What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
அத்தியாயம் 26

WhatsApp Image 2024-10-19 at 4.45.54 PM.jpeg


கடந்தகாலம்

செரீஸ் ரிசார்ட் ஆறாவது மாடி ஆண்கள் கழிவறை


அட்சராவின் கையால் அறை வாங்கிய கௌஷிக்கோ, வீங்கிய கன்னத்தில் ஐஸ் கியூப் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான் ஆண்கள் கழிவறையில் நின்று.

''விடு மச்சான் பார்த்துக்கலாம்! அவே இல்லன்னா இன்னொருத்தி! இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு!''

ஸ்டிவன் ஆறுதல் என்ற பெயரில் தவறான போதனைக் கொடுத்தான்.

''உனக்கு இது தேவைதான்!''

எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினான் சுக்விந்தர் சிங்.

''டேய்! அவனே நொந்து போயிருக்கான்! நீ வேறே ஏன்டா?!''

முறைத்த நண்பனுக்கு சப்போர்ட் செய்தான் ஸ்டிவன் மற்றவனை கடிந்து.

''பின்னே, கல்யாணமானவளே போய் சீண்டினா சும்மாவா இருப்பா?! ஒன்னு ஜூஸ்லே எதையாவது கலந்திட்டு அப்பறமா தள்ளிட்டு போய் ட்ரை பன்ணணியிருக்கணும்! அதை விட்டுப்புட்டு, தெளிவா இருக்கும் போது வாலாட்டினா இப்படித்தான் அசிங்கப்பட்டு வந்து நிக்கணும்!''

என்றவனோ கடமை அழைக்க ஜிப்பை கழட்டி வேலையை பார்த்திட ஆரம்பித்தான்.

''என்ன வேணா சொல்லிட்டு போங்கடா! ஆனா, என்னே இப்படி கேவலப்படுத்தின அந்த அட்சராவே நான் திரும்ப அவமானத்தப்படுத்தாமே விட மாட்டேன்!''

சபதம் கொண்ட தொனியில் கௌஷிக் உறும்ப,

''என்ன, அவே கம்பெனி கூட இருக்கற பிஸ்னஸ் டீலிங்கை ட்ரோப் பண்ணி அவளே தோற்கடிச்சிடலாம்னு நினைக்கறியா?!''

என்று நக்கலடித்த ஸ்டிவனை ஏறெடுத்து முறைத்த கௌஷிக்கிடம்,

''இங்கப்பாரு மச்சான், அவளுக்கு நீ மட்டும் கிளைண்ட் இல்லே! அதையும் தாண்டி அவே அழகுக்கே அவளோட பிஸ்னஸ் பண்ண உன்னே மாதிரி ஆயிரம் பேர் போட்டி போட்டுக்கிட்டு நீ நான்னு வருவானுங்க! அப்படிபட்டவளே அறிவாலே அடிக்கக்கூடாது! அன்பாலே போடணும்!''

என்றவனோ தந்திர புன்னகை கொள்ள,

''இதெல்லாம் சரிதான்! ஆனா, அவே ரொம்ப உஷார்டா மச்சான்! அவ்ளோ சீக்கிரதத்துலே ஏமாந்து போறே ஆளில்லே! ஆனா, அவே புருஷன் அந்த வேதாவே பாறேன் சரியான பேக்கு மாதிரியே இருக்கான்! வேணும்னா, அவனே சுத்தல்லே விட்டு அவளே தலைகுனிய வைக்கலாம்!''

என்ற சுக்விந்தர் சிங்கோ வாஷ் பேஷனில் கைகளை கழுவிக் கொண்டே ஏகபோகமான ஐடியா ஒன்றை கொடுத்தான்.

ண்பர்களின் ஏடாகூடமான பேச்சு வார்த்தைகளில் தீவிர யோசனைக் கொண்ட கௌஷிக்கோ,

''நாமே என்னடா அவனே பண்றதது! அவன் பொண்டாட்டியே அவனே வெச்சு செய்ய போறா பாரு, ஊரே சிரிக்கறே மாதிரி அவனே!

என்ற கௌஷிக்கோ நண்பர்களை அருகில் அழைத்து ரகசியமாய் கிசுகிசுத்து கழிவறையிலிருந்து வெளியேறினான்.


*******************************************************************

கடந்தகாலம்

செரீஸ் ரிசார்ட் ஐந்தாவது மாடி ஆண்கள் கழிவறை


கழிவறைக்குள் பதுங்கியிருந்த இன்ஸ்பெக்ட்டர் அன்போ அவனின் சப் இன்ஸ்பெக்ட்டர் ராகேஷுக்கு போனை போட்டான்.

''ராகேஷ், இங்க இருக்கறே ஆறாவது மாடி போல் ரூம்லே ஏதோ பார்ட்டி நடக்குது போலே! உடனே மேனேஜர்கிட்ட சொல்லி அந்த ரூமை கிளியர் பண்ண சொல்லு!''

என்று கட்டளை பிறப்பிக்க,

''ஓகே சார்!''

என்றவனோ ரிசார்ட்டின் மேனேஜரை தேடிச் சென்றான்.

யாரின் நடமாட்டமும் கழிவறைக்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அன்போ, கதவை திறந்து வெளியில் வந்தான்.

யாரும் பார்க்கா வண்ணம் மெதுவாய் அங்கிருந்து வெளியாகி கழிவறைக்கு பக்கத்திலிருக்கும் ஸ்டோர் ரூம் நோக்கினான்.

அதை திறந்து உள்ளிருந்து ஈரமான தரை என்ற எழுத்துக் கொண்ட எச்சரிக்கை பலகையை வெளியில் எடுத்தான். அதை கொண்டு போய் கழிவறைக்கு முன்னாள் வைத்தவன் அவ்வறை கதவை இழுத்து சாத்தி மூடினான்.

அதே சமயம் ராகேஷுக்கு அழைத்து செய்த காரியத்தையும் சொல்லி அங்கிருந்து நகர்ந்து நான்காவது மாடிக்கு சென்றான்.

**************************************************

கடந்தகாலம்

செரீஸ் ரிசார்ட் நான்காவது மாடி


சூட் கேஸ் நிரம்பிய பணம், 210 என்ற அறையின் கட்டிலை அலங்கரித்திருந்தது.

''சொன்ன டைமுக்கு வந்திடுவானுங்க தானே?!''

கணீரென்ற குரல் கேள்வியெழுப்ப,

''கண்டிப்பா! விசாரிச்ச வரைக்கும் ரொம்பவே நல்ல பேர்தான்!''

நடுநிலையானவன் வரப்போகும் கூட்டத்திற்கு சர்ட்டிபிகேட் கொடுக்க,

''பேரே வெச்சுக்கிட்டு வியாபாரம் பண்றவன் நான் கிடையாது! சொன்ன நேரத்துலே ஒரு செகண்ட் மீறி போனாலும் டீலே ஊத்தி மூடிட்டு கிளம்பி போயிக்கிட்டே இருப்பேன்!''

சொன்னவனை குறுகுறுவென்று பார்த்தான் அவனின் அடியாள் தலையை மேல் தூக்காதே.

அறைக்குள் இப்போதைக்கு மொத்தமாய் நால்வர் இருந்தனர். தைக்கோன் என்ற அடைமொழியோடு உரும்பியவன் ஒருவன். அடியாட்கள் இருவர்.

இருதரப்பு கோஸ்டிகளுக்கு இடையில் வைரங்களை கைமாற்றும் வேலையின் நடுநிலை ஆளான டைமண்ட் பாபுவின் முக்கிய புள்ளியொருவன்.

பணத்தை கொடுத்து வைரங்களை கைமாற்றிட வந்திருந்தவனோ,

''சிகார்?!''

என்றான் கையிலிருந்த அவன் சிகார் சிகரெட்டை நாட்டாமை டியூட்டி பார்க்க வந்திருந்த மூணாவது ஆளிடம் நீட்டி.

''வேண்டாம்!''

என்றவனோ நாகரீகமாய் மறுக்க, குளியல் ஆடை கொண்ட கள்ளனோ ட்ரஸிங் டேபிளின் மீதேறி அமர்ந்த அவனின் இரு கால்களையும் தூக்கி நந்தியானவனின் நாற்காலி விளிம்புகளின் ஓரம் பதித்தான்.

''ஓஃவர் பண்ற பழக்கமெல்லாம் எனக்கில்லே! பண்றேன்னா, ஏதோ ஒன்னு உன்கிட்ட புடிச்சிருக்கின்னு அர்த்தம்!''

என்றவனோ சிகாரை இழுத்து புகையை முன்னிருப்பவன் முகத்தில் விட, ஓடி வந்து நீட்டினான் அறைக்குள்ளிருந்த மற்றொரு கையாள் புதியதோர் சிகார் சிகரெட்டை அவன் முதலாளியின் முன்.

''அதிர்ஷ்டம் அடிக்கடி கதவை தட்டாது! தட்டினா கப்புன்னு புடிச்சிக்கோ!''

என்றவன் அழுத்தமாய் சொன்ன வாக்கியத்தில் குந்தியிருந்தவனுக்கோ குதம் சூடேறி ஈரக்குலை நடுங்கியது.

பேசுபவனை பற்றி ஓரளவுக்கு அமர்ந்திருந்தவனுக்கு தெரியும். ஆளை அறுத்து சூப் போடும் கோஷ்டி என்ற பரவலான பேச்சை கேள்விப்பட்டிருந்தான்.

இவ்வளவு நேரமாய் நடுக்கத்தை உள்ளுக்குள் பதுக்கியிருந்தவன் நேரமாக, பணக்காரன் கொண்ட தொனியில் எப்போதடா இதெல்லாம் முடிவிற்கு வருமென்று அச்சங்கொண்டான்.

ஆகவே, அவனை கோபப்படுத்திட வேண்டாமென்ற எண்ணத்தில் அவனின் அடியாள் நீட்டிய சிகார் சிகரெட்டை வாங்கி வாயில் வைத்தான்.

அறையை ஆட்டிப்படைத்தவனோ கள்ள புன்னகையை இதழோரம் இழைந்தோட விட்டான், நடுவாளன் சிகாரை இழுத்து புகையை விட.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 26
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top