- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 86
காதலின் அதீத பித்தில் குஞ்சரி செய்த காரியங்களுக்கெல்லாம் அவ்வளவு சுலபத்தில் பிராய்ச்சித்தம் தேடிட முடியாதென்பதை தீனரீசன் நன்கறிவான்.
அதற்காகவெல்லாம் அவளை விட்டு போக முடியாதென்பதையும் அவன் உணர்வான்.
இருந்தும், கர்மாவிற்கு பயந்து வாழ்க்கையை தொலைத்திட அவன் விரும்பவில்லை. பாரத்தை கடவுளின் மீது போட்டவன் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து அதில் உறுதியாகவும் நின்றான்.
குஞ்சரியின் கற்பழிப்பு வழக்கை கூட கிடப்பில் போட்டிட சொல்லி கீரனை கேட்டுக் கொண்டான் ரீசன். முடியாதென்று முறுக்கிய ஆன்ட்டி ஹீரோவோ தேவகுஞ்சரியிடம் விசாரணை நடத்தி தோற்று போனான்.
காயங்கொண்டவளோ வாயை திறக்க மறுத்து விட்டாள். கீரனின் வற்புறுத்தலில் அம்மணிக்கு பிபி எகிறியதுதான் மிச்சம். அதன் விளைவாய் மாட்டிக் கொண்டது திக் பிரெண்ட்ஸ் கீரனுக்கும் மினர்வாவிற்கும்.
அவர்களை சமாதானமாக்கிய ரீசனோ இனி கேஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென்று எல்லாவற்றையும் வாப்பஸ் வாங்கிக் கொண்டான்.
வெளிநாடு செல்ல முடிவெடுத்திருந்த ரீசனோ அவனின் மதுக்கூடங்கள் எல்லாவற்றையும் நல்லதொரு விலையில் விற்றான் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்ற சிலரிடம்.
பணத்தை கீத்துவின் அக்கவுண்டில் டிப்போசிட் செய்தவன் கடைசி முறையாக மறுபடியும் வேண்டினான் அவனின் பெற்றோர்களிடம் அவனுடனேயே வெளிநாடு வரக்கோரி.
ஆனால், வயசான கட்டை ரெண்டும் முடியவே முடியாதென்று மறுத்து விட்டனர். வேறு வழியில்லா ரீசனோ அவனுக்கும் குஞ்சரிக்கும் மட்டும் டிக்கெட்டை போட்டான் யாரும் அவ்வளவு சுலபத்தில் தேடிவர முடியாத ஊரொன்றுக்கு.
மகள் கீத்துவை அவனோடு அழைத்து செல்வது அப்போதைக்கு சரிப்பட்டு வராது என்ற காரணத்தால் புதல்வியை மட்டும் தாத்தா பாட்டி கையிலேயே ஒப்படைத்து விட்டான் தகப்பனவன்.
எல்லாம் அவனின் திட்டப்படி நடக்க, ஒன்றே ஒன்று மட்டும் கடைசி நேரத்தில் காலை வாரியது. அதுதான் இழுவையில் இருக்கும் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய அவனின் மதுக்கூடம்.
அது ஒன்றிக்காக மட்டுமே மலேசியாவில் தொடர்ந்திருக்க விரும்பாதவனோ லம்சமான தொகையொன்றை ரெடி செய்தான் மேலிடங்களுக்கு கையூட்டு கொடுத்து கேஸை இழுத்து மூட.
ஒருவழியாக இழுத்தடித்த வழக்கு முடிவுக்கு வர அதற்காக வேற்று மாநிலம் வந்திருந்தவனோ அன்றோடு அம்மதுக்கூடத்தையும் தலைமுழுகி நிம்மதியாக கிளம்பினான் கோலாலும்பூரை நோக்கி.
பாவம் தீனரீசனவன்.
சனீஸ்வரன் அவனுடன் வருவதை ஆணவன் உணரவில்லை.
கர்மவினைக்கான பலனை அனுபவிக்க வேண்டாமா ரீசா என்ற தோரணையில் ஏழரை பகவான் சிரித்துக் கொள்ள டமாரென்றோரு சத்தம் பலரின் காதை பிளந்தது.
தீனரீசனின் கார் சாலையில் மிக சரியாய் பயணிக்க குருடனாட்டம் குறுக்கே வந்த ஒருவனோ மோதினான் பைக்கோடு ரீசனின் கார் மீது.
அலண்டு போன ரீசனுக்கோ ஈரக்குலை அதிர, பைக்காரனோ காருக்கு அடியில் சறுக்கி போய் முத்தமிட்டு குப்பிற கிடந்தான் தார் சாலையில்.
சடன் சம்பவத்தின் அதிரடியாய் நெடுஞ்சாலையில் கூட்டம் கூடியது.
ரீசனோ பதறிப்போய் காரிலிருந்து வெளிவர பலரும் அவனின் காலரை பிடித்திட ஆரம்பித்தனர். சிலர் சண்டையை சமாதானமாக்க முயற்சிக்க, முக்கால்வாசி நல்லுள்ளங்களோ கேமராவும் கையுமாய் தான் பிஸியாய் இருந்தனர்.
பைக்காரனின் பைக்கோ சித்தரிக்க முடியா நிலையில் கிடக்க, ஓட்டுனர் அவனோ ரீசனின் காருக்கு அடியில் ரத்த வெள்ளத்தில் செத்த பிணமாட்டம் கிடந்தான்.
ரீசனோடு சேர்ந்த பலரும் காருக்கு அடியில் கிடப்பவனை பார்த்த மாத்திரத்தில் ஏதேதோ சொல்ல சம்பந்தப்பட்டவனுக்கோ ஒரு நிமிடம் உலகமே நின்று போனது.
பைக்காரனுக்கு மட்டும் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிவிட்டால், ரீசனில்லா குஞ்சரியின் நிலை என்னாகும் என்ற பயம் மட்டுமே கட்டியவனின் சிந்தைக்குள் முண்டியடித்து ஆணவனை படுத்தியது.
வேர்த்து விறுவிறுத்தவன் கீரனுக்கு அழைக்க, டவரில்லா நெடுஞ்சாலையோ கைத்தட்டி சிரித்தது சூழ்நிலை கைதியாகி நிற்பவனின் நிலைகண்டு.
அர்த்த ராத்திரியில் வீதியோ நடந்திருந்த விபத்தில் களேபரம் கொண்டது.
போலீஸ் ஒருபக்கம் ஆம்புலன்ஸ் மறுப்பக்கமென்று ரோடு நெரிசல் கொள்ள, காவல்துறையினரோ அனைவரையும் அங்கிருந்து துரத்தி விட்டு ரீசனை மட்டும் அங்கேயே தடுத்து வைத்தனர்.
பேசக்கூட நெட்டையனுக்கு வாய்ப்பளிக்கவில்லை அவனுக்கென்று வந்திருந்த போலீஸ் கூட்டம்.
தொண்டைத் தண்ணி வற்ற ஆணவன் எவ்வளவோ முயற்சித்தான் நிதர்சனத்தை உணர்த்த இருந்தும் பலனின்றி போனது தவறு அவன் மீதுதான் என்று காவல் சங்கம் நம்பிட.
தீவிரமான விசாரணை மேற்கொள்ள ரீசனை கைவிலங்கின்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போயினர் காவல் அதிகாரிகள்.
ஆணவன் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாயாபுத்திரன் அலைபேசி வழி வந்தான் ஏழரை நாட்டு சனியாய் வக்கிரம் கொண்டு.
அழைப்பின் முடிவினில் செல்லுக்குள் அடைக்கப்பட்டான் தீனரீசன் முட்டி மோதிய நல்லவனோ ஐ.சி.யூ. வில் இழுத்துக்க பறிக்க கிடக்க.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 86
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.