What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 9

அமேசான் காடு

மிரு அவளுக்கு புரியவில்லை ஏன் இம்முறை பச்சை கலர் கண்காரன் அவளை ஏதும் செய்யவில்லை என்று. நடந்து களைத்தவள் கடைசியாய் கண்டாள் காட்டுவாசி கூட்டம் ஒன்றினை.

அவர்களை பார்த்த சந்தோஷத்தில் பாவையவள் கட்டு போட்ட காலோடு தாங்கி தாங்கி நடந்து விரைந்தாள் அவர்களை நோக்கி. கோதையவளைக் கண்ட காட்டுவாசிகளோ துரத்தி விட்டனர் வாயிருக்கும் பூச்சி அவளை.

நாயகியவள் எவ்வளவோ போராடினாள். கெஞ்சினாள். வயிற்றை காட்டினாள். காலை காட்டினாள். பாஷை புரியாவில்லை அவர்களுக்கு. சொல்ல சொல்ல கேட்காமல் அங்கேயே நின்று அடிவாங்கியது தான் மிச்சம் மங்கையவள்.

ஒரு வாய் சோறு கிடைக்கும் என்று நம்பியது குத்தமா என்றாகி விட்டது வல்வி அவளுக்கு. கண்ணீரை துடைத்துக் கொண்டு அவள் நிற்க ஆரவாரம் அடங்கி போனது.

என்னானது என்று அவள் தலைதூக்க பாவையவள் முன்னிருந்த காட்டுவாசி கூட்டமோ பின்வாங்கியது பேச்சு மூச்சின்றி. தனக்கு அவ்வளவு பெரிய சீன் இல்லையே என்று நினைத்தவள் எதர்ச்சையாய் பின்னால் திரும்ப எதுவுமே அங்கில்லை.

அப்போதுதான் மக்கு மண்டைக்கு உரைத்தது. புலியின் உறும்பலுக்குத்தான் அவ்வளவு பதற்றம் அவர்களிடத்தில் என்று.

''ஓஹ், ஓஹ்! அந்த சத்தத்துக்குத்தான் இவ்ளோ பில்டப்பா?! பரவாலையே!''

என்று மனதில் நினைத்துக் கொண்ட பகினியோ தொடர்ந்தாள் அவளின் முயற்சியை.

இம்முறை அது எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. மாறாக அவள் நோக்கி எறிந்தான் அம்பொன்றை காட்டுவாசி ஆணொருவன்.

அம்பகங்கள் அகல விரிய அதிர்ச்சியில் வெளிறி நின்றாள் மானினியவள் என்ன செய்வதென்று தெரியாமல் அவனின் திடீர் தாக்குதலில்.

சொடக்கிடும் நெடியில் புயலாய் பாய்ந்து வந்தான் வேங்கையவன். அம்பினை இடது கையால் ஓங்கி பற்றியவன் வலது கரத்தாலும் பின்னங்கால்களாலும் நகக்குறிகளை அழுத்தி காட்டுவாசியின் தேகத்தில் பதித்து உறும்பினான் வனமே அதிரும்படி.

காட்டுவாசிகள் அத்தனை பேரும் பயத்தில் பின்வாங்கிட சம்பந்தப்பட்ட சுந்தரிக்கோ நடப்பதெல்லாம் கனவா என்று கூட தோன்றியது.

வயமா அவன் காலுக்கடியில் புழுதி பறந்திடும் நிலத்தினில் படுத்துக் கிடந்த காட்டுவாசியோ எழ எத்தனிக்க, கூரிய நகங்களை மேலும் அவன் நெஞ்சில் அழுத்தி ரத்தம் வர வைத்தவனின் கண்களில் சினம் கொழுந்து விட்டு எரிந்தது.

அதே வெறியோடு தலையை இடது வளைத்தான் வயமனவன் தாரகை அவளை நோக்கி. காட்டுவாசிகள் அம்போடு நெருங்க பார்த்திட கோர பற்களை காட்டி அவர்களை கண்ணாலேயே அடக்கி நிறுத்தினான் ஹீரோ அவன்.

''அருள்மொழி வர்மன்!''

வாயில் வந்ததை சொன்னாள் மாயோள் அவள்.

'' Varman means Armour! Varman means Shelter! Varman means Protection! Varman means Defence!''
(வர்மான்னா கவசம்! வர்மான்னா அடைக்கலம்! வர்மான்னா பாதுகாப்பு! வர்மான்னா அபாயமின்மை!)

பனிமொழி அவள் மெய்மறந்து வேங்கையவனின் பார்வைகளை நோக்கியப்படி சொல்லிக் கொண்டிருந்தாள் மரங்கழண்ட லூசு போல தானாய்.

காட்டுவாசி பெண்ணொருத்தியோ குடுகுடுவென ஓடி வந்து திணித்தாள் பழங்கள் சிலதை ஒண்டொடியின் கைகளில்.

வர்மன் அவனின் பச்சை விழிகளும் மிருடானியின் கயல் மிழிகளும் ஒன்றென கலக்க, கையிலிருந்த பச்சை ஆப்பிள் ஒன்றை எடுத்து வாயில் வைத்தாள் ஏந்திழை அவள்.

காரிகையின் இதழ்கள் விரிந்து பல்லில் பழம் பட விழிகளை மூடி திறந்தான் அவளின் வர்மன் பூவையவளின் நெற்றி தொடங்கி உதடு வரை ரசித்து.

வழக்கமாகவே வேங்கை இனங்கள் விருப்பம், வசதி மற்றும் பாதுகாப்பாகவும் உணர்கின்ற தருணத்தில் தான் இப்படி கண்களை நம்பிக்கையோடு மூடிக் கொள்ளும்.

முற்றிழை அவள் கடி ஒன்றை வைத்தாள் பழத்தை வர்மன் அவனை பார்த்துக் கொண்டே.

ஆணவனின் ஹார்ட் பீட் வழக்கத்தை தாண்டி வேகமாய் பம்ப் அடிக்க மேனியை சிலிர்ப்பினான் காவலனாய் நின்று காரிகையை காப்பாற்றியவன்.

பழம் பெதும்பையவள் தொண்டை குழி இறங்கிடவே முழுதாய் அவனின் கால்களை காட்டுவாசியின் மாரிலிருந்து பிரித்து பின்வாங்கினான் வர்மன் அவன்.

வாய்ப்பை அவளுக்கு வசதியாக்கி கொண்டாள் வஞ்சியவள்.

இருக்கரங்களையும் இடுப்பில் இறுக்கி காட்டினாளே சேயிழை அவள் ஒரு பந்தா. பார்க்கணுமே, அவளின் மிதப்பிலான அலப்பறையை.

குடிசை கட்டிலில் அமர வைக்கப்பட்டாள் வதனியவள். பழமென்ன, காயென்ன எல்லாம் கிடைத்தது சகல மரியாதையோடு பெண்டு அவளுக்கு.

அங்கிருப்போரையே சுற்றி வந்தான் வர்மனவன். காட்டுவாசிகளோ பெரும்பாலும் இடைஞ்சல் தராத வரைக்கும் எம்மிருகங்களையும் கொல்வது கிடையாது.

அடிப்பட்டு கிடக்கின்ற விலங்குகளையே தூக்கி வந்து சமைத்து சாப்பிடுவது அவர்களின் வழக்கம்.

மற்றப்படி வலிமையான சிங்கம், புலி யானையெல்லாம் அவர்களின் கடவுளே. ஏன் கானகமே அவர்களுக்கு தாய்தான்.

நறுதுதலை அவனுக்கான ஸ்டைலில் ஓரப்பார்வை பார்த்த வர்மனோ தாண்டி சென்றான் விழிகளால் அவளோடு கதைத்து.

பழங்களை புசித்தவளும் ஓராயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்க கடந்தவனையே ரசித்து இறக்கினாள், ஒவ்வொரு கடியையும் பழத்தினில்.

வர்மன் அவன் கம்பீரமாய் அங்கிருந்த காட்டுவாசிகளின் அண்டா குண்டாவின் மீதேறி நின்றான்.

வானம் பார்த்து உறும்பி பறைசாற்றினான் வர்மனவன் இது அவனின் கோட்டை என்று.

தீவியின் ஆரணியம்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 9
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top