What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
வணக்கம் டார்லிங்ஸ்✌️

💥 நாவல் தலைப்பு: வன்மத்தின் மறு உரு நீ!

🌵கதையின் ஸ்னீக் பீக் சீன்!

💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯

''விழிரா! பிளீஸ்! என்னே காப்பாத்து! நீ கேட்டதுதான் உனக்கு கிடைச்சிருச்சில்லே!''

என்றவனை நோக்கி வந்த வல்லபியோ குரூர சிரிப்பொன்று சிரித்து, உதிரம் வழிந்திறங்கிய கணவனின் மார்பில் குதிகால் செருப்பின் ஹீல் கொண்டு அழுத்தி குத்தியவளாய்,

''ஆமா! கிடைச்சிருச்சுதான்! இதுக்கு மேலே நீ ஏன் உயிரோட இருக்கணும்?! செத்து தொலைடா சாவுகிராக்கி!''

என்ற இரகமற்ற இளம்பிடியாளோ புருஷனை பலங்கொண்டு பின்னோக்கி உதைத்து தள்ளினாள் அதே குதிகால் செருப்போடு.

ஆணவனோ அவளைக் கட்டிய பாவத்திற்காய் சோபாவோடு தரை சரிந்தான் கதை முடிந்தவனாய்.

பத்து தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிலான சொத்துகள் இனி அவளொருத்திக்கே சொந்தமென்ற களிப்போடு அவ்வறையிலிருந்து வெளியேறிய பனிமொழியை சடன் பிரேக் போட வைத்தது விசில் சத்தமொன்று.

நேத்திரங்கள் ரெண்டும் அகல விரிய சட்டென திரும்பி பார்த்த சுந்தரியின் கருவிழிகளிலோ சற்று முன் சாகக்கிடந்த புருஷன் அதே சோபாவில் கெத்தாய் அமர்ந்திருக்கும் காட்சி தெரிந்தது.

''நீ இன்னும் சாகலையா?!''

என்றவளின் அதிர்ச்சியிலான கேள்விக்கு,

''நீ இல்லாமையா?!''

என்றவனோ அறை அதிர சிரிக்க,

''அகராதி புடிச்சவன்டா நீ!''

என்ற அம்மணியோ அவன் நோக்கி வேகமாய் வந்தவளாய் ஆணவனின் குண்டடிப்பட்ட இடத்தை கைகளால் துழாவ,

''ரொம்ப தடவாதே அங்க ஒன்னுமில்லே!''

என்று சிரித்தவனை கண்டுக்காத கோதையின் விரல்களோ அழகனின் ரத்த சிகப்பில் ஊறி ஓட்டையாகி கிடந்த ஆடையின் தனியா கதகதப்பை அவன் வெற்று மார்பில் கரம் பதித்து உணர்ந்தாள்.

💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯

#amydeepz #alphamale #antihero #antiheroine #high_romance #vanmathin_maru_uru_ni #zhagaran #vilira

⚠️அபாய சங்கு: இது மேற்கத்திய கலாசாரத்தை மையப்படுத்திய கதைக்களமாகும். கதைக்கு தேவையான பட்சத்தில் பண்பாட்டை மீறிய ரொமான்ஸ் காட்சிகளும் வசனங்களும் வீரிய மிக்கதாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படியான கதை பாணியை விரும்பாதோர் கடந்து செல்வது சாலச்சிறந்தது.
 

Author: KD
Article Title: டீசர்
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Sourabh

Member
Joined
Jul 16, 2024
Messages
66
waiting ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top