- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 76
வாசலில் பைக் முறுக்கும் சத்தம் கேட்க, சின்னஞ்சிறு குட்டி கால்களோ குடுகுடுவென வரவேற்பறையிலிருந்து ஓடியது முன் வாசல் நோக்கி.
''தீனா! தீனா! டேய்! ஓடாதடா! டேய் நில்லுடா! அட! பாறேன் என்னா ஓட்டம் ஓடுறான்!''
என்ற விசாவோ பின்னே துரத்தி ஓடினாள் பெற்றெடுத்த ஆண் செல்வத்தை தொடர்ந்து.
''ஏய்! பார்த்து! பார்த்து! பார்த்து!''
என்ற ப்ரீதனோ டக்கென்று பைக்கிலிருந்து இறங்கி கையில் தூக்கினான் அவனை நோக்கி ஓடி வந்த குட்டி வாண்டினை.
''என்னடா செல்லம் இப்படி ஒரு ஓட்டம்! தப்புச்சோம் பிழைச்சோம்ன்னு ஓடி வந்துட்டியா உன் அம்மா மூக்கு சளிக்கிட்டருந்து!''
என்றவனோ கிண்டலடித்து சிரிக்க,
''திமிரா! திமிரா! திமிரா! திமிரா உனக்கு! வாயே உடைச்சிடுவேன்! மூக்கு சளியாம்! மூக்கு சளி! வேறே பேறே இல்லே பாரு!''
என்ற பெண்டு அவளோ உரிமையாய் அவனை தோள்கள் தொடங்கி பிட்டம் வரை எட்டிய தூரத்தில் கையில் சிக்கிய ஹெங்கரைக் கொண்டு செல்லமாய் அடித்தாள்.
''என்னடா குகா.. விசாதான் சின்ன பொண்ணு.. ஆனா.. உனக்கு.. ஏழு கழுதை வயசாகுதுள்ளே நீயுமா இப்படி அவக்கூட சேர்ந்துக்கிட்டு கையிலே பிள்ளையோட இந்த பனியிலே விளையாடுவே!''
என்ற ஆதங்கத்தோடு நீட்டினார் ஆணவனின் தாயாரவர் உணவுகள் நிரம்பிய பொட்டலங்களை.
சீரியஸான நேரத்தில் கூட அம்மாவின் கூற்றை கேட்ட விசாவோ அவ்விடத்தை கலகலப்பாக்கினாள் சத்தம் போட்டு சிரித்து.
''மா.. நீங்க என்னே எருமே மாடுன்னு கூட சொல்லி திட்டிருக்கலாம்! ஆனா.. பாருங்க.. இந்த மூக்கு சளி முன்னுக்கு என்னே போய் வயசான கழுதன்னு சொல்லிட்டிங்கள்ளே! போங்க நான் ஒரு வாரத்துக்கு உங்கக்கிட்ட டூ!''
என்றவனோ விறலியவளின் விளையாட்டில் கடுப்பாகி அம்மாவிடத்தில் செல்ல கோபம் கொள்ள,
''ஆமா! இவரு பெரிய வி.ஐ.பி. தனுஷு! மூஞ்சியே பாரு!''
என்றவளின் தொடர் நக்கலில்,
''அதான் பாரு! சுமார் மூஞ்சி ப்ரீதனுக்கு பிரியங்கா மோகன் கேட்குதாம்!''
என்றவனின் தாயும் பத்து மாதம் சுமந்தவனை டீலில் விட்டு கேலி பேசினார்.
''பிரியங்கா மோகன் என்னே பிரியங்கா மோகன்! நான் மாளவிகா மோகனன் மாதிரி ஒரு சூப்பர் ஃபிகரே உஷார் பண்ணி காட்டறேன் பாருங்க! அப்போதான் தெரியும் உங்களுக்கெல்லாம் என் திறமே!''
''உன் பெருமையிலே எருமே மேய! முதல்லே ஒரு பொண்ணே பார்த்து பேசி காஃபி குடிக்க கூட்டிக்கிட்டு போ! அப்பறம் வந்து சுத்து இந்த ரீலெல்லாம்! சும்மா இந்த பிஸ்னஸ் பேசறே பொண்ணுங்களையெல்லாம் கணக்குலே சேர்த்துக்கிட்டு பித்தலாட்ட பாபா வேலை பார்க்கலான்னு மட்டும் நினைக்காதே குகா! மூக்கே உடைச்சிடுவேன்!''
என்ற ப்ரீதனின் மம்மியோ மறுபடியும் மகனவனை அந்திகையின் முன் டம்மியாக்க, பெண்கள் இருவரும் கையடித்து சிரித்துக் கொண்டனர் அசடு வழிய பாவமாய் நின்றவனை பார்த்து.
''நான் போறேன்!''
என்றவனோ முறைப்போடு கிளம்ப,
''பார்ட்னர்! நில்லுங்க! நில்லுங்க! நானும் வறேன்!''
விசாவின் இடுப்பிலிருந்த குட்டி தீனாவோ பாட்டியின் கைகளுக்கு மாறியிருந்தான்.
''எங்கே..''
''ஆர்ஹ்ஹ்.. நீங்க எங்கே போறீங்க..''
''டிங்கோக்கு சாப்பாடு போடே..''
''அப்போ நானும் கிங்கோக்கு சாப்பாடு போடணும்..''
என்றவளோ சொல்லாமல் கொள்ளாமலேயே பைக்கில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
''கிங்கோவா..''
என்றவனின் கண்கள் உருள,
''எங்கையோ போங்கே! நடுராத்திரி மட்டும் வந்து கதவே தட்டிடாதீங்க! குகா உன்கிட்ட சாவி இருக்குதானே! நான் கதவே பூட்டிட்டு படுத்திருவேன்! வரட்டா!''
என்ற குகனின் மம்மியோ குட்டி தீனாவோடு வடிவேலு டயலாக்கை ரைமிங்கில் பாடி கதவை இழுத்து மூடினார்.
''ஆமா அது யாரு கிங்கோ..''
என்றவனோ அவனின் ஜாக்கெட்டை கழட்டி நீட்டினான் வனிதையவளிடம்.
''டிங்கோவோட போய் பிரெண்ட்!''
என்றவளோ ஹெல்மட்டை எடுத்து கவிழ்த்துக் கொண்டாள் அவளின் தலையில்.
''அட பைத்தியமே! டிங்கோ ஆம்பளே! விட்டா நீ மிருகத்துக்கே மேட்ரிமோனி ஆரம்பிச்சிடுவே போலே!''
என்றவனோ படாரென்று ஒரு சாத்து சாத்தினான் சுந்தரியவளின் ரேஸிங் ஹெல்மட்டின் முன் கண்ணாடியை.
''ஏன்! என்ன தப்பாம்! ஆரம்பிச்சா!''
என்றவளோ கண்ணாடியை திறந்து திட்டிகளை சிமிட்ட,
''போச்சுடா! புதுசா ஒன்னே புடுச்சிட்டா! அடுத்த பிஸ்னஸாமா!''
என்றவனோ அவனுக்கான ஜாக்கெட் ஜிப்பை மேலேத்திக் கொண்டான்.
''யா! யா!''
என்றவள் சொல்ல,
''ஏய் மூக்கு சளி.. பராக்கு பார்க்காமே ஒழுங்கா புடிச்சுக்கிட்டு வா.. எங்கையாவது உருண்டு பிரண்டு விழுந்து தொலைச்சே கண்டுக்காமே போயிடுவேன் சொல்லிட்டேன்!''
என்றவனோ நக்கலடிக்க,
''விட்டுட்டு போயிடுவியா ப்ரீதன்..''
என்றவளோ அவனை நெருங்கி ஹெல்மட் கண்ணாடியை மேலேத்தி கேட்க,
''அதை இப்படி கிட்ட வந்துதான் கேட்பீங்களா மிஸ் மூக்கு சளி!''
என்றவனோ பிடித்தாட்டி சிரித்தான் மதங்கியவளின் நாசியை.
''ஈஈஈ!!''
என்றவளோ ஆணவனின் ஹெல்மட்டை முட்டிய வேகத்தில் ஏறி அமர்ந்தாள் அவன் பின்னே.
ப்ரீதனோ பாடலொன்றை ஹம்மிங் செய்ய,
''என்ன பாட்டிது..''
''வரும் போது சொல்றேன்..''
என்றவனோ அழுத்தினான் பைக்கை ராத்திரி பத்து மணிக்கு ஆளில்லா ஏரியா பக்கம் போக.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 76
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.