- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் 22
கடந்தகாலம்
வேதாவின் வீடு
மாலை ஆறுக்கு அழகாய் கிளம்பி வெளியில் போக ஆயத்தமானாள் ஏந்திழையவள். ஆனால், அவளின் துரதிஷ்டம் காரிலோ பெட்ரோல் சாகும் நிலையில் சிரித்தது.
வாசலில் நெற்றியை இறுக்கிக் கொண்டு நின்ற பனிமொழியின் கண்ணிலோ புதிதாய் லோன் போட்டு வேதா வாங்கியிருந்த கார் தென்பட்டது.
ஜாகிங் போக கிளம்பியவன் எதிரில் போய் நின்ற சுரிகுழலோ,
''ஜாகிங் போய் இப்போ என்ன கழட்ட போறே?! என்னே கொண்டு போய் செரீஸ் ரிசார்ட்லே விடு! பங்க்ஷன் இருக்கு!''
என்றிட, அவளை ஏறெடுத்து பார்த்தான் வேதா.
''வெட்டி பார்வை பார்க்கறதே நிறுத்திட்டு, சீக்கிரம் கிளம்பு! மணியாகுது!''
என்றவள் வழக்கம் போல் அவனை வார்த்தைகளால் நோகடிக்க,
''எப்போ போகும் இந்த கோபம்?!''
''அதெல்லாம் முந்திரிக்கொட்டைத்தனமா எதையும் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்!''
என்றவள் கடுகாய் வெடிக்க, அவள் கையில் ஹெல்மட் ஒன்றை எடுத்துக் கொடுத்தான் வேதா.
''இந்த கருமத்தையெல்லாம் என்னாலே போட முடியாது! கார் எடு!''
என்ற காரிகையோ ஹெல்மட்டை தட்டி விட,
''அன்னைக்கு போட முடிஞ்சது?!''
என்றவனோ நக்கலாய் சிரிக்க,
''எப்பா சாமி, உனக்கொரு கும்பிடு! என்னே ஹெர்ட் பண்ற உன் டயலாக்குக்கு ஒரு கும்பிடு! ஆளே விடு! நானே எப்படியாவது போயிக்கிறேன்!''
என்றவளோ வேகவேகமாய் அங்கிருந்து நடையைக் கட்ட, போனவளின் கரத்தை எக்கி பற்றி இழுத்தவனோ கிண்டலாய் உதடு கடித்து,
''அந்த பக்கமெல்லாம் இந்நேரத்துக்கு ஜெம் ஸ்டார்ட் ஆகியிருக்கும்! பைக்லே போனாதான் சீக்கிரம் போக முடியும்!''
என்றிட, அவன் நெருக்கத்தில் புருஷனை கொத்திடும் கழுகாய் முறைத்த முற்றிழையோ,
''இதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன்!''
என்று கறாராய் சொல்ல, அவள் காதோரம் குனிந்து நமட்டு சிரிப்போடு ரகசியம் சொல்ல,
''போதும் நிறுத்து!''
என்ற ஒளியிழையின் சினமோ கணவனின் குறும்பு பேச்சில் தோற்றாலும், அதை வெளிப்படுத்தாது,
''ஒன்னும் வேண்டாம் எனக்கு!''
என்றவளாய் அவனை விலகி அடிகளை துரிதப்படுத்த,
''சரி, சமாதானம் வேண்டாம்! சண்டையாவே இருக்கட்டும்! நானே கொண்டு போய் விடறேன்! நில்லுங்க!''
என்ற வேதாவோ கீழே விழுந்த ஹெல்மட்டை கையிலெடுக்க, அடிகளை நிறுத்திய நேரிழையோ அவன் டீலிங்கிற்கு ஓகே என்பது போல் திரும்பினாள் அவன் நோக்கி.
''அப்போ, சீக்கிரம் வா! டைம் வேஸ்ட் பண்ணாதே!''
சொன்னவள் நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்ற இடத்திலேயே கல்லாய் சமைந்திருக்க, ஸ்டார்ட் ஆகிய பைக்கோடு அவள் நோக்கி வந்த வேதாவோ ஹெல்மட்டை மீண்டும் வதுகை அவளிடம் நீட்டிட, சளிப்போடு உச்சுக்கொட்டியவளோ கண்களை உருட்டி,
''எல்லாம் என் தலையெழுத்து!''
என்று முனகியவளாய், கணவன் கொடுத்த ஹெல்மட்டை தலையில் கவிழ்த்துக் கொண்டாள்.
''எங்க அந்த ஹெல்மட்?!''
''எந்த ஹெல்மட்?!''
''தெரியாத மாதிரி நடிக்காதே!''
பொஞ்சாதியின் கதத்தை ரசித்தவனோ சிறு முறுவல் கொண்டவனாய்,
''மறந்துட்டு வந்துட்டேன்! வேலை இடத்துலையே இருக்கு!''
''அப்போ, இப்போ ஹெல்மட் இல்லாமத்தான் அவ்ளோ தூரம் பைக் ஓட்ட போறியா?!''
ஆத்திரத்திலும் சிறு அக்கறை கொண்டாள் வதுகை அவள்.
''பின்னாடி நீங்க போட்டுருக்கறதாலே, முன்னாடி எதுவும் பெருசா தெரியாது!''
பழைய மாடல் ஹெல்மட் அதற்கோ சொருகிக் கொள்வது போலான லோக் இல்லை. கயிறை இழுத்துதான் இரும்பு கம்பிக்குள் நுழைத்து இறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதை சரிவர செய்யத் தெரியா அம்மணியோ,
''இந்த இழவே எப்படி போடறது?! ஒரு நல்ல ஹெல்மட் வாங்க கூட உனக்கு துப்பில்லையா?! இந்த கண்றாவியை போட்டு என் ஹேர் ஸ்டைல் எல்லாம் கலைஞ்சு போய், பிக்காலி மாதிரி இருக்க போறேன் பாரு நானு பங்க்ஷன்லே!''
என்றவள் கூச்சல் கொள்ள, அமைதியாய் அவளுக்கு லோக்கை அணிவித்து விட்டான் வேதா.
''கவுனை அயர்ன் பண்ணதே வேஸ்ட்!''
என்று கறுவிய மாதங்கியோ, கவுனை முட்டிக்கால்கள் வரை மேலேத்தி ஏறி அமர்ந்துக் கொண்டாள் பைக்கின் பின் சீட்டினில்,
இருவருக்கும் இடையில் மூன்றாவது நபர் அமரும் அளவுக்கு இடைவெளி இருந்தது. காற்று வேறு சதி செய்ய அம்மணியின் கவுனோ அவளின் மானத்தை ஏலம் போட்டிட ஆரம்பித்தது.
சமாளிக்க திணறிய மங்கையோ கைகள் கொண்டு ஆடையை பறக்காதவாறு தடுக்க, வேதாவோ வளைந்து புகுந்து பைக்கையை ஓட்டினான் போக்குவரத்துக்கு இடையினில் நுழைந்து.
தடுமாறிய அலரோ கரகாட்டம் கொள்ள, மணவாட்டியின் கரம் பற்றி அவளை முன்னோக்கி இழுத்து முதுகோடு ஒட்டிட வைத்தான் வேதா.
ஆனால், கோபம் கொண்ட மலரோ அவன் பிடியிலிருந்து கையை விடுவிக்க மல்லுக்கட்டிட, அதை விடாது இறுக்கமாய் பற்றிக்கொண்ட நாயகனோ அவன் வயிறோடு கோதையின் கரத்தை சேர்த்திருக்கி கொண்டான்.
தளிர் அவளோ கடுகடுவென்ற முகத்தோடு சுற்றத்தை வெறுமனே வேடிக்கை பார்க்க,
''என் மேலேதான் தப்பு! நான் உங்க காரை எடுத்திருக்க கூடாது! நமக்குள்ள நடந்ததை வெச்சு நான்தான் உரிமை எடுத்துக்கிட்டேன்! மன்னிச்சிடுங்க! இதுக்கு அப்பறம் அந்த மாதிரி எதுவும் நடக்காது!''
என்றவனோ கோற்றொடியை கண்ணாடி வழி பார்க்க,
''நீங்க யூஸ் பண்ண கூடாதுன்னு நான் என்னைக்குமே சொன்னதில்லே! ஆனா, அவுங்களுக்காக பண்ணதைதான் என்னாலே ஏத்துக்க முடியலே!''
என்றவளோ வருத்தம் கொண்ட ஆளனின் முகத்தை இமைக்காது பார்த்தாள்.
நன்றாய் போய் கொண்டிருந்த வேதா மற்றும் அட்சராவின் வாழ்வில் கலவரம் மூண்டது ஆணவனின் அத்தையால்.
ஊருக்கு கிளம்ப பஸ் டிக்கெட் போட்டிருந்தவர்கள், பேருந்து நிலையம் செல்ல அட்சராவின் கார்தான் வேண்டுமென்று அம்பிகாவை நச்சரித்தனர்.
அந்நேரம் பார்த்து, மதிய உணவுக்காய் வீடு வந்த வேதாவையோ பிடித்துக் கொண்டனர், கார் எடுத்திட சொல்லி வற்புறுத்தி.
ஆணவன் தொடங்கி அம்பிகா வரை பலமுறை வேண்டாம் என்று கூறியும் அட்சராவின் பி. எம். டபிள்யூ காரில்தான் போக வேண்டுமென்று பிடிவாதம் கொண்டனர்.
வேறு வழியில்லா புருஷனோ, மணவாளி அவளுக்கு போனை போட்டான் தாரத்திடம் ஒரு வார்த்தை கேட்க. ஆனால், தாரகை அவளோ பிசியாய் இருந்த காரணத்தால் அவ்வழைப்பை ஏற்காது போனாள்.
எப்போதும் ஆபிசுக்கு காரில் போகின்ற பேடையோ, அன்றைக்கு என்று காலையிலேயே வேதாவையே பைக்கில் கொண்டு போய் விடச்சொல்லி கோரிக்கை வைத்தாள், அவனை கட்டிக்கொண்டு பயணிக்க உள்ளம் ஆசைக்கொள்ள.
இறுதியாய், வேதாவோ சம்சாரத்தின் பொருளில் அவனுக்கும் உரிமை உண்டு என்ற எண்ணத்தில் காரை எடுத்தான், ஒற்றைக்காலில் நின்றவர்களை சமாளிக்க முடியாது.
அதுவே, சுந்தரி வேலை முடிந்து வந்த பிறகு கணவன் மனைவிக்குள் வாக்குவாதத்தை கிளப்பி விட்டது. சம்சாரத்தை சமரசம் செய்ய புருஷன் அவன் எவ்வளவு முயற்சித்தும், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் போனது.
ராத்திரி ஊடல்களும் ஏக்கங்கொண்டு விட்டம் வெறித்தன, வஞ்சி அவளோ, இரு வாரங்களுக்கு மேலாகியும் முகத்தை தூக்கி வைத்து சண்டை வளர்க்க.
''என்னே பத்தி யாருக்கு என்ன கவலை?! யாருக்குமே நானோ, என் மனசோ முக்கியமில்லே!''
என்றவளின் சோகம் கப்பிய முகத்தை கண்ணாடி வழி பார்த்த வேதாவோ,
''நீங்க முக்கியமா இருக்கறதுனாலதான், என் அப்பா மனசு கஷ்டப்பட்டாலும் பரவாலன்னு, பொறந்ததுலேருந்து என்னே தூக்கி வளர்த்தவங்களே வேறே ஊருக்கே ஷிஃப்ட் பண்ணேன்!''
என்றப்படி அவள் விரல்கள் கொண்ட பிடியை தளர்த்தினான் வேதா.
யார் நெருங்க யார் நொறுங்க...

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 22
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.