Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170
இப்போழ்துதான் பள்ளியில்
பார்த்த நினைவு !
நீயோ வியத்தகு மாற்றமாய்
நீடித்து நிற்கிறாய் !!
இரட்டை ஜடை ஆயுள்முறித்து
கூந்தலாய் உருமாற,
முகத்திலிருந்த தழும்பெல்லாம்
மருத்துவ உதவியோடு புதைந்திருக்க,
அழகான நெஞ்செலாம்
அளவின்றி மார்பாக,
பாவாடை தாவணியெலாம் தூரப்பறந்து புடவையில் கண்விரிகிறாய் !!
எப்படி இருக்கேன்?
இறுமாப்பாய்
இருமார்பிணைத்துக் கேட்கிறாய்!!
உனக்குமா வயதாகும்?
மகிழாச்சர்யம்!
என்னுள்ளே எப்போதும் அதே
பள்ளிக்காதலி தான் பல்லிளிக்கிறாள் !
அவரை குழந்தையோடு
முன்செல்லப் பணித்து
"தெரிந்தவன்! பேசிவிட்டு
ஐந்தாறு நிமிடத்தில் வருகிறேன்!"
கைச்சைகை பதில் தருகிறாய்!!
"நல்லா இருக்கயாடா தடிமாடு ?
தாடி எல்லாம் வச்சிருக்க?
ஷேவிங் பண்ணித்தொலை!!
எங்க வேலை பார்க்குற?
தங்கச்சி கல்யாணம் பண்ணீட்டாளா?
ஸ்கூல்ல சொன்னததான் இப்பயும்சொல்றேன் !
என்ன மறந்துட்டு
வேற பொண்ண பாரு !! "
சரி! எட்டுமணிக்கு பஸ்
கிளம்புறேன் !!
சிரித்துக்கொண்டே கூட்ட நெரிசலில்
நின் முகம் மறையும் போழ்து
அசரீரி மட்டும்
தவழ்ந்துவருகிறது காற்றில் !
"கல்யாணத்துக்கு மட்டும்
கூப்பிட்டுறாத ப்ளீஸ் !
தாங்க மாட்டேன் !! "
பெண் என்பாள் என்றாயினும்
அன்பின் நிகழ்வடிவம்!
வாழ்க!!
Author: Admin 1
Article Title: திருமணம்
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.