What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
413
WhatsApp Image 2024-10-19 at 4.45.54 PM.jpeg

அத்தியாயம் 14

நிகழ்காலம்


கஃபே (cafe)

காத்திருந்தாள் டாக்டர் துவரினி வர வேண்டியவனுக்காய் கஃபே ஒன்றில்.

''ஹாய்! நல்லாருக்கீங்களா?!''

என்ற விசாரிப்போடு எதிர் நாற்காலியை இழுத்தமர்ந்தான் இன்ஸ்பெக்ட்டர் அன்பு.

அவனை இன்முகத்துடன் பார்த்திருந்த பேடையோ,

''தினமும்தான் போன்லே பேசறீங்க! அப்பறம், என்ன நல்லாருக்கீங்களா?!''

''அது அன்அபிஷல் (unofficial)! இது அபிஷல் (official)!''

என்றவன் பதிலில், தலையை லேசாய் ஆட்டி சிரித்த மங்கையோ,

''சரி, ஏதாவது ஆர்டர் (order) பண்ணுங்க...''

என்றுக்கூற, வெயிட்டரை (waiter) அழைத்தவனோ இருவருக்கும் முதலில் காஃபியை மட்டும் சொல்லி, வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

''நல்லா பார்த்து சொல்லுங்க துவரினி, இதுலே யாராவது அட்சராவே பார்க்க ஹோஸ்ப்பிட்டலுக்கு எப்போவாவது வந்திருக்காங்களா?!''

''இல்லே அன்பு! உறுதியா சொல்றேன்! அவளே பார்க்க மட்டும் இல்லே, அவக்கூட பேச கூட யாருமே கோல் (call) பண்ணது இல்லே!''

''யார் அட்சராவே அங்க அட்மீட் (admit) பண்ணது?!''

''நான்தான்! ஒரு நாள் நைட் டியூட்டி (duty) முடிச்சிட்டு வீட்டுக்கு போறே வழியிலே, தனியா ரோட்டுலே நின்னு பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு இருந்தா! காரை நிறுத்தி என்னாச்சுன்னு விசாரிக்கும் போது, ரஞ்சகன் அப்படிங்கற பேரே சொன்னா! நான் திரும்பவும் என்ன பிரச்சனைன்னு கேட்கும் போது, அதே பேரத்தான் சொல்லிக்கிட்டே இருந்தா! அதுக்கு மேலே அவளே அங்க நிக்க வெச்சு பேசறது சரி வராதுன்னு, நான்தான் உடனடியா அவளே எப்படியோ பேசி ஹோஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் அட்மிட் பண்ணேன்!''

''போலீஸ்லே ஏதும் நீங்க கம்பளைண்ட் (complaint) கொடுக்கலையா?!''

''ஏன் கொடுக்கலே?! பேப்பர்லே விளம்பரமே கொடுத்தேனே!''

''ஆமாவா?! எனக்கு அப்படியான மிஸ்ஸிங் நியூஸ் (missing news) ஏதும் படிச்ச ஞாபகம் இல்லையே!''

அன்பு புருவங்களை குறுக்கினான் குழப்பங்கொண்டு.

''கிளிப்பிங் (clipping) வீட்டுலே இருக்கு! இப்போதைக்கு நான் அந்த பேப்பர் கம்பெனிக்கு காசு கட்டின ஆன்லைன் ரசீது (online receipt) இருக்கு! இதோ, பாருங்க!''

என்ற சுந்தரியோ பேங்க் ஸ்லிப் (bank slip) ஒன்றை காண்பிக்க போனில், அதை பார்த்த அன்போ எப்படி அச்செய்தியை தவற விட்டான் என்று யோசித்தான்.

''எவ்ளோ கேஸ் (case) பார்க்கறீங்க, எல்லாத்தையுமா மைண்ட்லே (mind) வெச்சுக்க முடியும்?! விடுங்க! பார்த்துக்கலாம்! நான் ஒரிஜினல் (original) பேப்பர் நாளைக்கு கொண்டு வந்து தறேன்.''

என்ற பகினியின் வார்த்தைகளில் மனம் லயிக்கா அன்போ,

''அந்த ரசீதை மறுபடியும் காமிங்க!''

என்று எதையோ கண்டுபிடித்தவனாய் துவரினியின் போனை கையிலெடுக்க,

''என்னாச்சு அன்பு?! ஏதாவது கிளிக் (click) ஆச்சா?!''

''நீங்க விளம்பரம் கொடுத்தது வேறே ஸ்டேட் (state) பேப்பர்!''

''புரியலே?!''

''அட்சரா காணாமல் போனது வேறே இடம்! தப்பிச்சு தஞ்சம் அடைஞ்சது வேறே இடம்!''

''போலீஸ்கார், போலீஸ்கார் எனக்கு புரியறே மாதிரி சொல்லுங்ளேன்!''

என்றவள் கண்களை குறும்பாய் சிமிட்டிட,

''அட்சரா பொறந்து, வளர்ந்த இடத்துலே அவளை காணோம்னு சொல்லி விளம்பரம் கொடுத்திருந்தா, அவளே சம்பந்தப்பட்டவங்க உடனே உங்களை தேடி வந்திருப்பாங்க! ஆனா, அவளுக்கு கொஞ்சங்கூட சம்பந்தமே இல்லாத இடத்துலே அவளை பத்தி விளம்பரம் கொடுத்தா, யாருக்கு என்ன தெரியும்?! யார் தேடி வருவாங்க அவளே?!''

அன்பு சொன்ன விடயத்தை புரிந்துக் கொண்ட மக்கு டாக்டரோ,

''அப்போ, அவளே காணோம்னு வேறே எங்கையாவது கேஸ் ஃபயில் (file) ஆகியிருக்கான்னு பார்த்தா, இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிடலாம்லே!''

''அட்சரா அப்படிங்கற பேர்லே நிறைய மிஸ்ஸிங் கேஸஸ் (missing cases) இருக்கு! ஆனா, எதுவுமே நம்பக்கிட்ட இருக்கற படத்தோட மேட்ச் (match) ஆகலே!''

''அப்போ இதுக்கு என்னதான் வழி?!''

என்றவள் அன்பை குறுகுறுவென பார்க்க,

''ஒன்னும் மட்டும்தான் எனக்கு புரியலே! எந்த மொழி பேப்பரா இருந்தாலும் எல்லாமே ஸ்டேஷனுக்கு வரும்! ஆனா, இதை எப்படி..''

என்றவன் மீண்டும் பேப்பர் விளம்பரத்திலேயே வந்து நிற்க,

''அன்பு இப்போதான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது! பேப்பர்லே விளம்பரம் கொடுக்கும் போது அவுங்க கேட்டாங்க, மெயின் பேப்பர்லே (main paper) வேணுமா இல்லே டெயிலிலே (daily) வேணுமான்னு! நான் அந்த நேரத்துக்கு போன்லே ஏதோ பிசியா (busy) யார்கிட்டையோ பேசிக்கிட்டு இருந்தேன்! அதனாலே, எதுவுமே சொல்லாமே அந்த கவுண்டர்லே (counter) இருந்தவங்க சொன்னதுக்கு தலையை மட்டும் ஆட்டிட்டேன்!''

என்ற கோற்றொடியோ சொல்ல, மெலிதாய் முறுவலித்த அன்போ,

''பேப்பர்ஸ்லாம் ரெண்டு செட் (set) பிரிண்ட் (print) பண்ணுவாங்க துவரினி! மெயின் சிட்டி நியூஸ் (main city news) மட்டுமே கவர் (cover) பண்ற மாதிரியான மெயின் பேப்பர்! இன்னொன்னு அந்த மாநிலத்துலே நடக்கற மத்த மத்த விஷயங்களை உள்ளடக்கிய டெயிலி பேப்பர்! அநேகமா நீங்க மிஸ்ஸிங் அப்படின்னு கொடுத்தது விளம்பரமா போகாமே, செய்தியா போயிருக்குமோன்னு எனக்கு தோணுது! ஏன்னா, என்னதான் ரெண்டு செட் பேப்பர்க்கும் செய்திகள் மாறுப்பட்டாலும் விளம்பரங்கள் மாறாது!''

''ஆனா, என்கிட்ட விளம்பரம் அப்படின்னு சொல்லித்தானே காசு வாங்கினாங்க! அப்போ ஏமாத்திட்டாங்களா என்னே?!''

என்ற அம்மணியோ வெகுளியாய் சொல்ல, அன்போ சிரிப்பை அடக்கிட முடியாது குலுங்கி சிரித்தான்.

******************************


நிகழ்காலம்

வேதாவின் படுக்கையறை

காணாது போனவள் என்று முத்திரை குத்தப்பட்ட அட்சரா திடிரென்று எண்ட்ரி கொடுக்க, அவள் இல்லா இடத்தை பூர்த்தி செய்ய காத்திருந்த மாதவிக்கோ அது தலையில் இடி விழுந்தாற்போல ஆனது.

போனவளை பற்றி குசலம் விசாரிக்க வந்த அத்தையும் அவர் மகளும், கிளம்பாது ஒரேடியாய் இங்கேயே தங்க, அவர்களை துரத்தி அடிக்க இயலா வேதாவோ அவர்களை கண்டுக்காது விட்டான்.

மாதவியோ இதான் சாக்கென்று பழைய வேலையை ராஜினாமா செய்து, புதிய இடத்தில் கடமையாற்ற தயாராகினாள் குறைந்த சம்பளமாகினும்.

அடுத்தவள் புருஷன் என்ற எண்ணம் போய் மீண்டும் ஆளில்லாத மாமன் மீது ஆசை துளிர்த்திட ஆரம்பித்தது பேதை அவளுக்கு.

ஆனால், நந்தி கணக்காய் அட்சரா மீண்டும் வந்து அவளின் வழியில் குறுக்கிட கடுங்கோபம் கொண்டாள் அம்மணி.

இதில் ஹீரோயினுக்கு வேறு நடந்ததும் தெரியாது, நடப்பதும் மண்டையில் ஏறாது போக அவ்வப்போது அத்தை அம்பிகாவின் கண்ணில் சிக்கிடாது மறதியில் கிடப்பவளிடம் வாய் தகராறு கொண்டாள் மாதவி.

ஏன், எதற்கு என்று கேட்டறியும் முன்னரே எல்லாம் அட்சராவுக்கு மறந்து போக, ஏதோ அவ்வப்போது ஞாபகத்தில் தோன்றிடும் பிட்டுகளை வைத்து வேதாவிடம் பேச்சு வார்த்தை கொண்டாள் மாதவிக்காக, அசடு அவள்.

''மாதவி உங்க மேலே உயிரா இருக்கா வேதா! அவளோட கோபம் நியாயமானது! எனக்கு இப்போதான் அது புரியுது! விரும்பற ஆணோட படுக்கையிலே இன்னொருத்திய எந்த பெண்ணாலே சகிச்சிக்க முடியும்?! நான் இனி பக்கத்து ரூம்லே படுத்துக்கறேன்!''

''என் மெத்தையிலே யாரே படுக்க வைக்கணும்னு எனக்கு தெரியும்! இதுக்கு மேலையும் மாதவியோட காதலுக்கு தூது வர்ற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க!''

''அம்மாடியோ! இத்தனை நாள்லே இப்போதான் உங்களுக்கு கோபம் வந்தே பார்க்கறேன்!''

என்றவள் கன்னத்தில் கை வைத்து சிரிக்க, ஆணவனுக்குமே அவளின் குறும்பிலான பாவனையில் இதழ் விரிந்தது.

''நான் ஒன்னு கேட்கவா?!''

என்றவனோ மஞ்சத்தில் அமர்ந்திருந்தவளை நெருங்க,

''என்ன?!''

என்ற ஏந்திழையின் குரலோ தொலைந்து போனது அவன் அனல் மூச்சில் கன்னங்கள் சிலிர்க்க.

இமைக்காது நோக்கியவனையோ தந்தியடித்த நயனங்களால் பார்த்தாள் நேரிழை அவள்.

''எதுவுமே ஞாபகம் இல்லே! யாரையுமே தெரியலே! அப்படி இருந்தும் எதை வெச்சு இத்தனை நாள் என் கூட இருக்கீங்க?!''

என்றுக் கேட்டவனின் அம்பகங்களை ஆழமாய் ஊடுருவிய சேயிழையோ,

''கொட்டுற மழையிலே, என்னே தொட்டு தூக்கி, நெஞ்சுலே சாச்சி, காரே வேகமா ஓட்டிக்கிட்டு போனீங்களே, அப்போ என் முகத்துலே விழுந்தது மழைத்தண்ணீ மட்டும் இல்லே, உங்க கண்ணீரும்தான்! எப்படின்னு கேட்காதீங்க வேதா! சொல்ல தெரியலே! ஆனா, இது மட்டும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கு! கனவா, நனவான்னு பிரிச்சி பார்க்க தெரியலே! ஆனா, நிஜம்னு மனசு சொல்லுது! நம்புது வேதா! உங்களை முழுசா நம்புது, அட்சராவோட மனசு!''

என்றவளின் விரல்களோ மெத்தையின் மீதிருந்த வேதாவின் விரல்களோடு முட்டி மெதுமெதுவாய் கோர்க்க, ஆணவனுக்கோ மூச்சு ஏகத்துக்கு வாங்கியது தலை சூடேறி போக.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 14
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top