What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

அத்தியாயம்: 5

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் ஐந்து

ரீசனின் இல்லம்

புலர்ந்த ஏழு மணிவாக்கில் அடுக்களையில் கேட்க வேண்டிய சத்தங்களை தாண்டிய அனத்தல் ஒன்று தபனனை டியூட்டி பார்த்திட விடாமல் தடுத்தது.

''ஹ்ம்ம்.. ஆர்ர்ஹ்ஹ்.. டேய்.. ஜூனியர்.. வேண்..''

தேவகுஞ்சரியின் பின்முதுகில் படியேறிய ரீசனின் விரல்கள், விருந்தனையின் மார்பு கச்சையின் கொக்கியில் முற்றுகைக் கொள்ள; பிரிவில் பசலைக் கொண்டிருந்த பாவையவளோ எப்போது மலர்ந்திடுவாள் என்று ஏங்கினாள்.

''பாப்பா.. மேலருக்கா குஞ்சாய்.. நாமே இங்கையே..''

தனிமையில் வாடி தவித்திருந்தவனுக்கோ இடம் பொருள் ஏவலில் கவலையில்லை.

அடுக்களை ஜன்னல் வழி தம்பதிகளின் மெல்லிய உரசல்களை எட்டி பார்த்த மித்திரன், பொறமைத் தீயில் வயிறெரிந்து அனலி கதிர்களை சுளீரென்று படர விட்டான்.

வெளிப்புற மின்சார கம்பிகளில் அணிவகுத்திருந்த பறவைகள் கூட, பகலோனின் தந்திரத்தால் ஜோடிகள் இருவரும் கண் கூச்சம் கொண்டிடுவார்கள் என்று நம்பி ஏமாந்து போயினர்.

''ஐ மிஸ் யூ டி குஞ்சாய்..''

என்றவனின் இதழ்களோ வார்த்தைகளின் ஏக்கத்தை வனிதையின் கந்தரத்தில் காட்டியது. மோகம் தலைக்கேற ஆளனின் முழங்கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் வதூ அவள்.

மங்கையின் மேனியோ சிலிர்த்துப்போக, செங்கதிரோனை தாண்டிய கனலில் உழன்ற ரீசனோ; முறுக்கேறிய தினவை அடக்கிட முடியாது கழட்டினான் மணவாட்டியின் பின் முதுகு தடுப்பை.

''ரீ.. ஆஹ்..''

தேவகுஞ்சரியின் கிறங்கிய குரலோ, புருஷனை இன்னும் வெறியேத்த; ஆணவனோ கட்டியவள் கொண்ட ஆடைகளை களைந்திட முனைந்தான்.

அதிகாலை சம்பவத்திற்கு சாட்சியாக முடியாதடா சாமி, என்ற சாக்கில் பறவைகள் வெட்கம் கொண்டு பறந்து போயின.

முயன்று தோத்த கடுப்பில் தோல்வியை ஒருவாரியாக ஏற்றுக் கொண்ட வெய்யோனோ தலை தொங்கி ஓரம் வாங்கினான்.

இவ்வளவு நேரமாய் குப்பைத்தொட்டிக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டிருந்த வெள்ளை புழுக்களோ, அன்ன நடைப்போட்டு வெளியே அடியெடுத்து வைத்தன பீட்சா அட்டையிலிருந்து தைரியமாக; துங்கீசனின் தலை மறைய.

தம்பதிகளின் நெருக்கம் நேரமாக, கிட்சன் கேபினெட்டின் மீதிருந்த கண்ணாடி பீங்கானை தரையில் முத்தமிட வைத்து நொறுக்கியது.

சத்தத்தில் சுதாரித்து விலகிக் கொண்ட இருவரும் சிறு முறுவலோடு பின்வாங்கிக் கொண்டாலும், காலை பொழுதில் தொடங்கிய லீலைகளில் போதையேறிக் கிடந்த ஓமப்புடியனோ; எப்படியும் சுக்கு நூறாகிடவே விரும்பினான் தன்னவளோடு சேர்ந்து.

''எங்கடி போறே குஞ்சாய்.. வாடி இங்க..''

என்றவனோ கிடுக்கு பிடியாய் பரவையவளின் பின்னங்கழுத்தை வலக்கரத்தில் இறுக்கி, இயமானியின் இதழ்களை சிறைப்பிடித்தான்.

முனகல் மட்டுமே கலைகட்டிய அடுக்களை பக்கத்தில், குட்டி வாண்டோ அப்பனுக்கு ஆப்பு வைத்திட மேல் மாடியிலிருந்து கீழ் தளம் ஓடோடி வந்தாள்.

''ரீசன்.. பாப்பா..''

என்ற வேட்டாளோ பொறுப்பான அம்மாவாய் மாறி, விலகிக் கொண்டாள் தணல் கொண்ட கணவனை பாதியில் கழட்டி விட்டு; இல்லை தவிக்க விட்டு அவனை மொத்தமாய் சூடேற்றிய பிறகு.

சூப்பர் மேனை விட படு வேகமாய் வந்த கீத்து குட்டியோ மூச்சு வாங்க வத்தி வைத்தாள்.

''Mummy see this!!''
(மம்மி இதை பாருங்க!!)

மகள் கீத்து குட்டி கையில் இறுக்கிப் பிடித்திருந்த காலியான மது போத்தலை பார்த்த தேவகுஞ்சரியின் கண்களோ கடலளவு விரிய, நெற்றியில் ஈரம் பூத்த உள்ளங்கையால் பட்டையடித்துக் கொண்ட ரீசனோ மகளை நெருங்கினான்.

''அச்சச்சோ!! என்னதிது.. அப்பாவோட பொண்ணு கையிலே ரம் போத்தல்!!''

ஒன்றும் அறியாதவனாட்டம் ரீசன் சமாளிக்க, பெண்மையை தூர வீசி பிடாரியான குஞ்சாயியோ வினவினாள் மகளிடம்.

''எங்கிருந்து இதை எடுத்திட்டு வர கீத்து!!''

''உங்க ரூம்லருந்துதான்..''

கீத்துவின் உயரத்துக்கு ரீசன் அபூர்வ சகோதரர்கள் கமலாக மாறிட, மகளவளோ மழலை மாறாத குரலில் மாட்டி விட்டாள் ரீசனை.

''ரீசன்!!''

என்றப்படி புருஷனை ஒரு முறை முறைத்த பிடாரி, மகளின் பக்கம் திரும்பி அவளிடத்தில் கோபத்தைக் காட்டினாள்.

''கொடு கீத்து அதை இங்க!!''

மனைவியவள் முந்தும் முன் ரீசன் முந்திக் கொண்டான். மகளின் கையிலிருந்து போத்தலை வாங்கியப்படி ஆடொன்றின் மீது பழியை போட்டு.

''அப்பா ரூம்லையா!! அப்போ இது கண்டிப்பா மீகன் சித்தப்பா வேலையாதான் இருக்கும்!!''

''யாரு மீகன்!!''

இடையில் கரங்கள் இறுக்கி காளியாத்த தொனி கொண்டவளோ அதட்டலாய் கேட்க, கொழுத்தி போட்ட குட்டியோ வந்த வேலை முடிய; அங்கிருந்து நழுவும் முன் அப்பாவின் காதில் ஓதிப்போனாள்.

''போச்சு டேடி!! போச்சு!! செம்மையா மாட்டிக்கிட்டிங்க!!''

புன்சிரிப்போடு மகள் டிமிக்கி கொடுத்து ஓடிட, எழுந்தவன் போத்தலை கழுவிட ஆரம்பித்தான்.

காலி போத்தலில் செடி வளர்த்திடும் ஐடியா நண்பன் வீருடையது. வேறெந்த வீரும் இல்லை. பஜாரியின் அதே டிவோர்ஸ் வக்கீல்தான். நைட் கிளாப்பில் பழக்கம் இருவருக்கும். ரசனைகள் ஒத்து போக பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிதான்.

பணக்கார வீட்டு தேவகுஞ்சரிக்கோ கஜேன் மது குடும்பம் சிறு வயதிலிருந்தே பழக்கம். நம்பியும் கஜேனும் மாட்டு பிஸ்னஸில் கூட்டாளிகள். அப்படித்தான் மீகன், குட்டி கீத்துவிற்கு சித்தப்பாவாகி போனான்.

அது என்னவோ இந்த கேடிக்கு மட்டும் என்ன லக்கோ, யார் வீட்டு பிள்ளைகளும் அவனை உறவு முறைக் கொண்டு அழைத்ததே இல்லை.

கேடி டேடிதான் அவனுக்கான அழைப்பு. கெத்தான மாஸ் காலிங்கெல்லாம் அவனுக்கு மட்டுமே செட்டாகிப் போவது என்ன அதிர்ஷ்டமோ.

''சத்தியமா குஞ்சாய்!! மீகன்தான்!! நான் அப்பவும் வேணாண்ணுதான் சொன்னேன்.. அவந்தான் கேட்கலே..''

கொஞ்சமும் மனசாட்சியின்றி ரீலை ஓட்டினான் ரீசன்.

''நம்ப ரூம்லே மீகன்!! அதுவும் ரம் போத்தலோட!! என்ன நம்ப சொல்றியா ரீசன்!!''

பல்லை பாவையவள் முறுக்காட்டம் கடிக்க, தாட்டியவளின் முகத்தை இருக்கரங்களுக்குள் அடக்கியவனோ கொஞ்சல் தொனியோடு டாப்பிக்கை மாற்றினான்.

''சரி விடுமா!! அதான் பச்சையா உனக்கே தெரியுதுல்லே என்னால சமாளிக்க முடியலன்னு.. அப்பறம் என்னடி குஞ்சாய்.. இதெல்லாத்தையும் விட்டு தள்ளு.. வா ரூம் போகலாம்.. ரெயின்போ பார்க்கே..''

கடுப்பில் நின்றிருந்தவளின் கரம் இழுத்த ஹீரோவோ, தடைப்பட்ட அவனின் வேலையை மீண்டும் தொடங்கிட ஆர்வம் கொண்டான்.

''ஒன்னும் வேணா!! விடு என்னே!!''

என்றவளோ கழண்டிக் கிடந்த கச்சையின் கொக்கியை மாட்டிட போராடிட, அவளை நன்றாய் இறுக்கியவனோ சாய்த்தான் சீமாட்டியின் பிட்டம் கேபினெட்டில் நசுங்கி போக.

''வேணா.. ரீசன்.. விடு..''

கைகள் ரெண்டும் கொக்கியோடு மல்லுக்கட்டிட, தலைமைகளின் முன் கலசங்களோ கணவனின் வெற்று மார்பில் மோதி நிலைகொள்ளாமல் தடுமாறியது.

''என்ன வேணாம் குஞ்சாய்..''

தகித்து கிடப்பவளை வேண்டுமென்றே ரீசன் மோக தொனியில் கிறங்கடிக்க, கொக்கியோடு கொண்ட சண்டையை வாபாஸ் வாங்கிக் கொண்டவளோ; ரீசனின் அதரங்கள் தந்த அழுத்தத்தில் அம்பகங்கள் சொருகினாள்.

கற்பாளின் சரீரம் கன்றி போக, இதழ் போர் நிகழ்த்தியவனோ மென்மேலும் முன்னேறி கீழிறங்க; கேபினெட் விளிம்பை இறுக்கிய உல்லியின் கரங்களில் என்னவோ ஊறிட படக்கென்று விழிகள் விரித்தாள் ஊடையவள்.

கைகளின் மீது படையெடுத்த புழுக்களை கண்ட தேவகுஞ்சரியோ, பிடாரியாகி கத்தோ கத்தென்று கத்தி தீர்த்தாள்.

''ஐயோ!! முருகா!! என்ன கன்றாவி இது ரீசன்!! கருமம்!! கருமம்!! சீ!! சாப்பிட்டே குப்பையே கூட கட்டி போட முடியாதா உனக்கு!!''

ரீசனோ புழுக்களை கொலை காண்டில் பார்த்து முனகினான்.

''ஏன்டா.. நல்லாதானே போய்கிட்டுருந்துச்சு.. அதுக்குள்ளே..''

''தள்ளு!! அப்படி என்னதான் வெட்டி கிழிச்சே நீ இத்தனை நாள்லே!! வீடு வீடு மாதிரியா இருக்கு!! வீட்டே சுத்தமா வெச்சுக்க முடியாட்டி அம்மா வீட்டுக்கு போக வேண்டியதுதானே!!''

என்றவள் அவளின் கைகளை முழங்கை வரை ஹேண்ட் வாஷ் போட்டு அலம்பியவள், பளிங்கு மேற்பரப்பு கொண்ட கேபினட்டை நீர் கொண்டு கழுவினாள்.

''சரிடி குஞ்சாய் விடுடி!! அப்பறம் பார்த்துக்கலாம்..''

கேஸை க்ளோஸ் (close) செய்திட பார்த்தான் ரீசன். ஆனால், அவளோ கணவனின் பிடியை உதறி வசையை தொடர்ந்தாள்.

''ஒழுங்கா போயிடு ரீசன்!! என் கண்ணு முன்னுக்கு நிக்காதே!! பாரு!! புழு எங்கெல்லாம் போயிடுச்சின்னு!! அறிவே இல்லே ரீசன் உனக்கு!! வீட்டுலே பாப்பா இருக்கா!! உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா!!''

வெறுப்பை உமிழ்ந்தவள் புழுக்களை சுடுநீர் ஊற்றி மர்கையாவாக்கிட, ரீசனோ மெதுவாய் அடிகளை பின்னோக்கி வைத்து வீட்டிலிருந்து வெளியேறினான்.

டேடி வெளியாகிட, மகள் கீத்து குட்டியும் அவன் அறியாது காரின் பின் சீட்டியில் ஏறி ஒளிந்துக் கொண்டாள்.

*

ஊர் சுற்றி திரிந்த அப்பா மகள் இருவரும் சாலை ஒன்றில் பயணிக்க, அப்போதுதான் கண்டான் தீனரீசன் அவன் மனைவி தேவகுஞ்சரியை போலவே இருக்கும் விசாகாவை.

கோபித்துக் கொண்ட மனைவி தன்னை போலவே புதுக்காரில் உலா வந்து விட்டாள் என்றே அவன் நினைத்துக் கொண்டான், இருவரின் கார்களும் முட்டிக் கொள்ள.

இப்படியான ஊடல்கள் அவர்களுக்குள் சகஜமே. புருஷனோடு வாக்குவாதம் கொண்டால் குஞ்சாய் எப்போதுமே அவளின் டேடி வீட்டிற்கு சென்றிடுவாள். ரெண்டு நாள் அங்கேயே குத்த வைத்திடுவாள்.

மூன்றாம் நாளோ ஓடோடி வந்திடுவாள். வந்த பிறகு அவள் இல்லாது போன இரண்டு நாட்களுக்கும் சேர்த்தே ரீசனை உண்டில்லை என்று செய்திடுவாள் பிடாரி.

கீத்து குட்டியோ அந்நேரம் பார்த்து மிக மும்முரமாய் டேடி போனில் கேம் விளையாடிட, காருக்கு வெளியில் நடந்தேறிய சீனை மிஸ் செய்திருந்தாள் மகளவள்.

வாக்குவாதம் நிறைவுக்கு வர, மகளோடு துரித உணவு கடைக்கு சென்று ஒரு கட்டு கட்டிய ரீசன்; அடுத்ததாக குட்டி கீத்துவை கொண்டு போய் அவன் மம்மி வீட்டில் தள்ளி விட்டான்.

வேறெதுக்கு பிடாரிக்கு சாமி ஓட்டிடத்தான் ராவில். நடுச்சாமம் கொஞ்ச நேரம் மட்டும் பாரில் தலையை காட்டி விட்டு, ராவோடு ராவாக வீட்டுக்கு ஜுட்டடிக்கத்தான் திட்டம் தீட்டியிருந்தான் ரீசன்.

எப்படியும் அவள் மாமனார் வீட்டில்தான் இருப்பாள் என்று நினைத்திருந்தவன், அவளை அங்கேயே சென்று பிக் ஆப் செய்திட நினைத்தான்.

ஆனால், எல்லாம் நொடியில் மாறிப்போனது அதே பாரில் ஹீரோ விசாகாவை பார்த்திட.

துணைவியே என்றேண்ணி அவன் அத்து மீற, குடிபோதையில் ஊறிக்கிடந்தவளுக்கோ நடப்பதேதும் புரியாமலே போனது.

சொர்க்கத்தில் மிதப்பதை போலுணர்ந்தாள் முதல் முறை ஆணொருவனின் எல்லை மீறிய தீண்டல்களில் கன்னியவள். முழுதாய் ரீசன் அவளை சுகித்திட ஒன்னும் பாதியுமான சுயநினைவில் அவனுக்கு பச்சைக் கொடி காட்டி இசைந்தாள் விசாகா.

கண்டதும் காதல் என்பதை போல, தொட்டவுடன் தேவகுஞ்சரியின் கணவன் அவளின் புருஷனாகிடுவான் என்று கனவு கண்டு விட்டாள் நிஜம் அறியா முட்டாளவள்.

பகல் மதியமாகிய வேளையில் முழிப்பு தட்டிய ரீசனின் அலறிய போனில், மாணவளியின் குரல் கேட்க, நெஞ்சில் துஞ்சிக் கிடந்த கன்னியின் முகம் கண்டவன் அதிர்ச்சிக் கொண்டான்.

யுவதியவளோ பார்த்திட அச்சு அசல் ரீசனின் குஞ்சாய் போலவே இருக்க, நடந்த மாபெரும் தவறை கணித்து விட்டான் நெட்டையன்.

வருந்தி பலனில்லை என்பதை உணர்ந்த ரீசனோ அவன் உடமைகளை கைப்பற்றி அங்கிருந்து வெளியேறினான். அவன் மட்டுமே அறிந்த ரகசிய சம்பவத்தை அப்படியே மறைத்திட முடிவெடுத்து விட்டான் ரீசன்.

அவனின் உண்மை நிலவரம் அறியா ஏமாளி விசாகாவோ மிழிகள் விழித்த கணமே கனவுலகிற்கு பயணித்தாள்.

சிக்கிய அவனின் விசிட்டிங் கார்டை பத்திரப்படுத்திக் கொண்டவளோ வரப்போகும் இரவுக்காக காத்திருந்தாள் மீண்டும் அவளின் தினாவை சந்தித்திட.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படித்திட:


https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 5
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top