What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
WhatsApp Image 2024-11-13 at 8.58.16 PM.jpeg

சரியான பிழை நாம்! : 2

மூன்றை வயது வரைக்கும் அனுவிற்கு பால் கொடுத்த முலைகள் கொஞ்சம் தளர்ந்துதான் போயிருந்தன மினிக்கு.

எதை போட்டும் மறைத்திடவில்லை மங்கையவள், லிப்ட்டில் அப்படியேதான் ஏறி நின்று கார் பார்க்கிங் விரைந்தாள்.

அறுபது கிலோவிலான மஹாலக்ஷ்மி. பால் வண்ணக்காரி. மிதமாய் தொங்கிய தனங்கள் ரெண்டும் கனிந்த காய்கள். இடையோ, இளமைக்கேற்ற ஜாடி. குதமோ தண்ணீர் குடம்.

தந்தையற்றவள். தாய், மருமகள் வீட்டில் அடைக்கலம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குடும்ப விஜயம். ஆனால், மாதம் தவறாது அன்னைக்கான தொகை தம்பியின் வங்கியை சேர்ந்திடும். பிக்கல் பிடுங்கல் இல்லா குடும்ப உறவு.

நீளகூந்தல்காரி அவளை, நவீனின் இருப்பிடத்தில் பலருக்கும் நன்கு பரீட்சியமே. ஆனால், பேச்சு வார்த்தையான அளவளாவல்கள் எல்லாம் ஏதுமில்லை. வெறும் பார்வைகளால் ஆனா குத்தலும் குதர்க்கமுமே.

அவர்களின் உறவுக்கான பெயரென்னவோ, அவரவர் விருப்பத்தின் பேரில் அமைந்திருக்க, பொத்தம் பொதுவாய் மினியின் வாயை இதுவரை யாரும் இவ்விஷயத்தில் மலர வைத்தது இல்லை.

முதல் இரண்டு, மூன்று முறை தலை கவிழ்ந்து அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்றிருந்தவள், போக போக எல்லாவற்றையும் துறந்தவள் ஆகினாள், பக்குவம் ஞானம் அளித்திருக்க.

நவீன் அவளுக்கு மருத்துவமனையில்தான் பழக்கம். ஒரு வருட கால உறவு. சலிக்காது, சுமூகமாகவே போய் கொண்டிருக்கிறது.

நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவன். ஆனால், தலையில்தான் முடி அவ்வளவாக இருக்காது. சொட்டை கணக்காய் அவனை பிறர் பார்த்து சிரிக்க, மயிரே வேண்டாமென்று மொத்தத்தையும் வலித்து பேரழகனாய் ஆப்க்ரேட் ஆகிக்கொண்டவன்.

வங்கி பணியாளன். கை நிறைய சம்பளம். ஆனால், ஆண்டு அனுபவிக்க உடன் ஆளில்லை.

பெற்றவர்கள் தவறி ஐந்தாண்டுகள் ஆயிற்று. மூத்தவன் இவன்தான். தங்கை கல்யாணம் கட்டி வெளிநாடு போயாயிற்று. குடும்பம் குட்டியான அவளோடு அவ்வப்போது வீடியோ கோலில் அளவளாவதோடு சரி. மற்றப்படி வேறெந்த ஒட்டுறவும் இல்லை.

பிரதான சிட்டியின், வசதியான அப்பார்ட்மெண்டின், ஒண்டிக்கட்டையான ஆள். பார்க்க முப்பது போலவும் நிஜத்தில் முப்பத்தி எட்டுமான சாதாரண ஆண்மகன்.

பிழை தொடரும்...
 

Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 2
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top