What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
அத்தியாயம் நூற்றி பத்து

முகம் பார்க்கும் கண்ணாடியில் வெறுமையான முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள் குஞ்சரி.

தலையை சொந்தமாய் வாரிட அதென்னவோ மூன்று மாதங்கள் கடந்தும் ரீசன் பின்னலிடும் அளவுக்கு பக்குவமாய் எதுவும் வரவில்லை.

அம்பாள் பக்கம் வந்தாலே குஞ்சரி அல்சேஷனுக்கு டஃப் கொடுக்க குட்டி கீத்துவை தவிர ரீசனின் பொஞ்சாதியை யாரும் நெருங்கிட முடியவில்லை.

“சீனியர் டயப்பர் மாத்தவா...?”

என்ற தலையாட்டலில் தொடங்கி,

“சீனியர் சாப்பிடலன்னா எனக்கும் வேணாம்!”

என்ற ஆதங்கமான கோபம் வரைக்கும் பெற்றவளுக்குத் தாயாகி போனாள் கீத்து.

இல்லை. குஞ்சரிக்கு ரீசனாகிப் போனாள் மகளவள்.

குஞ்சரியின் அறைக்கதவை திறந்து உள்ளே ஓடோடி வந்தாள் குட்டி கீத்து. கிடுகிடுவென வளர்ந்து விட்டாள். இப்போது அவள் சிறுமி, மழலையல்ல.

எல்லாம் தெரியும் அவளுக்கு. அப்பன் போனது தொடங்கி அம்மா பித்தாகி நிற்பது வரை. தெரியும் என்பதை விட புரிகிறது என்பதுதான் மனதுக்கு ஆறுதலான விஷயம்.

ட்ரஸிங் டேபிளின் மீதேறி அமர்ந்தவளோ குஞ்சரின் தலையை வாரிவிட்டு,

“என்ன சீனியர் நெத்தியிலே பொட்ட காணோம்! பொட்டில்லன்னா ரீசனுக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல...?”

என்று புருவங்கள் குறுக்கி அப்பனாட்டமே இடையில் ஒற்றை கரம் இறுக்கிய சின்னவள் எடுத்து ஒட்டினாள் சிவப்பு நிறத்திலான ஸ்டிக்கர் பொட்டொன்றை குஞ்சரியின் நிடலத்தில்.

“செம்மையா இருக்கீங்க சீனியர்...”

என்ற மகளோ ரீசனை போலவே இதழோரம் புன்னகை கொண்டு மொத்த பல்லும் தெரிய தலையை சைடாய் ஆட்டி கண்ணை மூடி திறக்க குஞ்சரியின் இறுகியிருந்த வதனம் கொஞ்சமாய் தளர்ந்தது.

செத்தவன் பொண்டாட்டி லேசாய் முறுவல் கொண்டாள் உதடுகள் இதழ் பிரிக்காது.

“அப்படி பார்க்காதீங்க சீனியர்... நான் ரீசனில்ல... ரீசனோட பொண்ணு... மறந்தாப்படி கிஸ்ஸெதும் கொடுத்திடாதீங்க...”

என்றவளோ மொத்தமாய் ரீசனாகவே தெரிந்தாள் குஞ்சரியின் கண்களுக்கு.

“அழகே அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே... ஐயையோ! அடுத்த வரி தெரியல சீனியர்! மன்னிச்சிடுங்க!”

என்று இல்லாது போன ரீசன் அடிக்கடி பாடும் வரிகளைப் பாடிய கீத்துவோ க்ளுக்கென்று சிரித்து செல்லமாய் தட்டினாள் குஞ்சரியின் கன்னங்களை.

கீத்துவின் குறும்பான பார்வைகளும், பேச்சின் ஊடே ச்சூயிங் கம்மை வாயில் அதக்கி முகிழ்நகை கொண்ட ஸ்டைலும்; இடையில் இறுக்கியிருந்த ஒற்றை கையும் மரித்த கணவனை மகளவள் உருவில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது பொஞ்சாதியின் விழிகள் முன்.

அழுகையை பொத்தி வைக்க முடியா குஞ்சரியோ டப்பென்று முன்னோக்கி கீத்துவைக் கட்டிக்கொள்ள,

“சீனியர்... நீங்க சிரிச்சாதான் அழகு... அழுதா பார்க்க சகிக்காது... பிளீஸ்... அழுகை வேண்டாமே... ரீசன் மனசெல்லாம் புண்ணா போகுது!”

என்றவளோ தாயின் முகத்தை இருகரங்களுக்குள் அடக்கி இருபெருவிரல்களால் குஞ்சரியின் கன்னங்களை நனைத்த ஈரங்களை ஓரந்தள்ளினாள்.

இம்மியளவு வித்தியாசமின்றி ரீசனை உரித்து வைத்திருந்தாள் பெண் பிள்ளையவள் குணத்திலும் சரி நயத்திலும் சரி குஞ்சரியவளை துளியும் விட்டுக்கொடுக்காது.

“பீப்புள் ஆர் வெயிட்டிங் சீனியர்... போகலாமா...?”

என்ற கீத்துவோ ட்ரஸிங் டேபிளிருந்து தரைக்கு ஒரு குதி குதித்து குஞ்சரியை அறையிலிருந்து வரவேற்பறைக்கு கூட்டிச் சென்றாள்.

“சீனியர் பீ குட் கேர்ள் அண்ட் டோண்ட் க்ரை ஓகே!”

என்ற குட்டியோ அம்மாவின் காதில் ரகசியமாய் ஓதி ரீசனைப் போலவே சின்னதாய் ஒரு கடி வைத்து அங்கிருந்து நகர்ந்தாள்.

“எல்லாரும் வந்தாச்சு தானே... அப்போ உயில் படிச்சிடலாம்ல...”

என்ற ஆச்சாரியாரோ ரீசன் யாருக்கு என்ன எவ்வளவு என்று எழுதி வைத்திருந்தானோ அதை அப்படியே ஒப்புவித்து எல்லாரிடமும் சட்டபூர்வமாய் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு கிளம்பினார் ஒரு மணி நேரத்தில் வந்த வேலை முடிய.

குஞ்சரி போன புருஷன் எழுதி வைத்த சொத்து விவகாரத்தில் எவ்வித பிக்கலும் பிடுங்கலும் கொள்ளவில்லை.

வரவேற்பறைக்கு வந்த நொடியிலிருந்து ஆச்சாரியார் கிளம்பும் வரை தரை பார்க்க குனிந்திருந்த குஞ்சரி எவர் முகங்களையும் பார்க்கவில்லை குண்டூசி அளவிலான ஒரு வார்த்தையையும் உதிர்க்கவில்லை.

“குஞ்சரி... என்ன பிஸினஸ்ன்னு தெரியல... ஆனா, மாசம் மாசம் ஒரு தொகை மட்டும் கரெக்ட்டா உன்கிட்ட கொடுக்க சொல்லி மெசேஜோட எனக்கொரு ரிமைண்டர் வந்திடுது... உனக்கேதும் இதைப்பத்தி தெரியுமா?”

வீரின் வினாவிற்கு குஞ்சரியின் பதிலோ தெரியவில்லை என்ற தலையாட்டலே.

“ஓகே... அப்படினா இந்த பணம் எங்கிருந்து வருதுன்னு நான் பார்க்கறேன். மத்த அக்கவுண்ட்ஸ்லாம் கோர்ட் கேஸ்னாலே ஃபிரீஸ் பண்ணிருந்தாங்க. பட் இந்த ஒன்னுலருந்து மட்டும் பணம் வர நான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன். இட்ஸ் ஓகே, என்ன கதைன்னு பார்த்திட்டு சொல்றேன்.”

என்றவனோ பெருமூச்சு கொண்டு அலைபேசியில் பணம் வரும் அக்கவுண்ட் டீட்டெயில்ஸை கீரனுக்குத் தட்டி விட சூப்பரான வாசம் ஒன்று வக்கீலின் மூக்கைத் துளைத்தது.

நறுமணத்தை மோப்பம் பிடித்து வீர் தலை திருப்ப,

“அட சாப்பிடு குஞ்சரி! கேசரிதான! அதுக்கிட்ட போய் உன் வீராப்ப காட்டிக்கிட்டு!”

என்ற லல்லியோ முகத்தை ரோடு வில்லராட்டம் கடுகடுத்திருந்த குஞ்சரியின் முன் கேசரி தட்டோடு விதண்டாவாதம் செய்து கொண்டிருந்தாள்.

'ஆண்டவா!'

என்று முனகிய வீரோ கண்களை சுழல விட்டு,

“லல்லி முதல்ல விசாக்கு கொடு... அவளுக்கு கேசரி ரொம்ப பிடிக்குமாம்...”

என்ற வீர்ரோ குஞ்சரியின் குதறிடும் முறைப்பான பார்வைகளை சகித்திட முடியாது லல்லியை திசை திருப்பினான்.

“ஆஹ்ஹ்... குஞ்சரி... ரீசனோட இன்சூரன்ஸ் பணம் அடுத்த வாரம் கிடைச்சிடும்... அந்த பணத்துல நீயேன்...”

வீர் முடிக்கும் முன்னரே அங்கிருந்து நகர்ந்தாள் குஞ்சரி அவள் அறை நோக்கி.

“குஞ்சரி! குஞ்சரி நில்லு குஞ்சரி! நான் சொல்றத கேளு! ரீசன் இனி திரும்ப வரப்போறதில்ல! நீ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்ப! உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு! பிடிக்குதோ பிடிக்கலையோ அதை நீ வாழ்ந்துதான் ஆகணும்!”

என்றவன் கடகடவென கோபத்தில் பொரிந்து தள்ளியபடி திமிர்க்காரியின் பின்னால் போக,

“வீர்...”

என்றழைத்த ப்ரீதனோ நாற்காலியிலிருந்து எழுந்து அடிகளை முன்னோக்கி வைத்தான்.

“நான் போய் பேசறேன்...”

“வேணா ப்ரீதன் சொன்னா கேளு! அப்பறம் மண்டையில கட்டோடத்தான் திரிவ ஆறு மாசத்துக்கு நீ!”

“no harm give a try right...”
(முயற்சி பண்ணி பார்க்கறது தப்பில்லையே...)

என்றவனின் நம்பிக்கையான வார்த்தையில்,

“குஞ்சரிய பத்தி உனக்கு தெரியாது ப்ரீதன்! அவளோட பிடிவாதம் ரீசன் கூட மாத்த முடியாத ஒன்னு!”

வீர் எச்சரிக்க, லைட்டாய் முறுவலித்த பேபி சீட்டரோ ஏதும் சொல்லாது கதவைத் தட்டி நுழைந்தான் குஞ்சரியின் அறைக்குள்.

“டேய்! உங்கப்பா சொன்னா கேட்க மாட்டான்!”

என்ற வீரோ குட்டி தினாவை கையில் தூக்க,

“சும்மா இருங்க நீங்க! எந்த அப்பான்னு கேட்டுட போறான் பையன்!”

என்ற லல்லியோ கேசரியிலிருந்த முந்திரிகளைப் பொறுக்கித் தின்ன,

“நீயேன்டி!”

என்ற வீரோ முழிகளைப் பிதுக்க, லல்லியோ நாக்கை வெளியில் நீட்டி பழிப்பு காண்பித்து நகைத்தாள் சத்தமின்றி.

“ஐயோ! இந்த பஜாரி கன்ஃபார்ம் யாருக்கிட்டையாவது அடிவாங்க வச்சிடுவா போலிருக்கே! முதல்ல நமக்கொரு எக்ஸ்ட்ரா மெடிக்கல் கார்ட் எடுக்கணும்!”

என்று முனகிய வீரோ குட்டி பையனை அவன் ஆத்தா விசாவிடம் தந்துவிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டான் வெளியில்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 110
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

tamilselvi

Member
Joined
Oct 5, 2024
Messages
33
Ennada ithu puthu accountu namaku iruka oru account laye minimum balance maintain panna mudila ivangaluku epdi tha different different ah panam varutho......Ada ponga pa.....
 
Top