- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
சரியான பிழை நாம்! : 10
மாதவிடாயை நிறுத்தி, ப்ரீ மெச்சுவர் மெனோபாஸுக்கு டாக்டரிடம் வழி கேட்டிருந்தாள் மினி.
பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு முடியாது என்ற மருத்துவரோ, இறுதியில் அதற்கான மாத்திரைகளின் பெயரை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து நாயகியை அங்கிருந்து துரத்தி விட்டார்.
இயற்கையை மீறி ஏதாவது செய்ய போனால், அது உயிரையே குடித்திடும் என்ற பயம் அவரிடம் இருந்ததாலேயே மினியின் முட்டாள் தனத்திற்கு செவி சாய்த்திட மறுத்தார்.
ஆனால், அவளோ லேடி டாக்டரின் காலில் விழாத குறையாய், அவள் பிரச்சனைகளை எடுத்து சொல்லி ஒருவழியாய் அவரை அவளின் முடிவுக்கு சம்மதிக்க வைத்து தேவையை தீர்த்துக் கொண்டாள்.
பொஞ்சாதியின் அசட்டுத்தனமான செயலின் மூலம் அவள் அன்பை உணர்ந்த ஈரியனோ வேறு வழியின்றி டிவோர்ஸ் முடிவுக்கு டாட்டா காண்பித்தான்.
அதன் விலையாய் புருஷன் கேட்டது, பொண்டாட்டியின் லூசுத்தனமான முடிவை கைவிட்டிடும் வாக்குறுதியே. மினியும் இனி எக்காலத்திற்கும் இப்படியான குளறுபடிகளை செய்திட மாட்டாள் என்று ஈரியனுக்கு உறுதி அளித்தாள்.
தொலைந்த ஆனந்தம் மீண்டும் அக்குடும்பத்தில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. எல்லாம் பழைய நிலைக்கு திரும்பியது.
தாம்பத்தியம் கொள்ளா தம்பதிகள் மற்ற வழிகளில் இன்பம் கொண்டனர். மினி வேண்டாமென்றாலும் ஈரியன் அவளை இணங்க வைத்தான்.
கணவனின் கழுத்தோர மூச்சில் திக்கி திணறியவளோ அவனுக்கு அடிப்பணிந்தாள்.
என்னதான் ஈரியனின் நோயிக்கு நிரந்தர தீர்வில்லை என்றாலும், அவ்வப்போது வலி நிவாரணிக்கான மாத்திரைகள் கொடுக்கப்பட்டன மருத்துவமனையில்.
அப்படியான ஒரு நாளில் ஈரியன் பயணிக்க முடியா நிலையில் மருத்துவமனைக்கு அவனுக்கு பதிலாக விஜயம் செய்திருந்தாள் மினி.
''ஹாய், கொண்மினி?!''
மூஞ்சுக்கு நேராய் வந்து பெயர் விசாரித்த ஆளோ புதிதாய் இருக்க, மென்புன்னகையோடு மண்டையை ஆமாம் என்று ஆட்டியவளோ,
''நீங்க?!''
என்றுக் கேட்டிட,
''நவீன்! ஈரியன் பிரெண்ட்!''
''ஓஹ்! ஹாய்!''
''எங்க அவரு?!''
''ஆபிஸ்லே கொஞ்சம் வேலே! அதான், நான் வந்திருக்கேன், டேப்லட்ஸ் எடுக்க!''
''எடுத்தாச்சா?!''
''ஹான்! முடிஞ்சது! கிளம்பணும்!''
''ஓகே! பாய்! பார்த்து போங்க! அவரை கேட்டதா சொல்லுங்க!''
''ஹ்ம்ம்..''
என்றவள் விடை பெற,
''கொண்மினி!''
என்றவளை நிறுத்தியவனோ,
''ஈரியன் சொல்லும் போது கூட நான் நம்பலே! ஆனா, நிஜமாவே உங்களுக்கு ரொம்ப நீளமான முடிதான்! அழகா இருக்கு!''
என்றுக்கூற, அவன் புகழ்சியில் சட்டென சிவந்தவளோ,
''தேங்கியூ!''
என்று முறுவலித்தவளாய் அங்கிருந்து நடையை கட்டினாள்.
நவீனோ போகின்றவளை இமைக்காது பார்த்தான். இல்லை ரசித்தான். அவள் பின்னழகை இல்லை. அதில் முட்டி மோதி ஆடிய நீட்டமான கூழையை.
அடிப்பாதம் தொடும் அவளின் குழல். அடிக்கடி வெட்டிடுவாள். கிடுகிடுவென்று வளர்ந்திடும்.
இப்போது பிட்டம் தொட்டு நிற்கிறது.
வீடு திரும்பியவள் காஃபி டேபிளை கிளீன் செய்ய, எதார்த்தமாய் வந்து முன் விழுந்தது அம்மணியின் நீண்ட ஓதி.
கண்ணாடி மேஜையில் அவள் உருவம் கண்ட மினியோ, நெடுநாட்கள் கழித்து அவளின் நீளமான சிகழிகையை ஆழ்ந்து நோக்கி வெற்று புன்னகை கொண்டாள்.
பிழை தொடரும்...
Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சரியான பிழை நாம்! : 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.