What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
413
அத்தியாயம் 72

அழமான அன்புக்கோர் அரிதான குணமுண்டு. அதுதான் விட்டுக்கு கொடுப்பது.

விரனை புரிந்துக் கொள்ள கால தாமதம் ஏற்பட்டாலும் சரி இனி அவனை குற்ற உணர்ச்சி கொண்ட ஒருவனாய் ஒதுக்கி வைத்திடக் கூடாதென்ற முடிவில் அவனோடு சேர்ந்து வாழ முடிவெடுத்தாள் நிழலிகா.

ஆனால், மகேஸ்வரனின் திட்டம் தெரிவையவள் அறியவில்லை.

அலறிய போனின் மறுமுனையில் நதானியேல் கதறினான் உடைந்தவனாய்.

''உன் பேச்சை கேட்டேனே நிழலிகா! உன் பேச்சை கேட்டேனே! இப்போ பாரு என் வாழ்க்கையே போச்சு நிழலிகா! போச்சு!''

பக்கென்றது பாவையவளுக்கு நடிகனின் பேச்சு பழி சுமத்தல் போலிருக்க.

''நதானியேல், என்னாச்சு?! ஏன் இப்படி அழறீங்க? முதல்லே அதை சொல்லுங்க நதானியேல்?!''

''என்னே சொன்னே நீ?! ஹான், என்னே சொன்னே? வெறுக்கப்படறதே விட ஒதுக்கப்படறது எவ்வளவோ மேல்! கொஞ்சநஞ்ச நம்பிக்கையாவது மிச்சமிருக்கும், அப்படி இப்படின்னு சொன்னதானே?!''

''ஆமாம், சொன்னேன்! அதுக்கென்ன நதானியேல் இப்போ?!''

படபடத்தது கர்ப்பிணியின் இதயம். தேகமோ கிடுகிடுத்தது, என்ன விபரீதமோ என்ற அச்சத்தில்.

''நான் உண்மையே சொல்லிட்டேன் நிழலிகா என் வைஃப்கிட்டே!''

என்றவனின் கூற்றில் தலை சுத்தியது சின்ன டிக்குக்கு. கைத்தாங்கலாய் கட்டிலின் விளிம்பை பற்றி மஞ்சத்தில் அமர்ந்தாள் அளகவள்.

சத்தியமாய் சுந்தரியவள் எதிர்பார்த்திடவேயில்லை நதானியேலின் இப்படியான அதிரடி ட்விஸ்ட்டை.

''ஜஸ்மின், சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி இப்போ ஹோஸ்ப்பிட்டல்லே இருக்கா நிழலிகா!''

என்றவனின் ஒப்பாரியில் ஒரு நொடி உயிரே போய் வந்தது விரனின் சின்ன டிக்கிக்கு.

''என்ன சொல்றிங்க நதானியேல்?! இப்போ எப்படி இருக்காங்க உங்க வைஃப்?! உயிருக்கேதும் ஆபத்தில்லையே?!''

வினவியவளின் முகம் வெளிறித்தான் கிடந்தது.

''அவளாலே நான் சொன்னதை ஏத்துக்க முடியலே நிழலிகா! எனக்காக பணக்கார வாழ்க்கையே தூக்கி போட்டு வந்தவே நிழலிகா என் ஜஸ்மின்! நான் நடிகனாக ஆசைப்பட்டே ஒரே காரணத்துக்காக படிப்பை பாதியிலே நிறுத்தி வேலைக்கு போன பொண்ணு நிழலிகா என் ஜஸ்மின்! இப்போ, சாக கிடக்கற என்னாலே! என் முட்டாள்தனத்தாலே!''

தலையில் அடித்துக் கொண்டான் நதானியேல். கேட்டது சத்தம் ரிசிவரில் இருந்தவளுக்கு.

''அப்படியெல்லாம் ஒன்னுமில்லே நதானியேல்! உங்க ஜஸ்மின் நல்லப்படியா பிழைச்சு வந்திடுவாங்க! நம்புங்க நதானியேல்!''

ஆறுதல் சொல்ல முனைந்தாள் முற்றிழையவள் நதானியேலுக்கு.

''என்னாலே முடியலே நிழலிகா! அவளே ஏமாத்தறது எனக்குமே தப்புன்னு நீங்க வந்து போனதுக்கு அப்பறமா எனக்கு புரிஞ்சது! எங்கே, ஜஸ்மினா எதையாவது தெரிஞ்சிக்கிட்டா ஒரேடியா என்னே வெறுத்திடுவாளோன்னு பயந்துதான் நானே சொல்லிட்டேன் நடந்த எல்லாத்தையும்!''

என்றவன் சொல்லி கதறிய நிமிடம் உணர முடிந்தது வஞ்சியவளால் அதன் வலி ஒரு பொண்ணுக்கு எப்படி இருக்குமென்று. அதுவும் அவனின் இன்பத்துன்பம் அனைத்திலும் ஒன்றாக கலந்திருந்த ஒருத்திக்கு.

''ஓகே, நதானியேல்! ரிலேக்ஸ்! ரிலேக்ஸ்! முதல்லே நீங்க அழுகறதே நிறுத்துங்க! நான்தான் சொல்றேன்லே ஜஸ்மினுக்கு எதுவும் ஆகாது! அவுங்க இன்னும் ரெண்டு நாள்லே குணமாயிடுவாங்க!''

''இப்படி பண்ணிக்குவான்னு தெரிஞ்சிருந்தா சொல்லிருக்கவே மாட்டேன் நிழலிகா! என்னே ஜஸ்மின் வெறுத்தாலும் பரவாலன்னு காலம் முழுக்க ரகசியமாவோ இல்லே தப்பானவனாவோ வாழ்ந்திட்டு போயிருப்பேன்!''

என்றவனோ கூனிக்குறுகி போக,

''எந்த ஹோஸ்ப்பிட்டல்லே இருக்காங்க ஜஸ்மின்?''

என்றவளின் விழிகளில் ஈரம் பூத்தது, மனம் கல்லாக.

''தி மெடிக்கல் சிட்டி எர்மிட்டா!''

என்றவனை தேத்தியவளோ ஒரு வழியாய் போனை வைத்தாள் பத்து நிமிட ஆறுதல் பேச்சுக்கு பிறகு.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 72
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top