What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 73

கைவிரல்களை போலத்தான் மனிதர்களும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்.

ஜஸ்மின் இளகிய மனம் கொண்டவள். ஐந்து வயது குழந்தையின் தாயவள். கணவன் சினிமாவில் இருப்பதால் பல கிசுகிசுக்களில் மாட்டிடுவான் என்று தெரியும்.

இருப்பினும், நதானியேல் இவ்விஷயத்தில் ஜெண்டல்மேன் என்றே பெயரெடுத்தவன். உடன் நடிக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் தெரியும் ஆணவனுக்கு ஜஸ்மின் மட்டுமே உயிரென்று.

ஆனால், நடிகனவன் இருபாலின ஈர்ப்பு கொண்டவன் என்ற உண்மை வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் மட்டுமே அறிந்த ரகசியமாகும்.

கல்லூரி காலத்தில் இப்படியான மனநிலை மாற்றத்தினை உணர்ந்த நதானியேல் முதலில் இதை ஜஸ்மினிடத்தில் சொல்லிடவே விரும்பினான்.

அந்நேரம் பார்த்து பூமகளவள் மனையிலிருந்து வெளியேறினாள் காதலுக்கு பணம் முட்டுக்கட்டையாக. காதல் ஜோடிகள் இருவரும் தனிக்குடுத்தனம் போயினர், வருங்கால ஹீரோவையும் அவன் குடும்பம் துரத்தி விட.

பஸ் ஸ்டாப், நண்பர்கள் வீடு, பொது கழிப்பறை, கல்லூரி காண்டீன் என்று ஏறக்குறைய ரெண்டு வாரங்களுக்கு பொதுவில் வாழ்வை கழித்தார்கள் காதலர்கள் இருவரும். வறுமையோ அந்நிலையில் ஆணவனை வாய் திறக்க விடாது தடுத்தது.

நாட்கள் கடக்க நதானியேலுக்கு சண்டை காட்சி ஒன்றில் அடிவாங்கும் சீனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை செவ்வென செய்து கூலி பெற்றவன் பின் காதலியோடு வீடொன்றில் குடிபுகுந்து சினிமா வாய்ப்புகளுக்காக பல தேடல்களில் ஈடுப்பட்டான்.

ஒருவர் இருவராகிய என்ணிக்கை மூன்றாய் உயர குடும்ப சூழலை சமாளிப்பதற்காக குறிப்பாய், நதானியேல் சினிமாவை துறந்திடக்கூடாதென்ற எண்ணத்தில் தள்ளி போன தீட்டு சங்கதியை அவளுக்குள்ளேயே ரகசியமாய் பதுக்கிக் கொண்டாள் ஜஸ்மின் உன்னதமான காதலியாய்.

நதானியேல் படிப்போடு சேர்த்து பல சினிமா கம்பெனிகளை ஏறி இறங்கினான். அவனுக்காக குடும்ப சுமையை தோளில் சுமந்தாள் ஜஸ்மின் படிப்பை கைவிட்டு.

ஆணவனோ அவன் சுயத்தை ரகசியமாகவே வைத்திருந்தான் காதலி மனைவியாய் மாறிப்போக மஞ்சத்தில். இருப்பினும், சுய இன்பம் செய்து அவனின் இச்சையைத் தீர்த்துக் கொண்டான் இளைஞனவன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது.

ஓய்வற்ற உழைப்பு, கர்ப்பம் அழிவு. உடைந்து போனான் நதானியேல். தேத்தினாள் ஜஸ்மின், இழப்பு அவளுக்குமே மிகப்பெரிய அடியாகினும்.

வருத்தங்கொண்ட நேரத்தில் வந்தது வாய்ப்பொன்று நதானியேலுக்கு முழு படமொன்றில் ஹீரோவாக. அன்றைக்கு தொடங்கியதுதான் நதானியேலின் ராஜயோகம் இன்றளவிலும் உச்சத்திலேயே இருக்கிறான். தாய்லாந்து தளபதியாய்.

முதல் படதின் ஹிட்ரிக் வெற்றிக்கு பிறகு அவன் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. ஊரே ஆசிர்வதிக்க ஆடம்பரமாக அரங்கேறியது நதானியேல் மற்றும் ஜஸ்மினின் திருமணம்.

முதல் குழந்தை பறிப்போன சுவடே தெரியாத அளவுக்கு பார்த்துக் கொண்டான் நடிகனவன் மனைவி ஜஸ்மினை. என்னதான், பணம் வந்து அவனை ஊர் போற்றும் சினிமாக்காரனாய் ஆக்கியிருந்தாலும் சுயத்தை வெளிப்படுத்த முடியாதவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டான்.

கலையுலகமோ ஓய்வற்ற நடிப்பே இதற்கெல்லாம் காரணம் என்றது. மீடியா குடும்ப பிரச்சனை என்றது. முன்னர் துரத்திய குடும்பமோ ஜஸ்மினை வெட்டிவிட சொன்னது, பணம் வந்த பின்னாடி வந்து ஒட்டிக்கொண்டு.

இப்படியான நிலைகளே நதானியேலை தடுத்தது, நிஜத்தை ஆணவன் தைரியமாய் நங்கையவளிடம் எடுத்துரைக்க.

அதே சமயம், ஜஸ்மினை கணவனவன் ஓரந்தள்ளவும் இல்லை, அவன் உணர்ச்சிகள் இருப்பக்கமும் சமமாகவே இருக்க.

அவள்பால் அளவில்லா காதல் கொண்ட நதானியேல் குழந்தை இல்லை என்ற காரணத்தால் பத்தினியவள் வருந்திடுவாளோ என்றெண்ணி அவளோடு முடிந்த போதெல்லாம் கூடி களித்தான்.

ஜஸ்மினை தாம்பத்திய விஷயத்தில் குறை சொல்லிடவே முடியாது. நதானியேல் மெய்யாலுமே ஒரு ஆணாக அவளோடு சந்தோஷமாகவே குடும்பம் நடத்தினான்.

பைசெக்ஸுவலுக்கு ட்ரீட்மெண்ட் ஏதும் இல்லாத பட்சத்தில் டிப்ரெஷன் மாத்திரைகளை விழுங்கியவன் நெருங்கி வந்த பல ஆண்களை தவிர்த்தான் எவ்வித உணர்வுகளும் எழும்பாதிருக்க.

இடையில், ஜஸ்மின் கருத்தரித்தாள். நதானியேல் கற்பாள் அவளை கண்ணில் வைத்து காத்தான். தந்தையான பின்னாவது சுயத்தில் மாற்றம் வரும் என்றெண்ணியவனின் நிலை இன்னும் மோசமாகித்தான் போனது.

மீடியாவிற்கு பயந்து தனியே நரக வேதனை கொண்டான் நதானியேல். அவனால் செய்ய முடிந்த ஒரே விஷயம் தனியறையில் விரும்பிய ஆணின் முகம் பார்த்து சுய இன்பம் கொள்வது மட்டுமே.

தப்பி தவறிக்கூட அவன் வேறொரு பெண்ணோடோ அல்லது ஆணோடோ உறவுக் கொண்டதில்லை. அவன் ஜஸ்மினின் சொத்து.

யாருக்கும் சந்தேக வராதப்படி நதானியேல் வெளிநாட்டு மருத்துவர் ஒருவரை ஆறு மாதத்திற்கு ஒருமுறை சந்தித்து தேவையான பிஸிக்கல் அண்ட் மெண்டல் ரிலேடட் விடயங்களை சரிவர வைத்துக் கொண்டான்.

செக்க செவேலென பிறந்த பெண் குழந்தையவள் நதானியேல் மற்றும் ஜஸ்மினின் வாழ்க்கையை பிருந்தாவனமாக்கினாள்.

இருப்பினும், நதானியேல் உள்ளுக்குள் அவஸ்தையேக் கொண்டான், என்னதான் வாழ்க்கை வெளியிலிருந்து பார்க்க ரொம்பவே ஜெகஜோதியாய் பிரகாசித்தாலுமே மனைவி மக்களோடு.

நதானியேலுக்கு ஆண்மை மட்டும் எழும் உறவில் நாட்டமில்லை. அதனோடு சேர்ந்து மனமும் நிறையணும்.

அப்படி அவன் விழுந்ததென்னவோ நிழலிகாவின் புருஷன் அவிரன் சிங்கிடம் மட்டுமே.

உயிர் துஞ்சிடுவான் விரன்

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/உயிர்-துஞ்சும்-விரனா.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 73
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top