- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
சரியான பிழை நாம்! : 6
இருக்கும் பிரச்சனையே போதும், இனி வேறெதுவும் புதிதாய் வேண்டாமென்று முடிவெடுத்த நங்கையோ, இறைவனை சரணாகதி அடைந்தாள்.
இதனால், இல்லறம் கொண்ட இல்லமோ குட்டி கோவிலாய் மாறிப்போனது.
அம்மணியின் திடிர் மாற்றத்தில் புருஷனும் மகளும் கொஞ்சம் ஜெர்க்காகினாலும் அதை பெரிதாய் வெளிப்படுத்தி கொண்மினியை கடுப்பாக்கிடவில்லை.
ஆனால், பூஜை புனஸ்காரங்கள் என்று வாரத்தில் இரு நாட்கள் என்று ஆரம்பித்த சைவம் பின்னாளில் மாதத்தில் இருபது நாளாகி போனது.
காரணம், அசைவம் உணர்வுகளை தூண்டி காமத்தை தலைதூக்கிட வைத்திடும் என்று எவனோ ஒரு யூடியூபர் சொல்ல, அதைப் பிடித்துக் கொண்டு மொத்த குடும்பத்துக்கும் ஆப்படித்தாள்.
கட்டியவன், தலையெழுத்து என்று மினி சமைப்பதை உண்ண, சாம்பார் வேண்டாம், தயிர் வேண்டாம் என்று அடம் பிடித்த அனுவின் மீதோ கைவைத்தாள் பொஞ்சாதி.
அதனால், வெடித்தது சண்டை ஈரியனுக்கும் மினிக்கும்.
அளவாக சாமி கும்பிடும் ஈரியனுக்கு இதுநாள் வரை மினி கொண்ட இறை பக்தியில் பெரிதாய் நாட்டமில்லை. இருந்தும், அவளுக்காய் சகித்துக் கொண்டிருந்தான்.
ஆனால், அதுவே வற்புறுத்தலாய் மாறிப்போக, இனியும் அவள் அடிக்கும் கொட்டத்திற்கு துணை போயிடக்கூடாதென்று எல்லாவற்றையும் உடனடியாக நிறுத்த சொல்லி வாதம் கொண்டான்.
பயங்கர சண்டை சமரசம் கொண்டது, அனு அழுகையோடு இருவரிடமும் செய்யா தவறுக்கு மன்னிப்பு கோரிட.
பெற்றவர்களும் மகளை கட்டிக்கொண்டு ஆளாளுக்கு சோரி சொல்லி பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பிழை தொடரும்....
Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: சரியான பிழை நாம்! : 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.