- Joined
- Jul 10, 2024
- Messages
- 415
அத்தியாயம் 61
சரியாக இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
''தேங்கியூ சோ மாச் ஜஸ்மின்! மோவியனோட பொறந்தநாளுக்கு நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே, அதுவும் அவர் கூட! நிஜமாவே, எனக்கிது ஒரு இன்ப அதிர்ச்சிதான்!''
என்ற சின்ன டிக்கியோ வாஞ்சையாய் பற்றினாள் அவளின் இப்போதைய தோழிகளில் ஒருத்தியான ஜஸ்மினின் கரங்களை.
''ஏன் நிழலிகா, டிவோர்ஸ் பண்ணிட்டா சேர்ந்து வரக்கூடாதா என்னே?''
என்றவளோ கையிலிருந்த ஜூஸ் கிளாஸை வாய்க்கு கொடுக்க,
''சே! சே! நான் அப்படியேதும் சொல்லலே ஜஸ்மின். உங்களே இப்படி ஒன்னா பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. என்னே, பொண்ணையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாம்.''
''சம்மர் கேம்ப் நிழலிகா. அடுத்த தடவே கண்டிப்பா கூட்டிக்கிட்டு வறேன். அதுவும் இப்போதைக்கு எங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இருக்கறதுனாலத்தான் தனியே இருக்கோம்னு சொல்லிருக்கோம் பொண்ணுக்கிட்டே. சோ, இந்த நேரத்துலே எங்களே மறுபடியும் ஒன்னா பார்த்தா ஒரே வீட்டுலே சேர்ந்து இருக்கலாமே எதுக்கு வேறே வேறே வீடுன்னு கேட்பா, அதான் கொஞ்ச நாளைக்கு அவளுக்கு விவரம் தெரியரே வரைக்கும் இப்படியே மெயிண்டன் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.''
என்றவளோ மிகப்பெரிய விளக்கம் ஒன்றை கொடுத்து முடிக்க,
''குழந்தைகளுக்கு நம்ப நிலைமையே புரிய வைக்கறதுங்கறது ரொம்ப பெரிய ப்ரோசஸ்லே.''
என்றவளோ நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டாள் சிந்தைக்குள் வேறேன்னவோ ஒன்று ஓட.
''அது என்னவோ உண்மைதான் நிழலிகா! ஆனா, பாறேன், இப்போதான் ரொம்ப ஹேப்பியா இருக்கறே மாதிரி ஃபீல் பண்ணுது! கணவன் மனைவியா இருக்கும் போது கூட நாங்க இவ்ளோ க்ளோஸ் கிடையாது! ஏன், அவருக்கு டைமே இருக்காதுன்னா பார்த்துக்கோயேன், எங்களுக்காக ஸ்பெண்ட் பண்ணே! ஆனா, இப்போ எல்லாம் அப்படியே தலைக்கீழா மாறிப்போச்சு! ரொம்ப நல்லாருக்கு நிழலிகா இந்த லைஃப்! இப்போதான் நிஜமாவே நாங்க அர்த்தமான வாழ்க்கை வாழறதா தோணுது எங்களுக்கு!''
என்றவளின் முகத்தில் அவளின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஆனந்தம் தாண்டவமாடியது.
''ஜஸ்மின் சத்தியமா சொல்றேன், நீங்க சொல்றதே கேட்கும் போது அவ்ளோ ஹேப்பியா இருக்கு எனக்கு!''
என்ற சின்ன டிக்கியோ பக்கமிருந்தவளின் தோளை அன்பாய் தடவிக் கொடுக்க,
''உனக்குத்தான் நன்றி சொல்லணும் நிழலிகா. நீ மட்டும் இல்லன்னா, இதெல்லாம் இம்போசிபல்! கல்யாண வாழ்க்கையிலே எங்களுக்குள்ளே இல்லாத புரிதல் டிவோர்ஸ்கு அப்பறமா நடப்புறவுலே ரொம்பவே அதிகமா இருக்கறதே ஃபீல் பண்றோம்! உண்மையிலே, நாங்க கூட அடிக்கடி சொல்லி சிரிச்சிக்கறோம் கல்யாணம் பண்ணாதே தம்பதிகளாவே இருந்திருக்கலான்னு!''
என்ற ஜஸ்மினின் கூற்றில் இருப்பெண்களும் இருக்குமிடம் மறந்து சிரித்தனர்.
''நீங்க இப்படியே சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்க நான் கடவுள்கிட்டே வேண்டிக்கறேன் ஜஸ்மின்.''
என்றவளோ பெண்ணவளை கட்டியணைக்க,
''கடவுள் வரைக்கும் எதுக்கு போகணும்? நீ ஒரு ஆளே போதும் நிழலிகா! ஐ மீன் நீயும், உன் பொசிட்டிவிட்டியும்! எப்படி நீ இப்படி இருக்கே!? எப்போதுமே சிரிச்சிக்கிட்டு, குட் திங்ஸ் பேசிக்கிட்டு?! எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்கு நிழலிகா! கூடவே, பொறாமையாவும் இருக்கு!''
''அதெல்லாம் கம்பெனி சீக்ரட், ஜஸ்மின்! நான் ஒரு ரேர் பீஸ்!''
என்ற சின்ன டிக்கியோ சிரித்துக் கொண்டே வந்தாள் வாசல் வரைக்கும் தோழியவளை வழியனுப்ப.
அதே வேளையில் வந்து நின்றது வாசலின் முன் ஏ3 செடான் ஆடி காரொன்று.
ஒரு மணி நேரமாய் காணாமல் போயிருந்த இரு ஆண்கள் அதிலிருந்து வெளிவந்தனர்.
''ஓகே நிழலிகா, உடம்பே பார்த்துக்கோ. குட்டி பையனையும் நல்லா பார்த்துக்கோ. நாங்க கிளம்பறோம்.''
என்ற ஜஸ்மினோ காரிலிருந்து வெளியாகிய தற்போதைய நண்பனான மாஜி கணவன் நதானியேலோடு சேர்ந்து டாட்டா காண்பிக்க,
''வேறே யாராவது டெஸ்ட் ட்ரைவ் பண்ணே ஆசைப்படறீங்களா?!''
என்ற நதானியேலோ குதூகலமாய் கேட்டான் பிறந்தநாள் ஹீரோவின் பரிசான காரின் முன் பொன்னெட்டை தட்டி.
''சும்மா பறக்கறே மாதிரி இருக்கு நிழலிகா!''
என்ற கரனோ கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டியப்படி நின்று சொல்ல,
''நானு! நானு! நானு!''
என்ற குரலோடு வெளி வாசல் கூட்டத்தை பிரித்து கொண்டு வெளிவந்தான் வீர்.
''என்னே நானு, நானு?! அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்! இருக்கறே காரையே ஒழுங்கா ஓட்டே முடியலே! ஆயிரத்தெட்டு சம்மன்னு! இதுலே இந்த ஆடி கார் ஒன்னுதான் குறைச்சல்! வேணும்னா விளையாட்டு சாமான் கார் வாங்கி தறேன் அதை ஓட்டிக்கிட்டு ஒரு ஓரமா கிடங்கே!''
என்ற லல்லியோ நோஸ் கட் செய்தாள் வழக்கம் போல் வீர்ரை.
''இந்த பஜாரி ஒருத்தி போதும் என் மானத்தே வாங்கே! எல்லாம் என் தலையெழுத்து!''
என்றவனோ தலையில் அடித்துக் கொள்ள,
''ஓஹ், ஆமாவா?! சரி அப்போ இன்னிக்கு நீங்க ஹோல்லே படுங்க!''
என்ற பஜாரியோ ஊடல் கொண்டு வீட்டுக்குள் போனாள்.
''ஐயோ! நோ! பஜாரி! சி! லல்லி! அடியே! நில்லுடி!''
என்ற வீர்ரோ அவளைத் துரத்திக் கொண்டே ஓடினான் பொண்டாட்டியின் பின்னாலேயே.
தம்பதிகளின் சேட்டைகளை அவ்விடத்தையே கலகலப்பாக்கியது.
''அடிக்கடி நாமெல்லாம் இப்படி சந்திக்கணும், சிரிக்கணும்! இதுதான் கடவுள்கிட்டே என்னோட பிராத்தனை!''
என்ற நதானியேலோ கையை குலுக்கிக் கொண்டான் கரனிடத்தில்.
''ஆமா, பையன் எங்கே?!''
என்ற ஜஸ்மினின் வேள்வியில்,
''அவர் பத்து மணிக்கே தூங்கிட்டாரு!''
என்ற கரனோ விருந்தினர்கள் இருவரையும் சிறு கட்டிப்பிடியோடு வழியனுப்பி வைத்தான் நிழலிகாவோடு சேர்ந்து.
உயிர் துஞ்சிடுவான் விரன்...

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 61
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.