- Joined
- Jul 10, 2024
- Messages
- 503

தாழ் திறவாய் ததுளனே! : 8
மணி இரவு ஏழரை.
அண்ணன் தம்பி இருவரும் இதோடு மூன்றாவது பூப்பந்தை கொடுமைப்படுத்திட களம் இறங்கியிருந்தனர்.
''நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலையே?!''
ஆரோன்தான் ஆரம்பித்தான், மதியம் ராகனுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் கேட்பாரின்றி ப்ளூ டிக்கில் சஞ்சரிக்க.
''உன்கிட்ட கம்பளைண்ட் பண்ண ஆளை வந்து என்கிட்ட நேரடியா கேட்க சொல்லு!''
தம்பியோ செக் வைத்தான்.
''முடிஞ்சதை நீதான் திரும்பவும் ஸ்டார்ட் பண்ற ராகன்!''
''யாரு?! நானு?! அவதான் என்ன அசிங்கப்படுத்த ஆள் அனுப்பி சும்மா இருக்கறே என்ன சொறிஞ்சி விட்டுக்கிட்டு இருக்கா!''
''நீ சங்க்யாவே தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க ராகன்! இவ்ளோ நடந்த பின்னாடியும் அவுங்க உன்னே மரியாதையாத்தான் பேசறாங்க! நீதான், அவே, இவன்றே! ப்ளீஸ் கிவ் ஹேர் சம் ரெஸ்பெக்ட்!''
''என்ன அவளுக்கு ஓவரா சப்போர்ட் பண்றே?! உன்னே இழுத்து கிஸ் ஏதும் அடிச்சிட்டாளா என்னே?!''
நக்கல் தொனியில் மூத்தவனை கடுப்பாக்கினான் சின்னவன்.
''இப்படி ஒரு புத்திக்கெட்டவனுக்கு அண்ணனா இருக்கேன்றத்துக்கு வேணுன்மா என்னே அடிக்கலாம்!''
கவுண்டர் கொடுத்து ராகனின் வதனத்தை இறுகி போக வைத்தான் பெரியவன் அவன்.
''இப்போ என்ன உனக்கு?! எதுக்கு எவளோ ஒருத்திக்காக என்கிட்ட வக்காலத்து வாங்கிக்கிட்டு இருக்கே?!''
''உன் தப்பே நீ உணரணுங்கறதுக்காக!''
''நான்தான் தப்பே பண்ணலேங்கறேன்னே!''
''முதல்லே எடுத்தோம், கவிழ்த்தோம்ங்கிற எண்ணத்தை மாத்து ராகன்! நான் சிசிடிவியே பார்த்து, வந்த பொண்ணு யாருங்கறதை விசாரிச்சிட்டேன்!''
என்றவன் உரைத்த வார்த்தையில் ராகனின் முகம் மாறியது.
''வந்தவங்க ஒரு சித்த வைத்திய டாக்டர்! அவுங்களுக்கும் சங்க்யாவுக்கும் சம்பந்தமே இல்லே! நியூஸ் பார்த்திட்டு உனக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்காங்க!''
''இப்படின்னு அந்த மாடலிங் மேடம் சொல்ல சொன்னாங்களா?!''
என்றவன் இடை இறுக்கி கேட்க, வேடிக்கையாய் தோள்கள் குலுக்கி சிரித்த ஆரோனோ,
''சங்க்யா உன்னே ஆம்பளையே இல்லன்னு சொன்னது சரியோன்னு எனக்கு இப்போ தோணுதுடா!''
என்றவனை அதிர்ச்சியோடு தம்பியவன் வெறிக்க,
''அவுங்க சொன்ன ஆம்பளைக்கான அர்த்தம் என்ன தெரியுமா?! சக மனுஷங்களை மதிக்க தெரிஞ்சவன்! மரியாதையா பேச தெரிஞ்சவன்! அடுத்தவங்க மனசு கோணாமே அதிருப்தியை வெளிப்படுத்தறவன்! தனக்கு புடிக்காத ஒன்னே மத்தவங்க செய்யும் போது அவுங்களே ஜட்ஜ் பண்ணாதவன்! குறிப்பா, ஒரு பொண்ணே! சாதாரண பொண்ணுதானே இவுங்களுக்கு என்ன பெருசா மட்டு, மரியாதை, மதிப்புன்னு குறைச்சு மதிப்பிடாமே, அவுங்களுக்கு கிடைக்க வேண்டியதை கொடுக்கறவன்!''
என்ற ஆரோனோ, நிதானமாய் எடுத்துரைத்து,
''இப்படி எந்த ஒரு குவாலிட்டிஸும் உன்கிட்ட இல்லங்கறதை சொல்லித்தான், உனக்கு உரைக்கணுங்கறத்துக்காகத்தான் அவுங்க உன்னே ஆம்பளையே இல்லன்னு சொன்னாங்க! ஆனா, நீ அவுங்க வேறே என்னவோ அர்த்தத்துலே சொன்னதா நினைச்சு, இப்போ வரைக்கும் அவுங்களே தப்பான கண்ணோட்டத்துலையே பார்க்கறே! இதைத்தான் நீ மாத்திக்கணும் ராகன்! இதைத்தான் அவுங்களும் எதிர்பார்க்கறாங்க!''
''என்னாலே சத்தியமா நம்பவே முடியலே ஆரோன்! என் அண்ணனா இப்படின்னு?! எவளோ ஒருத்திக்காக, என்ன போய் அப்படி இரு, இப்படி இருன்னு சொல்லி அவமான படுத்தரல்லே! என் மூஞ்சிலையே முழிக்காதே!''
ஆவேச வெறுப்பில் கத்தியவன் அங்கிருந்து நகர்ந்தான்.
அதே சமயம் ஆரோனின் வாட்ஸ் ஆப்போ 'டொய்ங்க்' என்றது.
குறுஞ்செய்தியோ இப்படி வந்திருந்தது.
''I never expected this. I'm completely overwhelmed!"
சங்க்யா அனுப்பிய செய்தி எதை குறிப்பிடுகிறது என்று புரியாது விழித்தவனோ,
''I'm clueless!"
என்று பதில் அனுப்ப, வந்து விழுந்தது படம் ஒன்று ஆணவனின் வாட்ஸ் ஆப்பில்.
அதைக் கண்டவனின் இதழோரமோ இழைந்தோடியது ரகசிய முறுவல் ஒன்று.
அன்றைக்கு முதன் முதலாய் தம்பி வம்பு வளர்த்த மாடலிங் சுந்தரியை சந்திக்க அவளது வீடு நோக்கிய ஆரோன், காரிகையிடம் சமாதானம் பேசிட கூடவே பூங்கொத்து ஒன்றையும் கையோடு கொண்டு போயிருந்தான்.
அதை முன்னாடியே ஆர்டர் போட்டு வரவரழைத்திருந்தான் நாயகன் அவன் வெளிநாட்டிலிருந்து.
இருந்தப்போதும், நேரங்கடந்து இல்லம் திரும்பிய தெரியிழையின் கையில் சேர்த்திட அவனால் இயலவில்லை, மில்லியன் மலர் ரோஜா கொத்ததை.
ஆகவே, அதை காருக்குள்ளேயே வைத்து, கார்ட் ஹவுஸ் போன் மூலம் நடந்தேறியிருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஆணவன்.
ஆனால், அவனோடு போன் பேசிய மெல்லியாளோ, லேண்ட் லைன் நின்ற போதும், ஜன்னல் விட்டு விலகாது அங்கேயே குத்த வைத்தாள், ஆரோனின் கார் நகரும் வரை காத்திருந்து.
கிளம்ப தயாராகியவனோ, காரின் பின் சீட்டியினை திறந்து, உள்ளிருந்து வெளியில் எடுத்தான் இளஞ்சிவப்பிலான ஆரஞ்சு வர்ண போக்கேவை.
படுக்கை அறையிலிருந்து அவன் செயலை பார்த்திருந்த வாஞ்னியோ ஒன்றும் புலப்படாது அவனையே வெறித்தாள்.
ஆணவனோ கார்ட் ஹவுஸ் நெருங்கி,
''சோரி, இதை கொஞ்சம் குப்பைத் தொட்டியிலே போட்டுடுறீங்களா?! ஈவனீங் வாங்கினது, சங்க்யாவை பார்க்கும் போது கொடுக்கலாம்னு! வாடி வதங்களே, இருந்தாலும், ஒரு மாதிரியாச்சு! இதுக்கு மேலே என்ன பண்றது இதை வெச்சு! தூக்கி போட்டுடுங்க! தேங்க்ஸ்!''
என்றுக்கூறி நகர்ந்தான் சிரித்த முகமாய்.
காட்சியைக் மேலிருந்து கண்ட தாரகையோ செக்கியூரிட்டிக்கு போனை போட்டு போக்கே அதை வீசிடாது மேஜை மீதே வைத்திட கட்டளை பிறப்பித்தாள்.
ஆரோனின் கார் மறைய, ஓடோடி போனாள் பேதையவள் கார்ட் ஹவுஸ் நோக்கி.
எடுத்தாள் கையில் நறுமணம் குறையா ரோஜா கொத்ததை. விரைந்தாள் படுக்கையறைக்கு. நீர் கொண்ட புதியதோர் பாசியில் அதை நேராய் நிற்க வைத்து, அழகு பார்த்தாள்.
ஏனோ, சேயிழையின் மனம் அதை தூக்கி போடாது பாதுகாத்திட சொல்லியது. அலட்டிக் கொள்ளாதவளும் அதற்கான காரணம் தேட முனையாது, நெஞ்சம் கொண்ட ஆசையை செவ்வென நிறைவேற்றினாள்.
அப்போதைக்கு அப்பூவை பற்றி பெரிதாய் எவ்வித அறிதலும் கொண்டிடாத அணங்கோ, இன்றைக்கு வீடு வந்திருந்த வெளிநாட்டு தோழி மூலம் கண்டுக் கொண்டாள் இதுநாள் வரை கண் விழித்த மலர் கொத்து பணக்கார பூவென்று.
மேலும் அதைப்பற்றி தேடல் கொண்டவள் அதிர்ந்து போனால், ஜூலியட் ரோஸ் அதன் விலையும் தரமும் சாதாரண மாடல் அவளை திக்கு முக்காட வைக்க.
அவளுக்கு சத்தியமாய் புரியவில்லை, ஏன் இவ்வளவு செலவழித்து இப்படியானதொரு பூங்கொத்தை ஆரோன் அவளுக்கு கொடுத்திட வேண்டுமென்று.
நேரடியாய் பார்க்கையில் வாய் திறந்து கேட்க சங்கடமாய் இருக்க, வாட்ஸ் ஆப்பில் கேட்டிடலாம் என்றால் கூச்சமோ தடுத்தது பெதும்பையை, இப்போதைக்கு வேண்டாமென்று.
இருப்பினும், அவனுக்கு நன்றி சொல்லாமல் சங்க்யாவால் இருந்திட முடியவில்லை. ஆகவே, அதையும் நாசுக்காகவே பட்டும் படாமலும் சொல்லி வைத்தாள்.
பெறாது வைத்துக் கொண்டவளை போல், வாங்கி வந்து கொடுக்காது போனவனுக்கும் புரியவில்லை எதற்காக, அவன் நிஜமாகவே, விருத்தியாகி மலர பதினைந்து ஆண்டுகள் எடுத்திடும் தனித்துவமான ரோஜா அதை ரதிக்கு பரிசளிக்க விரும்பினான் என்று.
தாழ் திறந்திடுவான் ததுளன்...
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 8
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.