What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
413
அத்தியாயம் 76

சரியாய் ஒரு மாதம் கடந்திருந்தது.

ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தான் குட்டி குஞ்சனின் குட்டி பையன்.

கணவன் நதானியேலை பிரிந்த ஜஸ்மினோ தனிக்குடித்தனம் போனாள் ஐந்து வயது மகளோடு.

மீடியாவோ தாய் சேய் இருவரையும் மொய்த்தெடுத்து விட்டது.

இதுநாள் வரை புருஷனை பற்றிய கிசுகிசுப்புகளுக்காக ஜஸ்மினை துரத்தி வந்த மீடியா, முதல் முறை மானினியவள் குடும்பக்கதைக் கேட்க முண்டியடிப்பதைக் கண்டவளோ விக்கித்து போனாள் ரணம் உயிர் கொல்ல.

நதானியேலோ ஊடங்கங்களை தவிர்த்தான் இவ்விடயமாய் வெளியூர் ஷுட்டிங்கில் இருக்க.

தாய்லாந்தின் சூர்யா ஜோதிகா ஃபேம் கொண்ட ஜஸ்மின் மற்றும் நதானியேல் குடும்பம் ரெண்டுப்பட்ட கதையை இணையத்தள செய்தி மூலம் அறிந்துக் கொண்ட நிழலிகாவோ, மனசு கேட்காது மெசேஜ் அனுப்பினாள் ஜஸ்மினுக்கு இப்படி.

'மைண்ட் புரிஞ்சிக்கும், மனசு டைம் எடுக்கும்!'

அன்றைக்கு மருத்துவமனையில் படுத்துக்கிடந்தவளை விசிட் செய்ய வந்த சின்ன டிக்கியோ பழங்கள் கொண்ட பையில், எதற்கும் வைப்போமே என்ற எண்ணத்தில் வைத்திருந்தாள் அவளின் விசிட்டிங் கார்ட்டை.

முதலில் அதைக் குப்பைத்தொட்டியில் கசக்கிப்போட்ட காயங்கொண்ட காரிகையோ, பின்னாளில் எதற்காகவாவது தேவைப்படும் என்று சொல்லி சின்ன டிக்கியின் நேம் கார்ட்டை எடுத்து வைத்துக் கொண்டாள்.

அதற்கான நேரம் வர, அழைத்தாள் மாற்றான் மனைவியவள் விரனின் பொஞ்சாதிக்கு.

''தேங்க்ஸ்!''

இப்படித்தான் ஆரம்பிக்க தோன்றியது தெரிவையவளுக்கு.

''பார்க்க மாட்டிங்கன்னு நினைச்சேன்.''

என்ற சின்ன டிக்கியோ பால்கனியில் நின்றப்படி மறையும் சூரியனை ரசித்தாள் மந்தமான மாலை வேளையில் காதில் போனிருக்க.

''வைஸ் நோட் அனுப்பியிருந்தா கண்டிப்பா கேட்டிருக்கே மாட்டேன்.''

சொன்னவளின் சிரிப்பு கேட்டவளின் இதய நாளங்களை விரிய வைத்தது.

''அதான், டைப் பண்ணி அனுப்பினேன். உள்ளாரே வந்து பார்க்காட்டியும் மேலோட்டமா நோட்டிபிகேஷன் ஸ்லைட்லையாவது (notification slide) பார்ப்பிங்கன்னு.''

என்ற சின்ன டிக்கியோ தன்னிலை விளக்கம் ஒன்றைக் கொடுத்தாள்.

''எதார்த்தமாத்தான் பார்த்தேன்.''

என்ற ஜஸ்மினோ பெருமூச்சு ஒன்றோடு தொடர்ந்தாள் அவள் பேச்சை.

''சொல்ல தோணுச்சு அதான் கோல் பண்ணேன். டிவோர்ஸ் பண்ணிக்க போறோம்!''

என்றாள் ஜஸ்மின் நிதானமாய்.

''என்னே?!''

என்ற குட்டி குஞ்சனின் சின்ன டிக்கிக்கித்தான் அதிர்ந்து போனாள் காது கேட்டு உள்ளம் உள்வாங்கிய செய்தியில், ஒரு கணம் ஆடிப்போய்.

''நான்தான் ஏற்கனவே சொன்னேனே நிழலிகா, எனக்கு ரொம்ப பெரிய மனசெல்லாம் இல்லன்னு! ஜஸ்மின் விரும்பினே நதானியேல் இப்போ இல்லே நிழலிகா! அவிரனோட நதானியேல் கூட ஜஸ்மினாலே வாழ முடியாது, நிழலிகா!''

அம்மணியின் நச்சென்ற பதிலில் நாக்கு தள்ளியது விரனின் தாரத்திற்கு. இருக்காதே பின்னே, இவள் பாட்டுக்கு பொசுக்கென்று விரனின் நதானியேல் என்றால் என்ன அர்த்தம். பின், நிழலிகா எங்கே போவதாம்.

''ஜஸ்மின், இது ரொம்பவே குறுகிய காலத்துலே எடுத்த எமோஷனல் முடிவு மாதிரி இருக்கு! இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நல்லா யோசிச்சு அப்பறமா ஒரு நல்லே முடிவா எடுக்கலாமே?''

நாசூக்காய் சொன்னாள் சின்ன டிக்கி விரனை காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி.

''நிழலிகா, இப்போன்னு மட்டுமில்லே எப்போதுமே நதானியேல் ஒரு நல்ல அப்பாத்தான். அதுலே எந்த சந்தேகமும் இல்லே! ஆனா, ஜஸ்மினுக்கான நதானியேல்தான் இப்போ இல்லாமே போயிட்டான்!''

''ஜஸ்மின், இருந்தாலும்..''

என்ற நிழலிகாவோ அதீத உரிமையெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை கருத்து சொல்ல, இருந்தும் மனம் ஏனோ மடந்தையவள் உணர்ச்சிகளால் கட்டுண்டு கிடக்க கண்டாள்.

''நிழலிகா, நேத்து வரைக்கும் நதானியேல்தான் உலகம்னு இருந்திட்டேன். இதுக்கு மேலையாவது நான் நதானியேல் இல்லாத ஜஸ்மினா வாழ விரும்புறேங்கறதே விட பழகிக்க விரும்புறேங்கறதுதான் உண்மை!''

''எனக்கு விரன் எப்படியோ, அப்படித்தானே ஜஸ்மினுக்கும் நதானியேல்!''

என்ற கர்ப்பிணியின் மனமோ கடந்து கதறியது தன் புருஷனால் ஒரு காதல் கானலாய் போகும் நிலையிலிருக்க.

''விட்டுக்கொடுக்கறது காதல்னா, விலகி இருக்கிறதும் காதல்தான்!''

என்ற ஜஸ்மினோ சத்தமின்றி வழிந்த கண்ணீரை துடைக்காது அழைப்பைத் துண்டித்தாள்.

சின்ன டிக்கியோ பால்கனி சுவற்றில் முகம் புதைத்து கதறினாள், அவளின் அன்றைய வாக்கியத்தை இன்றைக்கு ஜஸ்மின் சொல்ல.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 76
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top