What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 52

ஆண் பெண்ணை ரசிப்பது போல் சில வேளைகளில் ஆண்களே கூட மற்ற ஆண்களின் அபிராமத்தை ரசித்து பொறாமைப்படுவதும் உண்டு.

அதுபோலத்தான் இதுவும் என்றெண்ணினான் விரன். ஆகவே, உடலை மேலும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆகாரம் தொடங்கி வாழ்க்கை முறை வரை கொஞ்சம் மாற்றம் செய்திட ஆரம்பித்தான்.

என்ன செய்தாலும் முழு பூசணிக்ககாயை சோற்றில் மறைத்திட முடியாது என்பது போல் எங்கு சென்றாலும் விரனின் ஆண்மை செங்குத்தாய் ஆனது கவின்மிகு ஆண்களை காண்கையில்.

வேறு வழியின்றி ஓடினான் விரன் கலவி டாக்டர் நண்பன் டர்ஷிக்கை நாடி. அவனோ சில சாங்கிய கேள்விகளை கேட்டு தோழனை படுக்க போட்டு வேண்டிய பரிசோதனைகளை மேற்கொண்டான்.

பின், ஒரு மணி நேர கவுன்செலிங் செஷன் போலான பேச்சு வார்த்தைகள். வருத்தம் கொண்டிருந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்லி வழியனுப்பினான் டாக்டர் டர்ஷிக் சிகிச்சை முடிய.

விரனுக்கு நிகழ்த்திய ஹோர்மோன் டெஸ்ட் (hormone test) கிட்டுகளான சலிவா கிட் (saliva kit), பிளட் கிட் (blood kit) மற்றும் யூரின் கிட் (urine kit) மூன்றையும் தனியார் மருத்துவ ஆய்வக கூடத்திற்கு கொண்டு போய் சேர்த்தான் மருத்துவனவன்.

அப்படியே, பதிவு செய்யபட்ட விரனின் கேசுவல் டாக் (casual talk) ஆடியோ பதிவை மனநல மருத்துவரான ரீனாவிற்கு மெயில் அனுப்பினான், பேஷண்டின் தகவல் எதையும் பகிங்கரப்படுத்தாது. அவளின் கருத்தும் ஆலோசனையும் இவ்விடயத்தில் ரொம்ப முக்கியமென்று டர்ஷிக்கிற்கு தெரியும்.

ஒரு இரத்த பரிசோதனை போதும் மொத்தத்தையும் கண்டறிந்து விடலாம். இருந்தும், எடிசினல் (additional) பரிசோதனைகள் நல்லதுதானே என்ற நோக்கில் விரனை முக்கியமான மூன்று டெஸ்ட்டுகளையும் எடுத்திட சொல்லிவிட்டான் டர்ஷிக்.

மூன்று நாட்களில் ஹார்மோன் டெஸ்ட்டின் முடிவுகள் வர, அப்படியே சைக்கோலஜிஸ்ட் ரீனாவின் ஆடியோ பதிலும் வந்து சேர்ந்தது மெயில் வழி.

என்னதான் முடிவுகள் ஏதும் விரனுக்கு சாதகமாய் அமையாது போயிருந்தாலும், நண்பனை உடனே அழைத்து அவன் தலையில் மண்ணை போட விருப்பமில்லை டர்ஷிக்கிற்கு.

கூடவே, ரீனவோடு பேசிய பிறகு விரனுக்கு ஏற்பட்டிருக்கும் இவ்வகை உணர்வானது ஒருக்கால் அவனுக்கு ஜெனெடிக் மூலமாக கூட வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஒன்று உருவானது டாக்டர் டர்ஷிக்கிற்கு.

ஆகவே, வெளிப்படையாய் இப்பிரச்சனையை பொதுப்படுத்த முடியாது என்ற காரணத்தால் செக்ஸ் டாக்டர் கிரிமினல் டாக்டராகி போனான். இரு பணியாளர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினான் விரனின் வீட்டுக்கு.

நடமாடும் இரத்ததான முகாம் என்று சொல்லி, மனையிலிருந்த அத்தனை பேரின் கையிலும் ஊசியை சொருகி; ஒரு பை நிறைய சுடுவலை உறிஞ்சியெடுத்து விட்டான் மவராசன்.

நம்பியவர்களோ பெரிதாய் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை, வந்திருப்பவன் விரனின் நண்பனென்பதால். விரனோ வீட்டுக்கு புலானீர் புடுங்க வந்த விருந்தாளியான டாக்டரை இம்சித்தான் சோதனையின் முடிவை கேட்டு. டாக்டரோ இன்னும் ஒரு வாரம் ஆகுமென்று ஜிம்காரனின் வாயடைத்து கிளம்பினான்.

சேகரித்த விரனின் குடும்ப ஆரகத்தை பரிசோதனைக்கு சமர்பித்தான் டாக்டர் டர்ஷிக், வெவ்வேறான இரு வேறு மருத்துவ கூடங்களில். இரண்டு நாட்கள் கழிய மருத்துவன் கைக்கு வந்தது விரனின் குடும்ப ரத்தத்தின் ரிசால்ட்ஸ்.

இரு கூடங்களின் முடிவினையும் ஒப்பிட்டு பார்த்த டாக்டர் டர்ஷிக்கோ, இரண்டுமே ஒரே மாதிரியான பதிலைத்தான் கொடுத்திருக்கின்றன என்பதை கண்டறிந்துக் கொண்டான்.

விரனை அழைத்து மருத்துவமனைக்கு வர சொன்னான் டர்ஷிக் உண்மையை அவனிடத்தில் எடுத்துரைக்க.

விரனோ வேண்டாத தெய்வமில்லை பிராதிக்காத மந்திரமில்லை. உள்ளுக்குள் நடுங்கி செத்தான் என்றே சொல்ல வேண்டும். அவிரன் சிங் உடம்புக்கு ஒன்னுமில்லை என்ற வாக்கியத்தை காது குளிர கேட்டிட வேண்டினான் டாக்டர் நண்பனின் வாய் சொல்ல.

நம்பிக்கையோடு நண்பனை காண வந்த விரனின் முகம் இறுகி போனது, மனம் சில்லாய் உடைய, செவியில் விழுந்த தகவல் ஆணவனை உருகுலைத்திருக்க.

பக்குவமாய் எடுத்து சொன்னான் டாக்டர் டர்ஷிக் விரனிடத்தில் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் இப்பிரச்சனையின் தொடக்க புள்ளிக்கான ஆரம்பக்கதையை.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 52
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top