What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
அத்தியாயம் 88

காலாகாலத்தில் கல்யாணம் செய்திருக்க வேண்டிய ப்ரீதனோ இப்போதுதான் ஒரு பெண்ணை டாவடிக்கவே ஆரம்பித்திருக்க, அக்கா அமராவோ சீக்கிரமாகவே அவன் விசாவோடு ஜோடி சேர்ந்திட விரும்பினாள்.

தம்பி கேட்டதற்கிணங்கி விசாவோடு வெறும் சாதாரண அளவல்களே கொண்ட தமக்கையவள் பின்னாளில் குஞ்சரி அவளுக்கு இழைத்த கொடுமைகளையும் பரப்பிய அவதூறுகளையும் அவளுக்குள்ளேயே போட்டு பூட்டிக் கொண்டாள்.

எப்போதுமே வேலை என்றிருக்கும் தம்பி இப்போதுதான் கொஞ்ச நாட்களாக போனும் கையுமாய் இருக்க, அதை ஏன் கெடுப்பானே என்றெண்ணிய அமராவோ அவளாகவே சமாளித்துக் கொண்டாள் குஞ்சரியின் கொடூரங்களை.

அம்மாவை வேறு மாநில செண்டர்களை கவனிக்க அனுப்பி வைத்த அமரா தன்னந்தனியாகவே காயங்களுக்கு மருந்திட்டு கொண்டாள் ஆளில்லா வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி.

ஊர் ஊராய் பணி நிமித்தம் சுற்றி திரிந்த ப்ரீதனோ அட்டவணையில் விடுமுறை மூட்டை ஆன் செய்ய, வீடு வந்து சேர்ந்தான் யாருக்கும் சொல்லாமல்.

எத்தனை நாட்கள்தான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திட முடியும். அமராவின் குட்டு வெளிப்படும் நாளும் வந்தது. சிக்கினாள் அக்காளவள் வசமாய் தம்பி ப்ரீதனிடம்.

கையுங்களவுமாய் தமக்கையவளை சூடு நீர் கொண்ட காயத்தோடு பிடித்தவன் அமராவோடு வாக்குவாதம் கொண்டான்.

நோயாளி என்ற பெயரில் குஞ்சரி அடித்த கொட்டத்தை ஒருபோதும் சலித்துக்கொள்ள முடியாதென்றான் ப்ரீதன்.

அதுவும் அக்கா அமராவின் மீது சுடுநீர் ஊற்றி அவளின் அங்கங்களை காயங்கொள்ள வைத்தது போக கோல் கேர்ள்ஸ் வட்டாரத்தில் தமக்கையின் எண்ணும் படமும் உலா வர காரணமான குஞ்சரியை கோர்ட்டுக்கு இழுத்தே ஆகணும் என்று ஒற்றைக் காலில் நின்றான் ஆணவன்.

ஆனால், விசாவின் திடீர் வரவு கூடவே அமராவின் பிரச்சனை வேண்டாம் கடந்திடலாம் என்ற கெஞ்சலும் ப்ரீதனின் வேகத்தையும் ஆவேசத்தையும் நத்தையான தென்றலாக்கியது.

இருந்தும் ரீசனை அலைபேசி வழி தொடர்புக் கொண்ட ப்ரீதனோ காரசாரமாகவே பேசி வைத்தான் ரிசீவரை, இனி எப்போதுமே குஞ்சரியும் சரி ரீசன் அவனுமே சரி விசாவின் வாழ்வில் குறுக்கிட கூடாதென்று.

மீறி முயன்றால் அக்கா அமராவை துன்புறுத்தியதற்காக குஞ்சரியை களி தின்ன வைத்திடக் கூட கொஞ்சமும் யோசித்திட மாட்டேன் என்ற ப்ரீதனோ ஆட்டங்கொள்ள வைத்தான் ரீசனை.

கதை வேறு மாதிரியாக போக அவனைப் பற்றி ரீசன் விசாரித்திடும் முன்னே போய் நின்றான் ப்ரீதன் அவனுக்கான மிடுக்குடன் விசாவின் மனதை முன்பொரு காலத்தில் ஆண்டவன் முன்.

''எச்சி சாப்பாடு சாப்பிடறவனுக்கு இவ்ளோ தெனாவெட்டு கூடாது..''

என்ற ரீசனின் நக்கலான குத்தலில் சத்தமில்லா முகிழ்நகை கொண்ட ப்ரீதனோ கையிலிருந்த பாரங்களை முன்னிருந்த வூடன் டேபிளின் மீது வைத்தான்.

''எவ்ளோ வேணும்..''

என்ற ரீசனோ கையிலிருந்த மதுவை ரெண்டு முடக்கு தொண்டைக்குள் இறக்கி, வந்திருப்பவனுக்கு வேண்டுமா என்று ஜாடையில் கேட்க; வேண்டாமென்று தலையாட்டிய நல்லவனோ அவன் பங்கிற்கு சொல்ல வேண்டியதை சொன்னான்.

''பிச்சை யார் போட்டாலும் பிச்சைத்தான்.. கடவுளே போட்டாலும்.. உழைக்காதது நிலைக்காது..''

என்ற ப்ரீதனோ கால் மேல் கால் போட்டப்படி முஷ்டி மடக்கிய இடக்கையை வாய்த்தாடையில் பதித்தப்படி நறுக்கென்று பதிலளிக்க,

''பேப்பர்தான்! ஆனா.. அதுக்கு இருக்கிற மதிப்பு வேறெதுக்கும் இல்லே!''

என்ற ரீசனோ கோபத்தை அழுத்தமான வார்த்தைகளில் காட்டினான்.

''அது எனக்கு தேவையில்லே!''

என்ற பேபி சீட்டரோ சந்தமாகவே சொன்னான்.

''அப்போ உனக்கு என்னதான் வேணும்!''

என்றவனின் அலறலுக்கு விலோசனங்களால் பதிலளித்தான் ப்ரீதன் மேஜை மீதிருந்த கோப்பை கண்ணசைவில் காண்பித்து.

முகம் கோண கோப்பை திறந்த ரீசனோ,

''எப்படியிருக்கா என் பின்னாடியே நாய்குட்டியாட்டம் திரிஞ்சவே..''

என்றுக் கேட்டான் வஞ்சக சிரிப்போடு விழிகள் பாரங்களின் உள்ளடக்கத்தில் ஒன்றியிருக்க,

''என் வீட்டு நாய்க்கெல்லாம் மகாராணியா!''

என்றவனின் பதிலில் சப்பையாகி போன ரீசனோ அக்ரிமெண்ட் பாரத்தில் கையெழுத்திட பேனாவை கையிலெடுத்தான்.

''குழந்தை உனக்கு! ஃபுட்டேஜ் எனக்கு!''

என்ற ரீசனின் புருவங்கள் குறுக, முன்னிருந்த ப்ரீதனோ அவன் பாக்கெட்டிலிருந்து வெளியெடுத்தான் சிறியதொரு பென்ட்ரைவை.

இறுகிக்கிடந்த ரீசனின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. பென்ட்ரவை மேஜையில் வைத்த ப்ரீதனோ அதை முன்னோக்கி தள்ளினான் ரீசனிடத்தில்.

நம்பலாமா வேண்டாமா என்ற வேள்வியை பார்வைகளில் கொண்ட ரீசனோ விசாவின் பேபி சீட்டரை தீர்க்கமாய் நோக்க, ஆணவனோ புன்சிரிப்போடு அம்பகங்களை மூடித்திறந்தான்.

ரீசனோ பாரத்தில் கையெழுத்து போட்டு கோப்பை நீட்டினான் ப்ரீதனிடத்தில். வந்த வேலை முடிய கிளம்பினான் பேபி சீட்டரவன்.

காரை நோக்கி அடிகள் வைத்தவன் திரும்பி பார்த்தான் ரீசனை மெல்லிய புன்னகையோடு.

''என்ன சொன்னீங்க.. எச்சி சாப்பாடா..''

என்றப்படி லைட்டாய் பல் தெரிய முறுவலித்த ப்ரீதனோ வாக்கியத்தை முடித்தான் மொத்தத்தையும் சொல்லி.

''சாமி படையல் கூட எச்சில் பிரசாதம்தான்.. அதை இங்க யாரும் வேணான்னு சொல்றதில்லையே.. இங்க தப்பான சாமிக்கு படையலே தவிர படையல்லே தப்பில்லே.. ருசிச்சாலும் ருசிக்காட்டியும் பிரசாதம்.. பிரசாதம்தான்.. சாமி வேணும்னா தேவைக்கேத்த மாதிரி படையல்லே கையே வைக்கலாம்.. ஆனா.. உண்மையான பக்தனுக்கு தெரியும் பிரசாதத்தே உதாசீனப்படுத்த கூடாதுன்னு..''

என்றவனோ திரும்பி கார் கதவை திறந்து உள்ளே ஏறிடும் முன் மறுபடியும் ரீசனை தீர்க்கமாய் ஒருமுறை பார்த்தான் கேலி சிரிப்புடன்.

''நாயாவது இருக்கற வரைக்கும் விசுவாசமா இருந்திட்டு போகும்.. ஆனா.. நொண்டி குதிரே.. பிரோஜனமே இல்லே..''

என்று நக்கலாய் சொன்ன ப்ரீதனோ காரிலேறி கிளம்பினான்.

ரீசனின் முகமோ செருப்பால் அடித்தாற்போல சிவப்பேறி கன்றியது.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 88
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top