What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
WhatsApp Image 2024-11-15 at 4.09.12 PM.jpeg

சரியான பிழை நாம்! : 4

ஈரியன், சராசரி ஆண் வர்க்கத்தின் தவப்புதல்வன்.

ஒற்றை மகனவனுக்கு ஊரெல்லாம் தேடி, கடைசியாய் கண்டெடுத்து, கட்டி வைத்தனர் கொண்மினியை அவனின் பெற்றோர்கள்.

படித்தவர்கள் தலைநகரில் குடியேற, மாமனார் மாமியார் இருவரும் ஊரிலேயே சொச்ச காலத்தை தள்ளிட முடிவு செய்தனர்.

கன்னி கழியா ஜோடிகளோ முதல் இரவில் சொதப்பி பின்னாளில் தெறி வர, வலி போய் சுகம் வரும் என்ற கனவு இருவருக்கும் கானல் நீரை போனது, கொஞ்ச நாட்களிலேயே.

செங்குத்தாய் நிற்க வேண்டியவனின் கோலோ, கிளி மூக்காய் வளைந்து நின்றது. ஜட்டி சரியில்லையோ என்றெண்ணிய மினி, கணவனுக்கு புதுவிதமான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தினாள்.

மஞ்சம் வந்து கழட்டி போடும் வரை உள்ளுக்குள் ஓரமாய் சரிந்திருந்த சின்னவன், ஈரியன் பிறந்த மேனியாகினும் கூன் விழுந்த கணக்காகவே இருந்தான்.

கைவேலை தொடங்கி வாய் வேலை வரை செய்தும் மினியின் பாடு திண்டாட்டமாகவே போனது.

ஈரியனுக்கும் தாம்பத்தியம் கசந்தது. வளைந்தவன் இன்றைக்கு நேராகிடுவான், நாளைக்கு நேராகிடுவான் என்ற நம்பிக்கை பொய்த்து போய் ஏமாற்றமே மிஞ்சாது தம்பதிகளுக்கு.

முயற்சித்தவர்கள் தொடர்ந்து பலநாள் வேதனையில் கலவி கொண்டு காலத்தை கடத்தினர்.

ஆறு மாதங்கள் கடக்க, இனியும் காத்திருப்பது சரிவராது என்றெண்ணி மருத்துவரை நாடினர் ஜோடிகள் இருவரும்.

அவரோ குண்டைத் தூக்கி போட்டார் ஈரியனுக்கு பெய்ரோனி நோயென்று, (Peyronie's disease).

இளம் தம்பதிகளோ உடைந்து போயினர். மருந்து மாத்திரையற்ற பிணிக்கு விடை தலையெழுத்தே என்றான போது.

சொந்தங்களோ வழக்கம் போல் சந்தோஷமான விஷயம் இல்லையா என்று அவர்களை குடைந்திட ஆரம்பித்தனர்.

முதல் வருடம், இளமையை அனுபவிக்கிறோம் என்றுச் சொல்லி அனைவரின் வாயையும் அடைத்தான் ஈரியன்.

அடுத்த ஆண்டை, செட்டில் ஆகிட முயற்சிக்கிறோம் என்றான்.

ஆனால், மூன்றாவது ஆண்டிலோ அவனுக்கு முன்னாடியே பலரும் மினியை மலடி என்ற முத்திரையோடு ஒதுக்கி வைத்திட தொடங்கியிருந்தனர் விசேஷங்களில்.

இருப்பினும், மனைவி அவள் ஒருக்காலும் ஈரியனை பிரிந்து சொல்ல நினைக்கவில்லை. வசவுகளை ஏற்றுக்கொண்டு அவனோடே காலம் தள்ளினாள், அழுதாலும், கட்டி புரண்டாலும்.

எப்படி அவளால் பகிங்கரப்படுத்திட முடியும், இப்போது என்றில்லை, இனி எப்போதுமே முறுக்கேறிடும் சமயத்தில் ஈரியனுக்கு ஆண்மை நேராய் நில்லாது வளைந்தே இருக்குமென்று.

என்னதான் மூடேறி விறைப்பாகினும், சாமானியனை போல் நாயகன் அவனுக்கு கூடலின் போது அவனின் ஆணுறுப்பு நேராய் நின்று எழுச்சி கொள்ளாது, வளைந்தே வீறு கொள்ளும்.

கொக்கி போலான ஆண்மையோடு ஈரியன் பொஞ்சாதியின் பெண்மைக்குள் அவனின் உறுப்பை நுழைத்து இயங்கையில் அவனுக்கும் வலி, அவனோடு குடும்பம் நடத்திய மினிக்கும் ரோதனையே.

இது ஈரியனின் விந்து அவன் பொண்டாட்டியின் யோனிக்குள் முறையாய் நிரம்பி அவள் கருத்தரித்திடவும் சிரமத்தை ஏற்படுத்திடும் என்பதே மருத்துவரின் வாக்கு.

இப்படியான பிரச்சனையோடு இணை சேரும் கணவன் மனைவி எதிர்கொள்ளும் ரணமானது அவரவரை பொறுத்து மாறுப்படும் என்பது மெடிக்கல் டயலாக்ஸ்.

ஆனால், மினியும், ஈரியனும் சபிக்கப்பட்டவர்களே இவ்விஷயத்தில்.

இருப்பினும், எரிச்சலில் கோபம் கொண்டு வாழ்க்கையை தொலைக்க பார்த்தவனை சமாதானம் செய்த மினியோ, சுகமாய் ஏற்றுக்கொண்டாள் முயங்கலின் போதான மரண வலியை.

பல வகையான பொஷிஷன்ஸ் மாற்றியும் மினி கொண்ட அழுகை குறையவில்லை. உச்சம் தொட்டும் ஈரியன் வியர்வை கொண்டதை விட, வலியோடு போராடி துவண்டதுதான் அதிகம்.

இறுதியாய், இருவரும் ஐ.வி.எப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.

துன்பம் கொடுத்த இன்பத்திற்கு மனதார விடைகொடுத்து, வாய் புணர்ச்சி மற்றும் கையிலான விளையாட்டுகள் என்று இருவரும் அவரவர் தேவையை தீர்த்துக் கொண்டனர், சொச்ச காலத்தை.

பிழை தொடரும்...
 

Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 4
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top