What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
WhatsApp Image 2024-10-13 at 4.40.58 PM.jpeg

அத்தியாயம் 4

கடந்தகாலம்

அலுவலக கார் பார்க்கிங்

''இந்தர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு! கண்டிப்பா நம்ப காதலுக்கு எங்க வீட்டுலே ஒத்துக்க மாட்டாங்க!''

சொன்ன தாரகையோ காதலனின் முழங்கையில் தலை சாய்த்து சோகத்திற்கு தோதாய் இரு சொட்டு கண்ணீர் கொண்டாள்.

''முதல்லே நான் என் குடும்பத்தோட வந்து உங்க வீட்டுலே பேசறேன் நிலா! அப்பறம் பார்த்துக்கலாம் மத்ததையெல்லாம்!''

சமாதானம் சொன்னான் காதலன் இந்தர்.

''நீங்க வந்து பேசினாலும், பேசாட்டியும் நம்ப கல்யாணம் நடக்காது!''

''ஏன் இப்படி அபசகுணமாவே பேசறே நிலா?! என்னாச்சு உனக்கு?!''

மெல்லிய கோபத்தில் கரத்தை பிரித்துக் கொண்டான் நாயகனவன் அம்மணியின் பிடியிலிருந்து.

''இந்தர், உங்க அளவுக்கு எங்கக்கிட்ட வசதியும் இல்லே, பணமும் இல்லே! இந்த ஒரு காரணம் போதாதா, நம்ப காதல் சாக போறதை உறுதிப்படுத்த?!''

''முட்டாள் மாதிரி பேசாதே நிலா! என் அப்பா அம்மா ஒன்னும் பணத்துக்காக அலையறவங்க கிடையாது! அதுவும், எங்கக்கிட்ட இல்லாத பணமா?! அப்படி இருக்கும் போது, எதுக்காக நாங்க உன் வீட்டுலே பணம் எதிர்பார்க்க போறோம்!''

''நீங்க இப்போ இப்படி சொல்லலாம் இந்தர்! ஆனா, நடைமுறைக்கு இதெல்லாம் ஒத்து வராது! உங்க அந்தஸ்துக்கு பொண்ணு இல்லையான்னு நாலு பேர் கேட்பாங்க! சொந்தக்காரவங்க உங்க குடும்பத்தை ஒதுங்கி வெச்சோ, இல்லே இறக்கி வெச்சோ பேச ஆரம்பிப்பாங்க!''

சமூக முகங்களின் அவலட்சனங்களை எடுத்துரைத்தாள் கவலைக் கொண்டவள்.

''நிலா, நீ எந்த காலத்துலே இருக்கே?! அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான்! அதையெல்லாம் பார்த்தா, இந்த உலகத்துலே யாருமே வாழ முடியாது! அதுவும், நீ கொண்டு வர பணத்துலதான் நான் உன்னே வெச்சு குடும்பம் நடத்தணும் அப்படின்னா, நான்லாம் ஆம்பளைன்னு சொல்லிக்கவே வெட்கப்படணும்?!''

''எதுக்கு இப்போ இவ்ளோ கோபப்படறீங்க நீங்க?! விடுங்க! பார்த்துக்கலாம்!''

''என்னே கடுப்பாக்கி கத்த வெச்சுட்டு, இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரியும், அதுக்கு நீ காரணமே இல்லாத மாதிரியும் எப்படி நிலா உன்னாலே மட்டும் முகத்தை இப்படி குழந்தை மாதிரி வெச்சுக்க முடியுது?!''

என்ற இந்தரோ காரின் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நிலாவின் நுதல் முட்ட,

''இந்த பேபி மூஞ்ச பார்த்துத்தானே உங்களுக்கு என் மேலே லவ்வே வந்தது! மறந்துட்டிங்களா எம்.டி. சார்!''

என்ற பேதையோ அவன் கழுத்தை கரங்களால் வளைத்து கட்டிக்கொண்டு சிரித்தாள்.

**********************************


கடந்தகாலம்

வேதாவின் இல்லம்

இரு வீட்டு பெரியவர்களும் பெண் வீட்டில் குழுமியிருந்தனர்.

அதிகமானோர் யாருமில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களை மட்டும் வேதாவின் அப்பா அம்மா மரியாதைக்கு அழைத்திருந்தார்கள்.

வந்திருப்பவர்கள் பெரிய இடம் என்பதால் சொந்தபந்தங்களை கூப்பிட்டு ஒரே நாளில் எல்லாவற்றையும் தடபுடலாய் செய்திட பெண்ணை பெற்றவர்களுக்கு விருப்பமில்லை.

ஆகவே, முதலில் எல்லாம் சுமூகமாய் பேசி முடிக்கட்டும், பிறகு மற்றவர்களுக்கு தகவல் சொல்லிக் கொள்ளலாம் என்றெண்ணினர்.

''என்னதான் நம்ப பிள்ளைங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருந்தாலும், அதை நேரடியா நம்பக்கிட்ட வந்து சொல்லி எல்லாத்தையும் முறைப்படி செய்ய நினைச்சது பாராட்டப்பட வேண்டிய விஷயமே!''

என்று இந்தரின் அப்பா மோகன் ஆரம்பிக்க,

''இதுக்காகவே சீக்கிரமா இவுங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடலாம் போலே!''

என்று நிலாவின் அப்பாவும் இடத்தை கலகலப்பாக்கினார்.

''அப்பறம் என்ன?! பேச வேண்டியதெல்லாம் பேசிட்டா, கல்யாண தேதியை குறிச்சிடலாம்!''

என்றார் ஓசியில் மிக்ஸ்சர் உண்ண வந்த பக்கத்து வீட்டு தாத்தா.

''இந்தர், நிலா கல்யாணத்தை பொறுத்த வரைக்கும், உங்க பொண்ணுக்கு நீங்க இதான் செய்யணும், செய்யக்கூடாதுன்னு எந்த எதிர்ப்பார்ப்பும் எங்களுக்கு இல்லே! ஒருக்கால், நீங்க உங்க பொண்ணுக்கு ஏதாவது செய்யணும் அப்படின்னு நினைச்சா, அது உங்க விருப்பம்! தாராளமா செஞ்சிக்கோங்க, உங்க மனத்திருப்திக்காக!''

இந்தரின் அம்மா ராதா கச்சிதமாய் பேசி முடித்தார்.

''நிலாக்கு செய்யறதை பத்தியெல்லாம் ஒன்னுமில்லே சம்பந்தி! ஆனா, எங்களுக்கு எங்களுக்கு ஒரு சின்ன கோரிக்கை இருக்கு! அதுக்கு நீங்க சம்மதிப்பீங்களான்னுதான் தெரியலே?!''

பொடி வைத்து பேசினார் அம்பிகா.

பெற்றோரின் வாக்கியத்தில் நிலாவின் முகமோ கலவரமாகியது. இந்தரோ கண்ணால் சைகை செய்து ஆசுவாசப்படுத்தினான் எதிர் சோபாவில் அமர்ந்திருந்த காதலியை.

''நானே சொல்றேன், என்ன விஷயம்னு!''

என்று ஆரம்பித்தார் அம்பிகாவின் கணவர் கந்தன்.

''உங்க பையனோட விருப்பத்தை மதிச்சு, எங்க வீட்டு படியேறி தட்டு மாத்த வந்திருக்கீங்க! என்னதான், உங்களுக்கும் எங்களுக்கும் வசதியிலே ரொம்பவே வித்தியாசம் இருந்தாலும், எங்களாலையும் இந்த சம்பந்தத்தை வேண்டாம்னு சொல்ல முடியலே! காரணம், எங்க பொண்ணு நிலாவும் உங்க பையனை மனசார விரும்பறா!''

''என்ன சம்பந்தி நீங்க, நாங்கதான் ஏற்கனவே சொல்லிட்டோமே இந்த அந்தஸ்தெல்லாம் பார்க்கறே குடும்பம் நாங்க இல்லன்னு!''

மீண்டும் ஞாபகப்படுத்தினர் குடும்ப நிலைப்பாட்டை மோகன்.

''இல்லே சம்பந்தி, இது அதைப்பத்தி இல்லே! இது வேறே விஷயம்! நிலா எங்களுக்கு ஒரே பொண்ணு! பிரிஞ்சி இருக்க முடியாத காரணத்தாலதான் அவளே நாங்க தூரமா கூட படிக்க அனுப்பலே! செலவு பண்ணி, இங்க பக்கத்துலையே ப்ரைவேட்லே படிக்க வெச்சோம்! இப்போ, திடிர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு போக போறான்னும் போதுதான், கொஞ்சம் கஷ்டமா இருக்கு!''

''என்ன சம்பந்தி, நாங்க நிலாவே கட்டி கூட்டிக்கிட்டு போய் கொடுமை படுத்திடுவோம்னு நினைக்கறீங்களா?!''

பொசுக்கென்று கேட்டு சிரித்து விட்டார் ராதா.

''சே! சே! அப்படி இல்லே சம்பந்தி! ஒரு நாள் கூட பொண்ணை பிரிஞ்சி இருந்தது இல்லையா, அதான்! வேறே ஒன்னுமில்லே!''

சமாளித்தார் நிலை கை மீறிப்போகாது அம்பிகா.

''அதனாலே, இந்தரே உங்க வீட்டோட மாப்பிள்ளை இருக்க சொல்லி கேட்கறீங்களா?!''

மகனை பெற்ற ராதா மிகச்சரியாய் கணித்தார்.

''ஆமா, சம்பந்தி! அதைத்தான் எப்படி கேட்கறதுன்னு தெரியாமே தவிச்சிக்கிட்டு இருந்தோம்! ஆனா, அதை நீங்களே உங்க வாயாலே சொல்லி எங்களோட பாரத்தை குறைச்சிட்டிங்க!''

கந்தன் உள்ளம் நெகிழ்ந்தார்.

நிலாவிற்கோ பெற்றவர்களின் கோரிக்கை அவளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிட கூடாது என்பதிலேயே இருந்தது.

இது அவளுமே அறியா விடயம்தான். ஆதலால், சிறு கலக்கம் கொண்டு அதை நாசூக்காய் மறைத்தும் கொண்டாள்.

இந்தரின் முகமோ முதலில் அதிர்ந்து மாறினாலும், அடுத்த நொடியே மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

''தயவு செஞ்சு என்னடா பொண்ணு கொடுக்க சம்மதம் சொல்லிட்டு, இப்படி பையனை இங்கையே இருக்க சொல்லி கேட்கறோம்னு தப்பாலாம் நினைச்சிடாதீங்க சம்பந்தி! ஒரே ஒரு பொண்ணுன்னு செல்லமா கைக்குள்ளையே வெச்சு வளர்த்திட்டோம்! அதான், இப்போ திண்டாடறோம்!''

என்ற கந்தனோ மகள் பாசம் கொண்டு வார்த்தைகளை உதிர்க்க,

''அந்த பயமே உங்களுக்கு வேண்டாம் சம்பந்தி! பேசாமே, நாமே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துப்போம்! என்ன சொல்றீங்க?!''

என்று சிரித்தப்படியே சொன்னார் இந்தரின் தாயார், யாருமே எதிர்ப்பார்க்கா விஷயத்தை.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 4
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top