- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் 135
கற்பழி சம்பவங்களுக்கு காரணமானவர்கள் யாரென்று கீரன் பலமுறை கேட்டும் வாயே திறந்திடாத குஞ்சரி அனுதினமும் துயிலற்று இஞ்சையில் நொந்து கதறினாள் அன்றைய கருப்பு தினங்கள் அவளை நாள் பொழுதும் சுற்றி வர.
கீரனை போல் எங்கே ரீசனும் கேட்டிடுவானோ என்று பயந்தவளோ,
''என்னாலே உன்னே இழக்க முடியாதுடா ஜூனியர்! எனக்கு தெரியும் சொன்னா நீ என்ன பண்ணுவேன்னு! அதனால்தான் நான் சொல்ல மாட்டேன்! எனக்கு நீ வேணும்! உனக்கு ஏதாவது ஆகிட்டா.. நான்.. நான்.. என்னே பண்ணுவேன்! நீயே சொல்லு! பிளீஸ் ரீசன் யாருன்னு மட்டும் என்கிட்டே கேட்டுடாதே! பிளீஸ்!''
''இல்லே சீனியர்.. நான் கேட்க மாட்டேன்.. நீங்க முதல்லே இப்படி அழாதீங்க..''
என்றவனோ தன்னவளை நெஞ்சில் சாய்த்துக் கொள்ள,
''ப்ரோமிஸ் பண்ணு! பண்ணு! யாருன்னு எப்போதும் கேட்க மாட்டேன்னு!''
வற்புறுத்தினாள் விருந்தனையவள் ஆசை கணவனை பிரிய விரும்பா
எண்ணத்தில்.
''என் சீனியர் மேலே சத்தியமா.. போதுமா..''
என்றவனிடத்தில் அழுகையின் ஊடே சத்தியம் வாங்கிக் கொண்டவள் நம்பினாள் ரீசன் அவளோடு கடைசி வரை இருப்பானென்று.
ஆனால், விதியை வெல்ல யாரால் முடியும். எது எது எப்படி நடக்க வேண்டுமோ அது அது அதுப்படித்தானே நடந்திடும்.
கல்லூரி காலத்தில் ஜூனியர் சீனியர் இருவரும் சேர்ந்தெடுத்துக் கொண்ட படங்களை ஒன்றாக்கிக் ஆல்பம் ஒன்று செய்திட நினைத்தான் ரீசன். அதை குஞ்சரியின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுக்க எண்ணினான் ஆளானவன்.
முதல் கற்பழிப்பு சம்பவம் நடந்த கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஓரளவு தேறியிருந்தாள் குஞ்சரி. இருந்தாலும் பழையப்படி என்றெல்லாம் சொல்லிட முடியாது. ஏதோ பரவாயில்லை எனும் ரகமே.
அப்படியான பொழுதொன்றில் குஞ்சரியை அன்பான சுற்றத்தார்களின் பராமரிப்பில் விட்டு ஜோடிகளின் பழைய மாளிகைக்கு ஒரு எட்டு போய் வந்தான் அப்படிய கீத்து மற்றும் பெற்றோர்களையும் பார்த்து விட்டு.
ரீசன் ஸ்டோர் ரூமுக்குள் அவர்களின் பழைய புகைப்படங்களை தூசி தட்ட பெரும்பான்மையான படங்களில் விஜயின் முகம் மட்டும் பேனாவால் குத்துப்பட்டு கிடந்தது. ஒன்றிரண்டு என்றால் கீத்து விளையாட்டாய் செய்திருப்பாள் என்று சொல்லிடலாம்.
ஆனால், அங்கோ பெருவாரியான படங்கள் எல்லாவற்றிலும் சந்தேகத்தை தூண்டும் வகையில் எக்ஸ் என்று கோடு போடப்பட்டிருந்தது விஜயின் முகத்தில் மட்டும்.
காதலித்து கரம் பிடித்தவனாயிற்றே பிடித்து விட்டான் மோப்ப நாயாட்டம் குஞ்சரியின் மனதை ரணமாக்கி மனைவியவள் உடலை போதைக்கி உண்டு போனவன் வேறு யாருமல்லே அவளின் ஆரூயிர் நண்பன் என்ற போர்வையில் உலா வந்த ஓநாய் விஜய்தான் என்று.
எல்லா படங்களையும் அலசினான் ரீசன் ஒரு ஓநாயை கண்டுப்பிடித்தது போல மற்றவர்களையும் அடையாளங்கண்டிட வெறிப்பிடித்த வேங்கையாய். ஆனால், வேறெந்த படமும் சிக்கிடாமல் சிங்கமவனை சாந்தியற்ற சூழ்நிலை கைதியாக்கி சிரித்தது.
கதத்தை அடக்கியவன் நிதானத்தை கையிலெடுத்தான். தீவிர யோசனைக்கு பின் அவர்கள் யாரென்று தேடி அலைந்திட ரொம்பவெல்லலாம் மெனக்கெடவில்லை தீனரீசனவன்.
ஒரு வாரத்திற்கு விஜயை பின் தொடர்ந்தான். அதுவும் இரவு நேரங்களில் மட்டும். குஞ்சரியை காரில் வைத்துக்கொண்டே. துணைவி அவள் நயனங்கள் தப்பியும் தற்குறி அவனின் முகத்தை கண்டிட கூடாதென்பதில் மிகவும் உறுதியாக இருந்தான் ரீசன்.
ஆகவே, குஞ்சரிக்கு அவளின் குடிநீர் போத்தலில் தூக்க மாத்திரையை தூக்கலாய் போட்டு துயில் கொள்ள வைத்தே விஜயை கண்காணித்திட ஆரம்பித்தான்.
பணக்காரன் அவனின் வட்டம் மிகப்பெருசு. ஆகவே, சில மாதங்களுக்கு பிறகே புதிய முகங்கள் சிலவற்றை அவனோடு கண்டான் ரீசன். அதுவும் பெண்ணொருத்தியோடு.
புரிந்துக் கொண்டான் குஞ்சரியின் புருஷன் விஜயோடு கூட்டு சேர்ந்த களவாணிகள் யாரும் உள்ளூர் வாசிகள் இல்லையென்பதை.
ஹோலிடேய்க்கு வந்து ஓசியில் ஊசியாய் நுழைந்து காரியத்தை முடித்து யாரும் சந்தேகம் கொள்ளும் முன் அவர்களின் நாடு பறந்து தலைமறைவாகிடுவதுதான் அவர்களின் ஸ்டைல் என்பதை கொஞ்ச நாட்களிலேயே கண்டறிந்துக் கொண்டான் ரீசன்.
ரீசனின் குஞ்சரியவள் சொல்லாமலே சொல்லி காட்டிக்கொடுத்து விட்டாள் அவள் வாழ்க்கையை சர்வநாசமாக்கிய நாதாரி யாரென்று.
அவைகளில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் பத்திரப்படுத்தி வைத்தான் தீனரீசனவன் அவனின் பாவக்கணக்கு குறிப்பேடான டைரியில்.
அதிலிருந்த படத்தைத்தான் கையிலெடுத்து பார்த்து தீரா வெறிக்கொண்டான் ரீசனவன் இரண்டாவது முறையாக குஞ்சரியை காமக்கொடூரனவன் அவனின் கூட்டத்தோடு சேர்ந்து சீரழித்த சம்பவம் நடந்து முடிந்த பத்து பதினைந்து நாட்களுக்கு பின்னாடி.
ரீசனின் லேடி பீஸ்ட்டை ஆட்டத்தை விட்டே தூக்கிய தறுதலைகளுக்கு செக் வைத்தான் பிக் பாஸ் அவன் ஆற அமர திட்டம் தீட்டி வஞ்சம் கொண்டு.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்

Author: KD
Article Title: அத்தியாயம் 135
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.