What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
WhatsApp Image 2024-10-11 at 2.53.00 PM.jpeg

அத்தியாயம் 2

நிகழ்காலம்

வேதாவின் படுக்கையறை


அட்சராவை படுக்கையறைக்கு அழைத்து வந்த ஆடவனோ அவளை மஞ்சத்தில் அமர வைத்தான்.

அறையின் கதவை லோக் செய்தவன் நேராய் ட்ரஸிங் டேபிள் நாற்காலி நோக்கி நடையைக் கட்டினான்.

குலுங்கி கதறிய பேடுவோ, அழுகையை நிறுத்தும் எண்ணம் கொள்ளாது தொடர்ந்து ஒப்பாரிக் கொண்டாள்.

நாற்காலியை இழுத்து வந்த ஆடவனோ, பெண்ணவள் முன் அதில் அமர்ந்தான்.

''அத்தை ஏதோ தெரியாமே பேசிட்டாங்க! நீங்க மனசுலே ஏதும் வெச்சுக்காதீங்க! அழுகையே நிறுத்திட்டு கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரிங்க! எல்லாம் சரியாகிடும்!''

சமாதானம் செய்யும் பொருட்டு பேசினான் வேதா.

ஆனால், ஒப்பாரி கொண்ட பேதையோ,

''நான் யாரு?! நான் ஏன் இங்க இருக்கேன்?! ஆமா, நீங்க யாரு?!''

பாவமாய் கேட்க, புரிந்து விட்டது ஆணவனுக்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த எல்லாவற்றையும் நாயகியவள் மறந்து விட்டாள் என்று.

''நீங்க அட்சரா! நேத்து நைட் (night) நான் கார்லே வந்துக்கிட்டு இருக்கும் போது நீங்க குறுக்க வந்து விழுந்துட்டிங்க! நான் கார்லருந்து இறங்கி வந்து பார்க்கும் போது, நீங்க மூச்சு பேச்சு இல்லாமே இருந்தீங்க! உடனே நான் உங்களே பக்கத்துலே இருந்த கிளினிக்குக்கு (clinic) கூட்டிக்கிட்டு போயிட்டேன்! ட்ரீட்மெண்ட் (treatment) முடிஞ்சதும், நீங்க மயக்கத்துலே இருந்ததாலே, உங்களே என் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டேன்!''

பொறுமையாய் நடந்தவைகளை எடுத்துரைத்தான் ஆணவன்.

''ஏன் எனக்கு நீங்க சொல்ற எதுவுமே ஞாபகத்துலே இல்லே?! என்னாச்சு எனக்கு?!''

''தலையிலே அடிப்பட்டதாலே நீங்க பழசையெல்லாம் மறந்திருக்கலாம்னு, நேத்து உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண டாக்டர் சொன்னாரு!''

''அப்போ வாங்க! என்னே அந்த டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க! இதெல்லாம் சொல்றாருன்னா, அவருக்கு கண்டிப்பா நான் யாருன்னு தெரியும்லே! வாங்க! பிளீஸ்!''

வேதாவின் கரத்தை பற்றி இழுத்து எழுந்தாள் அரிவையவள்.

''இல்ல! அவருக்கு உங்களப்பத்தி எதுவும் தெரியாது! நேத்து நீங்க ட்ரீட்மெண்ட் பண்ணும் போது நடந்துக்கிட்ட விதத்தை வெச்சுதான் அவர் அப்படி சொன்னாரு! கன்போர்ம் (confirm) பண்ணிக்க ஒரு ஸ்கேன் (scan) கூட எடுத்தாரு! இன்னும் ரெண்டு நாள்லே ரிசால்ட் (result) வந்தப் பிறகு கோல் (call) பண்றதாகவும் சொல்லிருக்காரு!''

''அப்போ நான் யாருன்னு யாருக்குமே தெரியாதா?!''

முகத்தை மூடிக்கொண்டு கதறினாள் அந்திகை அவள்.

''எதையும் நினைச்சு மனசு போட்டு குழப்பிக்காதீங்க! ரெண்டு நாள்லே டாக்டரை பார்த்திட்டு அடுத்ததா என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்! அது வரைக்கும் நீங்க தாராளமா இங்கையே தங்கிக்கலாம்!''

கரிசனையாய் ஒப்புவித்தான் ஆணவன்.

''இல்லே, வேண்டாம்! நான் இங்க இல்லே! முதல்லே ஏன் அவுங்க அப்படி பேசினாங்கன்னே தெரியலே?! என்னவோ நான் அவுங்க வாழ்க்கையே கெடுத்த மாதிரி ஏதேதோ பேசறாங்க! அதெல்லாம் கேட்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு! பிளீஸ்! என்னே வேறே எங்கையாவது கூட்டிக்கிட்டு போயிடுங்க! என்னாலே இங்க இருக்க முடியாது!''

முன்னிருப்பவன் முகம் பார்த்து கைகள் கூப்பி கெஞ்சி அழுதாள் சீமாட்டியவள்.

மறந்தவைகள் மீண்டும் ஞாபகத்துக்கு வர, ஆரணங்கின் உள்ளமோ வேதனையில் குமுறியது.

''நீங்க அவுங்களே தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க! நீங்க நினைக்கற அளவுக்கு அவுங்க மோசமானவங்களாம் இல்லே! என் ரூமிலிருந்து திடிர்னு நீங்க, அதாவது ஒரு பொண்ணு, வெளிய வர்றதை பார்த்து டென்ஷன் (tension) ஆகிட்டாங்க! அதனாலதான், ஏதேதோ பேசிட்டாங்க! தயவு செஞ்சு அதை மறந்திடுங்க!''

அவன் சொல்வது நியாயமான ஒன்றாக இருக்க, கண்ணீர் பைப்பை நிறுத்தி பகினியோ மெல்லிய விசும்பல் மட்டுமே கொண்டாள்.

''அப்பறம் ஏன், அந்த பொண்ணு அவுங்க நிம்மதியே நான் கெடுக்கறேன் சொன்னாங்க?! அந்த ஆன்ட்டி கூட ரொம்ப நாள் கழிச்சு என்ன பார்த்ததா சொன்னாங்களே?! என் முகமெல்லாம் கூட தொட்டு பார்த்தாங்களே?! ஏன்?!''

ஞாபகம் வந்த விடயங்களை கேள்வியாய் கோமகள் அவள் சந்தேகமாய் தொடுக்க,

''நான் நேத்து அம்மாகிட்ட மட்டும்தான் உங்களே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர்றதை பத்தி சொல்லிருந்தேன்! அத்தைக்கும் அவுங்க மகளுக்கும் எதுவும் தெரியாது! அதான், அம்மா உங்களே தெரிஞ்சவங்க மாதிரி அவுங்க முன்னுக்கு காமிச்சுக்கிட்டாங்க!''

சமாளித்தான் வேதா ஓரளவுக்கு.

''யாரு முன்னுக்கு?! எந்த அம்மா?! என்ன சொன்னாங்க?!''

என்ற அம்மணியோ மறுபடியும் பழைய குருடி கதவைத் திறடி கணக்காய் கணப்பொழுதில் கேட்ட கேள்வியை மறந்து வேதாவின் பதிலிருந்து புதியதோர் வேள்வியை எழுப்ப,

''நீங்க கொஞ்ச நேரம் படுத்து, நல்லா ரெஸ்ட் (rest) எடுங்க! சாப்பாடு நேரத்துக்கு என் அம்மா வந்து எழுப்புவாங்க! சாப்பிட்டு வந்து டாக்டர் கொடுத்த மருந்தெல்லாம் போட்டுக்கிட்டு திரும்பவும் படுத்து தூங்குங்க!''

என்றவன் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

''இது உங்க ரூம்பா?!''

என்றவளோ தலையை திருப்பி விழிகளை உருட்ட,

''ஆமா! இங்கப்பாருங்க, டேப்லட்ஸ் எல்லாத்தையும் இங்க, உங்க பார்வையிலே படறே மாதிரியேதான் வைக்கிறேன்!''

''யார் மருந்து இதெல்லாம்?!''

என்ற அபலையோ, வேதாளம் முருங்கை மரம் ஏறிய கணக்காய் அவைகளை கையிலெடுத்து பார்க்க,

''உங்க மருந்துதான்! உங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லே! இதை போட்டுக்கிட்டா குணமாகிடும்!''

என்றவனோ முட்டிக்கால்களை இறுக பற்றி குனிந்த வாக்கில் மும்முரமாய் மருந்தின் பெயர்களை படித்துக் கொண்டிருந்தவளிடம் கூற,

''நிஜமா சரியாகிடுமா?!''

என்ற கண்மணியோ கருவிழிகளை விரிக்க, ஆமாம் என்று தலையாட்டிய வேதாவோ,

''எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நான் வெளிய போயிட்டு வந்துடறேன்! அதுவரைக்கும் எங்கையும் போகாமே இந்த ரூம்லையே படுத்து தூங்குங்க! போர் (bore) அடிச்சா அங்க சில மெகசீன்ஸ் (magazines) இருக்கு எடுத்து படிங்க! ஆனா, அதெல்லாம் கார், பைக் இப்படி பாய்ஸ் (boys) சம்பந்தப்பட்டதுதான்! கேர்ள்ஸ்க்கு (girls) இன்ட்ரஸ்டிங்கானா (interesting) விஷயங்கள் எதுவும் அதுலே இருக்காது! அதனாலே, நீங்க என் லேப்டாப் (laptop) யூஸ் (use) பண்ணிக்கோங்க! பாஸ்வர்ட் (password) ஏதுமில்லே! வைஃபை (Wi-Fi) அவுட்டோ (auto) கனெக் (connect) பண்ணிக்கும்!''

சொன்ன வேதாவோ நாற்காலியை மீண்டும் ட்ரஸிங் டேபிளின் பக்கம் தூக்கி வைத்தான்.

தலையை ஆமோதித்து ஆட்டிய பொற்றொடியோ,

''குளிச்சா நல்லா தூக்கம் வரும்னு தோணுது! ஆனா, மாத்திக்க துணி..''

என்றவள் இழுக்க,

''இங்க உங்களுக்கு தேவையான உடுப்பு இருக்கு! எடுத்து போட்டுக்கோங்க!''

அலமாரியை திறந்து நின்றவன், சொல்ல வேண்டியதை சொல்லி நகர,

''யாரோட ட்ரஸ்?! நான் இங்க இருக்கற ட்ரஸ் போட்டுக்கிட்டா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா?!

என்ற வேள்வியோடு அலமாரியை நோக்கி நடைப்போட்டாள் சுந்தரியவள்.

''புது டவல் அதே அலமாரிலே கீழே ஷெல்ப்லே (shelf) இருக்கும்! எடுத்துக்கோங்க!''

என்ற வேதாவோ பூவையின் வேள்விக்கு பதில் சொல்லாது அறையிலிருந்து வெளியேற முனைந்தான்.

''அட்சரா!''

என்றவள் உதிர்த்த வார்த்தையில் கதவின் பிடியை இறுக்கியவனோ, தலை திருப்பி தளிர் அவள் வதனம் நோக்கினான் சிறு கலக்கம் கொண்டவனாய்.

''என் பேர் என்னே, அட்சராவா?!''

தோளில் டவலும், கைகளில் சுடி ஒன்றும் இருக்க, வினா தொடுத்தவளை உற்று நோக்கிய நாயகனோ தலையை ஆமாம் என்பதற்கு அத்தாட்சியாய் ஆட்டினான்.

''என்னே பத்தி எதுவுமே தெரியாதப்போ, எப்படி என் பேர் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சது?! உங்க வீட்டு ஆளுங்களுக்கு கூட என் பேர் தெரியுதே?! அது எப்படி?!''

கேட்டுக்கொண்டே பைந்தொடியவள் வேதாவை நெருங்க, சந்தேகம் துளிர்த்த தாரத்தின் அழுது வீங்கிய நேத்திரங்களை இமைக்காது பார்த்த நல்லவனோ, மெதுவாய் மாதவள் வலக்கரம் பற்றி மேலேற்றினான்.

அதிலோ அட்சரா என்று பச்சைக் குத்தியிருந்தது.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 2
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top