- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் 1
பிரேசில்
அமேசான் காடு
''குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி!''
கையில் அலைப்பேசி இருக்க, ‘தீ’ யின் குரலுக்கு தீயாய் இமிடேட் செய்துக் கொண்டிருந்த மிருடானி ஒருக் கணம் அப்படியே நிறுத்தினாள்.
''என்னாச்சு மிருடானி?!''
தோழி பவிதா கேட்டிட, சமாளித்தாள் சொல்லிடாமல் மிரு.
''இல்ல ஒன்னும் இல்ல!''
என்ற மிருடானி மீண்டும் டிக் டாக் வீடியோவில் கவனம் செலுத்தினாள்.
டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திட பாட்டு பாடிக் கொண்டிருந்த துணை டைரக்டர் அம்மணி மீண்டும் நிறுத்தினாள் இவ்வரிகளைப் பாடி.
''அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே!''
''என்னாச்சு மிரு?''
அவளின் தோளை உலுக்கினாள் பவிதா.
''ஒன்னுமில்ல, ஒன்னுமில்ல!''
என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேரவன் கதவைத் திறந்து உள்ளே குரல் கொடுத்தான் கணேஷ்.
''நீ இங்கதான் இருக்கியா?! டைரக்டர் உன்ன காணம்னு அங்க கத்திக்கிட்டுக் இருக்காரு! சீக்கிரம் வா!''
''அலறாதடா! எங்க அந்த மேனா மினுக்கி?!''
சொல்லிக் கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்தாள் போனை அடைத்த மிரு.
''அது இப்பதான் ஜூஸ் கொடு, பர்கர் கொடுன்னு, ரொம்ப டிமாண்ட் பண்ணிக்கிட்டு கிடக்கு!''
கதவோரம் சாய்ந்து நின்று சொன்னான் கணேஷ் சலித்தவாறு.
''வாயிலையே ரெண்டு போட வேண்டியதுதானே!''
எரிச்சலோடு சொன்ன மிருடானி கேரவனிலிருந்து கீழிறங்கினாள்.
''இதுங்களுக்கெல்லாம் பெரிய ஆளுன்னு நினைப்பு!''
பேசிக்கொண்டே கணேஷும் மிருடானியும் அக்காட்டின் ஒத்தையடி பாதையில் நடைப்போட்டனர்.
''ஏய்!! மாடுங்களா நில்லுங்க! நானும் வறேன்!''
என்று கூப்பாடு போட்டு தலைத்தெறித்து மேக் ஆப் கிட் கையிலிருக்க குடுகுடுவென ஓடி வந்தாள் பவிதா.
அவளை திரும்பிப் பார்த்த வேகத்தில் கண்ணால் எரித்தாள் மிருடானி.
''அறிவே இல்லையா உனக்கு! எத்தனை தடவை சொல்லிட்டேன், கத்தாதே கத்தாதன்னு!''
''சோரி!''
என்றபடி விழிகள் உருட்டி அவர்களோடு சேர்ந்து பயணித்தாள் பவிதா.
''சரி விடு மிருடானி! எங்க அவளே சிங்கம் புலி அடிச்சி தின்னுற போகுதோன்னு அவளுக்கு ஒரு பயம்! அவ்ளோதான்!''
நக்கலடித்தான் கணேஷ்.
அவனின் தோளை திருகினாள் பவிதா. மிருடானியோ அவர்கள் இருவரையும் தாண்டி முன்னே சென்றுக் கொண்டிருந்தாள்.
தலைக்கு மேல் பழுப்பு வர்ண கூலிங் கிளாஸ் இருக்க, அந்த கொசு கடிக்கும் காட்டில் கையில்லா ரவுண்ட் நெக் டீ-ஷர்ட் போட்டிருந்தவள் மெதுவாய் அவளின் வெள்ளை வர்ண அழகு அங்கியை எடுத்து தோளில் மாட்டினாள்.
சர்ரென்ற ஒரு சத்தம்.
முன்னே போனவள் காதுகளில். பின்னே வந்தவர்களை கரங்கள் நீட்டி தடுத்தாள் மிரு. ஒற்றை விரலை வாயில் வைத்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னாள் மிருடானி.
பவிதாவின் கால்கள் பயத்தில் கரகாட்டம் ஆட, கணேஷோ அதற்கு மேல் மிருடானியின் முழங்கையை இறுக்கிக் கொண்டு நின்றான். இவர்களின் தைரியமான செயல்களை கண்டுக் கொள்ளவோ மெச்சி பேசவோ அங்கு மிருடானிக்கு நேரமில்லை.
தலையை சுத்தி முற்றி திருப்பியவள் கண்களை கூட அங்கும் இங்கும் ஓட விட்டாள். ஐந்து நிமிடங்கள் நின்ற இடத்திலேயே அவர்கள் நின்றிருக்க, மிருடானி முறைப்போடு சந்தேக தொனி கொண்டு கணேஷிடம் கேட்டாள்.
''இந்த இடத்துல சிங்கம், ஜகுவார் மட்டும் தானே இருக்கு!''
''ஆமா மிரு! புலி இங்க இல்ல! இந்த அமேசான் காட்டுல புலி இருக்கறத்துக்கான சாத்தியமே இல்லே!''
நீண்ட பெருமூச்சோடு பயணத்தை தொடர்ந்தனர் மூவரும்.
''புலி ஆசிய நாட்டுல மட்டும்தான் இருக்கு!''
கணேஷ் சொல்லிட, ஆமோதித்தாள் மிரு.
''ஹ்ம்ம், ஆமா! அப்படித்தான் சொல்றாங்க!''
''ஆனா, மழைக்காடு, மலைகள் இப்படியான இடத்துல கூட இருக்கும்னு நான் படிச்சிருக்கேன்!''
''நல்லது! அப்போ வாய மூடிக்கிட்டு வா! சத்தம் போடாமல்!''
என்ற மிருடானி முன்னே போக முனகினாள் பவிதா.
''இவ்ளோ கேள்வி கேட்டு ஆரம்பிச்சிட்டு இப்போ என்ன வாய மூடுங்கறா?! கிறுக்கா இவே?''
''எனக்கு நல்லாவே கேட்குது!''
என்றால் மிருடானி காதில் விழுந்த வார்த்தைகளின் எதிர்ப்பலனாய்.
''ஐயோ! இதுக்கு பாம்பு காது!''
நடந்தவாறே பவிதாவை நோக்கி பின் பக்கம் திரும்பிய மிருடானி ஒற்றை விரல் ஆட்டி சொன்னாள்.
''இதுவும் விளங்குது!''
சொன்னவள் பட்டென திரும்பி நடையைக் கட்டினாள்.
மூவரும் கேரவன் இருக்கும் இடத்திலிருந்து பதினைந்து நிமிட நடை பயணத்தில் ஷுட் நடக்கும் இடத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
தீவியின் ஆரணியம்...

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 1
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.