What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
🖊️ நாவல்: தீவியின் ஆரணியம்

இதுவரை பெண் புலி பக்கம் கூட தலை வைத்து படுத்திடாதவன் இன்றைக்கு மனுஷியான மிருடானியை இவ்வளவு கருசனையாக காவல் காப்பதும், அவளுக்கு ஒன்றென்றால் துடித்து போவதும், இந்நொடியில் கிளர்ச்சி கொண்டு தவித்து நிற்பதும்; எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது ஹீரோவிற்கு.

வர்மாவின் கரங்களில் பதித்திருந்த கரங்களை மிரு இறுதியாய் கொண்டு சென்று பார்க் செய்தது என்னவோ அவனின் தோளேறி கழுத்துரசி மேலேறிய முகத்தில்தான்.

விஸ்கரில் சீண்டல்கள் ஏற்படுகையில் இரத்தத்தை இடமாற்றம் செய்து அதன் மூலம் இயக்கத்தை பெருக்கும் ஆளுமை கொண்டது முதன்மை விஸ்கர்.

ஆகவே, அவனின் உணர்ச்சி நரம்புகளோ பெண்ணவளின் தொடுதலை கண்டறிந்து, மூளைக்கு சிக்னல்களை அனுப்பின.

எல்லைகள் தாண்டிட இருவருக்கும் இடையில் பெரிய தடுப்பெல்லாம் இல்லை. வாய் திறவாது உறும்பினான் உணர்ச்சிகளை உணர்ந்த வர்மா.

மிருவின் முகத்தை அவனின் பெரிய முகங் கொண்டு விழிகள் மூடி செல்லங்கொஞ்சும் பாணியில் உரசினான் ஆணவன்.

சுமார் 15 சென்டிமீட்டர், அதாவது 6 அங்குல நீளம் கொண்ட அவனின் விஸ்கர்கள் மிருவை மேலும் படுத்தி எடுத்தது.

அவன் அசைய காரிகையின் கந்தரமெல்லாம் வர்மாவின் மீசை மூடி எதார்த்தமாய் அங்கும் இங்கும் உரசி அவளை நிலைகுலைய செய்தது.

மென்முனகலோடு பெண்ணவள் வர்மாவின் முகத்தை அவளின் பட்டுபோன்ற உள்ளங்கைகள் கொண்டு வருட, ஜிவ்வென்று இருந்தது வர்மாவிற்கு.

அவனின் முகப்பகுதியில் ஏராளமான உணர்ச்சி நியூரான்கள் உள்ளன. பயணிக்கையில் காற்று அழுத்தத்தில் ஏற்படுகின்ற சிறிதளவு மாற்றத்தைக் கூட அவனால் மிக நாசூக்காய் கண்டறிய முடியும்.

அப்பேர்பட்டவன் மிருவின் தொடுதலில் கலவரமாகி போனான். அவளை அப்படியே தாங்கி பின்னோக்கி திரும்பியவன் அழகாய் அவளை கிடத்தினான் நிலத்தில்.

🐯♥️🐯♥️🐯♥️🐯♥️🐯♥️🐯♥️🐯♥️

🚨இது ரொமான்ஸ் கொண்ட எடக்கு முடக்கான கதைக்களம்.


🙏 இப்படியான கதை பாணியை விரும்பாதோர் கடந்துச் செல்வது சாலச் சிறந்தது.


#எடக்கு_முடக்கான_லவ் #புலிப்பையா

#amydeepz #theeviyin_aaraniyam #varma #miru #romance #fiction_fantasy #tiger
 

Author: KD
Article Title: டீசர்
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top