- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
சரியான பிழை நாம்! : 3
வந்து சேர்ந்திருந்தாள் மினி சொன்னதை விடவும் வேகமாய் வீட்டுக்கு.
''எங்கடி ப்ராவே காணோம்?!''
கொங்கைகள் குலுங்க அவன் நோக்கி நடந்து வந்தவளை விசாரித்தான் ஈரியன்.
''தெரியலே! தேடி வைக்க சொல்லிருக்கேன்!''
சொல்லியவள் கைப்பையை துழாவி க்ரில் லோக் சாவியை கையிலெடுத்தாள்.
''சோரிமா!''
''ஏன்?!''
கேள்வியின் முடிவில் தம்பதிகள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்திருந்தனர்.
''நவீன் ஏதும் தப்பா நினைச்சுக்க போறாரு!''
''அதெல்லாம் ஒன்னுமில்லே! சொல்லிட்டுதான் வந்தேன்!''
''ஆனா, லீவு போச்சே!''
''அதுக்கென்னே பண்ண முடியும்?!''
சொல்லியவள் அடுக்களை நோக்கினாள்.
வார இறுதி ஆகட்டும், பண்டிகை காலங்கள் ஆகட்டும், விடுமுறைகள் அத்தனையும் ஈரியன் மற்றும் மகள் அனுவிற்கே முன்னுரிமையானவைகள் மினியின் வாழ்க்கையில்.
ஆகவே, நவீன் அவளை போடணும் என்றால் அது வார நாட்களில் ஐயா லீவு எடுத்தால் மட்டுமே சாத்தியமாகும்.
அப்படியான சமயங்களில்தான் ஓடியாடி நித்தமும் பம்பரமாய் சுழலும் மினியும் சம்பளம் வெட்டிடா ஆனுவல் லீவ் எடுத்து உடம்புக்கு ஓய்வு கொடுத்திடுவாள்.
''சரி நீ கிளம்பு! நான் பார்த்துக்கறேன்! அதான், கதவே திறந்தாச்சே!''
ஈரியன் சொல்லிக் கொண்டே, கோப்பை காஃபி டேபிளின் மீதிருந்து கைப்பற்ற,
''போய்ட்டா மட்டும் பாஞ்சிடுவாரா?!''
நக்கலாய் சொல்லிய பொஞ்சாதியோ கள்ளியாய் சிரிக்க, அவளை வேடிக்கை பார்வையால் மென்முறுவல் கொண்டு நோக்கிய ஈரியனோ,
''அதான் நீ இருக்கியே! பாய வைக்க!''
நெருங்கியவன் பொண்டாட்டியின் கையிலிருந்த கிளாஸ் நீரை வாங்கி காலி செய்தான்.
''உங்களே பாய வைக்க முடியலையே?!''
என்றவள் சோகம் ததும்ப வெம்பிட,
''விதியை யாராலையும் மாத்த முடியாது மினி! ஆனா, மதியாலே இருக்கற வரைக்கும் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி வாழ்ந்துக்க முடியும்!''
பிராக்டிகல் வசனம் பேசிய கணவன், அம்மணியின் கன்னம் மறைத்த குழலை விரலால் பின்னோக்கி தள்ளினான்.
''என்னத்தே மாத்தி என்னத்தே காணே?! முப்பத்தி அஞ்சு வயசாச்சு! இதுக்கு மேலையும் இதெல்லாம் தேவையான்னு இருக்கு!''
வெறுமையில் உதிர்ந்தது மானஸ்தியின் வார்த்தைகள்.
''பசிக்காத வயிரானாலும் சாப்பிட்டுத்தான் ஆகணும்! இல்லாட்டி, அது அதோட வேலையே காட்ட ஆரம்பிச்சிடும்! உடம்பும் அப்படித்தான்! கண்டதை யோசிச்சு குழப்பிக்காதே! நீ ஒழுங்காதான் இருக்கே! நாமே, சரியாதான் இருக்கோம்! புரிஞ்சுதா?!''
பத்து வருடங்களுக்கும் மேலான திருமதியின் ஈரமற்ற நயனங்கள் நோக்கி அழுத்தமாய் சொன்னான் ஆணவன்.
''என்ன சொன்னாலும் தப்பு, தப்புதானே ஈரியன்?! அனுக்கு தெரிஞ்சா, என்ன நினைப்பா, என்னே பத்தி?! நீயெல்லாம் ஒரு அம்மாவான்னு கேட்க மாட்டா?!
நிதானமாக உரைத்தவளை தோள் வளைத்து மாரில் சாய்த்துக் கொண்டவனோ,
''நம்ப பொண்ணு ஒன்னும் அவ்ளோ முட்டாள் கிடையாது மினி!''
கணவனின் பதிலில் அவனை உவர்ப்பில்லா புன்னகையோடு ஏறெடுத்த மணவாட்டியோ,
''அனு அப்பா, அனு அப்பா! வருங்காலத்துலே உங்க மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா, அப்பவும் உங்க பதில், செயல் எல்லாமே இப்போ உங்க மனைவி கொண்மினிக்கானது மாதிரியேதான் இருக்குமா?!''
கை வளைவில் அவன் கந்தரத்தை சிறை பிடித்தவள், விஷம பார்வையால் அவனை ஆழ்ந்து நோக்கி கபட சிரிப்பு சிரிக்க,
''அனு அம்மா, அனு அம்மா! வருத்திக்கறே ஒழுக்கத்தை விட, ஏத்துக்கறே அன்பு சிறந்ததுன்னு, எதார்த்தம் நம்ப பொண்ணுக்கு புரிய வைக்கும்!''
என்றவனோ புருவங்கள் உயர்த்தி ஊடையவள் இடை வளைக்க,
''ஏத்துக்கிட்டுதானே இருந்தேன் நானும், அப்பறம் ஏன்..''
என்னவோ உள்ளம் கனக்க, மினியின் விலோசனங்களும் தேங்கி நின்றன.
''அதே அன்புதான் மினி!
''ஆனா, இந்த சமுதாயத்தை பொறுத்த வரைக்கும் நான் ஒரு தே..''
என்று சொல்ல வந்தவளை ஒப்புவிக்க விடாது, இதழ் ஒத்தினான் ஈரியன்.
பிழை தொடரும்...
Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 3
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சரியான பிழை நாம்! : 3
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.