- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
அத்தியாயம் 94
''ரீசன்..''
பரீட்சியமான குரலொன்று குஞ்சரி புருஷனின் காதில் விழுந்தது சிறு தழுதழுப்போடு.
முகத்தை இடக்கையால் மூடி அமர்ந்திருந்த ரீசனோ தலை தூக்கினான்.
''எப்.. எப்படி..''
அடித்தொண்டையில் பாதி வார்த்தைகள் முள்ளாய் சிக்கிக் கிடக்க விசாவின் கண்ணீர் ததும்பிய விழிகளோ கொட்டிவிட்டன முன்னாள் காதலனின் உடைந்த நிலையைக் கண்டு.
என்ன சொன்னாலும் எப்படி மறந்தாலும் முதல் காதல், முதல் காதல்தானே. மறந்தாலும் மறுத்தாலும் ஏன் வெறுத்தாலுமே.
காயங்கள் பலகொண்டாலும் கொண்டாடப்படும் சுவாரசியம் என்னவோ அதுதானே.
''என்..''
இப்போதும் வார்த்தைகளுக்கு பதில் பாவையவள் மிழிகளே பேசின பெருக்கெடுத்த கண்ணீர் கொண்டு.
ஆட்டி அவளின் அழுமுகத்தை ஏறெடுத்தவனின் சிவந்த திட்டிகள் உதிர்த்து வழிந்திறங்கிய கண்ணீரை உதடுகள் துடித்து நெஞ்சம் விசும்ப கண்டவளின் முகமோ துளி வார்த்தைக் கொள்ளாது அவனின் வலிகளை உள்வாங்கிக் உணர்ந்தது.
நொடிகள் கடக்க இருவரின் விழிகளும் பற்பல சோகங்களை பேசிக்கொள்ள அம்மணியின் வேள்விக்கு ரீசனின் பதில் என்னவோ மீண்டுமொரு தலைகுனியலே.
ஆணவனின் காலுக்கு அடியில் மண்டியிடாது கால்கள் மடக்கி குந்தியிருந்தவள் அருவியாய் கொட்டிய ரீசனின் கண்ணீரை காண முடியாது கிடந்து தவித்தாள்.
அழுபவனின் முகத்தை ஏந்திட பரபரத்தது பேதையவளின் கைகள். ரீசனின் இடக்கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைக்க கையுயர்த்திய விசாவை ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது.
அணங்கவளின் ஐவிரல்களும் காற்றில் ஏக்கத்தை படம் வரைய ரீசனின் இறுகியிருந்த முகத்தை மேற்கொண்டு பார்த்திட முடியாது தலைகவிழ்ந்தாள் தாமரையவள்.
ஒருவேளை பத்தடி தூரத்தில் அலைபேசியை நொண்டியப்படி பின்னிய கால்களை ஆட்டி நின்ற ப்ரீதனின் இருப்பில்தான் பெண்ணவளின் எண்ணம் நிறைவேறாமல் போனதோ என்னவோ.
ஆணவனின் கண்ணீரை துடைக்க ஓங்கிய அதே கையால் காரிகையவள் வாய் பொத்தி குலுங்கினாள் ரீசனின் தலை ப்ரீதனின் பக்கம் பார்த்து மீண்டும் மங்கையவளியிடம் முற்றுகை கொள்ள.
வலித்தது அவளுக்கு ஏனோ தெரியவில்லை. முகத்தை முழுதாய் மூடிக்கொண்டாள் மாயோள் அவள். நாயகியின் நெஞ்சம் அதிகமாய் கனத்தது.
வீர்தான் சொல்லியிருந்தான் தகவலை விசாவிற்கு. ஒரே முகம் கொண்டிருப்பதால் எச்சரிக்கை செய்தான் என்னதான் பெண்டு அவள் வெளிநாட்டில் குடிக்கொண்டிருந்தாலுமே.
திடீர் அக்கறையின் நிமித்தத்தை அரிவையவள் வினவ வஞ்சியிடம் மெய்யை மறைக்க வக்கீல் சாருக்கு மனம் வரவில்லை. பட்டும் படாமலும்தான் சொன்னான் நிகழ்ந்திருந்த அகோரத்தை லாயர் பையனவன். அதுவே கடல் தாண்டிய இருந்தவளை பதற வைத்து விட்டது.
கொடூர சங்கதியை கேட்ட மாத்திரமே ஓடோடி வந்தாள் விசா மகனோடு மீண்டும் தலைநகருக்கு. விமான நிலையத்தில் மடவரலவளை பிக் ஆப் செய்ய வந்த ப்ரீதனிடத்தில் மதங்கியவள் நடந்ததை சொல்ல ஆணவனோ ஒரு வார்த்தைக் கூட பேசாது கூட்டி வந்து சேர்த்திருந்தான் சுந்தரியவளை மருத்துவமனைக்கு.
மனைவிக்கு நடந்த கொடுமையிலிருந்து மீண்டிட முடியாது தள்ளாடிய ரீசனோ ஒருபுறம் அமைதியாய் அழுக்கடல் கொள்ள, எப்படி நொறுங்கியிருப்பவனின் மனசை ஒட்டவைப்பதென்று தெரியாது விசாவோ மறுப்புறம் தனியொரு அழுகை கச்சேரி நடத்த வந்தார் மருத்துவர் மினர்வா மீண்டும்.
''எக்ஸ்கியூஸ்.. சோரி..''
என்றவரின் குறுக்கீட்டில் விசா தலை திருப்பி பார்வைகளை மட்டும் ஓரம் ஒதுக்கி செவிகளை கூராக்கி கொண்டாள்.
''ரீசன் ஃபோர்மாலிட்டிஸ் (formalities) எல்லாம் முடிச்சாச்சு.. நீங்க டைரக்ட்டா மோர்ச்சுவரி டிபார்ட்மெண்ட் போனீங்கன்னா மத்ததெல்லாம் அவுங்க கைட் (guide) பண்ணுவாங்க..''
சொன்னவர் ஆணவனின் தலையாட்டலில் அங்கிருந்து நகர, பேந்த பேந்த விழித்த விசாவிற்கோ மருத்துவரம்மா சொன்ன வார்த்தைகளில் பயம் தொற்றி உடலை கிடுகிடுக்க வைத்தது.
''என்னாச்சு! என்னாச்சு ரீசன்! யாருக்கு என்னாச்சு! டாக்டர் ஏன் மோர்ச்சுவரி போக சொல்றாங்க!''
உலுக்கினாள் அந்திகையவள் முன்னிருந்தவனின் கால் முட்டிகளை.
''போ.. போ விசா.. போ..''
கண்ணோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவனோ தெம்பற்று சொல்ல, கேள்விக்கு பதிலறியா மானினியோ போவென்பவனை புரியாது வெறித்தாள்.
''ப்ரீதனே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு.. நல்லா பார்த்துப்பான்..''
என்றவனோ விசாவின் தலை மீது கை வைத்து மெதுவாய் குழல் கலையாது காரிகையின் தலையை ஆட்டி சொல்ல, தீனரீசனவனின் வாக்கியத்தில் ஸ்தம்பித்தவளோ அவனையே இமைக்காது பார்த்தாள்.
அருணியவளின் முகத்தை பார்க்காதவனோ பார்வைகளை வேறு பக்கம் திருப்பி சொன்னான்.
''போ விசா.. போ.. நீயாவது போய் நல்லாரு..''
அவனின் சிதறிய தொனியை தாங்கிட முடியாத அபலையோ ஓடோடி போய் சாய்ந்தாள் ப்ரீதனின் நெஞ்சில் அழுகையை அடக்கிட முடியாது.
ரீசனின் நேத்திரங்களோ காட்சியைக் கண் கொண்டு பார்த்திடாவிட்டாலும் உணர்ந்தது விசாவின் நெஞ்சம் படும் பாட்டையும் அதன் தாக்கத்தில் கலங்கிய ப்ரீதனின் முகத்தையும்,
லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 94
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.