What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
வணக்கம் டார்லிங்ஸ்✌️

💥நாவல் தலைப்பு: ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே

🌵கூடவே, கதையின் ஸ்னீக் பீக் சீன்!

💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯

சீரான மூச்சு ஏறி இறங்க, கட்டு குலையா அழகனாய் பஞ்சணையில் மல்லாக்க கிடந்தான் மிகல். தகித்தவளாய் அவன் அருகில் சென்ற முற்றிழையோ, ஆணவனின் கட்டுடலை விரல்களால் உரசி மேலேற, பட்டென விழிகள் விரித்து விருட்டென எழுந்த நாயகனோ,

''தேரிகா!''

என்றலறினான் அரை அதிர.

ஆனால், போகத்தில் திளைத்திருந்த பகினியோ வேறொரு லோகத்தில் மூழ்கியவளாய் எழுந்து நின்றிருந்த மிகலை முன்னோக்கி அடிகள் வைத்தாள் மந்தகாச முறுவலோடு.

''அண்ணின்னு கூப்பிடாதனாலே நான் உங்களே அப்படி நினைக்கலன்னு அர்த்தமில்லே!''

என்றவன் ஆவேசமாய் கூற, இடைவெளியற்ற நெருக்கத்தில் அவன் கன்னத்தை உள்ளங்கை கொண்டு வருடிய வாஞ்சினியோ எகத்தாள புன்சிரிப்பு கொண்டு அவனை சொக்கிய விழிகளோடு நோக்கினாள்.

''ரூம்பை விட்டு வெளிய போங்க!''

என்ற மிகலோ புருவங்கள் குறுங்க அவளை முறைத்தவனாய் அழுத்தி கூற, அவன் காதோரம் சென்ற பனிமொழியோ,

''கொழுந்தனை நான் சந்தேகப்படக்கூடாதா?!''

என்றுக் கேட்டு நக்கல் சிரிப்பொன்றை கொண்டவளாய் அவ்வறையின் வாசல் நோக்கினாள் பாதங்கள் ரிவர்ஸ் கேர் போட.

நடைப்போட்டவளின் மீது கொண்ட பார்வைகளை விலக்கிடாதவனோ தெரியிழை அவளை இமைக்காது நோக்கி,

''மதம் பிடிச்ச யானைக்கு அடி சறுக்கி, பழக்கமே இல்லே அண்ணி!''

என்றுக்கூறி சத்தம் போட்டு சிரித்தவனாய் மஞ்சம் சென்று அமர, புதிரானவனுக்கு குழப்பம் தீரா பார்வைகளை பதிலாக்கி அங்கிருந்து நகர்ந்தாள் பைந்தொடியவள் இறுகிய முகத்தோடு.

💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯

#amydeepz #high_romance #aalvathu_niyendral_valvathu_varame #part1 #migal #therika

⚠️அபாய சங்கு: இது மேற்கத்திய கலாசாரத்தை மையப்படுத்திய கதைக்களமாகும். கதைக்கு தேவையான பட்சத்தில் பண்பாட்டை மீறிய ரொமான்ஸ் காட்சிகளும் வசனங்களும் வீரிய மிக்கதாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படியான கதை பாணியை விரும்பாதோர் கடந்து செல்வது சாலச்சிறந்தது.
 

Author: KD
Article Title: டீசர்
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top