- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் 6
அமேசான் காடு
வயமா அவன் கடுஞ்சினத்தோடு இழுத்து வந்தான் காரிகையின் காலினை. அவனின் ராஜ்ஜியம் சிதைவதை எப்படியவன் பார்த்துக் கொண்டு வெறுமனே இருப்பான்.
வளமிக்க வனமதை பணத்திமிர் கொண்ட மனிதர்கள் அழிக்க நினைத்தால் பொங்கிட மாட்டானா காட்டின் வீரமிக்க ஹீரோ அவன்.
காலின் பிடியினை வலிமையோடு கவ்வியிருந்தவன் இழுத்து வந்து சேர்த்திருந்தான் அவனுக்கான கோட்டையில் மிருவை.
உறும்பினான் புலியவன் கோர பற்களில் எச்சில் ஒழுக, கண்ணீரும் கம்பலையுமாய் ஒரு பக்கம் அபலையோ ரணத்தில் அலற.
வலி உயிர் போனது பாவை அவளுக்கு. கவ்வலை விட்ட வேங்கையவன் அவனுக்கான மிடுக்கோடு மங்கையவளை முன்னோக்கினான்.
பாதி சொக்கிய அழுது வீங்கிய விழிகளோடு ஏந்திழை அவளோ தெம்பில்லா நிலையில் பின்னோக்கினாள், உசுரை எப்படியும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில்.
''வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! பிளீஸ்! என்னால முடியல! பிளீஸ்! என்னே விட்ரு! பிளீஸ்!''
பகினி அவள் புத்திக்கு தெரியும், பேசினாள் சத்தியமாய் புலி அவனுக்கு விளங்காது என்று. இல்லை புரியாது என்று.
இருந்தும் அந்நிலையில் அப்படியான முட்டாள்தனத்தை தாண்டி வேறென்னதான் செய்ய முடியும் மன்றாடலை தவிர வஞ்சிக்கப்பட்டவளால்.
எக்கண்களை ஆசை ஆசையாய் ரசித்தாளோ அதே நேத்திரங்கள் இப்போது நேரிழை அவளை வெறித்தது மூச்சிரைக்க.
மோப்பம் பிடித்தவனோ, நெருங்கினான் செம்மண்ணில் உழன்றிருந்த பேதையள் கந்தரத்தை.
மரத்தண்டொன்றில் மண்டை இடிக்க, இனி பின்னோக்க வழியே இல்லை என்றுணர்ந்தாள் வசமாய் சிக்கிக்கொண்ட சுந்தரியவள்.
அம்பகங்களை இறுக்கமாய் மூடிக் கொண்டவளோ கிடுகிடுத்த அச்சத்தோடு நிலத்தில் விரல்களை அழுத்தினாள் மரணம் கண்ணெதிரே புலியாய் நிற்க.
''மா! ஐயோ! கடவுளே! என்ன காப்பாத்த யாருமே இல்லையா?!''
நாவால் அவளின் முகத்தினை வயமன் அவன் எச்சில் கோலத்தில் முங்கடிக்க குமட்டிக் கொண்டு வந்தது மிருடானிக்கு.
தொண்டை வறண்டு போக அலறல் கொண்ட கோதையோ, குமட்டினாள். வயிறு காலியாய் இருக்க, எதுவும் வரவில்லை வாயிலிருந்து வெளியில்.
''பிளீஸ்! என்ன விட்டுடு! பிளீஸ்!''
ஒண்டொடியின் கெஞ்சல் ஏதும் அவனிடத்தில் பலிக்கவில்லை. தடங்கள் பதிக்க பற்கள் கொண்டு வெறியோடு உறும்பி அவளை மேலும் நெருங்கியவனோ திடுக்கிட்டு அதிர்ந்தான் காதை பிளந்த சத்தமொன்றில்.
தலையை விட்டம் நோக்கி தூக்கியவன் ஓரடி பின்னோக்கினான். பறவைகள் கீச்சிட்டு பறந்தன. வயமாவோ மெது மெதுவாய் அடிகளை நிலத்தில் பின்னோக்கி பதித்து பதுசாய் நகர, நாயகிக்கோ அப்போதுதான் உயிரே வந்தது எனலாம்.
எடுத்தான் உழுவை அவன் வேகங் கொண்ட ஓட்டம், சத்தம் வந்த திசை நோக்கி உறும்பியவனாய்.
நாலு கால் எமனிடமிருந்து தப்பித்திருந்த தாரகையோ நிம்மதி பெருமூச்சு ஒன்று கொண்டாள்.
தொடர்ந்து கேட்ட துப்பாக்கி சத்தங்களுக்கான காரணம் மிருவிற்கு புலப்படவில்லை. ஒருகால் சம்பவத்தை அறிந்து யாரேனும் உதவிட வந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் அவளுக்குள் பிறந்தது.
காப்பாற்ற வந்தவர்களை வாஞ்சினியவள் சென்றடையும் வரை துப்பாக்கி சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கணும் என்று பிராத்தித்துக் கொண்டாள் பனிமொழியவள்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்றிருந்தவளோ எழுந்தாள் எழ முடியாதவளாய். மரத்தை பிடித்து ஒருவழியாய் முக்கி முனகி வலியோடு நேராய் நின்றவள் எடுத்தாள் வாந்தி.
காலில் ரத்தம் வழிந்தோட வாந்தி எடுத்தவள் கீழே மண் நிலத்தில் விழுந்தாள் மண்டியிட்டு. பித்தமெல்லாம் வெளியில் வர அங்கேயே முடியாத பட்சத்தில் குப்பிற கவிழ்ந்தாள் மிரு மயங்கியவளாய்.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.