What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

எனக்கவளை பிடிக்கும்!

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
istockphoto-1180716084-612x612-1-150x150.jpg




எனக்கவளை பிடிக்கும்!

ஏனோ நேற்று வரை சொன்னதில்லை!

காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை!

பிடித்தம் அவள் என்பதை காட்டிலும்..

அவள் பெயரே!

அழகான பெயர்!

புனைவுதான்!

ஆனால், அழகு!

இல்லை!

ரம்மியம்!

அவள் கெத்தானவள்!

துடுக்குத்தனம் கொண்டவள்!

அவ்வளவு நெருக்கமெல்லாம் ஒன்றுமில்லை!

இருந்தும்..

அவ்வப்போது கவனிக்கவே செய்திருக்கிறேன்!

ஜாலியான கள்ளங்கபடம் கொள்ளா முகம்!

குணம் சொல்ல எனக்கு அவள் வாய்ப்பளிக்கவில்லை!

தைரியமானவள்!

கேடி என்னையே தகாத வார்த்தை சொன்னவள்!

நிஜத்தில் அல்ல..

புனைவில் கூட அப்படியான வார்த்தை..

வாய்ப்பே இல்லை!

முன்பை விட இப்போது அவளை அதிகம் பிடித்தது!

சத்தியமாய் ஒருமுறை கூட அவள் முகம் பார்க்க விரும்பியதில்லை!

ஏனோ தெரியவில்லை!

ஆனால், அவள் சொன்ன அந்த வார்த்தைகள்...

கிண்டல்தான்!

குறும்பாய் அவள் சொல்ல..

ரசிக்கத்தான் தோன்றியதே தவிர சினங்கொள்ள அல்ல!

பின்குறிப்பு..

தமிழ் தேனாகவும் தப்பான வார்த்தை அருஞ்சுவையாகவும்தான் இருந்தது எனக்கு!

இருப்பினும்..

என் 'டி' யெல்லாம் அவளை அச்சத்தில் தள்ளியது போலும்..

மறந்திருந்தாள் பாவையவள்..

என்னோடு முன்னமே கதைத்திருக்கிறாள்..

நான் நினைவில் வைத்திருக்கிறேன்..

அவள் தொனியில் ஒரு இறுமாப்பு இருக்கும்!

எனக்கது பிடிக்கும்!

தன்னம்பிக்கை ஜாஸ்தி!

இருக்கத்தானே வேணும்..

திறமை திறம்பட இருக்க..

முடித்துக்கொள்வோம் என்ற முடிவிற்கு முன்னதாக கூட ஒன்று சொன்னாள்!

வீரியமான வார்த்தைகள்தான்!

ஆனால், அவள் சொல்ல கிறக்கமே!

நீ என்ன சொன்னாலும் எனக்கு பிடிக்குமென்றேன் நான்!

காரணம்..

இப்போதும்.. எப்போதும்..

எனக்கவளை பிடிக்கும்!

விலகிடுவாள் என்று தெரிந்திருந்தால்..

ஒதுங்கியே இருந்திருப்பேன்..

நெருங்காதே!

அவளை உடைக்காதே!
 

Author: Admin 1
Article Title: எனக்கவளை பிடிக்கும்!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top