What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 58

பைக்கை பார்க் செய்து வரவேற்பறை நுழைந்த விரனோ தூங்காது இன்னும் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரனை கண்டான்.

தம்பியின் முன் எவ்வித சைன் அண்ட் சிம்டம்சுகளையும் காட்டிக்கொள்ளாதவனோ,

''இத்தனை மணி வரைக்குமா டிவி பார்ப்பாங்க?! அடைச்சிட்டு போய் படு!''

என்றவனை காய்ச்சி விட்டு முனகியவாறே மேல் மாடி நோக்கினான்.

அறை கதவை தட்டிடாமலே ஆணவன் திறக்க,

''இவ்ளோ நேரமா வர?!''

என்றவளோ தீட்டிக் கொண்டிருந்த கண்மை பென்சிலை கீழே வைத்தாள்.

''என்னே கண்றாவி இது!''

என்ற விரனோ அறை கதவை சாத்தினான் பார்வைகளால் ட்ரஸிங் டேபிளின் முன் அமர்ந்திருந்த சின்ன டிக்கியை தீர்க்கமான ஒரு லுக்கு விட்டு.

''சும்மா ஒரு ட்ரையல் விரன். நல்லாருக்குள்ளே? நீங்க என் கழுத்திலே தாலி கட்டும் போது எப்படி இருந்தேனோ, அப்படியே இருக்கேன் பாருங்க மறுபடியும்.''

என்றவளோ அவன் முன் ஒரு சுற்று சுற்றி காட்டினாள் கல்யாண சேலையோடு கூடிய மேக் ஆப் கொண்டு.

''இப்போ என்னே உனக்கு?! பொழுது போகலையா?! என்னே வெச்சு விளையாட்டு காட்டிக்கிட்டு இருக்கியா?!''

என்றவனோ சிங்கமாய் கர்ஜித்தான், திருமதி அவிரன் சிங் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச.

''ஐயோ விரன்! ஏன் இப்படி சத்தம் போடறிங்கே? பையன் பயந்துடே போறான்!''

என்றவளோ மேடுகொள்ளா வயிற்றை லேசாய் தடவிக் கொடுக்க,

''சோரி!''

என்றவனோ அவன் பங்கிற்குமே பாவையவள் வயிற்றை வருடிக்கொடுக்க எண்ணி கை நீட்டி பின் விரல்களை அப்படியே ரிவர்ஸ் அடித்தான்.

சின்ன டிக்கியோ பேக் போனவனின் கையை இழுத்து பதித்தாள் அவளின் சடரத்தில்.

''உங்க புள்ளத்தானே?! அப்பறம் என்னே தயக்கம்?!''

என்றவளை பார்வைகளால் புரிந்து கொள்ள முயற்சித்தவனோ மென்மையாய் அவன் உதிரம் உயிராகியிருக்கும் இடத்தை தொட்டுணர்ந்தான்.

''போதும்! ரொம்ப தடவே வேணாம்!''

என்றவளோ அவன் கையை தட்டி விட, முறைத்தவனோ திரும்பி டி - ஷர்ட் மற்றும் பேண்டை கழட்டி போட்டு டவலுக்கு மாறிட ஆரம்பித்தான்.

அவர்களின் பிரச்சனையில் சின்ன டிக்கியின் வயிற்றுக்குள்ளிருக்கும் நித்திலத்தை கவனிக்க மறந்து விட்டான் விரன்.

''விரன் ஒரு சின்ன உதவி. என்னோட வருங்காலே புது புருஷங்கிட்டே சொல்லிடுங்க நான் இந்த சேலையத்தான் கல்யாணத்துக்கு கட்டுவேன்னு. ஏன்னா, இது என்னோட செண்டிமெண்டல் சாரி.''

என்றவள் சொல்ல, சுருக்கென்றது விரனுக்கு அன்றைய தடாலடியான கல்யாண சீன்ஸ் கண் முன் வர.

''யாருக்காகவும் எதுக்காகவும் என்னே விட்டு கொடுக்காத என் முதல் புருஷன், அவிரன் சிங் ஹீரோ மாதிரி வந்து என் கழுத்துலே கட்டினே தாலியை சுமந்த முதல் பெருமை இந்த சேலைக்கு இருக்கு. சோ, இந்த சேலை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.''

என்றவளோ அவனை நோக்கி அடிகள் வைத்தாள்.

விரனுக்கோ இதையெல்லாம் கேட்டுத்தான் தொலைக்க வேண்டுமா என்றிருந்தது. டவல் கம்பியை கரங்களால் இறுக்கி பற்றி மவரசனோ அதை கடுப்பில் வளைத்தே விட்டான்.

இல்லாள் அவளுக்கு முதுகு காண்பித்தப்படி நின்றிருந்தவன் மனமோ அதீத வேதனையில் உழன்று ஆணவனின் தேகத்தை சிவப்பாக்கியது, உடல் கவலையிலான உஷ்ணம் கொள்ள.

''விரன்..''

என்றழைத்த பரவையோ அவன் வாய் தாடையை விரல்களால் பற்றி திருப்பினாள் கணவனின் முகத்தை அவள் வதனம் காணும்படி.

''விரன், இந்த தாலியோடையே மணமேடைக்கு போனா நல்லாவா இருக்கும்? புது புருஷன் மனசு கவலைப்படாதா? சோ, நீங்க கட்டினே தாலி, நீங்க போட்ட முடிச்சு, நீங்களே உங்க கையாலே கழட்டிடுங்க.''

என்றவளோ ஆணவனின் இருக்கரங்களையும் பற்றி பிடித்து அவளின் கந்தரத்தில் மாலையாக்க, வெளிறி போனது விரனின் முகம்.

''சீக்கிரம் விரன். மணியாகுது. தூங்கணும்.''

என்றவளோ புன்னகை பூவாய் மலர்ந்து சொல்ல,

''என்னே பார்த்தா என்னே கேனையன் மாதிரி இருக்கா உனக்கு! ஹான்!''

என்றவனோ கோபம் தலைக்கேற நெறித்தான் சின்ன டிக்கியின் கிரீபத்தை.

திணறினாள் தாட்டியவள் விரனின் நெஞ்சை கையால் அடித்து.

''நானும் வந்ததுலருந்து பார்க்கறேன் வரிக்கு வரி புது புருஷன், புது புருஷன்னு! எவண்டி அது உன்னோட புது புருஷன்!''

என்றவனின் நெருத்தலை தாங்க முடியாதவளோ வேறு வழியின்றி பின்னோக்கி தள்ளினாள் ஆணவனை பலங்கொண்டு.

''பாவம் பார்த்து உனக்கொரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கலான்னு பார்த்தா ரொம்பத்தான் ஆடறே!''

என்றவனோ மேலேறி அமர்ந்திருந்தான் மஞ்சத்தில் பின்னோக்கி போய் சரிந்திருந்த சின்ன டிக்கியின் மீது.

''நான் பார்த்து உனக்கு கட்டி வெச்சாத்தான் கல்யாணம்! இல்லையா கடைசி வரைக்கும் எனக்கு பொண்டாட்டியா நீ இங்கையே கிடந்துதான் சாகணும்!''

என்றவன் ஆக்ரோஷமாய் கத்தி முடிக்க, அவன் கரத்தை பற்றியிழுத்த மானினியோ அதை பதித்தாள் குட்டி விரன் தஞ்சம் கொண்டிருந்த அவளின் வயிற்றில்.

ஆர்ப்பாட்டம் செய்தவனோ கப் சுப்பென்று அடங்கி போனான் சுந்தரியோ அவனை முறைத்திருக்க.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 58
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top