- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
சரியான பிழை நாம்! : 8
வலியோ, சளியோ இனியும் மினியை தவிக்க விட கூடாது என்றெண்ணிய ஈரியனோ முடிந்தளவு அவளோடு இணை சேர்ந்தான்.
ஆனால், வலியோ கொடுத்தவனை போலவே பெற்றுக் கொண்டவளையும் வாட்டியெடுத்தது.
சிறுநீர் கழிக்கையில் பெரும் எரிச்சலையும் ரணத்தையும் கொண்டாள் மினி. பிறப்புறுப்பும், கூடலின் போது கொண்ட வேதனையை மறுநாள் வரைக்கும் இழுத்து வைத்து அவளை படுத்தியது.
எங்கே, எப்படி போயினும் முட்டு சந்தாய் இருக்க, ஈரியனோ அதீத மன உளைச்சல் கொண்டான், கட்டியவளுக்கு கட்டில் சந்தோஷத்தை கொடுத்திட முடியா கோழையாய் அவனிருக்க.
நன்றாய் யோசித்தவன், இறுதியாய் மினியை விவாகரத்து செய்திட முடிவெடுத்தான்.
செய்தி அறிந்தவளோ கொதித்து போனாள். அனுவை மாமியார் வீட்டுக்கு அனுப்பி, சொந்த வீட்டை ரணகளமாக்கினாள்.
கோபம் கொண்டு கொந்தளித்தவளை சமாளிக்க முடியாது திணறினான் ஈரியன்.
வீடோ விரிச்சோடி போனது இருவரும் மௌன வேடம் கொள்ள. சமாதானம் செய்ய முனைந்தவனை தவிர்த்தவளாய் விலகி போனாள் மினி.
''புரிஞ்சிக்கோ மினி! பிளீஸ்! நான் இதை உனக்காக கேட்கலே! எனக்காக கேட்கறேன்!''
ஈரியனின் வார்த்தைகள் கொண்ட அர்த்தம் புரியா பேடையோ அவனை வெறிக்க,
''ஒரு ஆம்பளையா உன்னே சந்தோஷப்படுத்த முடியலங்கற விஷயம் தினம், தினம் என்னே கொல்லுது! நான்லாம் எதுக்கு உயிரோட இருக்கேன்னு அவமானமா இருக்கு! தண்டமா இருக்கற மாதிரி பீல் ஆகுது! உன்னே பார்க்கும் போதெல்லாம் நீ ஏதோ பெருசா தியாகம் பண்ணி என்கூட வாழற மாதிரி தோணுது!''
''என்ன பேசறே ஈரியன்?! பைத்தியமா உனக்கு?! நாமே லவ் மேரேஜ் பண்ணிக்கலத்தான்! ஆனா, உனக்கு நானும், எனக்கு நீயும்தான் பர்ஸ்ட் லவ்! அதையெல்லாம் மறந்துட்டு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கே?!''
எங்கோ பார்த்திருந்தவனின் தோளை திருப்பி மனைவியவள் ஆதங்கம் கொள்ள,
''இங்கப்பாரு மினி, தேவையில்லாமே பேசி என் மனசை மாத்த ட்ரை பண்ணாதே! பிச்சை போடற மாதிரியான இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்! தயவு செஞ்சு பிரச்சனை பண்ணாமே எனக்கு டிவோர்ஸ் கொடுத்திடு!''
காட்டமாய் சொன்னான் ஈரியன் இனியும் நரக வேதனையை அனுபவிக்க விரும்பாது.
''கொடுத்திட்டு?! எங்கே போக ஈரியன்?! சாகவா?! சொல்லு செத்திடவா?! நான் போயிட்டா உனக்கு இப்படியெல்லாம் தோணாதுலே?! அப்போ, நான் செத்துடறேன்! இப்பவே செத்துடறேன்!''
என்றலறியவளோ அடிகளை பின்னோக்கி வைக்க,
''எமோஷனல் ட்ராமா பண்ணாதே மினி! நாமே ஒன்னும் சின்ன குழந்தைங்க இல்லே! தலையெழுத்தின்னு நீ இதுக்கு மேலையும் என்கூட வாழறது எனக்கு சுத்தமா புடிக்கலே! ஐயோ, என்னாலே இவே வாழ்க்கை போச்சேன்னு எனக்கும் இனி நிம்மதியை தொலைக்க இஷ்டமில்லே! ஒழுங்கு மரியாதையா மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு ஒத்துக்கோ!''
''ஒரே ஒரு நாள்! அந்த ஒரு நாள் மட்டும் நம்ப லைஃப்லே வராமே இருந்திருந்தா?! இந்த பாழாப்போன உடம்பு அரிப்பெடுக்கமே இருந்திருந்தா?! இன்னைக்கு நீ என்னே விட்டுட்டு போகணும்னு முடிவெடுத்திருக்க மாட்டல்லே?! நானே என் தலையிலே மண்ணை வாரி போட்டுக்கிட்டேனே! ஐயோ!''
தலையில் அடித்துக் கொண்டு ஓலமிட்டவள் டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்தமர, ஈரியனோ அங்கிருந்து நகர்ந்தான்.
பிழை தொடரும்....
Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சரியான பிழை நாம்! : 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.