What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் நூற்றி நாற்பது

விடியற்காலை ஐந்து.

மயக்கம் தெளிய விலோசனங்களை மெல்லமாய் விரித்தான் விஜய். மெது மெதுவாய் விரிந்த அவனின் விழிகளோ அரண்டு போனது கண் முன்னோ ஆள் உயர கண்ணாடியில் அவனின் நிலைக்கண்டு. வீல் சேரில்தான் அமர்த்தப்பட்டிருந்தான் விஜய்.

தலையில் ஒரு பொட்டு மயிரில்லை. மொத்தமாய் வழித்தெடுக்கப்பட்டிருந்தது. இப்போதும் கயவனவன் அங்கத்தில் துளி கந்தலில்லை. கண்ணீர் சூடாய் வழிந்திறங்கியது விஜயின் மிழிகளிலிருந்து.

கால்கள் பிணையின்றி இருக்க கரங்களோ ஆர்ம்ரெஸ்ட்டில் சேர்த்து கட்டப்பட்டிருந்தன.

முன்னாளில் மின்னி மிளிர்ந்த ஆணவனின் மேனியோ இப்போது சுடுநீர் காய கொப்பளங்களால் நிரம்பி வெடித்து பிசுபிசுப்பாய் ஆங்காங்கே சீலை வழிய விட்டுக்கொண்டிருந்தன.

வெடியால் ஏற்பட்ட ரத்த காயங்களோ எரிச்சலுடன் கூடிய வினுவினுப்பை அளவில்லாமல் அள்ளிக் கொடுத்து ஆணவனை நடைப்பிணமாய் அதை அனுபவிக்க வைத்தது.

தைரியமின்றி சுணங்கிய உணர்வோடு பார்வைகளை கீழே தாழ்த்தியவனின் அம்பகங்களோ சூம்பி போய் கிடந்த அவனின் ஆண்மையை பார்த்திட திடமின்றி ஓவென்று கதற முனைந்தது.

ஆனால், பாவம் விஜய். அவனால் கத்தவும் முடியவில்லை. கதறவும் முடியவில்லை. ஏன் அலறல் கூட யாரின் காதுக்கும் கேட்கவில்லை. முடியவில்லை என்ற வார்த்தையை கூட சத்தமில்லா காற்றாகவே கொடூரனால் உதிர்த்திட முடிந்தது.

''ரொம்ப ட்ரை பண்ணாதே விஜய்.. வராது!! உன் கம்பெனி ப்ரோடாக்த்தான்.. ஆறு மாசத்துக்கு முன்னாடி வாங்கி வெச்சு எக்ஸ்பாயர்ட் ஆனது.. மொத்தமா இறக்கிட்டேன் உன் டேஸ்ட் பட்லே (taste buds).. இனி நீ ருசிக்கவும் முடியாது! செப்பவும் முடியாது!''

என்ற ரீசனின் வாக்கியத்தில் அதுவரை குரல் கொள்ள முயற்சித்து அசைந்த விஜயோ முற்றாக அடங்கி போனான் வீல் சேரின் ஓரமாய் ஒடுங்கி.

''லாஸ்ட் ஓன் ஒன்னு இருக்கின்னு சொன்னேன்லே..''

என்ற ரீசனோ வஞ்சகமாய் சிரித்து அறையின் கதவை திறந்தான். அவனை தாண்டி திபுதிபுவென்று ஏறக்குறைய பத்து பதினைந்து பெண்கள் விஜயை நோக்கி ஓடினர்.

''Enjoy your day like a hell Vijay with AIDS!!''
(உன் நாளே அனுபவிச்சு கொண்டாடு விஜய்.. எய்ட்ஸ்சோடே!!)

என்ற ரீசனோ அங்கிருந்து நகர்ந்தான் நிம்மதியோடு.

கைக்கடிகாரத்தில் ஏழு மணிக்கான அலராம் அலறியது.

உதித்திருந்த பர்க்கன் கொழுந்து விட்டேறிந்தான். குருவிகளோ சிறகை விரித்து கீச்சல் கொண்டு பறந்தன.

ரீசனோ வெறுங்கால்களோடு கடலை நோக்கி அடிகள் வைத்தான். நீருக்குள் முங்கி எழுந்தான் தீனரீசன்.

இத்தனை நாட்களாய் கேட்ட குஞ்சரியின் அழுக்குரல் இன்றைக்கு ரீசனின் காதுகளில் கேட்கவே இல்லை. ஏதோ மிகப்பெரிய பாரமொன்று இன்றைக்கு இறங்கியது போலுணர்ந்தான் தீனரீசனவன்.

விஜயோடு சல்லாபம் கொள்ள ரீசன் அனுப்பிய பெண்கள் யாரும் எய்ட்ஸ் நோயாளிகள் அல்ல. இருந்தும், வேண்டுமென்றேத்தான் அப்படி ஒரு பொய்யை சொன்னான் ரீசன் அவன் குஞ்சரியை நாசமாக்கியவனிடத்தில்.

இனி விஜயவன் வாழப்போகும் கொஞ்ச நஞ்ச நாட்களும் மரண பயம் கொண்டே வாழ்ந்து செத்திட வேண்டுமென்று திண்ணம் கொண்டான் ரீசன்.

தாய்லாந்தில் முடியாதென்பது ஏதுமில்லை. எல்லாம் பணமே. அதுவும் விஜயை இந்த நிலைக்கு கொண்டு வர ரீசன் பயன்படுத்திய பணம் அனைத்தும் அவனுடையதே. பாவம் விஜய் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட சங்கதி தெரியாமலேயே இன்றைக்கு முடங்கி போய் கிடக்கின்றான்.

நீர் சொட்ட சொட்ட கரைக்கு திரும்பி வந்த ரீசன் அங்கே அவனுக்காய் காத்திருந்த சோம்சாய் நீட்டிய பணத்தை மீண்டும் அவன் நோக்கி தள்ளினான் மென்முறுவல் கொண்டு.

விஜயோ வீல் சேரில் நடைப்பிணமாய் அமர்ந்திருந்தான்.

''A father will handover his daughter to the real king who can make his princess as Queen!!''
(ஒரு அப்பா அவரோட மகளே நிஜமான ராஜாகிட்டே மட்டும்தான் ஒப்படைப்பாரு.. காரணம் அவருக்கு தெரியும் இளவரசியே யார் ராணியாக்குவாங்கன்னு!)

என்ற ரீசனின் தேகத்திலிருந்த நீர்களோ விஜயின் மீது சொட்டின.

''இனி நீ காலம் முழுக்க அடி சருக்குடா!''

என்ற ரீசனோ நிமிர்ந்து விலகினான் அவனிடமிருந்து.

விற்று விட்டான் குஞ்சரி புருஷனவன் அவன் காதல் பத்தினியை பந்தாடிய விஜயை சோம்சாயிடம் விலைமாது கணக்காய்.

அவசர தேவை, பணப்பற்றாக்குறை, காமக்கொடூரர்கள் என்று இனி வெறிப்பிடித்த காட்டு மிராண்டி தனம் கொண்ட வெறியர்கள் அத்தனை பேருக்கும் விஜய் ஒரு லேடி பாயான (lady boy) விபச்சாரன்.

இதுவே குஞ்சரியின் ரீசன் அவனுக்கு கொடுத்த வாழ்நாள் தண்டனையாகும்.

வேதனையை சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது, சுகத்தை அனுபவிக்கவும் முடியாது; பிணிக்கொண்ட தேகம் என்ற பொய்யான பயத்தோடு சாகும் வரை நொடி ஒன்றையும் நரகமாய் கழிக்க போகிறான் ரீசனின் குஞ்சரியை தொட்ட விஜய்.

''அவுங்க அப்பா இடத்துலே வெச்சிருக்காடா என்னே!! என் குஞ்சரி!!''

என்ற ரீசனோ முகத்தில் வழிந்த நீரை கையால் வழித்தெடுத்து உதறி அங்கிருந்து நகர்ந்தான் ரகசியமான சூரசம்ஹாரம் ஒன்றை நிகழ்த்தி.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 140
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top