- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் 134
தாய்லாந்து யாருக்கு இன்பமோ இல்லையோ ஆண்களை பொறுத்த மட்டில் அமிர்த சுரபி கடலாய் பரவிக்கிடக்கும் சொர்க்கமென்றே கூறலாம்.
உடல் சுகம் தேடி வருபவர்கள் இங்கே ஏராளம். கலாச்சார பண்பாட்டையெல்லாம் யாரும் இங்கு கவலைக் கொள்ளவதில்லை.
மூன்று வேலை சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில் குடும்பத்தை காப்பாற்றிடும் பொறுப்பிலிருக்கும் பலர் மக்கி போகும் உடலையே மூலாதாரமாக கொண்டு ஒப்பேத்தி பணம் ஈட்டி பிழைப்பை நடத்துகின்றனர்.
இப்படியான தொழிலை சேவை மனப்பான்மையோடு செய்பவர்கள் இங்கு யாருமில்லை. அதுவெல்லாம் தழைய தழைய தாலியோ அல்லது கல் வைத்த மோதிரம் கொண்ட மனைவிமார்களின் டியூட்டி மட்டுமே.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா சேர்த்துக் கொண்டால் கண்ணை மறைக்கும் காதலில் சிக்குண்டு கிடக்கும் நவீன சிந்தாமணிகள் எனலாம்.
மற்றப்படி, பெண்கள் என்றைக்குமே பிடித்தாலும் பிடித்திடாவிட்டாலும் முழங்கால்களுக்கு மேல் விலக்க வேண்டியதை விலக்கிடும் நிர்பந்தவாதிகளே. அதுவும் இந்த சமுதாயத்தில் தொடு என்றாலும் குத்தும் தொடாதே என்றாலும் குத்தம்.
ஆகமொத்தம், ஆண்கள் அனைவரும் ஒரு விதத்தில் இவ்விஷயத்தில் ஆண்ட்டி ஹீரோஸ்தான்.
தாய்லாந்திலோ பணத்தை வை பின் தொடையில் கை வை என்பதே முதன்மையான கோற்பாடு. ஸ்டண்டர்ட் பேசில் தொகையும் மாறிடும் சேவைக்கான தரமும் ஏறிடும். விலையுயர்ந்த கைப்படாத எஸ்கொர்ட்ஸ்களும் உண்டு. அடிமட்ட விலைக்கு இருட்டடி வாங்கும் பாவப்பட்ட கிராக்கிகளும் உண்டு.
இரவு கொக்களித்து கிடக்க சிவப்பு விளக்கு ஏரியாவோ பிரகாசமாய் மிளிர்ந்தது. ரீசனின் ஸ்பெஷல் ஸ்பாவும் பார்களும் கூட அங்குதான் இருந்தன.
குஞ்சரியை ஹோட்டலில் ஸ்பா பெண்ணொருத்தியின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்த ரீசனோ அவனின் பப்பில் சந்தித்தான் சோம்சாயை.
கேட்டதை கொண்டு வந்து கொடுத்தவன் கையிலிருந்த பீர் கிளாஸை ரீசனோ அவனின் வாட்டர் போத்தலோடு சியர்ஸ் செய்துக் கொண்டான்.
மாமா வேலையை முழுநேர தொழிலாக செய்து வரும் சோம்சாயின் பகுதி நேர பிஸ்னசே போதை வஸ்து வியாபாரம். ஆள் பார்த்து பழகும் அவனை ரீசனுக்கு அறிமுகப்படுத்தியதே ஆன்ட்டி ஹீரோ கீரன் ஆரழகன்தான்.
இருந்த போதும் பணம் என்று வந்து விட்டால் சோம்சாயின் கையும் சுத்தம் வாயும் சுத்தம். யாரிடமும் மூச்சு விட்டுக்கொள்ள மாட்டான் டீலிங் யாரோடென்று. அதனாலேயே அவனுக்கு கஸ்ட்டமர்ஸ் அதிகம் ரெண்டு வகையான தொழில்களிலும்.
ரீசன் கண் ஜாடையாலேயே சோம்சாயிடம் சொன்னான் அஜய் அவனுக்கான தொகையை செட்டில் செய்திடுவான் என்று.
நிமிடங்கள் கடக்க ஆரவாரமான மதுகூடத்துக்குள் வாட்டர் போத்தல் நீரை முழுதாய் குடித்து முடித்த ரீசனோ விசிலால் வேள்வியொன்றை எழுப்ப, அது புரிந்த சோம்சாயோ நயவஞ்சகமான முறுவலொன்றை குஞ்சரி புருஷனுக்கு பதிலாக்கினான்.
வார்த்தைகள் ஏதுமில்லா பரிமாற்றங்கள் சுமுகமாய் முடிய அங்கிருந்து நடையைக் கட்டினான் ரீசன் நேராய் ஸ்பெஷல் ஸ்பாவை நோக்கி.
ஆணவன் அமர்ந்திருந்த மேஜையிலோ ரீசன் ஐஸ் கியூப் கொண்டு எழுதிய வாக்கியம் சத்தமின்றி குசும்பாய் சிரித்தது.
''May God have mercy on scoundrels because the common man won’t!!!''
(அயோக்கியர்கள் மீது கடவுள் வேண்டுமானால் கருணை காட்டிடுவான் சாதாரண சாமானியன் அல்ல!)
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்

Author: KD
Article Title: அத்தியாயம் 134
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.