What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 70

மணி சரியாக ஏழரை.

கண்கள் சொருக, கையிலிருந்த நாவலை நழுவ விட்டாள் குஞ்சரி. கட்டிலின் விளிம்போரமாய் சாய்ந்த சுந்தரியவளின் தலையை யாரோ வாஞ்சையாய் ஏந்த விடுக்கென்று கண்கள் விழித்தாள் அருணியவள்.

''மயூரி..''

என்ற ராகமான அழைப்பில் அகல விரிந்த விழிகளால் முன்னிருந்த ஆணை அதிர்ச்சிக் கொண்டு வெறித்தாள் பெண்டு அவள்.

''நீயா!''

''நானேதான் குஞ்சரி! என்ன ஆச்சரியமா இருக்கா!''

என்ற மிதப்போடு அவளின் முன்னிருந்து பின்னோக்கியவனோ இருக்கரங்களையும் அகல விரித்து கிண்டல் தொனியில் தொடர்ந்தான்.

''தப்புதான் மயூரி.. நான் அன்னைக்கு அப்படி பேசியிருக்க கூடாது.. அது ஏதோ குடி போதையிலே என்னே அறியாமே அப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு.. அதுக்காக நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்க பலதடவே முயற்சி பண்ணேன்.. ஆனா.. நீ அதுக்கான வாய்ப்பே எனக்கு ஒருமுறை கூட தரலே.. அவ்ளோதான் நம்ப பிரெண்ட்ஷிப்பா மயூரி..''

என்ற கேள்வியோடு முகத்தில் வழமையாக கொண்டிருக்கும் அதே புன்னகையோடு மஞ்சம் அருகே இருந்த நாற்காலியில் பிட்டத்தை அமர்த்தினான் ஆணவன்.

பிரிவென்பது நல்லப்படியாக அமைந்திருந்தால் கண் முன்னே குத்துக்கல்லாய் நிற்பவனை பார்த்து வியப்பு கொண்டிருப்பாள் விறலியவள். ஆனால், நெஞ்சில் நஞ்சு கொண்ட கயவனவனை எப்படி ஆனந்தமாய் வரவேற்றிட முடியும் மாதவளாள். அதிர்ந்துதான் போயிருந்தாள் பேதையவள்.

அடுத்து என்ன பேசுவது என்று மூளை சிந்திக்க பேசத்தான் வேண்டுமா என்று நா கூட வம்படியாய் வரட்டு பிடிவாதத்தோடு முறுக்கிக் கொண்டு நின்றது.

''ஹேய்.. மயூரி.. நடந்ததெல்லாம் நடந்துருச்சு.. விட்டுத்தள்ளு.. நீ சொல்லு எப்படி இருக்கே..''

என்றவனோ மென்மை கொள்ள, அப்போதும் மௌனியாகவே இருந்தாள் இயமானியவள் எப்படி அவனை நூதனமாய் விரட்டுவதென்று சிந்தித்து.

பின்னே, சொன்னவன் என்னவோ பெரிய வீர சாகசம் செய்தது போலே சங்கடத்தை மறக்கச் சொல்லி உபதேசிக்க, அசிங்கப்பட்டவளோ அனல் கொதி கொண்டாள் உள்ளுக்குள்.

''சொல்லு மயூரி.. எப்படி இருக்கே நீ..''

பார்த்தாலே தெரிகின்றவளின் மோசமான நிலையை வேண்டுமென்றே குசலம் விசாரிக்கும் சாக்கில் கோமகள் அவளுக்கே ஞாபகப்படுத்துவது போல மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றவனின் முகத்தில் முஷ்டி மொத்துகள் வைக்கத்தான் தோன்றியது கோதையவளுக்கு.

கோபத்தில் சிவந்தவளின் முகம் ஆணவனின் அக்கறையான விசாரிப்பில் குளமாகி போனது. நீர்கோர்த்த மிழிகள் சொட்டுகளை துளிர்க்க விட தத்தளிக்க,

''ஹ்ம்ம்..''

என்றாள் ரீசனின் சீமாட்டியவள் சமாளித்த மடந்தையாய் குனிந்த தலையை ஆட்டி,

''என்னே பாரு குஞ்சரி.. எத்தனை நாளாச்சு உன்னே இப்படி கூப்பிட்டு..''

என்றவனோ அவளை பார்த்திருக்க,

''பிளீஸ் விஜய்! நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு! உன் மூஞ்சே பார்க்க கூட எனக்கு பிடிக்கலே! நமக்குள்ள இருந்த பிரெண்ட்ஷிப் எப்பவோ உடைஞ்சு போச்சு! என்ன பண்ணாலும் சுக்கு நூறாகி போன நம்பிக்கையே திரும்பவும் சம்பாரிக்க முடியாது! போலியான எந்த உறவும் இந்த தேவகுஞ்சரிக்கு தேவை இல்லே! நீ போகலாம்!''

என்றவளோ சினத்தை சிதற விட்டாலும், கோபங் கொண்டிருந்த யுவதியவளோ இப்போதும் தலையை மேல் தூக்கி விஜய்யின் முகத்தை ஏறெடுக்கவில்லை.

குஞ்சரியின் தற்கொலை முயற்சிக்கு முன்பான சந்திப்பொன்றில் விஜய் குடியை போட்டு அவளிடத்தில் மனசில் தேக்கி வைத்திருந்த காதலை வாந்தியெடுத்தான்.

அதை சற்றும் எதிர்பார்த்திடாத மானினியவளோ சபை என்றும் பாராது அவனின் கன்னங்களை செவசெவனென்று பழுக்க வைத்தாள்.

அந்த பார்ட்டிக்கு பின்னான நாட்களில் ஆணவனை ரீசனின் மனைவி குஞ்சரி சந்தித்திடவே இல்லை. அலைபேசி எண்ணையே மாற்றியிருந்தாள் மாதங்கியவள் விஜய் தொடர்ந்தழைத்து அவளிடம் பேச முயற்சிக்க.

ரீசனிடத்தில் அச்சம்பவத்தை குஞ்சரி சொல்லிடவும் இல்லை. காரணம் அது என்னவோ புருஷன் அவனுக்கு முன்பிலிருந்தே குஞ்சரியின் ஜால்ரா நண்பர்களை பிடிக்காது குறிப்பாய் விஜய் அண்ட் அவனின் கோஸ்களை.

எங்கே நடந்ததை சொன்னால் கணவனவன் சென்று விஜயிடத்தில் சண்டை பிடிப்பானோ என்ற அச்சத்தில் அவ்விடயத்தை தவிர்த்திருந்தாள் தாரமவள்.

''உன் கோபம் நியாயமானது குஞ்சரி.. அதுல இருக்கறே உண்மை எனக்கு நல்லாவே புரியுது.. இதுக்கு மேலையும் உன்னே தொந்தரவு பண்ண நான் விரும்பலே குஞ்சரி.. கிளம்பறேன்..''

என்றவனோ எழுந்து நெருங்கினான் கட்டில் மாயோள் அவளை.

முன்னோக்கி வந்தவனின் அடிகளை நெருக்கத்தில் கண்ட பூமகளவளோ ஏறெடுத்தாள் பட்டென்று கயவனை.

''நான் ஒன்னும் அவ்ளோ கெட்டவன்லாம் இல்லே குஞ்சரி.. ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்லி ஹக் தான்.. நாமேதான் இதுக்கு அப்பறம் பார்த்துக்கவே மாட்டோமே!''

என்றவனோ நம்பிக்கையற்ற பார்வைகளை பார்த்த பாவையவளை அன்பாய் வாரியணைத்தான்.

''உடம்பே நல்லப்படியா பார்த்துக்கோ குஞ்சரி.. ரீசனையும்தான்..''

என்றவனின் பேச்சில் பொய்யினிப்பை காணாதவளோ நிம்மதி பெருமூச்சுக் கொண்டாள்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 70
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top