What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

அத்தியாயம்: 4

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் நான்கு

கார் பயணம்

பிஞ்சு கையொன்று ரீசனின் தோள் ஒட்டியிருந்த கார் சீட்டியில் ட்ரவலாகி அவனின் கழுத்தை கட்டிக் கொண்டது. ஏறெடுத்து முன் கண்ணாடியை பார்த்தவன் சிரித்து சொன்னான்.

''உன்ன பெத்ததுக்கு என்ன பண்ண முடியுமோ.. அதை சிரிப்பா பண்ணிட்டே போலே!!!''

அவன் கிண்டலாய் சொல்லிட, மகள் கிருத்திகாவோ சத்தமாய் சிரித்தாள். அதுவும் இடக்கை உள்ளங்கை வாயில் பொத்திக்கொள்ள.

மகளின் மழலை மாறா சிரிப்பை ரசித்தவனோ, சின்னதாய் கண்ணடிக்க; குட்டி கீத்துவோ இருமிழிகளையும் ஒன்றாக சிமிட்டி முன் சீட்டிக்கு பயணித்தாள்.

''பார்த்துமா..''

கார் ஸ்டேரிங்கில் வலக்கரம் இருக்க, இடக்கரம் மகளை தற்காத்து கொண்டது ஓரக்கண்ணால் சாலை கார்களையும் மகளின் பின் சீட்டு டூ மின் சீட்டு ட்ராவலிங்கையும்.

மகளின் இடையில் கரம் பதித்து அவள் முன்னே வர ரீசன் உதவிட, அப்பா பக்கத்தில் சென்றமர்ந்தாள் குட்டி வாண்டவள்.

''அப்படி என்ன ஸ்டேட்டஸ் வெச்சிங்க மேடம்.. உங்க பாட்டி கோல் பண்ணி டேடிய ஃரை (fry) பண்ற வரைக்கும்..''

டேடி சிரிப்போடு மகளை கேட்க, குட்டி வாண்டு அவளோ மிடுக்காக சொன்னாள்.

''Check your fb daddy!! I tag you naa..''
(உங்க பேஸ்புக் பாருங்க டேடி!! நான் உங்கள டேக் பண்ணிருக்கேன்..)

ஸ்டேரிங்கை ஒரு கையில் பிடித்தவன், மறுக்கையால் போனில் மகளின் சேட்டையைப் பார்த்து நிறுத்தாமல் சிரித்தான்.

ரீசனோடு அவளும் சிரித்திட, காலி சீட்டியில் கால்களை பரப்பிக் கொண்டவளை ஜாடை பார்வை பார்த்தவன், கண்டிக்கும் தொனியில் சிறு அதட்டல் கொண்டான் மகளிடத்தில்.

''எப்படி உட்கார்ந்திருக்கம்மா..''

''சோரி டேடி!!''

என்ற ஆறு வயது குட்டி அவளின் இருகால்களையும் ஒன்றாக்கி இறுக்கி அமர்ந்து, சீட் பெல்ட் போட்டுக் கொண்டாள்.

''கீத்து பெல்ட் போட்டாச்சு டேடி!!''

மகள் அவள் சொன்னாலும், அப்பா அவனோ ஒருமுறை இடதுகரங் கொண்டு சின்ன இடை இறுக்கியிருந்த பெல்ட்டை சரிப்பார்த்து புன்முறுவலோடு கேட்டான்.

''இப்போ நேரா எங்கே..''

''ஆர்ர்ஹ்ஹ்.. கென்னி ரோஜர்ஸ் ரோஸ்டர்ஸ் (Kenny Rogers Roasters)..''

மகள் கைகளை தட்டி சொல்லிட, அப்பா அவனோ காரை அத்துரித உணவு கடையை நோக்கி விட்டான்.

*

நடந்தது என்ன
ரீசனின் வீடு

காலை மணி ஏழு.

''ஒரு மனுஷன்னா கொஞ்சமாவது டிசிப்ளின் வேணும்!! சொன்ன வார்த்தையே காப்பாத்தறவன்தான் ஆம்பளே!!''

தேவகுஞ்சரியின் காச் மூச் கத்தலில் கலைந்தது ரீசனின் காலை தூக்கம். வரவேற்பறை அர்ச்சனை மேல் மாடி அறை வரை வந்து எழுப்பியது ரீசனை.

''ராத்திரியெல்லாம் குடியே போட்டுட்டு காலையிலே கண்ணு மண்ணு தெரியாமே படுத்துக் கிடக்கறதுக்கு எதுக்குடா உனக்கெல்லாம் பொண்டாட்டிடு புள்ளே!! தலைமுழுகிட வேண்டியதுதானே எங்களே!!''

மஞ்சத்தில் குப்பிற படுத்துக் கிடந்தவன் ஷோல்டர் மறைத்த காதோ பாவம். ரத்தம் வராத குறையாய் கொய்யென்றது.

''வீடா இது!! பாரு எப்படி இருக்குன்னு!!''

தூய்மையற்ற இல்லம் பிபி ஏத்தியது குஞ்சாயிக்கு.

''ஒரு பத்து நாள் இந்த வீட்டே சுத்தமா வெச்சிக்கே முடியலே!! போட்டதெல்லாம் போட்டப்படியே இருக்கு!!''

சோபா தொடங்கி டைனிங் டேபிள் வரை அத்தனையையும் கிளீன் செய்தப்படி புருஷனை கட்டியவள் வசைப்பாடிட, குட்டி வாண்டோ சத்தமின்றி பூனை அடிகள் வைத்து மேல் மாடி நோக்கினாள்.

''கடவுளே!! ரீசன்!!''

கீழ் தளத்தில் பொஞ்சாதியவள் அலற, சலிப்போடு ஹீரோ விழிகள் விழிக்கும் முன் இதமான குரலொன்று காது கடித்து அவன் முதுகில் சாய்ந்து படுத்தது.

''டேடி!!!''

மெல்லமாய் மல்லாக்க திரும்பியவன் முகம் முழுக்க இச்சுக்கள் வைத்தாள் கீத்து குட்டி.

''ஐ மிஸ் யூ சோ மாச் டேடி!!''

என்றவள் அவள் டேடியை கட்டியணைத்துக் கொண்டாள் இறுக்கமாய்.

''ம்ச்ச்.. சோரிடா.. எப்படி வந்தீங்க நீயும் மம்மியும்..''

வடக்கை மகளின் முதுகை வருட, இடக்கையோ அலைப்பேசியில் மணியை பார்த்து உச்சுக் கொட்டலான சலிப்பு கொண்டது.

''வேறெப்படி கிரேப் தான்..''

சொல்லிக் கொண்டே சேட்டைக்காரியவள், அப்பா அவன் சிகையை கொத்தாக்கி அவளின் ஹேர் பேண்ட் கொண்டு தென்னைமர கொண்டையை கட்டிட ஆரம்பித்தாள்.

''அப்பாக்கே கொண்டை கட்டி விடறீயா!!''

என்றவன் பல்லை கூட துலக்காது மகளை கிச்சில் மூட்டி விளையாடிட ஆரம்பித்தான்.

கேனடா சென்று இப்போதுதான் திரும்பியிருந்தார்கள் மகளும் மம்மியும். மம்மியின் டேடி பெரும் பணக்காரரே. மருமகன் என்னவோ மிடில் கிளாஸ்தான்.

இந்த ஒத்தடை குச்சித்தான் வேண்டுமென்று மகள் கொக்காட்டம் ஒற்றைக் காலில் நிற்க, வேறு வழியின்றி கல்யாணத்தை நடத்தி வைத்தார் பிஸ்னஸ் மேன் நம்பிராஜா.

பல மாட்டு பண்ணைகளின் உரிமையாளர் தேவகுஞ்சரியின் தந்தை நம்பி. அவரின் இருபதாவது வயதில் வெறும் பதினைந்தே மாடுகள் கொண்ட பண்ணையில் ஆரம்பித்த அவரின் இத்தொழில், பின்னாளில் நன்றாய் சூடு பிடிக்க; மனிதர் பெரியாளாகி விட்டார்.

பேரும் புகழும் கொண்ட நம்பிராஜா மனைவியை சிறுவயதிலேயே பறிகொடுத்தவர். அதுவும் மகள் தேவகுஞ்சரி பிறக்கையில். அதன் பின் திருமண வாழ்வில் ஈடுபாடு இல்லா நம்பி, மகளின் மீதே முழு கவனத்தையும் செலுத்தினார்.

தேவகுஞ்சரிதான் அவரின் உலகம். செல்லத்துக்கும் செல்வத்துக்கும் அளவில்லாமல் வளர்க்கப்பட்டாள் ஒத்தை ரோசா அவள். பிடிவாதத்திற்கும் திமிருக்கும் குறைச்சல் இல்லாதே வளர்ந்தாள் தாயற்றவள்.

படிப்பென்னவோ சுமார்தான். அப்பாவின் தொழிலை வருங்காலத்தில் பொறுப்பெடுக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ஏதுமில்லை தெரிவையவளுக்கு. ஒப்புக்கு பிஸ்னஸ் படிப்பு. அப்பாவின் சந்தோஷத்திற்காக ஒரு பட்டம். அவ்வளவே.

ஆடம்பரங்களுக்கு அளவில்லாதவள் தேவகுஞ்சரி. வளர்ப்பு அப்படி. கேட்டது கேட்டிட நொடி கிடைத்திடும். ஒருமுறை அணிந்த புடவையை கூட மீண்டும் அருணியவள் உடுத்திக்கொள்ள ரொம்பவே யோசிப்பாள்.

ஆனால், வியந்துதான் போனார் நம்பிராஜா அவர்; ஆஹா ஓஹோ என்று வளர்க்கப்பட்ட மகளவள் சாதாரண சிலிங் காற்றாடி மட்டுமே கொண்ட குடும்பத்தில் வாக்கப்பட துடித்ததை.

காதலுக்கு கண்ணில்லை என்பதை ரீசனின் பெற்றோர்கள் கூட அப்போதுதான் புரிந்துக் கொண்டனர்.

பெண் பிள்ளை இல்லாத காரணத்தால், தேவகுஞ்சரி மீது அளவில்லா அன்பை செலுத்தினார் ரீசனின் அம்மா அம்பாள். மாமியார் மருமகள் இருவரும் என்னவோ நகமும் சதையுமே.

இருவரும் ஒரு மணி நேரமாவது தவறாது கதைத்திடுவார்கள் தினமும் போனில். அதில் பாதி ரீசனை பற்றிய கம்பளைண்ட்டே ஆகும்.

இக்குடும்பத்தின் ஏழாம் பொருத்தம் என்பது என்னவோ மாமனாருக்கும் மருமகனுக்கும்தான். நம்பிக்கும் ரீசனுக்கும் ஒத்தே வராது.

நம்பியின் முதல் கோபமே பாசமாய் வளர்த்த பட்டு வண்ண ரோசா, ரீசன்தான் வேண்டுமென்று பிடிவாதமாய் அவரிடம் சண்டைக்கு நின்றதுதான்.

எங்கே மகளை ஒரேடியாக ரீசன் பிரித்துக் கூட்டி கொண்டு போயிடுவானோ என்று, எல்லா தகப்பனுக்கும் இருக்கின்ற அதே பயங்கொண்ட பொறாமைதான் நம்பிக்கும்.

கல்யாணம் முடிந்து வீட்டோடு மாப்பிள்ளையாக நம்பி மருமகனை இருக்க சொல்ல, முடியாது என்று ரீசன் முறைத்துக் கொள்ள, தேவகுஞ்சரியோ அழுது கரைய; வேறு வழியின்றி ஒப்புக் கொண்டான் ரீசன் தலையெழுத்து என்றெண்ணி.

நிர்வாகத்துறையில் பொண்டாட்டியைப் போலவே பட்டப்படிப்பை முடித்த ரீசனுக்கு நிஜமாகவே வியாபாரத்தில் நாட்டம் அதிகம். மாமனாரின் தொழிலை அவனாக விரும்பி ஏற்காவிட்டாலும், மகள் ஆசைக்கொள்ள எல்லாவற்றையும் தூக்கி ரீசனின் கையில் கொடுத்தார் நம்பி.

இங்குதான் ஏழரை நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தது.

ரீசனுக்கு நவீன தொழிலின் மீதிருந்த பிடிப்பு என்னவோ மாட்டு பிஸ்னஸில் துளியும் இல்லை. இருப்பினும், கொடுத்த பொறுப்பில் குளறுபடி நடக்காமல் நல்ல பெயர் எடுத்திடவே பார்த்தான் மருமகன்.

என்னதான் முதலாளி என்ற பொறுப்பிலிருந்தாலும், ரீசனின் ஒவ்வொரு முடிவிலும் நம்பியின் தலை எட்டி பார்த்திடவே செய்தது. ரீசனால் தனித்தோ அல்லது சுதந்திரமாகவோ எவ்வித முடிவையும் எடுக்க முடியாது போனது.

பரிசீலனை என்ற பெயரில் மாமனாரின் முடிவே இறுதியானதாகி போனது எல்லாவற்றிலும். கடுப்போடு மருமகன் வேலை பார்க்க, சில்லறைத்தனமான தவறுகள் எல்லாம் விஸ்வரூபம் கொள்ள ஆரம்பித்தது.

வரலாறு காணாத பின்னடைவு தொழில். நட்டம் கழுத்தை நெரித்தாலும் சமாளிக்க போதிய பணம் கையிருப்பில் இருந்தது சாமர்த்தியமான வியாபாரி நம்பியிடத்தில். பணத்தை மாட்டு பாலாய் கரைத்தார் மருமகனின் தவறுகளை சரிக்கட்டிட மாமனார்.

ஏற்ற இறக்கங்களை ரீசனால் சரிசெய்திட முடியா நிலையில் ஆபிஸ் தொழிலாளர்கள் கூட அவனை காது பட மாமனாரின் கைப்பாவை என்றனர். வெறும் தலையாட்டி பொம்மையாக இருப்பதை வெறுத்தான் ரீசன்.

பிடித்திடாத தொழில் மற்றும் மதிப்பில்லா நிலையும் அவனை நிம்மதியிழக்க செய்தது. இதனால், ஹீரோவின் குடும்ப வாழ்க்கையும் சிரிப்பாய் சிரித்தது.

ஒவ்வொரு நாள் இரவும் ரீசன் சோபா, தேவகுஞ்சரி மெத்தை என்றே கழிந்தது. ஆசை முப்பது நாள் மோகம் அறுவது நாள் என்பதெல்லாம் அவர்களின் தாம்பத்தியத்தில் பொய்த்து போனது.

லண்டனுக்கு ஹனிமூன் சென்ற பத்து நாட்கள் மட்டுமே ரீசன் தேவகுஞ்சரியின் வாழ்வில் சந்தோஷம் துள்ளி குதித்தது எனலாம். மலேசியா திரும்பிய அடுத்த நொடியே எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.

ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்த கணவனோ வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையில் வல்லபியவளை கடந்து சென்றான், பாவையவள் பூந்துவாலையோடு அவன் முன் சென்று நின்ற போதிலும்.

ஏமாற்றம் கொண்டவளோ, தந்தையிடம் ஒப்பாரி வைத்தாள் புருஷனிடம் ஏதும் கேட்காது. நம்பியோ மருமகனை சந்தேகித்து அவனை கண்காணிக்க ஆள் செட் செய்தார், எங்கே ரீசனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிய.

மாமனாரின் உளவு வேலையை அறிந்த ரீசன், பொறுமையிழக்க ஏற்பட்டது வீட்டில் கலவரம். ஆளனின் ஆவேசம் கொண்ட கோபத்தின் பலன் என்னவோ துணைவியவளின் மாளிகையிலிருந்து வெளிநடப்பே.

சண்டையோடு சண்டையாக பெற்றோர் வீட்டுக்கு ரீசன் பத்தினியை கூட்டி போக, விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான் என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினார் அவனின் டேடி தாண்டவன்.

சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்ள நினைத்த ரீசனோ, இதுநாள் வரை சேமித்த பணத்தில் பாதியை கொண்டு வீடொன்றை வாடகைக்கு எடுத்து வனிதையவளோடு தனியாய் குடிப்பெயர்ந்தான்.

வேலை தேடிட சொல்லி ரீசனை குலியவள் வற்புறுத்த, சொந்தக்காலில்தான் நிற்பேன் என்று காரசேவா ரீசன் கோஷம் போட; சீனியர் மனைவியோ இறுதியில் அவனின் விருப்பத்திற்கே புருஷனை விட்டு விட்டாள்.

தலைநகரின் மையப்பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று விற்பனைக்கு வர, ஓமப்புடியன் அதை வாங்கிப் போட்டு; மது மற்றும் உணவு விடுதியாக்கினான். முதல் எட்டு மாதங்களுக்கு ஏதோ சுமாரான அளவில்தான் வியாபாரம் நடந்தது.

கையில் தொழில் இருந்தும் சம்பாரிக்க ரீசனுக்கு தெரியவில்லை என்றார் நம்பி. இத்தொழில் மகனுக்கு செட்டாகவில்லை என்று புலம்பினார் தாண்டவன்.

அம்பாளோ, இது வேண்டாம் வேலைக்கு போய் நாலு காசு பாரு என்றார். மணவாட்டியோ மஞ்சம் சரிகையில் மூடை ஸ்பாயில் ஆக்கினாள், அப்பாவோடு மீண்டும் கூட்டு சேர சொல்லி.

ரீசனோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எப்படியோ அடித்து பிடித்து நஷ்டமாகினும் அம்மது கூடத்தை விடாமல் பிடித்து தக்க வைத்துக் கொண்டான்.

வீட்டின் தேவைகளை தேவகுஞ்சரி பார்த்துக் கொண்டாள், அப்பாவின் பிஸினஸ்களின் மூலம் அவளுக்கு கிடைக்கின்ற ஷேர் பணத்தில்.

எல்லாம் மாறிப்போனது தேவகுஞ்சரியவள் கருத்தரிக்க. அடித்தது யோகம் எனலாம் ரீசனுக்கு. மதுக்கூடம் நைட் கிளாப்பானது.

அன்றைக்கு தொடங்கி இன்று வரை அவனுக்கு உச்சம்தான், மகளவள் கீத்து குட்டி பிறந்த இந்த ஆறு வருடங்களில். மாமனாருக்கு இணையான பணக்காரனாக உருவெடுத்து விட்டான் தினரீசன்.

கேனடாவிலிருக்கும் தாத்தா நம்பியோடு விடுமுறையை கழித்து விட்டு, இன்றைக்குத்தான் தேவகுஞ்சரியும் குட்டி கீத்துவும் மலேசியா வந்து வந்தனர்.

ஏர்போர்ட்டில் விடியற்காலை ஐந்துக்கு அவர்களை பிக் ஆப் செய்ய சொல்லி, நேற்றைக்கே மனைவியவள் இருபது தடவைக்கும் மேற்பட்டு தொண்டை தண்ணி வற்றிட சொல்லியிருந்தாள் ரீசனிடத்தில்.

ஹீரோ வழக்கம் போல் நைட் கிளாப்பில் ஜாலியாக முழித்து விட்டு வீடு திரும்பி, கட்டிலில் குப்பிற விழ மணி விடியற்காலை மூன்றை.

போனில் செட் செய்த அலாரமோ அலறோ அலறென்று அலற ரீசன் எழவே இல்லை. அம்மணியை பிக் ஆப் செய்திடவும் இல்லை.

காத்திருந்தவள் கடுப்போடு வீடு திரும்பினாள் வாடகை கார் பிடித்து விடியற்காலை ஆறுக்கு குட்டி கீத்துவோடு.

இல்லம் வந்து சேர்ந்தவளுக்கோ வீட்டின் கோலத்தை கண்டு கோபம் உச்சம் கொண்டது. நிறுத்தாது கணவனை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவளின் முழங்கையை ஒரே இழு ரீசன்.

வாஷ் பேஷனில் தண்ணீர் பைப் அடையாது நீரூற்று கொள்ள, பெண்ணவள் இடையை நெஞ்சோடு இறுக்கியவன் கிறங்கிய குரலில் கேட்டான்.

''என்னடி குஞ்சாய்.. வந்ததும் வராததுமா காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கே..''

ஆணவனின் இதழ்கள் மெல்லமாய் மடவரல் அவளின் அதரங்கள் நெருங்க, மெல்லிய குரலில் கேட்டாள் கோதையவள்.

''கீத்து..''

''பிளேய் ரூம்லே இருக்கா..''

என்றவனோ செகண்ட்ஸ் தாழ்த்தாது ஆக்ரமித்தான் தேவகுஞ்சரியின் தேவாமிர்தம் கொண்ட தேனிதழ்களை.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 4
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top