What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
''அப்பா, இன்னிக்கு அந்த மேனஜர் என்னா பேச்சு பேசினான் தெரியுமா என்னே?! அப்படியே அவனை இழுத்து நாலு அறை கொடுத்து, நீயும் வேண்டாம் உன் வேலையும் வேணான்டான்னு சொல்லி, டேக்கை கழட்டி அவன் முகத்துல விட்டடிச்சிட்டு வர தோணுச்சு! அவ்ளோ எரிச்சலா இருந்துச்சுப்பா!''

புலம்பினாள் தாரா.

இது ஒன்றும் அவளை பெத்த ராம்குமாருக்கு புதிதல்ல. தினம் கேட்கும் அதே சுப்ரபாதம்தான். அவ்வப்போது சுருதி மட்டும் மாறும்.

இன்றைக்கும் மகள் பதவி கொண்டவனை கறுவிக் கொட்ட, ஆரஞ்சு சோபாகாரரோ அவளை பேச விட்டு மௌனம் கொண்டார்.

எல்லாம் கொட்டித் தீர்க்கட்டுமே என்ற எண்ணம்தான்.

தாயற்றவளுக்கு எல்லாமும் அவர்தான்.

''வரவர வேலை பார்க்கவே புடிக்கலப்பா! பேசாமே நீ சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிக்கறேன்பா! மாப்பிள்ளை பாரு!''

சோறு, கறி என்று தட்டிலிருந்த உணவை விரல்களில் பிசைந்தவளின் கண் கொண்ட கண்ணீர் வழிந்திறங்கியது நங்கையவள் நாசியில்.

''அத்தனை பேர் முன்னுக்கு ரொம்ப அவமானம் படுத்தறான்பா அந்த மேனேஜர்! நீ இருந்திருக்கணும் அங்க! அவனே உண்டில்லன்னு பண்ணிருப்பே! கண்டிப்பா!''

என்று தேம்பி விசும்பிய தாராவின் மூக்கு நுனியில் துளிர்த்திருந்த கண்ணீர் மொட்டோ புறங்கை கொண்டு கன்னம் உரசி அழுகையை வழியனுப்பிய மங்கையின் செயலில் பருக்கை சோறொன்றில் உதிர்ந்து காணாமல் போனது.

''ஏன்பா அவன் அப்படி இருக்கான், கொஞ்சங்கூட மரியாதையே தெரியாமே?!''

சொன்னவள் சோற்று தட்டை முன்னோக்கி தள்ள, நல்லவேளையாய் அது தரையை முத்தமிடாது மேஜை மீதே ஓரம் போனது.

''நான் ஏன் இப்படி இருக்கேன்?! சொரணையே இல்லாத தத்தியாட்டம்?! ரொம்ப கஷ்டமா இருக்குப்பா!''

ஓடோடி போனாள் ராம்குமாரின் ஒற்றை கறிவேப்பிலை கொத்தவள் அப்பாவின் சோபாவை நோக்கி.

''முடியலப்பா என்னாலே! நீ இல்லாத இந்த ரெண்டு வாரத்துலையே எனக்கு பைத்தியம் புடிச்சிடும் போலிருக்கு!''

கதறினாள், மன பாரத்தை வார்த்தைகளில் வடித்த வஞ்சியவள் மடிசாய்ந்த குமுறலில், இறைவனடி சேர்ந்திருந்த தந்தை தினந்தோறும் அமர்ந்திடும் அவ்வொற்றை ஆரஞ்சு சோபாவில் தலை சாய்த்து.

முற்றும்.
 

Author: KD
Article Title: ஆரஞ்சு சோபா
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top