What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
WhatsApp Image 2024-10-19 at 4.45.54 PM.jpeg

அத்தியாயம் 27

நிகழ்காலம்

கஃபே


எவ்வளவு யோசித்தாலும் அட்சராவால் அவளின் முந்தைய வாழ்க்கை வரலாறை ஞாபகத்திற்கு கொண்டு வந்திட முடியவில்லை.

ஆகையால், வேறு வழியின்றி மருமகள் அவள் அத்தை அம்பிகாவிடம் அவள் குடும்ப விபரங்கள் கேட்க, அவரோ கல்யாண ஆல்பமை எடுத்து காட்டி தற்சமயத்திற்கு பேதையின் வாய் அடைத்தார்.

சங்கதியை தாய் மூலம் அறிந்துக் கொண்ட நாயகனோ, அம்மணியின் அண்ணனுக்கு போனை போட்டான் காணாது போன பொஞ்சாதி திரும்ப கிடைத்த கதையைச் சொல்ல.

''என்ன வேதா சொல்றீங்க?! எப்போ?!''

அதிர்ந்தான் மகிழ்ச்சியின் ஊடே அண்ணனவன்.

''ஒன்னு, ஒன்றை மாசமாச்சு இந்தர்!''

''என்ன வேதா இது, இவ்ளோ நாள் கழிச்சு இப்போதான் சொல்றீங்க?!''

கோபம் வந்தது இந்தர் அவனுக்கு, தங்கை புருஷன் தகவலை மறைத்திருக்க.

''சொல்லக்கூடாதுன்னுலாம் இல்லே இந்தர்! சொன்னாலும் அப்போதைய சூழ்நிலையிலே அது சரியா இருக்காதுன்னுதான், இவ்ளோ நாள் பொறுமையா இருக்க வேண்டியதா போச்சு!''

''ஏன், அட்சரராக்கு என்ன?!''

''அவுங்களுக்கு பழசு எதுவுமே நினைவிலே இல்லே இந்தர்! என்னையே அவுங்களுக்கு அடையாளம் தெரியலே! கடவுள் புண்ணியத்துலே வேலை விஷயமா வெளிய போயிட்டு வரும் போது எதார்ச்சையாய் ரோட்டுலே பார்த்து, அப்பறமா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்!''

''டாக்டர் பார்த்தீங்களா?! என்ன சொன்னாங்க?!''

''தலையிலே பலமான காயம் ஏற்பட்டிருக்கறதாலே, அட்சரா அம்னீஷியாலே பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு டாக்டர் சொன்னாரு! ஒன்னுக்கு ரெண்டு டாக்டர்ஸ் பார்த்தாச்சு! செக் ஆப், ஸ்கேன்ஸ் எல்லாமே ஒரே மாதிரியான காரணத்தைத்தான் சொல்லுது!''

''என்ன நடந்ததுன்னு ஏதாவது ஞாபகம் இருக்கா அவளுக்கு?!''

''டாக்டர் ஹிப்னோஸிஸ் மூலமா அதை தெரிஞ்சிக்கலாம்னு சொன்னாங்க! நாங்களும் முயற்சி பண்ணோம்! ஆனா, அட்சராவாலே எதையுமே ஞாபகப்படுத்தி சொல்ல முடியலே இந்தர்! அதுவே அவுங்களே ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கிடுச்சு! டாக்டரும் இதுக்கு மேலே அப்படி பண்றது நல்லதில்லன்னு சொல்லிட்டாரு!''

''ஆமா வேதா, அது அவளோட மெண்டல் ஹெல்த்தை பாதிக்க நிறைய வாய்ப்பிருக்கு! பரவாலே, மனசே தேத்திக்கோங்க! அவளுக்கு பழசு ஞாபகம் இருந்தா என்னே, இல்லாட்டி என்னே! அதான், அவளே நமக்கு நல்லப்படியா கிடைச்சிட்டாளே! அதுவரைக்கும் சந்தோஷம்தான்!''

''ஆமா இந்தர்! என் அட்சரா போதும் எனக்கு! எந்த ஞாபகங்களும் வேண்டாம் எங்களுக்கு!''

''ஹான், வேதா இன்ஸ்பெக்ட்டர் அன்பு உங்களுக்கு கோல் பண்ணாரா?! நம்பர் கேட்டிருந்தாரு?!''

''பேசிட்டேன் இந்தர்! அட்சரா காணாமல் போன கேஸ் சம்பந்தமான பேசதான் கூப்பிட்டிருக்காரு! நான் நேராவே போய், பார்த்து பேசி கேஸை வாபஸ் வாங்கிட்டு வந்திட்டேன்!''

''நல்லதா போச்சு!''

''அப்பறம் இந்தர், இந்த வாரம் உங்களுக்கு நேரம் இருந்தா சொல்லுங்க, அட்சரா எல்லாரையும் பார்க்க ஆசைப்படறாங்க!''

''நிச்சயமா பார்க்கலாம் வேதா! நிலாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்களுக்கு ஆப்டேட் பண்றேன்!''

''தேங்க்ஸ் இந்தர்!''

என்றுக்கூறி அழைப்பை துண்டித்த வேதாவோ பெரிய பாரமொன்றை இறக்கி வைத்தாற்போல உணர்ந்தான்.

************************************

நிகழ்காலம்

தனியார் மருத்துவமனை



பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது கூடிய சீக்கிரமே வேதரஞ்சகனின் வாழ்க்கையில் உண்மையாகிடுமோ என்ற பயம் அவனை ஆட்கொண்டிட ஆரம்பித்தது.

ஆணவனின் பிரச்சனைக்கு உடனடி தீர்வென்பது சாத்தியமில்லா கூற்றென்பதை நன்கறிந்தவன் வேறு வழியில்லாது அவசர அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி மருத்துவரை சந்திக்க சென்றான்.

''எடுத்த உடனே இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைச்சிடாது வேதா! கவுன்செலிங், ஹோர்மோன் தெரபி, மருந்து மாத்திரைன்னு என்னதான் நாமே முயற்சி பண்ணாலும், உங்க மனசும் உடம்பும் இதுக்கெல்லாம் மனப்பூர்வமா ஒத்துழைக்கணும்!''

சிறுநீரக மருத்துவர் பொறுமையாய் எடுத்துரைத்தார் வேதரஞ்சகனுக்கு. வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மதியம் நாலு மணிக்கு டாங்கென்று இவரை சந்தித்திட வந்திட வேண்டியது அவனின் தலையெழுத்தாகி போயிருந்தது.

''டாக்டர், என்னோட வைஃப் நேத்து வெளியூர்லருந்து வந்துட்டாங்க! நாங்க இண்டர்கோஸ் ஏதும் பண்ணலே! ஆனா, அவுங்க இனிஷேட் பண்ண மாதிரிதான் எனக்கு தோணுச்சு! எனக்கு ரொம்ப பயமாவும், பதட்டமாவும் ஆகிடுச்சு டாக்டர்! அதனாலே, நான்தான் வேணான்னுதான் டாப்பிக் மாத்தி ஸ்டோப் பண்ணிட்டேன்!''

முன்னாடியே திருமணமானவன் என்ற சங்கதியை மருத்துவரிடம் சொல்லியிருந்த வேதா, கூடவே, காணாது போன அட்சரா வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும் எக்ஸ்ட்ரா ஒரு பொய்யை சேர்த்து சொல்லியிருந்தான்.

''ரொம்ப நாள் கழிச்சு பிஸிக்கல் டச்லே நேரடியா களம் இறங்க உங்க உடம்பு ரெடியாகரதாலே, உங்களை அறியாமலேயே உங்க மனசுக்குள்ள ஒரு பயம் வந்திருக்கு! இது நார்மல்தான் வேதா! போக, போக சரியாகிடும்!''

''டாக்டர், நான் என் மனைவிக்கிட்ட எனக்கு இருக்கறே பிரச்சனை பத்தி இதுவரைக்கும் எதுவும் சொன்னதில்லே! இதை பத்தி அவுங்க தெரிஞ்சிக்காமலே நான் அவுங்க கூட எவ்ளோ சீக்கிரத்துலே ஒன்னு சேர முடியும்?!''

ஆசை யாரை விட்டது, வேதாவை விட. கட்டிய நாள் முதல் கன்னி கழியாதவன். பேரழகியான பொண்டாட்டி ஆசையாய் தேடி வர ஓரிரு நாட்கள் காரணங்கள் சொல்லிடலாம். ஆனால், அதையே எப்படி வாழ்நாள் முழுதும் சொல்லிட இயலும்.

''நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அது உங்க கையிலதான் இருக்கு வேதா! தாம்பத்தியத்துலே ஈடுப்படறதுக்கு முன்னாடி சில முன் விளையாட்டுகளில் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க! அதுக்கும் முன்னாடி உங்க மனசையும் மைண்டையும் ரிலெக்ஸ்சா வெச்சுக்கோங்க! அப்படியே, எந்த மாற்றமும் நிகழாமே இருந்தா, அவுங்களையே நேரடியா உதவி பண்ண சொல்ல கேளுங்க!''

மருத்துவரின் கூற்றை கேட்டவனுக்கோ ஏனோ உடம்பெல்லாம் சூடேறி உள்ளம் புழுவாய் துடித்திட ஆரம்பித்தது.

''நான் எப்படி டாக்டர் அவுங்களே ஹெல்ப் பண்ண கேட்க முடியும்?! என் பிரச்சனையே அவுங்களுக்கு தெரியாமே இருக்கணும்னு நான் நினைக்கும் போது?!''

‘’கவலைப்படாதீங்க வேதா! இப்போ இருக்கற லேடிஸ் இந்த விஷயத்துலே ஆண்களே விட ரொம்ப தெளிவாவே இருக்காங்க! கண்டிப்பா உங்க மனைவி இதை ஒரு பிரச்சனையா கருத மாட்டாங்க! அதுக்கு பதிலா, நீங்க ஸ்ட்ரெஸ் இல்லே பதட்டமா இருக்கிறீங்கன்னுதான் நினைச்சுப்பாங்க!''

என்றவரை கலக்கமாகவே பார்த்தான் வேதா, நம்பிக்கையற்று.

''நம்ப செஷன் ஆரம்பிச்ச டைம்லருந்து நீங்க பிஸிக்கலா எதுவும் ட்ரை பண்ணலே வேதா! ஆனா, இப்போ மருந்தோட சேர்த்து உறவுலே ஈடுப்படற வாய்ப்பு உங்களுக்கு அமைஞ்சிருக்கு! அதனாலே, நாமே கொஞ்சம் பொறுத்துதான் போகணும் உங்க விஷயத்துலே! ரெண்டு மூணு வாரத்துக்கு, நான் சொன்னதை எல்லாம் மைண்ட்லே வெச்சு முயற்சி பண்ணி பாருங்க!''

''சரியாகிடும்லே டாக்டர்?!''

ரணம் கொண்டவனின் குரல் விரக்தியோடு கேட்க,

''நம்பிக்கைதானே வேதா வாழ்க்கை! நம்புவோம்! சீக்கிரத்துலையே உங்களுக்கு எல்லாம் சரியாகி நீங்க உங்க குடும்ப வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்கணும்னு நானும் கடவுள்கிட்ட வேண்டிக்கறேன்!''

''தேங்க்ஸ் டாக்டர்!''

என்றவனோ அவனுக்காக இல்லாவிட்டாலும் அவன்பால் காதல் கொண்டிருக்கும் அட்சராவிற்காகவாவது எப்பாடு பட்டாவது பயத்தை போக்கி குறையை தீர்த்து அவளோடு கூடலில் இணைந்திட வேண்டுமென்று மனதில் உறுதிக் கொண்டான்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 27
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top