- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் 7
அமேசான் காட்டில் இல்லாத மிருங்கங்களே இல்லை எனலாம். ஆனால், நிஜமாகவே இல்லாத ஒன்று புலியே.
அப்படிப்பட்ட டைகர்ஸ் இங்கிருப்பது அதிசயமே. அதை இதுவரை யாரும் அறியவில்லை. அதுவே இப்போது நடக்கின்ற பிரச்சனைகளுக்கான மூலக் காரணமாகும்.
இதேபோன்றதொரு படப்பிடிப்பிற்கு இதற்கு முன் குழு ஒன்று இங்கு வந்திருந்தது. அதிலிருந்த இளைஞர்கள் கேமரா கொண்டு எடுத்த பல படங்களில் ஒன்றிரண்டு புலியின் முகங்கள் ஆங்கங்கே சிக்கியது.
அதைப் பார்த்தவர்கள் பரவசம் கொண்டனர். ஷூட் முடிந்து கிளம்பினார்கள் அனைவரும் உற்சாகமாய் எதையோ சாதித்த சந்தோஷத்தில் தாய் நாட்டிற்கு.
குழு மெம்பர்ஸ் அறிவுரையின் படி மேலிடத்து வர்கத்தின் கைக்கு போனது அப்படங்கள். சுற்றுலா துறையின் முக்கிய பிரமுகர்கள் இச்செய்தியை அறியும் முன்னமே செய்தி அறிந்த அத்தனை பேரும் பரலோகம் அனுப்பப்பட்டிருந்தனர்.
இடையில் மூக்கை நுழைத்து வாய்ப்பினை சாதகமாக்கி கொண்டது சிண்டியன் (Chindian) தொழிலதிபர் ரிக்கி தான் (Ricky Tan). தனக்கான தேடலை சட்டவிரோதமாக ஏற்கனவே பல ஆண்டுகளாக செய்து வரும் கயவன் ரிக்கி ஆவான்.
பல மிருகங்களை காவு வாங்குவதுதான் அவனின் முதன்மையான பிஸ்னஸ். விலங்குகளை கொன்று அவைகளின் பாகங்களை துண்டு போட்டு கொள்ளை லாபத்துக்கு விற்றிடுவான்.
வெளிப்பார்வைக்கு அவன் பல கால்நடை விலங்குகளின் வியாபாரி. பால் தயாரிப்பு தொடங்கி இறைச்சி முதற்கொண்டு.
ரிக்கி அவனின் ஆட்கள் கொண்டு ஆசியாவில் இருக்கின்ற புலிகளை வேட்டையாடி கைவரிசையை காட்டியதால் மலேசியா தொடர்ந்து பல நாடுகள் வனத்துறையில் புதிய சட்டங்களை கொண்டு வந்து அவனுக்கு ஆப்படித்தனர்.
இதனால், அவனின் புது டீல் ஒன்று டாலடித்தது.
இந்நேரம் பார்த்து தான் ஒருநாள் அமேசான் காட்டிற்கு வீடியோ ஷூட் செய்து திரும்பியிருந்த இரு போட்டோகிராஃபர்கள், அவர்கள் கேமராவில் சிக்கியிருந்த வயமாவின் படத்தோடு ஏஜென்சி தலைமையிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
சிக்கினார்கள் வசமாக இருவரும் புலி படங்களால் ரிக்கியிடம். ஏஜென்சி தலைமையோ ரிக்கியின் நண்பன். பிறகென்ன காதும் காதும் வைத்தாற்போல வீடியோ ஷூட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஏதோ ஒரு வழியில் மடிந்தனர்.
இல்லை கொல்லப்பட்டனர். ரிக்கியின் ஏற்பாட்டால். அவனின் கட்டளைக்கு ஏற்ப. மாதம் ஒருத்தர். எதார்த்தமாய் சாலை விபத்தில். எல்லாமும் வேலை நேரத்தில். யாருக்கும் சந்தேகம் வராதப்படி.
அவரவர் குடும்பமும் வேலை நேரத்தில் உயிர் போனதால் செக்சோ (The Social Security Organization) வழி கிடைத்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்டனர் அமைதியாக.
இறந்தவர்கள் அனைவரும் நேரடியாக சுற்றலா துறைக்கு கீழ் பணியில் இல்லாதவர்கள் ஆவர். மாறாக, சுற்றுலா துறை நியமித்த ஏஜென்சி ஒன்றின் கீழேயே வேலை பார்க்கப்பட்டவர்கள்.
பழையவர்கள் போய் சேர்ந்திட புதியவர்களை வேலைக்கு அமர்த்தினான் ரிக்கியின் நண்பன் அபிலேஷ். சீனத்தி ஒருத்தியையும் மாடலாக அறிமுகம் செய்தான். அவள் ரிக்கியின் வேண்டாத கேர்ள் பிரண்ட்டும் கூட.
இப்புதிய டீமின் மெம்பர்ஸ் தான் இப்போது அமேசான் காட்டில் திக்கற்று போய் கிடக்கும் க்ருவ்ஸ். மிரு, சுதா, இஷா, சுஷா, டர்ஷன் என்று அடிக்கிக் கொண்டே போகலாம்.
இக்குழுவை அமேசான் அனுப்ப திட்டம் தீட்டினர் ரிக்கியும் நண்பன் அபிலேஷும். அவர்களுடன் கைதேர்ந்த வேட்டைக்காரர்கள் ஐவரையும் சேர்த்து அனுப்பிட எல்லா வித ஏற்பாடுகளையும் செய்தனர் நண்பர்கள் இருவரும்.
தேவைகள் சரியான நேரத்தில் கவனிக்கப்படாத காரணத்தால் டீல் போட்டவர்கள் அனைவரும் திரும்ப பணத்தை கேட்டு ரிக்கியை ஒரு வழியாக்கினர். அதில் ஒரே ஒரு கம்பெனி மட்டும் கொஞ்சம் வித்தியாசமாய் ஹேண்டல் செய்தது ரிக்கியை.
அதுதான் போக்கா வாரனின் கம்பெனி. சர்வதேச தொழிலதிபர் அவன். வாரனுக்கு பணத்தை திரும்ப பெறுவதில் விருப்பமில்லை. அவனுக்கு வேண்டியதை பெறுவதிலேயே குறியாய் இருந்தான். காரணமாய்.
அலைப்பேசியில் வாரனின் நண்பன்.
கொடூரன் 'அவனின்' பெயர் பார்க்கவே ஆடிப்போனது ஈரக்குலை ரிக்கிக்கு.
''Ravan..''
(ராவன்..)
ரிக்கி இழுத்து முடிப்பதற்குள் பேசிட ஆரம்பித்திருந்தான் ராவணன் அவன்.
''My sis will be there.. convince here!''
(என் தங்கச்சு வருவா.. அவளை சமாதானப்படுத்திட பாரு!)
''Ravan.. I settled all! The only thing is they need to travel! That's all! You will get what you want! Believe me!''
(ராவன்.. நிஜமாவே நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன்! எல்லாரும் கிளம்பறது மட்டும் தான் பாக்கி! அவ்வளவுதான்! உனக்கானது கண்டிப்பா கிடைக்கும்! என்ன நம்பு!)
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்து சேர்ந்திருந்தாள் ராவணனின் தங்கை.
அவன் காதிலிருந்து பிடுங்கிய போனை தூக்கி எறிந்திருந்தாள் பெண்ணவள். ரிக்கியை சுவற்றோடு இறுக்கியிருந்தாள் பல்லை கடித்தவளாய்,
''No! No! Keira! please listen to me!''
(வேண்டாம்! வேண்டாம்! கெய்ரா! தயவு செஞ்சு நான் சொல்றத கேளு!)
வஞ்சக புன்னகை பூத்தவள் ஒரே சொருகு ரிக்கியின் தொடையினில் கையிலிருந்த கத்தி கொண்டு. அவனோ சுவரோடு சரிந்து தரையில் அமர்ந்தான் வலியில் அலறி குத்துப்பட்ட காலை இறுக்கிப் பிடித்தவனாய்.
அங்கிருந்த ஸ்விங் சேரை இழுத்து போட்டு அமர்ந்த ஏந்திழையோ, குதிக்கால் செருப்பு கொண்ட காலை தூக்கி வைத்தாள் மேஜையின் மீது.
பெதும்பை அவள் கெத்திற்கும் ஸ்டைலுக்கும் பெண் சிங்கத்தையே ஒப்பிடலாம்.
''Ok.. tell me now?! I'm ready to listen! Your time starts now! Finish it within a minute!''
(சரி, சொல்லு?! இப்போ கேட்கறேன்! உனக்கான டைம் இப்போ ஸ்டார்ட் ஆகுது! ஒரு நிமிஷத்துக்குள்ள முடிச்சிடு!)
ரிக்கி முக்கி கிக்கி எல்லாவற்றையும் சொல்லி தீர்த்தான். அதாவது, இன்னும் இரண்டு நாட்களில் மிருடானியின் குழு அமேசான் காடு பறக்கவிருக்கும் சங்கதியை. கூடவே, அவனின் ஆட்கள் ஐவர் போவதையும் வாய் கோண சொன்னான்.
நாற்காலியிலிருந்து எழுந்தவள் நேராய் சென்றாள் ரிக்கியை நோக்கி. ஏளன புன்னகை பூத்தவள் அவனின் கழுத்தில் கால் இறுக்கி மேலே தூக்கினாள் அவனின் முகத்தை.
ஓரம் வாங்கியிருந்த ரிக்கியின் வாயில் ஊற்றினாள் ஆரணங்கவள் கையிலிருந்த திரவ மருந்தை.
''I have another name! Soorpana! A beautiful danger!!! Don't ever try to mess with me!''
(எனக்கு இன்னொரு பேர் இருக்கு! சூர்ப்பணா! அழகான ஆபத்து! என்கிட்ட விளையாடற வேலை வெச்சிக்காதே!)
என்றவள் கிளம்பி போயிருந்தாள் புயலாய் வந்த வேகத்திலேயே திரும்பி.
கெய்ரா சதி தீராவாகிய, சூர்ப்பணா அவள் போட்ட போடில் ரிக்கி அரக்க பறக்க பறந்து அனுப்பி வைத்தான் மிருவின் குழுவினை பிரேசிலின் அமேசான் வனத்திற்கு.
கூடவே, பாதுகாப்பு என்று பெயரில் அவனின் திருட்டு வேலையை பார்த்திட தனியொரு படையையும் சேர்த்து அனுப்பி இருந்தான் கள்ளன் அவன்.
அங்குச் சென்றும் முதல் மூன்று நாட்கள் புலிகள் ஏதும் கண்ணில் படாத காரணத்தால் வேறு வழியின்றி நான்காவது நாளில் துப்பாக்கி குண்டுகளை பறக்க விட்டனர் ரிக்கியின் ஆட்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே காடே கிடுகிடுத்தது. பல மிருகங்கள் ஓடின, ஒளிந்தன, பயந்து தஞ்சம் தேடி. அதில் வயமாவின் இனத்தை சேர்ந்த சில வகைகளும் பலியாகி போயின.
அதன் காரணமாகவே வேங்கையவன் இன்றைக்கு மனித குலத்தையே வெறுத்தொதுக்கி மிருவை கொன்று தின்றிட முடிவெடுத்திருந்தான்.
இருந்தும் அவன் திட்டம் பலிக்காமல் போனது துப்பாக்கி சத்தங்கள் கேட்ட நொடி.
தப்பித்து ஓடினான் வயமா அவன் முதலில் அவன் உயிரை காத்துக்கொள்ள வேண்டியதே புத்திசாலித்தனம் என்றெண்ணி.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.