- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் நூற்றி முப்பத்தி எட்டு
வாழ்க்கையை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு புனிதருக்கு பின்னாலேயும் ஒரு கடந்த காலமிருக்கும், பாவிகளுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கும்.
ரீசன் முதலில் குறி வைத்ததென்னவனோ ஓநாயின் நான்கு துடுப்புகளுக்குத்தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் விதி வசத்தாலும் நால்வர் தப்பிக்க தலைவனோ மாட்டிக்கொண்டான் ரீசனிடத்தில் இனி தப்பித்திடவே முடியாதென்பது போல.
அவனின் அப்படியான முடிவுக்கு மூலக்காரணம் அன்பு மனைவி குஞ்சரியின் மீது ஆளனவன் கொண்ட காதல் மட்டுமல்ல மாறாய் துணைவியவள் ரணங்கள் உதிர்த்த ஏமாற்றமான நம்பிக்கையும்தான்.
சில மாதங்களுக்கு காமக்கொடூரர்களின் லீலைகளை பின்தொடராதிருந்த ரீசன் மறுபடியும் விஜய் மற்றும் அவனின் நண்பர்களை வார இறுதி நாட்களில் மோப்பம் பிடிக்க ஆரம்பித்தான்.
ஆணவன் கண்டுக்கொண்டதெல்லாம் மது மாது ரெண்டையும் தவிர வேறு மாற்றங்கள் ஏதுமில்லை அவர்களின் வீக்கெண்ட்ஸ் பிளானில் என்பதே ஆகும்.
இதில் நண்பர்களாகிய நால்வரும் அவ்வப்போது மட்டுமே விஜயோடு காணப்பட்டனர். மற்ற வேளைகளில் பெரும்பாலும் விழிகளில் அம்பிடாமலேயே இருந்தனர்.
ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு ரீசனின் இரவு நேர டியூட்டி அவர்களை சுற்றி வருவதாகவேதான் இருந்தது. குஞ்சரியையும் காரில் கூட்டிக்கொண்டு அவளை தக்க சமயத்தில் தூங்கவும் வைத்து கண்காணிப்பை தங்கு தடையின்றி செயல்படுத்தினான் ரீசன்.
தூக்க வேண்டியவனை கடத்த வேண்டிய காலம் வந்தது. விரித்த வலையில் சரியாக சிக்கிக் கொண்டான் விஜய் தனியாளாக. அதுவும் நாடு விட்டு நாடு வந்து அவனின் எமனை தேடி.
நள்ளிரவு மணி ஒன்றிருக்கும் தனியார் படகொன்று கரை தட்டியது ஃபூகெட் தீவிலுள்ள (Phuket Island) பத்தோங் கடலை (Patong Beach).
ஒருப்பக்க இடையை கையால் இறுக்கியப்படி படகின் முன் முனையில் ஆறடி ரீசனோ நயனங்களில் அவள் நாயகியின் இன்னல்களை சுமந்தப்படி நின்றிருந்தான் வேதனையே உருவாய் கொண்டிருக்க.
இருட்டிய நீரூபனத்தில் ஒளிர்ந்த நிலவினை போலவே ஆணவனின் மனமோ காத்துக்கிடந்தது அவனுள்ளம் பூரிக்க போகும் கனத்துக்காய்.
ஓர் ஆண் அவன் உதிரத்தில் உயிர் கொண்ட மகளுக்கு தகப்பனாய் செய்யக்கூடிய மிகப்பெரிய விடயம் யாதெனில் அவள் தாயை அளவில்லாமல் நேசிப்பதே ஆகும்.
எந்த ஆணும் தந்தையாக முடியும். ஆனால் சிலரால் மட்டுமே அப்பாவாக முடியும். ரீசன் அவன் மகள் கீத்துவிற்கு மட்டுமல்ல அவன் குஞ்சரிக்கும் அரணானே கோனே.
அசைந்தாடி மெது மெதுவாய் நெருங்கியது படகு கடலின் கரையை. படகின் உள்ளோ வீல் சேர் ஒன்றும் ஐந்தரை அடிக்கும் மேலான உருவமொன்றும் குறுக்கியப்படி படுக்க வைக்கப்பட்டிருந்தது.
விசிலடித்து அங்கிருந்த ஒருத்தனை அழைத்தான் ரீசன். ஆணவனை கண்டவனோ பல நாள் பழக்கத்தில் கையுயர்த்தி வணக்கம் வைத்து நடையைக் கட்டினான் ரீசனை நோக்கி.
குஞ்சரி புருஷனோ படகின் கயிறை வந்தவனிடத்தில் தூக்கி வீசி மடக்கியிருந்த வீல் சேரை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான். பாவாடை கொண்டிருந்த உருவத்தை கையிலேந்தினான் தீனரீசனவன்.
ஜில்லென்ற ஆழியில் பயணித்து வந்த ரீசனின் நெஞ்சமோ குமுறும் எரிமலையாய் குஞ்சரியின் வலிகளை அவனுக்குள் கொதிக்க விட்டு கொண்டிருக்க கொதிநிலையில் கல்லெறிந்தான் கடற்கரை பார்ட்டியில் குடிபோதை மிதந்த தெரிந்தவன் ஒருவன்.
வினவினான் கையால் சைகைக்கொண்டு ரீசன் தூக்கி போகும் மனைவிக்கு என்னானதென்று.
''மார்கரிட்டா!'' (margarita)
என்று நண்பனுக்கு பதிலளித்த ரீசனோ தலையை திருப்பி ரிசோர்டை நோக்கி அடிகளை வைத்தான் இதழோரம் வன்மம் புன்னகை கொள்ள.
குஞ்சரி புருஷனின் நெஞ்சில் முகம் புதைய ஒட்டிக்கிடந்த குரூர ஆன்மாவின் நாசி வெளிக்கொணர்ந்த உஷ்ண மூச்சில் ரீசனின் பாதாதி கேசம் அத்தனையும் அக்கினி பிழம்பாய் தகிக்க சீரும் பாம்பவன் சினங்கக்கிட பொறுமையாய் காத்திருந்தான்.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...

Author: KD
Article Title: அத்தியாயம்: 138
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.