- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
அத்தியாயம் 28
கடந்த காலம்
செரீஸ் ரிசார்ட் விருந்து அறை
மணி பத்துக்கு மேலாக விருந்துக்கு வந்திருந்தவர்களில் பலர் வீடு திரும்பியிருந்தனர்.
மீதமாய் வெறும் பத்து பதினைந்து பேர் மட்டுமே அறைக்குள் கூத்தும் கும்மாளமும் கொண்டிருந்தனர்.
வேதா தனியே அமர்ந்திருக்க அவனை நெருங்கினான் சுக்விந்தர்.
''இந்தாங்க பாஸ் குடிங்க!''
என்றவனோ நீட்டினான் கையிலிருந்த மதுவை.
''இல்லே, நான் குடிக்க மாட்டேன்!''
நாகரீகமாய் மறுத்தான் அட்சாராவின் கணவன்.
''அட, சும்மா ஒரு முடக்கு குடிச்சு பாருங்க!''
என்றவனோ அவனை வற்புறுத்தினான்.
''இல்லே, வேண்டாம்! பிளீஸ்!''
என்ற வேதாவோ மீண்டும் அவனை தடுக்க,
''அட, குடிச்சுத்தான் பாருங்களேன்!''
என்ற சுக்விந்தரோடு இணைந்த ஸ்டிவனோ விருப்பமற்றவனை வலுகட்டாயமாக குடிக்க வைக்க, அவர்களை தள்ளிவிட்டு விலகினான் வேதா கோபங்கொண்டு.
''நான்தான் சொல்றேன்லே வேணான்னு! அப்பறம் எதுக்கு கட்டாயப்படுத்தறீங்க?! ஒரு தடவை சொன்னா புரியாதா?!
என்றவன் கத்த, சத்தம் வந்த இடம் நோக்கி திரும்பி பார்த்த அட்சராவோ அவனை நோக்கி நடைப்போட, விருட்டென மங்கையவளுக்கு குறுக்கே வந்தாள் ஷில்பா.
''ஏய், கிளம்ப போறேண்டி! ஒரே ஒரு செல்ஃபி புடிச்சிப்போம் வா!''
என்றழைக்க,
''இரு, அங்க என்ன பிரச்சனைன்னு பார்த்திட்டு வந்துடறேன்!''
என்ற நாயகியை தடுத்து நிறுத்தியவளோ,
''ஆம்பளைங்க ஆயிரம் பேசுவானுங்கடி! சின்ன பையனுங்களா என்ன! நீ வா!''
என்றுக்கூறி அட்சராவை அங்கிருந்து நகர்த்தி வேறிடம் கூட்டிப் போனாள் சுயப்படம் எடுத்திட.
அதற்குள் வேதாவையோ சுற்று போட்டனர் கௌஷிக்கும் அவன் நண்பர்கள் குழுவும்.
''என்னடா விட்டா ரொம்ப பேசறே?! எப்படி இருக்கு உனக்கு எங்களையெல்லாம் பார்த்தா?! ஒரு மரியாதைக்கு குடிக்க சொன்னா, ஓவராத்தான் பண்றே?!''
என்று சுக்விந்தர் ஆரம்பிக்க,
''குடிக்காதே உத்தமன் உனக்கு, இங்க என்னடா வேலே?! இங்கலாம் வந்தாலே குடிக்கணும், ஆடணும், பாடணும்னு! புரிஞ்சுதா பட்டிக்காடு?!''
என்ற ஸ்டிவனோ வேண்டுமென்றே வேதாவின் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னோக்கி தள்ளி வம்பிழுக்க,
''இங்கப்பாருங்க, தேவையில்லாமே பிரச்சனை பண்ணாதீங்க!''
என்ற வேதாவோ அழுத்தமாய் கூற,
''அப்படிதாண்டா பண்ணுவோம்! என்னடா பண்ணுவே?!''
என்ற சுக்விந்தரோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வம்படியாய் முன்னிருந்தவனை சண்டைக்கு அழைக்க,
''வேணா சொல்லிட்டேன்!''
என்ற வேதாவோ மீண்டும் அவன் மார்பில் கரம் பதிக்க வந்த ஸ்டிவனின் கையை தட்டி விட, கௌஷிக்கோ நண்பனின் காலை மிகச்சரியாய் திட்டமிட்டப்படி தட்டிவிட்டான்.
ஸ்டிவனோ கீழே விழுந்து,
''டேய், ஏன்டா பேசிக்கிட்டே இருக்கும் போது அடிக்கறே?!''
என்றலறி கூட்டத்தை கூட்டினான்.
''என் பிரெண்டு மேலையே கை வெச்சிட்டியா?!''
என்ற சுக்விந்தரோ டக்கென்று ஒரு பீர் போத்தலை எடுத்து அதை தூக்கி அடித்தான் வேதாவின் தலையில்.
''ஆர்ர்ர்ர்ர்ர்ர்!''
என்ற அட்சரா புருஷனோ வலியில் அலற, கூடிய கயவர்களின் கூட்டமோ வட்டம் போட்டு ஆணவனை காலால் உதைத்திட ஆரம்பித்தனர்.
தூரத்திலிருந்து காட்சியைப் பார்த்த அட்சராவோ,
''டேய்! என்னடா பண்றீங்க?! விடுங்கடா அவரே! வேதா!''
என்றவளோ இவ்வளவு நாட்களாய் கொண்டிருந்த கோபத்தை தூக்கி போட்டு கணவன் இடம் நோக்கி ஓட, அவளை குறுக்கே புகுந்து தடுத்தாள் கரீனா.
''நில்லுடி! அடிக்கறவனுங்களே கூட திருப்பி அடிக்க தகுதி இல்லாத ஒருத்தன் கூடதான் இத்தனை நாளா நீ வாழ்ந்துக்கிட்டு இருக்கியா?! அவனையே அவனாலே காப்பாத்திக்க முடியலே! இதுலே, உன்னே எப்படிடி காப்பாத்துவான்?!''
நேரங்கெட்ட நேரத்தில் நண்பியின் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி கொண்டாள் கரீனா.
''ஏய்! பைத்தியமா உனக்கு?! ஒருத்தனே ஐஞ்சாறு பேர் சேர்ந்து அடிச்சா அவனாலே என்ன பண்ண முடியும்?! இது என்ன சினிமாவா இல்லே அவர் என்னே ஹீரோவா எல்லாரையும் அடிச்சு பறக்க விட! கையே விடு!''
என்ற அட்சராவோ மாதங்கியின் கரத்தை இறுக்கமாய் பற்றியிருந்த கரீனாவின் பிடியிலிருந்து கையை வெளியில் கொண்டு வர போராட,
''போ! போய், உன் கோழை புருஷனே காப்பாத்து! கௌஷிக் உன்னே கட்டிப்புடிச்சது முதல் நீ அவனே அறைஞ்சது வரைக்குமே சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்த உன் அம்மாஞ்சி புருஷனை போய் காப்பாத்து! அவன்லாம் ஒரு ஆம்பளை, அவனுக்காக நீ வரிஞ்சுக்கட்டிக்கிட்டு போறே! போ! போய் காப்பாத்து உன்னோட பொட்ட புருஷனே!''
என்ற கரீனாவின் வார்த்தைகளில் முன்னோக்கி போன அட்சராவின் ஓட்டம் ஸ்தம்பித்து நின்றது அதிர்ச்சியில்.
வேதாவை கருணையின்றி துவைத்தெடுத்த நல்லவர்களோ தரையில் வைத்தே, ஆளுக்கு ஒரு பக்கமாய் அவன் கை கால்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டனர்.
கௌஷிக்கோ முதலில் அட்சரா அச்சாரம் பதித்த கன்னத்தை தொட்டு தடவிப் பார்த்து அவன் போனை கையில் எடுத்தான்.
''கழட்டுங்கடா அவனோட ட்ரேக் பேண்ட்டை! அம்மணக்கட்டையா நிக்க வெச்சு ஐயாவே வீடியோ எடுப்போம்!''
என்றவனோ விசிலடித்து டிஜேவிடம் சைகை செய்தான் பாட்டின் சவுண்டை ஏற்றிடக்கோரி.
''வேண்டாம்! விடுங்கடா! வேணாம்! வேணாண்டா!''
என்ற வேதாவோ பார்வை மங்கிய வலக்கண்ணோடு உடம்பெல்லாம் ஆங்காங்கே காயங்கொண்ட நிலையில் மன்றாடினான் அவர்களிடம் மானத்தை வாங்கிட வேண்டாமென்று.
கட்டிய புருஷனின் கெஞ்சலும் மனசாட்சியற்ற ஜென்மங்களின் கொக்கலிப்பும் அட்சராவின் காதில் விழவே இல்லை.
நிலைகுலைந்திருந்தாள் பாவையவள்.
''உன் அழகுக்கும், அறிவுக்கும் நீ எப்பேர்ப்பட்டவனே கட்டியிருக்கணும்! போயும், போயும் இவனே கட்டி ஏன்டி உன் வாழ்க்கையே நீயே அழிச்சிக்கிட்டே?!''
என்ற கரீனாவோ எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்ற, உள்ளுக்குள் பலநாட்களாய் அடங்கியிருந்த வெறுப்பெல்லாம் ஒருசேர இப்போது தளிரியள் அவளின் எண்ணத்தை விஷமாக்கின.
''இந்த மாதிரி ஒருத்தன் கூடதான், குடும்பம் நடத்தி புள்ள பெத்துக்க போறியா அட்சரா?! உனக்கு நடந்ததையே தட்டிக் கேட்காதவன், நாளைக்கு உன் பொண்ணுக்கு நடந்துட்டா மட்டும் கேட்டுடுவானா?! யோசி அட்சரா! யோசி!''
கௌஷிக் கொடுத்த காசோலைக்கு ஏற்ப மிக சிறப்பாகவே நாடகமாடினாள் கரீனா.
கொஞ்சங்கொஞ்சமாய் மனசில் வேதாவின் மீது ஊற்றெடுத்திருந்த ஏந்திழையின் காதல் கண்ணீராய் கரைந்து காந்தாரியின் கன்னம் நனைத்தது.
அவனோடான முதல் முத்தம் தொடங்கி இரவிலான மார் தூக்கமென்று எல்லாம் ஒட்டுமொத்தமாய் நொடியில் பொய்த்தது போலானது அபலை அவளுக்கு.
நெஞ்சோரத்தில் அவன் பதித்த பற்தடங்களெல்லாம் பேதையை கேலி பேசின. இருவரின் சில்மிஷங்களும் வாய் பொத்தி தலை குனிந்தன. வெம்பி போனது காரிகையின் உள்ளம்.
வேதாவின் மீது விருந்தனை அவள் கொண்ட காதலுக்கு ஆணவன் துளியும் தகுதி இல்லாதவன் என்று கதறியது சில்லுப்பட்டு போன ஆரணங்கின் இதயம்.
போதை மாத்திரை கொண்ட ஜூஸை குடித்த தெரியிழையோ, உணர்வுகள் மரித்தவளாய், கிளாஸை மேஜை மீது வைத்து, நடைப்போட்டாள் கையாலாகாதவன் என்றெண்ணிய புருஷனை நோக்கி.
வேதாவையோ ஒட்டு துணியின்றி நிர்வாணமாக்கி வேடிக்கை கொண்டிருந்தனர் கௌஷிக்கும் அவன் நண்பர்களும்.
''உன் பொண்டாட்டி பளார்னு ஒன்னு வெச்சாடா! என் புருஷன் இங்க இருக்கும் போதே என்னே தொட உனக்கு எவ்ளோ தைரியம்னு?! அதுக்காகவே, நீ பார்க்க, அவளே ஒரு பொட்டு துணியில்லாமே தொட்டு ரசிச்சு அனுபவிக்க போறேண்டா!''
என்ற கௌஷிக்கோ எகத்தாள சிரிப்போடு மயக்கத்தில் இமைகள் மூடிக்கிடந்த வேதாவின் காதில் கிசுகிசுக்க, கணவனவன் திறவா நேத்திரங்களின் ஓரத்திலோ கண்ணீர் வழிந்திறங்கியது.
யார் நெருங்க யார் நொறுங்க...
Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 28
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 28
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.