What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

நீ நெருங்க நான் நொறுங்க! : 9

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
WhatsApp Image 2024-10-19 at 4.45.54 PM.jpeg

அத்தியாயம் 9

நிகழ்காலம்

வேதாவின் படுக்கையறை


நாயகன் குளித்து வரவும், ஈரத்தலையை நாயகி துவட்டியப்படி அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

இருவரும் நேருக்கு நேர் எதிரே நடக்க, தலை தூக்கி ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்திடவில்லை.

ஆனால், வேதா வலது போக, ரதி அவளும் அதே வலது போனாள். மீண்டும் ஆணவன் இடது போக, பெண்டு அவளுமே இடது போனாள்.

உச்சுக்கொட்டிய ஆளானோ, சடீரென்று கபாலம் மேல் தூக்க, அதற்கு முன்பே அவனை ஏறெடுத்து பார்த்திருந்தாள் பெதும்பை அவள்.

அவனையே குறுகுறுவென்று பார்த்தவளை வேதாவும் திட்டிகள் சிமிட்டாது பார்த்தான்.

''யார் நீங்க?! என்னே ஏன் இப்படி பார்க்கறீங்க?!''

என்று ஆரம்பிக்க,

''அழகா இருந்தா பார்க்கத்தானே செய்வாங்க!''

என்றவனோ குறுநகை கொள்ள, குழல் மொத்தத்தையும் ஒரு பக்கமாய் போட்டு அவைகளை டவலால் கொஞ்சங் கொஞ்சமாய் பற்றி உள்ளங்கைகள் கொண்டு தேய்த்த தெரியிழையோ அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்,

''உங்களுக்கு நிஜமாவே என் மேலே கோபம் ஏதும் இல்லல்லே?!''

என்று வினா தொடுக்க, நறுதுதலின் வேள்வியில் அவளை ஆழமாய் நோக்கியவனோ, எவ்வித பதிலுமின்றி அவளைக் கடந்து ட்ரஸிங் டேபிள் நோக்கி பயணித்தான்.

அதன் இழுப்பறையை இழுத்தவனோ, உள்ளிருந்து ஹேர் ட்ரையர் (hair dryer) பெட்டி ஒன்றை எடுத்து மேஜையின் மீது வைத்து,

''யூஸ் (use) பண்ணிக்கோங்க!''

என்றப்படி அவன் அலமாரியை நோக்கி நடக்க,

''ஏற்கனவே, கண்டதையும் யோசுச்சு தலை சகட்டு மேனிக்கு வலிக்குது! இதுலே, தை வேறே யூஸ் பண்ணா, அவ்ளோதான் போங்க! மொத்த மண்டையும் சூடேறி போய் வெடிச்சிடும்!''

என்று சிரித்தவளோ, அவனை பார்த்தப்படியே தலை குனிந்து மொத்த கூந்தலையும் தரை சொட்ட விட்டு டவலால் அடித்து காய வைத்தாள்.

இதழோரம் புன்னகை கொண்ட வேதாவோ, ஏதும் பேசிடாது அவனுக்கான ஆடைகளை அலமாரியிலிருந்து கைப்பற்ற செவிகளிலோ பழைய வசனம் ஒன்று கேட்டது.

''ச்சை! சரியான பிச்சைக்காரன்! ஒரு ஹேர் ட்ரையர் கூட இல்லே! ஷவர் ஜெல்க்கு பதிலா சோப், அதுவும் தொட்டாலே கறையரே, பேரே இல்லாத கேவலமான கருமத்தை யூஸ் பண்ணும் போதே நினைச்சேன், இவன் சரியான வீணாப்போனவனாத்தான் இருப்பான்னு!''

சக்குகளை இறுக மூடித்திறந்தவனோ பெருமூச்சு ஒன்றோடு பக்கத்து அறை நோக்க முனைய,

''எங்கடா போறே படவா, புடிச்ச பொண்ணே கண்டுக்காமே ரூம்லே தனியா விட்டுட்டு?!''

நமட்டு சிரிப்பு கொண்டு கோற்றொடி அவள் கேட்க, இது காதலன் என்று பொய் சொன்னதால் வந்த வினையென்று உணர்ந்துக் கொண்ட வேதாவோ முன்னோக்கியவள் கொடுத்த லுக்கில் எச்சில் விழுங்க மறந்து ஸ்தம்பித்தான்.

ஆரணங்கு அவளோ பின்னோக்கி போன ஆளனின் மாரில் மென்மையாய் கரம் பதித்து,

''இங்க இருக்கற என்னே எவ்ளோ லவ் பண்றே?!''

என்றுக் கேட்க, வேதாவின்

''சொல்லு ரஞ்சகன்?! என்னே எவ்ளோ லவ் பண்றே?!''

என்ற பனிமொழியின் வேள்விக்கு இமைக்கா அம்பகங்கள் கொண்டு,

''ரொம்ப!''

என்று விடையளித்தான் வேதா.

**********************************

நிகழ்காலம்

டாக்டர் துவரினி இல்லம்


இன்ஸ்பெக்ட்டர் அன்பு கிட்சன் கேபினெட் விளிம்போரம் நிற்க, அவன் நெஞ்சில் பாய்ந்திருந்த கத்தி வெட்டின் மீது பஞ்சை வைத்து அழுத்தினாள் டாக்டர் துவரினி.

சட்டையை கிழித்துக் கொண்டு ஆணவன் நெஞ்சை முத்தமிட்டிருந்த கத்தியோ ஓரளவுக்கு ஆழமாகவே பாய்ந்திருந்தது எனலாம்.

காயம் பட்ட இடத்திலிருந்த சட்டையை கத்திரிக் கொண்டு அம்மணி மேலும் வெட்ட, அவளை சைகையால் நிறுத்திய அன்போ, கழட்டினான் அவன் டி-ஷர்ட்டை.

போலீஸ்காரனின் தடாலடியில், டாக்டரோ நொடியில் ஜெர்க்காகி போனாள். மனநலம் குன்றிய எத்தனையோ ஆண் நோயாளிகளை நிர்வாணமாக கூட பார்த்திருக்கிறாள் மருத்துவச்சி அவள்.

ஆனால், அன்பு போலான கட்டுமஸ்தான இளைஞனை இப்படி பார்ப்பது என்னவோ அவளை தடுமாறிடவே வைத்தது எனலாம்.

''என்ன பார்க்கறீங்க?! மருந்து போடுங்க!''

என்றவனோ, அவனை இமைக்காது வெறித்த பேதையை நிலைக்கு கொண்டு வந்தான்.

சங்கடம் கொண்டு தடுமாறிய தளிரியவளோ பார்வைகளை அவன் மீதிருந்து நகர்த்தி தேவையான பொருட்கள் கொண்டு ஆணவனுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்திட ஆரம்பித்தாள்.

''கொஞ்சம் வேறே எங்கையாவது பார்க்கறீங்களா?!''

ஏனோ சுந்தரி அவள் செயலை உன்னிப்பாய் பார்த்த அன்பின் பார்வைகளால் ஏந்திழை அவளின் கவனம் சிதறுவது போலுணர்ந்தாள் டாக்டர் அவள்.

''இல்லே, ஏற்கனவே ஒரு தடவை குண்டடி பட்டு சர்ஜரி போனப்போ, அதை எப்படி பண்றாங்கன்னு பார்க்க முடியலே! பின்னாடி ஷோல்டர்லே ஆப்ரேஷன்! அதான், இப்போ நீங்க ஸ்டிச்சிங் பண்றதை பார்க்கறேன், எப்படி இருக்கின்னு!''

இன்ஸ்பெக்ட்டர் சொன்னதை கேட்ட பொற்றொடியோ,

''வலிக்கலையா?!''

என்ற கேள்வியோடு விலோசனங்களை ஏறெடுத்து அன்பை நோக்க, சில நொடிகளுக்கு அவளை கூர்ந்து நோக்கியவன்,

''எத்தனை நாள் சரியா தூங்கலே?! கண்ணுக்கு கீழே ரொம்ப டார்க்கா இருக்கு, கருவளையம்!''

என்றிட, கனல் மூச்சு கொண்ட மாதங்கியோ வாய் மலராது அவனையே பார்க்க,

''வலிக்குதுதான்! காமிச்சிக்கறே அளவுக்கு இல்லே!''

என்றவனோ கண்ணசைத்தான் அவளை வேலையை தொடர்ந்திட சொல்லி.

டாக்டர் அவளுமே அடுத்த சில நிமிடங்களுக்கு மௌனமாகவே ஸ்டிச்சிங்கில் மூழ்கினாள்.

''முடிஞ்சது! சர்ஜிக்கல் குளு மட்டும் இருந்திருந்தா இப்படி தைக்க வேண்டிய வேலையே இருந்திருக்காது!''

என்ற பகினியோ கடைசியாய் கத்திரிக் கொண்டு இருப்பக்க நார் நூலையும் முடிச்சு போட, பட்டென அவள் கரம் பற்றினான் அன்பு.

அவனின் சடீரென்ற அதிரடியில் ஆடிப்போனாள் பனிமொழி அவள். ஆணவன் ஓங்கி பிடித்து உற்று நோக்கிய மானினியின் மணிக்கட்டினை அவளும் நோக்கினாள்.

அன்பின் கூரிய பார்வைகளோ வாஞ்சினியின் கையிலிருந்து அவள் வதனத்திற்கு தாவியது.

கவலைக் கொண்ட மெல்லியாளோ தொங்கப்போட்ட தலையோடு,

''நேத்தே கையே வெட்டிக்கிட்டு செத்திடத்தான் முயற்சி பண்ணேன்! ஆனா, முடியலே! தைரியம் வரலே! அதான், தூக்கு போட்டுக்கலாம்! இல்லே, விஷம் குடிச்சிடலாம்! அப்படியும் அதையெல்லாம் பண்ண தைரியம் வரலன்னா, பேசாமே பிளாஸ்டிக் பையை முகத்துலே போட்டு மூச்சு முட்டி போயிடலாம்னு நினைச்சேன்!''

என்றுக்கூறி முதலுதவி பெட்டியைத் தூக்கி மீண்டும் அதன் இடத்தில் வைத்தாள்.

''ஆனா, அது எதையுமே பண்ணாமே கடைசியா கையே வெட்டிக்கறே பிளானுக்கே திரும்பவும் ரிவேர்ட் அடிச்சிட்டிங்க! அப்படித்தானே?!''

என்றவனின் நக்கலில் அவன் எக்கி எடுத்து போட முனைந்த டி-ஷர்ட்டை அணிந்திட அவனுக்கு உதவிய அணங்கோ,

''காயம் ஆறரே வரைக்கும் கொஞ்சம் கவனமா இருக்கணும்! ரொம்ப அசைவு இருந்தா தையல் பிரிய வாய்ப்பிருக்கு! முடிஞ்சா பேண்டேஜ் வாங்கி கட்டு போட்டுக்கோங்க!''

என்றவளோ விரக்தியான மூச்சோடு அன்பின் பக்கத்திலேயே கேபினெட் விளிம்போரம் சாய்ந்து,

''வேலை போனதுக்காக நான் ஒன்னும் தற்கொலை முயற்சி பண்ணலே! எங்கே அட்சராவே கண்டுபுடிக்க முடியாமல் போயிடுமோன்னு ஒருவித பயம்! அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகிட்டா, வாழ்க்கை முழுக்க என்னாலே அந்த குற்ற உணர்ச்சியோட வாழ முடியாது!''

என்ற மகிலையின் அம்பகங்களிலோ கண்ணீர் பொலபொலக்க, ஆறுதலாய் அவள் புறங்கை மேல் கரம் பதித்து மெதுவாய் தட்டிக்கொடுத்தான் அன்பு.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 9
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top