- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
அத்தியாயம் நூற்றி எட்டு
இரவு மணி பத்து.
என்னதான் கண்கள் மூடிக்கிடந்தாலும் விசாவிற்கு ஒரு பொட்டு தூக்கம் விழிகளை எட்டிப் பார்த்திடவில்லை.
கண்ணோரம் கண்ணீர் ஆர்ப்பரிக்க தலையணையை விரல்களால் அழுத்தி பற்றிப் பிடித்திருந்தாள் நகங்கள் அதில் புதைந்து போக பாவையவள். சொந்தமானவனின் வாசம் நாசி தீண்ட,
“ப்ரீதன்...”
என்றவளோ ஆணவனின் தொடுதலுக்கு முன்னரே பட்டென எழுந்து அவனைக் கட்டிக்கொண்டாள் இறுக்கமாய்.
உறக்கத்தில் இருப்பவளைத் தொந்தரவு செய்திட வேண்டாமென்று நினைத்த ப்ரீதனோ பூனைபோல் அறைக்குள் நுழைந்து டி-ஷர்டை கழட்டி தூரம் போட்டு ஒரு எட்டு தர்மபத்தினியை எக்கிப் பார்க்க மஞ்சத்தில் எட்டு வைக்கும் குழந்தையாய் தவழ்ந்தது ஒரு குத்தமாய் போக ஆட்டி அவளின் சடீரென்ற அணைப்பினில் தடுமாறியவனோ விழுந்தான் மஞ்சத்தில் பின்னோக்கி விசாவை முன் நெஞ்சில் தாங்கியபடி.
“என்னால இனி உங்கள விட்டுட்டு ஒரு அஞ்சு நிமிஷம் கூட தனியா இருக்க முடியாது ப்ரீதன்! பிளீஸ் ப்ரீதன்! இனிமே என்ன தனியா விட்டுட்டு எங்கையும் போயிடாதீங்க ப்ரீதன் பிளீஸ்!”
என்றவளோ குழந்தையாய் ப்ரீதனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ஒப்பாரி வைக்க,
“ஏய்... மூக்கு சளி... என்னாச்சு உனக்கு...? விசா... என்னமா...?”
மெதுவாய் தன்னவளின் தலை வருடிய கணவனோ புரியாது வினவினான்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ரீதன்...”
“என்ன பயம் என் மூக்கு சளிக்கு...”
என்றவனோ கோமகளவளை கட்டியணைத்து கேட்க,
“எப்... எப்படி சொல்றதுன்னு தெரியல ப்ரீதன்... ஆனா பயமா இருக்கு... ரொம்ப பயமா இருக்கு...”
“சரி விடு... வா... பக்கோடா வாயன் உன்னை தூங்க வைக்கிறேன்...”
என்றவனோ மெதுவாய் தட்டினான் விசாவின் முதுகில்.
“ப்ரீதன் நீங்க வர ஜஸ்ட் டூ ஹவர்ஸ் லேட்டாச்சு அதுக்கே எனக்கு இப்படி நெஞ்சு கிடந்து தவிச்சு போச்சே... இனி ரீசன் எப்போதுமே திரும்பி வர முடியாதே அப்போ குஞ்சரிக்கு எப்படி இருக்கும்...? ரொம்ப பாவம்ல...”
ஆணவனின் நெஞ்சுக்குள் முகம் புதைத்தவள் போனவனின் தம்பிராட்டியை எண்ணி கவலைக் கொண்டாள்.
“பாவமில்ல... பரிதாபம்...”
என்றவனோ தொடர்ந்து கற்பாள் அவளின் தலை வருட,
“என்னவோ... ஆனா, எவ்ளோ கஷ்டமா இருக்கும்... விரும்பனவங்க நம்ப கூட இல்லன்னும் போது. எவ்ளோ வலிக்கும்? வாழற வாழ்க்கையே நரகமாயிடும்ல... மூச்சு கூட நிம்மதியா விட முடியதுல்ல... அவங்க ஞாபகமே சுத்தி சுத்தி வந்து கொன்னுடும்ல...”
என்று கண்ணீரோடு புலம்பினாள் பூவையவள்.
“திருமதி குகப்ரீதன், நடந்தது நடந்து போச்சு. இனி நடக்க போறதுலதான் நம்ப கவனம் இருக்கணுமே தவிர முடிஞ்சு போனதையே சுத்தி வர கூடாது. அதனால மாறப்போறதும் எதுவும் இல்ல போனவங்க திரும்ப வரப்போறதும் இல்ல. புரிஞ்சுதா லேடி பாஸ்...”
என்றவனோ கட்டிலின் விளிம்பில் சாய்ந்தமர்ந்த வாக்கில் மணவாட்டியின் முகத்தை கையிலேந்த,
“எல்லாம் என் தப்புதான்! நான்தான்! நான்தான் நல்லாருந்த குடும்பத்த சீரழிச்சிட்டேன்!”
என்ற விசாவோ டக்கென்று தலையில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
“விசா, நான் மறுபடியும் சொல்றேன். விதிய யாராலையும் மாத்த முடியாது!”
என்றவனோ தடுத்தான் பொஞ்சாதியின் உணர்ச்சியில் பொங்கிய செயலை.
“இல்ல ப்ரீதன்... நீங்க என்ன வேணா சொல்லுங்க... என் மனசுக்கு தெரியும் நான்தான்! நானேதான்! இன்னைக்கு குஞ்சரி ரீசன் இல்லாம இருக்கறதுக்கும்... அந்த சின்ன பொண்ணு கீத்து அப்பா இல்லாம இருக்கறதுக்கும் நான் மட்டும்தான் காரணம்!”
“விசா! ரீசன் அன்னைக்கு போய்த்தான் ஆகணும்ங்கிறது விதி! நீ அந்த இடத்துக்குப் போயிருந்தாலும் சரி போகாட்டியும் சரி... ரீசன் உயிர் எப்படியும் போயிருக்கும்!”
என்றவனோ கண்ணாட்டியின் கலைந்த கூந்தல் கற்றைகளை சரியாக்கினான்.
“நீங்க போன உயிர் பத்தி பேசறீங்க ப்ரீதன்... நான் இருக்கற ரெண்டு உயிர் என்னாலதான் நிம்மதியில்லாம இருக்குன்னு சொல்றேன்!”
“பிளீஸ் விசா! பாப்பா இருக்கற நேரத்துல நீ இப்படி ரெஸ்ட்லஸ்சா இருக்கறது நல்லதில்லமா! நீ ஸ்ட்ரெஸ் இல்லாம இருந்தாதானே நம்ப பாப்பாவும் நல்ல மெண்டல் ஹெல்த்தோட இருக்கும்...”
என்றவனோ வாஞ்சையாய் விருந்தனையின் கன்னம் வருட,
“ப்ரீதன்... முதல் தடவையே நான் ரீசன ஓங்கி அறைஞ்சிருந்தேன்னா... எல்லா பிரச்சனையையும் தவிர்த்திருக்கலாம்ல...”
என்றவளோ விசும்பலோடு அவனை ஏறெடுக்க,
“நீ அப்பாக்கு தெரியாம பப்புக்கு போகாம இருந்திருந்தாலே அது நடக்காம இருந்திருக்கலாம். ஏன்... அங்கிள் உனக்கு ஃபிரீடம் கொடுத்து போம்மான்னு சொல்லிருந்தா கூட அவரோட நம்பிக்கைய காப்பாத்த நீயே கூட அந்த இன்சிடெண்ட்ட நடக்க விடாம பண்ணிருக்கலாம்...”
என்ற கணவனோ மனைவிக்கு ஜிங்சா அடிக்காமல் சம்பவத்தின் சாத்தியங்களை எடுத்துரைத்தான்.
“அப்படி மட்டும் நடந்திருந்தா... தினா உருவாக காரணமான அந்த ரெண்டாவது இன்சிடெண்ட்டே நடந்திருக்காதுல்ல... அது முழுக்க முழுக்க என் தப்புதான்... ஒருத்தர் பெட்ரூமுக்குப் போய் அவர் மனைவியோட ட்ரஸ் போட்...”
என்ற யுவதியோ வாய் பொத்தி குலுங்கி கதறினாள் தலைகுனிந்த தாமரையாய் வாக்கியத்தை முழுதாய் முடிக்காது.
“ஐயோ விசா... விடு விசா... ஏன் இப்போ அந்த கதையெல்லாம்...? ஆனது ஆகிப்போச்சு... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது... எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்... அதனால கண்டதையும் யோசிச்சு உன்னை நீயே குழப்பிக்காத...”
என்றவனோ மென்மையாய் பெருமாட்டி அவளின் உள்ளங்கையைப் பற்றி அவளை நெஞ்சில் சாய்த்து தோள் தட்டினான்.
“எந்த பொண்டாட்டி சும்மா இருப்பா? நீயே சொல்லு! புருஷன கொடுன்னு கேட்டா! வெள்ளைக்காரச்சி கூட சண்டைக்குத்தான் போவா!”
என்று மூக்குறுஞ்சியவளோ,
“இப்போ எவளாவது வந்து உன்னைக் கேட்டா நான் கொடுத்திடுவேனா? சொல்லு ப்ரீதன்! சொல்லு! நானும் குஞ்சரி பண்ண மாதிரிதானே அந்த பொண்ண திட்டுவேன்! விரட்டுவேன்! எப்படிடா உன்னை கொடுக்க முடியும்?”
என்றவளோ உலுக்கினாள் ப்ரீதனின் கழுத்தைப் பிடித்து.
ஆனால், ப்ரீதனின் இதழோ லேசாய் இழைந்தோடியது வல்லபியின் தொண்டை தண்ணிர் வற்றிய கதறலில்.
வேறென்ன காரணம் அவன் மீது விசாகாவிற்கு இவ்வளவு காதலா என்று இன்றைக்குத்தான் முதல் முறையாக பார்க்கிறான் புருஷனவன்.
“எனக்கு எல்லாமே நீயா இருக்கும் போது... உன் மேல நான் உயிரையே வச்சிருக்கும் போது... நீ என் கூட இருக்கணும்னு தானே நான் நினைப்பேன்!”
என்ற வதுகையோ மூக்கு சளி ஒழுக ஆளானவன் முகத்தை இருக்கரங்களுக்குள் அடக்க, ப்ரீதனுக்கோ ஒப்பாரி வைக்கும் நாச்சியை இழுத்து நச்சு நச்சென்று நாற்பது முத்தங்கள் வைத்து வஞ்சியவள் வாயை அடைக்கத் தோன்றியது.
இருக்காதா பின்னே, தெரிவையவள் வாய் மொழிந்த வார்த்தைகள் எல்லாம் மூன்று வருட காதல் உறவின் முதல் முறை அனுபவங்களே.
“எப்படிடா உன்னை என்னால வெறுக்க முடியும்? சொல்லுடா! டேய் புருஷா சொல்லுடா!”
என்ற வீட்டாளோ பொலபொலத்த கண்ணீர் கொண்டு கதற,
“நான் ரீசன் இல்ல விசா... குகப்ரீதன்... விசாவோட ப்ரீதன்... தெரிஞ்சு இல்ல தெரியாம கூட தப்பு நடக்காது...”
என்றவனின் மிழிகள் ரெண்டும் ஆயந்தியவளின் நயனங்களை கூர்மையாய் நோக்க அழுகையை நிறுத்தியிருந்தவளின் நேத்திரங்களோ கண்ணீரை சூடாய் தரையிறக்கின நாயகியின் இதழ்களில்.
ரணம் கொண்ட பேதையவளோ என்னதான் ப்ரீதனை காதல் திருமணம் செய்து கொண்டாலுமே இப்படியான கதறல்களையெல்லாம் ஒருபோதும் அவனிடத்தில் கொண்டதில்லை.
காரணம் கணவனவன் அப்படியான எவ்வித சூழ்நிலையையும் துணைவியவளுக்கு உருவாக்கிடவில்லை.
ஆகவே, இன்றைக்கு விசா பேசிய வசனங்கள் அத்தனையும் ப்ரீதனை பறக்க விட்டது ஆனந்தத்தில்.
“நீ இல்லன்னா நான் இல்லடா!”
என்ற லேடி பாஸோ அவள் பிக் பாஸின் முகத்தை முத்தத்தால் குளிப்பாட்டிட,
“இதான் பைத்தியம் மாதிரி லவ் பண்றதா விசா...?”
என்றவனின் கரங்களோ அந்திகையின் முகத்தை அனல் மூச்சான நெருக்கத்தில் நிறுத்த,
“சொல்லித்தான் தெரியணுமாடா மடையா...?”
என்ற ஆயிழையோ நாசி உரச,
“என்ன அவ்ளோ பிடிக்குமாடி உனக்கு...?”
என்றவனின் பெருவிரலோ இல்லாள் அவளின் அதரங்களில் மொட்டுவிட்டிருந்த கண்ணீர் துளியை கிறக்கத்தோடு ஓரந்தள்ள,
“காட்டவா...”
என்ற மங்கையோ நேத்திரங்கள் சொருக ப்ரீதனை அவள் நோக்கி இழுத்தாள் செயினை உள்ளங்கையால் இறுக்கி.
ஆளனின் காதெல்லாம் சிவந்து தேகமோ சூடேறியது பாதாம் பால் இல்லாமலே. சிறுமூச்செல்லாம் பெருமூச்சாக ப்ரீதனின் உடலோ முறுக்கேறியது நாயகியின் உள்ளங்கை ஆணவன் முழங்கையை தேய்த்துத் தோளேறே.
தலைவியின் உதடுகளோ நெருங்கிய ப்ரீதனின் இதழ்களை அழகாய் கடத்திக் கொண்டது அவளுக்குள் உடல் பின்னோக்கி மஞ்சம் சரிய.
பெட்சீட்டை அழுத்திய கணவனவன் கைகளோ துணியைக் கசக்க, பேபி சீட்டரின் கண்களோ மனைவியின் முத்தி தந்த வீரியத்தில் தன்னிச்சையாக மூடிக்கொண்டது.
பிறகென்ன கடைசலுக்கு தயாரான பாலோ பன்னீராக தயாராகிவிட்டது மூன்று மாத இடைவெளிக்கு பின்னால்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...

Author: KD
Article Title: அத்தியாயம்: 108
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.