What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

நீ நெருங்க நான் நொறுங்க! : 18

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
WhatsApp Image 2024-10-15 at 7.22.01 PM.jpeg

அத்தியாயம் 18

கடந்த காலம்

வேதாவின் இல்லம்


மணி பதினொன்று பத்தாக வீடு வந்து சேர்ந்தான் வேதா.

மகனவன் குளியலை போட்டு வர, தாய் அம்பிகாவோ அவனுக்கு இரவு உணவை பரிமாறிட ஆரம்பித்தார்.

''அட்சரா இன்னும் ஆபிஸ்லருந்து வரலையாமா?!''

''உன் போன் எங்க?!''

என்ற தாயோ மகனின் தட்டில் சாம்பாரை ஊற்றி புதியதோர் கேள்வியெழுப்பினார் அவனுக்கு பதிலளிக்காது.

''ரூம்லே சார்ஜ் போட்டிருக்கேன்மா!''

''சரி, சாப்பிட்டுட்டு அட்சராக்கு மறக்காமே கோல் பண்ணிடு!''

நடந்த கலவரத்தை பற்றி சொல்லி, உண்ணும் மகனின் நெஞ்சை ரணப்படுத்திட தாயவர் விரும்பவில்லை. ஆனால், அம்பிகாவின் வார்த்தைகளில் உண்பதை நிறுத்திய வேதாவோ,

''அப்போ, அட்சரா இன்னும் வீட்டுக்கே வரலையாமா?!''

''வந்திட்டு, அவுங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போயிட்டா! உனக்கு கோல் பண்ணி ரீச் ஆகலையாம்! அதனாலே, நீ சீக்கிரமா வந்துட்டா, உன்னே அங்க வர சொல்ல சொல்லி என்கிட்ட சொன்னா! அவே பத்து மணிக்கு சொன்னா, நீ இப்போதான் வீட்டுக்கே வந்திருக்கே! இதுக்கு மேலே எங்க அங்க போறது! நாளைக்கு போய் பாரு!''

என்ற மம்மியின் வாக்கியத்தின் முடிவில் டின்னரை முடித்துக் கொண்ட நாயகனோ, படுக்கையறை விரைந்தவனாய் அவன் கைபேசியை எடுத்து ஆன் செய்தப்படியே கீழ் தளம் வந்தான் குடுகுடுவென்று.

''எங்கடா கிளம்பறே?!''

என்ற அம்பிகாவோ மகன் பைக் சாவியை கையிலெடுக்க அவனிடத்தில் வினா தொடுத்தார்.

''அட்சரா வீட்டுக்குமா!''

''வேதா, மணி பனிரெண்டாக போகுது! மழை வேறே வர மாதிரி, இடி இடிச்சுக்கிட்டு இருக்கு! இப்போ போய் அவ்ளோ தூரம் போக போறேன்றே!''

பதைத்தது தாயுள்ளம்.

''மழை வர்றதுக்குள்ள ஓடிடுவேன்மா!''

என்றவனோ முன் எச்சரிக்கையாய் ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டு ஹெல்மட்டை தலையில் கவிழ்க்க,

''ஏன்டா, நாளைக்குதான் வேலை முடிஞ்சு போறதாம்!''

என்ற மம்மியின் ஆதங்கமான கவலைக்கு மென் முறுவலை பதிலாக்கி,

''கிளம்பறேன்மா!''

என்றவனோ பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான் பொஞ்சாதியை பார்க்க.

அம்பிகாவிற்கோ மருமகளை கடிந்துக் கொள்வதா, இல்லை காலில் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்திடும் மகன் தலையில் நங்கென்று குட்டுவதா என்று தெரியாது மண்டை சூடாகி போனது.

**********************************

கடந்த காலம்

அட்சராவின் இல்லம்


மழையில் நனைந்த ஜாக்கெட்டை கழட்டி அங்கிருந்த கம்பியினில் காயப்போட்ட தங்கை புருஷனை கதவை திறந்து வரவேற்ற இந்தரோ,

''என்ன வேதா இந்நேரத்துலே?! வீட்டுலே எல்லாரும் நல்லாருக்காங்க தானே?!''

''யாருக்கும் ஒன்னும் இல்லே! நான்தான், அட்சராவே பார்க்க வந்தேன்!''

''நாளைக்கு வர வேண்டியது தானே! இப்படி கொட்டுற மழையிலே ஏன் இவ்ளோ தூரம் வரணும்?!''

என்ற கேள்வியோடு வரவேற்பறை நுழைந்த மச்சானின் முன் ஆவி பறந்த காஃபியை எடுத்து நீட்டினான் இந்தர், அவனுக்காக கலக்கிய பிரஷ் காஃபியை.

''இல்லே, வேணாம் இந்தர்! இப்போதான் வீட்டுலே சாப்பிட்டுட்டு வறேன்! நான் மேலே போறேன்! குட் நைட்!''

என்ற வேதாவோ, தூக்கம் கண்ணை கட்டிட மேல் தளம் நோக்கினான், இந்தரிடமிருந்து விடைப்பெற்று.

''பொண்டாட்டியே பார்க்காமே இருக்க முடியலே போலே! வெயிலா இருந்தா என்னே, மழையா இருந்தா என்னே, அப்படித்தானே?!''

என்ற இந்தரோ மாடிப்படி ஏறியவனை கலாய்க்க, அவனை திரும்பி பார்க்காது சிரித்த வேதாவோ,

''ஆமாம்! அப்படித்தான்!''

என்றவாறு அட்சராவின் படுக்கையறை வாசல் அடைந்தான்.

**********************************

கடந்த காலம்

அட்சராவின் படுக்கையறை


அறைக்குள் நுழைந்த வேதாவோ, மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் உறங்கும் மனைவியை பார்த்து முகிழ்த்தவனாய் அவளருகில் சென்று படுத்தான்.

சில நிமிடங்கள் அவளை பார்த்தவன் அப்படியே உறங்கியும் போனான். நொடிகள் கடக்க, எதிர்பாரா விதமாய் திரும்பி படுத்த மங்கையின் கரம் வேதாவின் மீது பட, பட்டென துயில் கலைந்தாள் கோமகள் அவள்.

அவனை அருகில் கண்ட நங்கைக்கோ அவள் நேத்திரங்கள் சாட்சியாகி நிற்கும் காட்சியை அவளாலேயே நம்ப முடியவில்லை. மெதுவாய் அவனை உசுப்பி எழுப்பினாள் பாவையவள்.

நித்திரை தடைப்பட அம்பகங்களை கொஞ்சமாய் திறந்து வதுகையின் முகம் பார்த்தான் வேதா.

''எப்போ வந்தீங்க?!''

''ஹ்ம்ம், ஒன்னு இருக்கும் போலே!''

தூக்க குரலில் அவன் சொல்ல,

''சொல்லவே இல்லே?!''

அவனையே இமைக்காது பார்த்தாள் பெண்டு அவள்.

''அதான், நேராவே வந்துட்டேனே!''

திட்டிகள் மூடியப்படி அவன் சொல்ல,

''வர மாட்டிங்கன்னு நினைச்சேன்!''

என்ற அந்திகையின் பார்வைகளோ அவனிடமிருந்து விலகி வேறெங்கோ பார்க்க, சுந்தரியின் இதழோரமோ ரகசியமாய் புன்னகை ஒன்று துளிர்த்தது.

''அக்கறை இருக்கறவன் வருவான்! மழையானாலும், புயலானாலும்!''

என்றவனை நெருங்கி, உரிமையோடு நெஞ்சில் கரங்கள் கொண்டு அதன் மேல் முகம் பதித்தவளோ,

''எவ்ளோ அக்கறை?!''

என்று ரகசிய தொனி கொள்ள, உதடுகளை மடக்கி முறுவலித்த வேதாவோ இமைகளை மூடியவனாய் அவளை இருக்கரங்கள் கொண்டு வளைத்து கட்டிக்கொண்டான்.

''இவ்ளோதானா?!''

என்றவளின் கேள்விக்கு, அணைப்பை மேலும் இறுக்கியவன் கொண்ட அழுத்தத்தில் சிலிர்த்து சிவந்த ஆயிழையோ,

''ஞாபகம் இருக்குள்ளே, நைட் நடக்கறதெல்லாம்..''

என்றவளாய் இமைகள் பிரிக்காதவன் வதனம் பார்த்து சொல்ல,

''காலையிலே மறந்திடணும்!''

என்று இளம்பிடியாளின் வாக்கியத்தை முடித்து வைத்த ஆளானோ கொஞ்சமாய் தலை தூக்கி மாதங்கியின் நாசியோடு அவன் மூக்குரச,

''நனைஞ்சிட்டிங்களா?!''

''ஹ்ம்ம், கொஞ்சமா!''

என்றவனோ நெற்றிக்கு மேல் ஒற்றை கரங்கொண்டு மற்றொரு கையால் அம்மணியின் குழலை வருட,

''பங்க்ஷன் அப்போ வந்திடக்கூடாதுன்னு, டேப்லட்ஸ் எடுத்தேன்! எப்படியும் இப்போதைக்கு வராது! மாசக்கடைசியாகும்!''

என்ற கோதையோ கணவனின் ஆடைக்குள் விரல்கள் நுழைத்து படியேறி கிறங்கியவளாய் அவன் செவி மடல் தொட்டுரச,

''நம்ப வீட்டுலே போய் வெச்சுக்கலாமா?!''

என்ற வேதாவோ சூடேறிய தேகத்தோடு சேயிழையின் உச்சி முகர,

''எங்கையா இருந்தா என்னே, நாமதானே?!''

என்ற பொற்றொடியோ வாலிப காய்ச்சலில் தவித்தவளாய் அவன் கன்னங்களில் மோகத்தீயில் உழன்றவளாய் முட்டி மோதி இச்சு வைக்க, ஆரணங்கின் கேள்விக்கு அவள் காதோர கூந்தல் ஒதுக்கி ரகசியமாய் கிசுகிசுத்தான் வேதா.

என்ன சொன்னானோ கள்வன் அவன். ஆனால், முகம் சிவந்து போக வெட்கத்தில் குளித்த மணவாட்டியோ அவன் கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண்டு புதைந்தாள் அதில்.

வேதாவோ அவள் நுதலில் முத்தமிட்டு அவளை மாரோடு சேர்த்திருக்கி கொள்ள,

''எனக்கு இந்த டிஸ்டர்பன்ஸை புடிக்கலே!''

என்ற விருந்தனையோ வேதாவின் டி- ஷர்டை விரல்களில் கொத்தாய் பற்றி கசக்க, தாரமவளை கொஞ்சமாய் விலக்கி மேலாடையை கழட்டி ஓரம் வைத்தான் ஆடவன் அவன்.

நமட்டு சிரிப்பு சிரித்த கள்ளியோ, தாமதிக்காது அவன் இடமார்பில் பற்தடம் பதிக்க, வலி கொண்டவனின் முகமோ ஏறுமுகமாய் மாறியது.

இருந்தும், வாய் திறக்காதவனை ஏறெடுத்த ராட்சசியோ,

''வலிக்கலே?!''

என்று கேட்க, ஒட்டுமொத்தமாய் தூக்கம் கலைந்தவனோ அவளை ஆழமாய் நோக்கி, பற்றினான் மலரவள் முகத்தை பத்து விரல்களாலும்.

மூச்சு ஏறி இறங்க அவன் புஜங்களை அழுத்தி பிடித்த தாரகையோ, சொக்கிய நயனங்களோடு மெதுவாய் மல்லாக்க சரிந்தாள் மஞ்சத்தில்.

முதல் முறை மனைவியின் நெஞ்சோரத்தில் பற்கள் பதியாது, அதரங்களின் ஆதாரத்தை பதித்தான் ஆணவன.

சுகத்தில் அவன் முழங்கைகளை நகத்தால் காயப்படுத்திய ஒளியிழையோ, கீழுதட்டை கடித்து மென்முனகல் கொள்ள, காரியம் முடித்த வேதாவோ,

''கடின்னா இப்படி இருக்கணும்! வலிக்காமே!''

என்று அவன் பதித்த முத்த தடத்தில் பெருவிரல் கொண்டு நீவ, படக்கென அவன் விரல் பற்றி, திட்டிகள் திறந்த ஏந்திழையோ,

''விடியற வரைக்கும் டைம் இருக்கு! பிராக்டிஸ் பண்ணிக்கறேன்! தப்பு பண்ணே, பண்ணே திருத்திக்கிட்டே இருங்க!''

என்றவாறு அவன் தோள்களை கனலான உள்ளங்கைகள் கொண்டு உரசி கழுத்தேற, அட்சராவின் இதழ்களில் தேன் உண்டிட ஆரம்பித்தான் வேதா.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 18
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top