What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
483
அத்தியாயம் நூற்றி இருபத்தி இரண்டு

நேத்திரங்களை துடைக்காது படிகளை மொத்தமாய் கடந்து அந்திகையின் ஆன்மாவில் கலந்தவன் உயிர் விட்ட அறைக்குள் நுழைந்தாள் குஞ்சரி.

மஞ்சம் வாவா என்றழைக்க அறை க்ளீன் அண்ட் க்ளியராக இருந்தது. கேஸ் முடிவு வந்த பிறகு ப்ரீதன்தான் ரத்த சாயம் கொண்ட மாளிகையை வெள்ளை சாயம் பூச சொல்லி ஆட்களை கூட்டி வந்து வேலையை முடித்தான் குஞ்சரியின் அனுமதியோடு.

பல்லாயிர கனவுகள் கொண்டு எந்த பஞ்சணையில் ரீசனோடு மூன்றாண்டுகள் கழித்து சுகித்தாளோ அதே மெத்தையில் தலை சாய்த்தாள் குஞ்சரி.

நாயகியின் நயனங்கள் கண்ணீரை வழிய விட்டு பெட்ஷீட்டை நனைக்க, எவளுக்காக ரீசன் உயிரை விட்டானோ அவளின் பாவ மன்னிப்பு சம்பவம் குஞ்சரியின் கண் முன் வந்து போனது.

ரீசனின் கருமாதி முடிந்த சில தினங்களில் புருஷனை இழந்த தர்மபத்தினியை காண வந்திருந்தாள் சம்பவத்திற்கு காரணமான புண்ணியவதி விசா.

''எனக்கு சத்தியமா தெரியாது அப்படி நடக்கும்னு.. நான் நல்ல எண்ணத்துலதான் அன்னைக்கு அங்க வந்தேன்.. ஆனா.. அது..''

வெம்பினாள் விசா குற்ற உணர்ச்சியில்.

அமைதியாய் விசாவிற்கு முதுகு காண்பித்து வீல் சேரில் அமர்ந்திருந்த குஞ்சரியோ ப்ரீ வெட்டிங் படத்திலிருந்த ரீசனின் முகத்தை விரல்களால் தொட்டுரசி கொண்டிருந்தாள்.

''எனக்கு தெரியும்.. என்ன சொன்னாலும்.. செஞ்சாலும் உங்க இழப்புக்கு ஈடாகாதுன்னு.. இருந்தாலும் என்னாலே இந்த கில்டி பீலிங்சோடே (guilty feelings) வாழ முடியலே குஞ்சரி! செத்திடலாம் போலிருக்கு குஞ்சரி! செத்திடலாம் போலிருக்கு! இதுக்கு நானே அன்னைக்கு ஒரேடியா போய் சேர்ந்திருக்கலாம் போலே!''

என்ற விசாவோ மஞ்சத்தில் அமர்ந்தாற்படி முகத்தை மூடி குலுங்கி கதறினாள்.

குஞ்சரியோ அவளின் ப்ரீ வெட்டிங் படத்தை நெஞ்சோடு இறுக்கியப்படி இப்போதும் மௌனியாகவே இருந்தாள்.

''காதலிச்சு கல்யாணம் பண்ணி என்ன ப்ரோஜனம்! என்னாலே ப்ரீதன் கூட நிம்மதியாவே இருக்க முடியலே குஞ்சரி! பயமா இருக்கு குஞ்சரி! பயமா இருக்கு! ப்ரீதன் இல்லாட்டி நான் என்னாவேன்னு என்னாலே நினைச்சு கூட பார்க்க முடியலே! பிளீஸ் குஞ்சரி!! பிளீஸ்! உங்க கால்லே விழுந்து கேட்கறேன்!''

என்றவளோ பட்டென ஓடி மண்டியிட்டாள் குஞ்சரியின் முன்.

''ஒரே ஒரு தடவே என்னே மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க குஞ்சரி! சொல்லுங்க பிளீஸ்! பிளீஸ் குஞ்சரி! இந்த குற்ற உணர்ச்சியான வாழ்க்கை எனக்கு வேண்டாம்! நான் ப்ரீதனோட நிம்மதியா வாழணும்! மடிப்பிச்சை கேட்கறேன் குஞ்சரி! வாழ்க்கை பிச்சை போடுங்க குஞ்சரி எனக்கு! வாழ்க்கை பிச்சை போடுங்க!''

கும்பிட்டு கதறினாள் விசா குஞ்சரியின் கால்களை பிடித்து.

''உனக்கான மன்னிப்பு என் ரீசனே எனக்கு திரும்ப கொடுத்திடுமா..''

வார்த்தையில் கடுமை கொண்டு கேட்ட குஞ்சரியை அழுது வீங்கிய முகத்தோடு ஏறெடுத்தாள் விசா.

யாரோ படாரென்று செருப்பால் அடித்தது போலவும் கூர்முனை கத்தியால் நெஞ்சை குத்தியது போலும் உணர்ந்த விசா மெதுவாய் மேலேழும்பினாள்.

குஞ்சரியின் சிவந்து கிடந்த விலோசனங்களே சொல்லியது மடவரலவள் கொண்டிருக்கும் வேதனையின் அளவீட்டை.

புருஷனற்று கிடப்பவளின் ரணம் சொல்லிடலடங்காது என்பதை புரிந்துக் கொண்ட விசாவோ அமைதியாக அறையிலிருந்து வெளியேறிட அடிகளை முன்னெடுத்து வைத்தாள்.

''உயிரையே கொடுத்திட்டு போயிருக்கான்.. உன்னே எப்படி என்னாலே வெறுக்க முடியும்.. மன்னிப்பென்னே பெரிய மன்னிப்பு.. போ.. போய்.. உன் ப்ரீதன் கூட நீயாவது சந்தோஷமா இரு..''

என்ற குஞ்சரியோ தழுதழுத்த குரலில் சொல்லிட,

''கடவுளே!!''

என்றலறி ஹேண்ட் பேக்கை பறக்க விட்ட விசாவோ ஓடி வந்து சரணாகதியடைந்தாள் குஞ்சரியின் மடியினில்,

''மன்னிச்சிருங்கக்கா! தயவு செஞ்சி மன்னிச்சிருங்கக்கா!! சத்தியமா விதி இப்படித்தான்னு தெரிஞ்சிருந்தா உங்க வாழ்க்கையிலே நான் குறுக்க வந்திருக்கவே மாட்டேன்க்கா!!''

என்று உயிர் போகும் படி கதறினாள் விசாகா ப்ரீதன் செத்தவனை நினைத்து நாளும் செத்துக் கொண்டிருக்கும் சுந்தரியவள் மடியில் முகம் புதைத்து.

கண் கெட்ட பிறகான சூரிய நமஸ்காரத்தில் என்ன பயனென்பதால் அலரியோனும் டியூட்டி முடிய கிளம்பினான் அன்றைய பொழுதை விசாவிற்கு பிராய்ச்சித்தமானதாக்கி.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 122
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top