற்று போய் நின்றேனடி ஜான்!
யாரிடமும் சட்டென ஒட்டிக்கொள்ளாத நான் உன்னிடத்தில் பசையாகி போனதென்ன விந்தையோ.
உன்னை சீண்டி நான் சிரிக்க, ஒவ்வொரு குரல் பதிவிலும் நான் வெகுவாக ரசித்தது உன்
சிரிப்பைத்தான்.
சத்தியமாக! என் மூளை மீது ஆணை!
சத்தியமாக என் சுஜிக்கான குரலது!
என் நாயகியின் சிணுங்களை உன் ஏற்ற இறக்கமான தொனியில் உணர்ந்தேன்!
அவளின் கிறக்கம் என்னுள் இறங்க கண்டேன்!
காந்தாரியவள் செல்ல ஊடல் கொள்ள சொக்கித்தான் போனேன்!
மலைத்து போனேனடி ஜான்!
நான் யாரென்பதை மறந்து கவி கொட்டிட ஆரம்பித்தேன்.
பெயர் மட்டுமே சொன்னேன்.
நிர்மல் என்றேன் சிரித்தாய். நிமல் என்று அதற்கும் சிரித்தாய்.
சலவைத் தூளொன்றின் பெயர் அனுப்பி கிண்டலடித்தாய், கோபம் வருமென்றேன்.
கோபித்துக் கொள் என்றாய், கடித்திடுவேன் என்றேன்!
அழுதிடுவேன் என்றாய், சமாதானம் செய்திடுவேன் என்றேன், சண்டைக்காரி நானென்றாய்,
எனக்கு கேட்க
புடிக்குமென்றேன் பேசாதே சிரிப்பை மட்டுமே பதிலக்கினாய்.
நேரம் போனதே தெரியவில்லையடி ஜான்!
அழகாய் சிரித்தாய்! அப்பதிவை மட்டுமே நாற்பத்தி இரண்டு முறை கேட்டேனடி ஜான்!
சுஜி போல் குரல் மட்டுமல்ல ஆளும் அப்படித்தான். என் இலக்கிய கவிகள் எதுவும் உனக்கு
புரியவில்லை.
விளக்கம் கேட்டாய். விரசமென்றேன்.
காமம் இல்லாது எழுத மாட்டாயா என்றாய், தாராளமாக எழுதுவேனே என்று அதையும் கிறுக்கித்
தள்ளினேன்.
படித்து விட்டு ஹார்ட் போட்டாய்! கள்ளி, என் விவகாரமான விளக்கத்திற்கும் சேர்த்தே வெட்க
எமோஜி போட்டாய்.
எழுத்திற்கே லீவு விட்டிட வைத்தாயடி பாதகத்தி.
அப்படி என்ன இருந்ததோ உன்னிடத்தில். நான் இப்படி மயங்கிப்போக.
ஆறாத வடுக்கு காரணமாக எனக்கு விருப்பமில்லை.
இல்லை! இல்லை! நிஜம் அதுவல்ல!
நீ அழுவதை என்னால் ஜீரணிக்க முடியாது!
எச்சரிக்கையிலேயே நான் அதை உணர்ந்துக் கொண்டேன்!
சுயநலம் குற்ற உணர்ச்சிக்கொள்ள, கிண்டலை நிறுத்திக்கொள்ள நான் எடுத்த முடிவு உன்
நெஞ்சை குத்தி கிழித்ததை நான்
உணராமல் இல்லை.
மன்னித்துவிடு ஜான்!
நேற்றுவரை எழுத்தை வரம் என்ற நான், இன்றைக்கு அதை சாபமாய் உணர்கிறேன்!
மெய்யுரைக்கிறேன் ஜான்!
இத்தனை வருட எழுத்துலக வாழ்வில் நான் முதல் முறை வருந்தியது இன்றைக்குத்தான்!
ஏன் நான் ஆணாக பிறக்கவில்லை!
இருந்தும் உனக்கு நன்றி ஜான்!
நீ நிர்மலுக்குள் ஏற்படுத்திய தாக்கம் நிமலை மீண்டும் அவனையே புரட்டி பார்க்க
வைத்திருக்கிறது!
நிமல் என்னை, நீ இப்படியே அரித்துக் கொண்டிரு ஜான்! மண் திண்ணும் சதையாய் என்
நினைவுகள் காணாது போகட்டும்!
ஒருக்கால் நான் மீண்டும் என் சரித்திரத்தை எழுத தொடங்கினால், அதற்கு முழுமுதற்காரணம் நீ
ஒருத்தியே!
சுஜி, கேடிக்கு இல்லையென்ற ரணமே அவனை வெறிக்கொண்டு எழுத வைக்கும்!
உன்னை விட எனக்கு அதிகமாக வலிக்கிறது ஜான்!
என் உடலை எப்படி சதிகார நிர்மலன் கருணையின்றி சொந்தங்கொண்டாடினானோ,
அதுப்போல எனக்கான உன்னை நான்
அடைய முடியா இவ்வலியே என் உத்வேகம்!
உன்னை கதற கதற அழ வைப்பவனும் நான்தான்!
உன்னை காதலோடு குழந்தையாய் அணைத்துக் கொள்பவனும் இக்கேடிதான்!
நீ எனக்கானவள் ஜான்!
உன்னை விட மாட்டான் இந்த கேடி!
Author: Admin 1
Article Title: யாரடி நீ?
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாரடி நீ?
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.