- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
அத்தியாயம் 90
பிரகாசித்திருந்த களங்கனை சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி ஜன்னலோர திரைசீலையை விலக்கியப்படி ரசித்திருந்தாள் குஞ்சரி.
ரீசன் எப்போது வருவான் என்றிருந்தது அவளுக்கு. குட்டி பையனோ அம்மாவைப் போலவே அப்பாவை தேடி மெல்லமாய் அசைய வருடிக் கொடுத்தாள் கோமகளவள் மேடுக்கொண்ட வயிறை.
''நீ மட்டும் பொண்ணா இருந்திருந்தா உனக்கு மயிலினின்னு பேர் வெச்சிருப்பேன்.. இப்போ தீனவானன்னு வைக்க போறேன்.. உங்கப்பாவே எனக்கு அவ்ளோ பிடிக்கும்டா குட்டி.. உன்னே கூட முதல்லே நான் வேணான்னுதான் சொன்னேன் தெரியுமா.. ஆனா.. என் ஜூனியர் மனசு கஷ்டப்படும்னு சொல்லிதான் ஓகே சொல்லிட்டேன்..''
என்றவள் மின்சார வீல் சேரின் விளிம்பில் பின்னோக்கி தலைசாய்த்தாள்.
''கடவுள் இருக்காருன்னு நம்பனே நான்.. அவர் என்னே கவனிக்கறதே மறந்துட்டேன்.. அவசரப்பட்டு அன்னைக்கு நான் எடுத்த முடிவுகளோட பிரதிபலன்தான் இன்னைக்கு நான் இப்படி இருக்கறதுக்கானே காரணம்..''
என்ற அந்திகையோ வழிந்திறங்கிய கண்ணீரை உள்ளங்கைகளால் துடைத்துக் கொண்டாள்.
''அதனால்தான் நான் உங்கப்பாக்கிட்டே கூட என்ன சிதைச்சவன் யாருன்னு சொல்லலே.. ஏன்னா அன்னைக்கு நடந்த அந்த கொடூரத்தை நான் எனக்கான தண்டனையாத்தான் பார்க்கறேன்..''
என்றவளோ வயிற்றுக்குள் அசைந்த மகனை மென்மையாய் தட்டிக்கொடுத்தாள்.
''உங்கப்பா என் மேலே எவ்ளோ லவ் வெச்சிருக்காருன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. விசாவே துரத்தும் போதே புரிஞ்சிச்சு.. ஆனா.. எங்கே அம்மா நான் இப்படி இருக்கேன் அதனாலே உங்கப்பா என்னே விட்டுட்டு போயிடுவாரோன்னு எனக்கு ரொம்ப பயம்..''
என்றவள் விம்மிக் கொண்டிருக்கும் போதே டமாரென்ற சத்தத்தில் சுந்தரியின் வாய் பிளந்து வார்த்தைகள் அடித்தொண்டையிலேயே நிறுத்தம் கொண்டன.
பின்னந்தலையை இடக்கையால் அழுத்திய ஆயிழையின் கண்களோ சொருகிட ஆரம்பித்தன.
''ஆஹ்.. ஆ.. கி.. ட்.. ரஹ்ஹ்.. கிட்.. ஆஹ்ஹ்.. யேங்..''
வலியில் முனகினாள் மானினியவள். அழைத்தாள் கேர் டேக்கரான சீனப்பெண்ணை பெயர் சொல்லி. ஆனால், பென்சில் தரையில் விழும் சத்தத்தை போல் மிகவும் மெல்லிய குரல் எவ்வித ரெஸ்பான்ஸையும் குஞ்சரிக்கு காட்டிடவில்லை.
வினுவினுவென்றது சத்தத்திற்கு சொந்தமான மூலதானம். தலைசுற்றல் எடுக்க பார்வைகளோ மங்கி போயின. காதெல்லாம் அடைத்துக் கொள்வது போன்றதொரு உணர்வில் உடம்பெல்லாம் சூடேறி வியர்த்துக் கொட்டியது கோமகளவளுக்கு.
வலக்கையோ குட்டி ரீசன் குடியிருக்கும் வயிற்றை மொத்தமாய் கைக்கொண்டு வளைத்து பற்றிக் கொண்டது.
''கிட்.. கிட் யேங்.. கி..''
என்ற குஞ்சரியோ மின்சார சக்கர நாற்காலி பொத்தானை தட்டிட எத்தனித்து கடைசியில் தடுமாறியப்படியே மயங்கி போனாள் ஆட்டோமேட்டிக் வீல் சேரில்.
சரியாய் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் கடக்க விழிகள் விரித்தாள் துவண்டிருந்த தெரிவையவள். மயக்கம் இன்னமும் அவளை கட்டுக்குள் வைத்திருக்க வஞ்சியின் நெஞ்சமோ பிசுபிசுத்தது.
தலைசுற்றலை ஒருவாரியாய் சமாளித்து அம்பகங்களை அகல விரித்தவள் கண்களோ திறந்திருந்த அலமாரி இழுப்பறைகளையே கண்டது. அத்தனையும் பணம் மற்றும் நகைகள் வைத்திருக்கும் ரகசிய இடங்கள்.
மின்சார நாற்காலியின் பட்டனை அழுத்தி இழுப்பறைகளின் அருகில் சென்றவள் சேஃப்டி லாக்கர் அலமாரி உடைக்கப்பட்டிருப்பதை கண்டாள்.
''கிட் யேங்! கிட் யேங்!''
அலறினாள் அலரவள் பதைத்த நெஞ்சோடு டக்கென்று மூளை சீனப்பெண்ணை நிந்திக்க அவளுக்கேதும் விபரீதமாகியிருந்தால் என்செய்ய என்ற பயத்தில்.
தலைவலியின் கொடுமைகளுக்கு நடுவினில் இழுப்பறைகளை இழுத்து பார்த்து உணர்ந்துக் கொண்டாள் குஞ்சரியவள் ஒரு பருக்கை கூட மிச்சமின்றி மொத்தமும் களவாடப்பட்டு விட்ட உண்மையை.
சீனப்பெண்ணிடமிருந்து அ ஊவென்ற சத்தமும் வரவில்லை வதனியவளின் நுனி மூக்கு கூட குஞ்சரியின் அறையை எட்டிப் பார்த்திடவில்லை.
என்னானதோ ஏதானதோ என்று பதறிய உள்ளம் பதைக்க சீனப்பெண்ணை தேடி கீழ்மாடி நோக்க நினைத்த குஞ்சரியோ வீல் சேரை திருப்பினாள் அறையின் வாசற்கதவை நோக்கி.
அகல விரிந்தது விறலியவளின் விழிகள் ரெண்டும் கண் முன் நின்றிருந்தவனை கண்டு.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 90
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.