- Joined
- Jul 10, 2024
- Messages
- 382
அத்தியாயம் 116
சரியான நபரை ஜோடியாக்கிக் கொள்வதல்ல காதல். குறையுள்ள ஜீவனை கூட நிறைவாக பார்ப்பதே காதல்.
அகம்பாவத்திற்கு பேர் போன காவல்காரியை காதலித்து கரம் பிடித்தான் டாக்டர் ஔகத் அவள் தேளென்ற போதும்.
அதேப்போல் கட்டியவன் ஊர் அஞ்சும் கொலைகாரன் என்றாலும் அவன்பால் நம்பிக்கைக் கொண்டாள் போலீஸ்காரியவள், நிச்சயமாய் அவன் நியாயஸ்தன் என்று.
கேதார்நாத்திலிருந்து திரும்பிய பெண்டுவோ புதிய மணவாளியாய் பிறப்பெடுத்திருக்க, காஜி மன்னனோ அவளை விலகிட ஆரம்பித்திருந்தான்.
இருப்பினும், ராத்திரி சமாச்சாரம் மட்டும் தங்கு தடையின்று நடைபெற்றது தம்பதிகள் இருவருக்குள்ளும், ஒப்புக்கு பேச்சு வார்த்தைகள் கொண்டாலும்.
கீத்து அறியவில்லை அவளுக்குள் டாக்டரின் உயிர் வளரும் நற்செய்தியை. பீரியட்ஸ் கூட அவளுக்கு எப்போதும் போல வர, பேடையவள் எண்ணத்தில் குழந்தைக்கான யோசனையே இல்லை எனலாம்.
உடம்புக்கு முடியாத நிலையை மனைவியிடம் மறைத்த ஔகத்தோ, தனியாளாய் குளியலறையில் குப்பிற கிடக்க, வந்து தூக்கி போன தம்பி சுரஜேஷோ ஒருவழியாய் அண்ணனை காப்பாற்றினான் பல மணி நேர போராட்டங்களுக்கு பின்.
பித்து பிடித்தவள் கணக்காய் அன்றைக்கு புருஷனின் பெயரையே நிறுத்தாது ஏலம் போட்ட கீத்துவோ, ஒரு கட்டத்துக்கு மேல் மயங்கி சரிந்தாள் பொத்தென ரத்த சகதியில் குளித்திருந்த ஔகத்தின் மீதே.
தம்பதிகள் இருவரையும் கொண்டு போய் பரிசோதனை கூடாரம் போலான மாளிகையில் பாத்திரப்படுத்தினான் சுரஜேஷ்.
அண்ணியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை இயந்திர ரோபோ ஹோலியின் கையில் கொடுத்தான் சின்னவன் அவன். பெண்ணவள் நாடியை தொட்ட நொடி உணர்ந்தாள் ஹோலி, டாக்டர் துணைவி கர்ப்பஸ்திரி என்று.
இருப்பினும், அதை சுரஜேஷிடம் சொல்லாது தவிர்த்தாள் ஹோலி. பெண் ரோபோ அவளின் ரூல்ஸ் படி அடுத்தவரின் உண்மையை சம்பந்தப்பட்ட நபர் அறியாமல் அவள் கண்டறிய நேரிட்டால், முதலில் அதைக் குறிப்பிட்டவரிடம்தான் கூறிட வேண்டும். ஆகவே, காத்திருந்தாள் ஹோலி, போலீஸ்காரியவள் மயக்கம் தெளியும் வரை.
மூத்தவனை தூக்கி போய் அலுமினிய கட்டிலில் போட்ட சுரஜேஷோ, அண்ணனின் உடலெங்கும் பரவிக் கிடந்த துளைகளை முதலில் அடைத்திடும் வழியை கையிலெடுத்தான்.
குட்டியான பல ரோபோக்கள் சுரஜேஷின் கட்டளையை பின்பற்றி, அரங்கேறிய சர்ஜரிக்கு உறுதுணையாய் நின்றன.
சாக கிடப்பவனின் புகலில் (உடல்) செலுத்த வேண்டிய அனஸ்தீசியாவை அதிகளவிலேயே செலுத்தினான் சுரஜேஷ்.
அடால்ட் ஸ்டெம் செல்களைக் (Adult stem cells) கொண்டு மூத்தவன் உயிர் காக்க முடிவெடுத்தான் தம்பியவன்.
அலோஜெனிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை (Allogeneic stem cell transplantation) சத்தியமாய் அண்ணனுக்கு சாத்தியப்படாத ஒன்றே என்றறிவான் சின்னவனவன்.
ஔகத்தை பொறுத்த மட்டில் இச்செயல்முறைக்கான பேச்சே அவன் விடயத்தில் செல்லாது. காரணம், அவன் பரம்பரை வியாதி கொண்டிருந்த வீரியத்துக்கு, அடுத்தவர்களின் உதிரம் என்பது அவன் செல்லுக்குள் சென்று செத்து மடிந்ததுதான் மிச்சம்.
இதை அவனும் சுரஜேஷும் லேப் டெஸ்டிங் ஒன்றின் மூலம் கண்டறிந்தனர். பல வருடங்களுக்கு முன்னாள் எலியொன்றை கொண்டு ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர் சகோதரர்கள் இருவரும்.
மகிந்தகம் (எலி) ஒன்றுக்குள் டாக்டரின் ஸ்டெம் செல்லையும், அதோடு சேர்த்து வேறொரு நபரின் ஸ்டெம் செல்லையும் செலுத்தினர். அதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்க முடிவெடுத்தனர்.
கண்டிப்பாய் கணபதியின் வாகனம் அல்பாயிசில் போயிடுமென்று சுரஜேஷ் நம்பியிருக்க, ஔகத்தோ டெஸ்ட்டர் எலியின் உடல் கண்டிப்பாய் உபாதைக் கொள்ளும் என்றே நினைத்தான்.
ஆனால், ஆகனிகமோ (எலி) இருவருக்கும் விபூதி அடித்தது, புதியதொரு செல் அதற்குள் இருக்கின்ற தடயத்தையே அழித்து.
டாக்டரின் ஸ்டெம் செல், மூஷிகனுக்குள் இருந்த அதன் செல் உட்பட புதியதாய் செலுத்தப்பட்ட நபரின் செல் முதற்கொண்டு ரெண்டையும் முற்றாய் அழித்து தனியொரு செல்லாய் களிமமதை (எலி) ஆட்சி செய்தது.
அதனால், அப்போதே அண்ணன் தம்பி இருவரும் முடிவெடுத்து விட்டனர், இனி எக்காரணத்தைக் கொண்டும் ஔகத்தின் ஸ்டெம் செல்லோடு விளையாடிட கூடாதென்று.
இதைக் கருத்தில் கொண்டே, அடால்ட் ஸ்டெம் செல்லின் இரண்டாவது செயல்முறையை முன்னிறுத்தி மூத்தவனுக்கு சர்ஜரி நிகழ்த்திட முடிவெடுத்தான் தம்பியவன்.
அவுட்டோலோகஸ் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை (Autologous stem cell transplantation) என்றழைக்கப்படும் இச்செயல்முறை சுலபமான ஒன்றாகும்.
அதாவது, இது பேஷண்டின் சொந்த ஸ்டெம் செல்லை கொண்டே அவர்களின் நோயை குணப்படுத்தும் முறையாகும். இச்செல்லை சம்பந்தப்பட்ட நோயாளியின் ரத்தம், முதுகெலும்பு மற்றும் தசைகளிலிருந்து பிரித்தெடுத்திடலாம்.
ஆனால், ஔகத் இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என்றறிந்த சுரஜேஷோ, ஆராய்ச்சி செய்யும் பொருட்டு பல ஆண்டுகளுக்கு முன்னரே குப்பியில் (Vials) சேகரித்து வைத்திருந்த அண்ணனின் ஸ்டெம் செல்களை குளிப்பெட்டியிலிருந்து வெளியிலெடுத்தான்.
டாக்டரின் முதுகெலும்பு மற்றும் செம்பாலிலிருந்தும் எடுக்கப்பட்டிருந்தன அச்செல்கள்.
கிரையோஜெனிக் தொட்டியின் (Cryogenic tanks) உள்ளே நைட்ரஜன் திரவத்தோடு (liquid nitrogen) சேர்த்து டாக்டரின் சோணமும் (ரத்தம்) பத்திரப்படுத்தப்பட்டிருந்தது.
இப்படியான பாதுகாப்பின் மூலம் அதன் அசல் தன்மை நீண்டகாலத்திற்கு மாறாமலும் கெடாமலும் இருக்கும் என்பது மருத்துவ ரீதியான கூற்றாகும்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பே, மூன்று வார கால அடிப்படையில், ஆய்வகத்தில் வைத்து நன்றாக வளர்த்து, இன்றைய நாள் வரை கண்ணுங்கருத்தமாய் பராமரிக்கப்பட்டு வந்த தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் ஸ்டெம் செல்கள், மீண்டும் அவனுக்குள்ளேயே கை நரம்பின் வழி செலுத்தப்பட்டன.
எப்படியும் அண்ணனவன் தேறி வர குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகுமென்பதை உணர்ந்த சுரஜேஷோ, அவனை ஓரிரு நாட்களிலேயே குணமாக்க முடிவெடுத்தான்.
அதற்கு அவன் பயன்படுத்திய மருந்துதான் புதியதாய் ஆராய்ச்சியாளனவன் கண்டுப்பிடித்திருந்த திகாந்தம் என்ற திரவமாகும்.
ஏறக்குறைய, ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்டு இத்திரவத்தை உருவாக்கும் ஆரய்ச்சியில் ஈடுப்பட்டிருந்தான் சுரஜேஷ், யாரின் துணையுமின்றி.
தனித்தனியே வேக வைத்து சேகரித்த விரால் மீன் மற்றும் ஆயிஸ்ட்டர் (oyster) நீர், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, தேன், உடும்பின் கொழுப்பு எண்ணெய் என்று ஒரு பெரிய கூட்டணியையே கலவையாக்கி காயங்களை விரைவாக குணப்படுத்திடும் மருந்தொன்றைக் கண்டுப்பிடித்திருந்தான் சுரஜேஷ்.
அதை உட்கொண்ட ஓரிரு நாட்களிலேயே உள்காயங்கள் அனைத்தும் சரியாகிடும் வண்ணம், பொருட்களின் அளவீடுகளை கண கச்சிதமாய் கலந்து அத்திரவத்தை உருவாக்கியிருந்தான் டாக்டரின் தம்பி.
ஆராச்சியின் வெற்றியை உயிருக்கு போராடிய எலியொன்றின் மூலம் உறுதி படுத்திக்கொண்டான் சுரஜேஷ். அவன் உழைப்பு வீண் போகவில்லை. நம்பி இறங்கிய ஆராய்ச்சி அவனை ஆனந்தக்கடலில் தள்ளியது.
இருப்பினும், ஒருமுறைக்கு பலமுறை பல சிறிய விலங்குகளைக் கொண்டு பரிசோதனையின் முடிவுகளைக் கணக்கெடுத்துக் கொண்டான்.
சுரஜேஷுக்கு அவனின் கண்டுப்பிடிப்பு ஒன்றிலிருந்து இரண்டு நாட்களுக்குள் அதன் வேலையை உள்ளுக்குள் தொடங்கி முடித்திருக்க வேண்டும். அதுவே திகாந்தம் என்ற திரவத்தின் முதன்மை டியூட்டியாக இருந்திட வேண்டுமென்பது அவன் லட்சியமாகும்.
ஆகவே, ஒவ்வொரு பிராணிக்கும் இரு நாட்களில் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறதா இல்லை மேற்கொண்டு நாட்கள் இழுக்கிறதா என்று கழுகாய் கண்காணித்தான் சுரஜேஷ்.
கூடவே, அதற்கு பிந்திய நாட்களில் சிறு உயிர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதையும் கருத்தில் கொண்டு அவைகளை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ஆய்வகத்திலேயே வைத்து கழுகாய் நோட்டமிட்டான் சின்னவனவன்.
இப்படி பல கட்டங்களை தாண்டி வந்தவன் கடைசியாய் அதை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த காத்திருந்தான்.
அதற்குள் டாக்டருக்கு இப்படி ஆகா, வேறு வழியே இல்லாது முதல் முறை அண்ணன் அவனுக்கே திகாந்தம் திரவத்தை பயன்படுத்தும் நிர்பந்தத்திற்கு ஆளாகினான் சுரஜேஷ்.
திகாந்தத்தை பயன்படுத்தி பலனை அனுபவிக்க போகும் முதல் மானிடன் ஔகத்தான்.
டாக்டர் கூட அறிந்திருக்கவில்லை தம்பியின் ஆராய்ச்சியையும் கண்டுபிடிப்பையும். ரகசியமாகவே வைத்திருந்தான் சுரஜேஷ்.
ஆனால், படாஸுக்கு தெரியும், சுரஜேஷின் ஆராய்ச்சியைப் பற்றி. இதனால் ஆரம்பித்த ரத்த காவுதான் படாஸின் கொடூரமான கைவண்ணங்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் பார்ப்போர் அத்தனை பேரிடமும் அன்பை மட்டுமே செலுத்தி அதையே திரும்பவும் எதிர்பார்த்த பாவப்பட்ட ஜீவன்தான் ஔகத் சர்வேஷ் குமார்.
பதினெட்டு வயதில் மருத்துவக் கல்வியை தொடங்கியவன், ஆராய்ச்சி, படிப்பென்று அவனின் இருபதாவது வயது வரைக்கும் நல்ல ஜாலியாகத்தான் இருந்தான்.
அதே வயதில்தான் ஆர்வக்கோளாறு கொண்டு ரத்தினக்கற்கள் மூலமாய் சுரஜேஷுக்கு மருந்து கண்டுப்பிடித்தான் டாக்டர்.
அது ஏடாகூடமாய் போக, பின் அவனேதான் தம்பியைக் காப்பாற்றினான் திசு இன்ஜினியரிங் செயல்முறையைப் பயன்படுத்தி.
இருபத்தி ஒரு வயதில் தம்பி ஓவியமாய் புனைந்த கிருத்தியை நேரில் கண்டு காதல் கொண்டான். ஆனால், ஏந்திழை அவளோ பேரழகனை மட்டந்தட்டி அவன் மனசை உடைத்தாள்.
என்னதான், கீத்து பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாலும், மனசுக்குள் அவளுக்கான இடத்தை யாருக்கும் கொடுத்திடாது எப்போதுமே அவளின்பால் தீராக்காதலே கொண்டிருந்தான் ஔகத்.
வலியை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டவனோ, மீகன் மற்றும் கெய்டனின் அனுமதியோடு தாய் சுஜியை ஜப்பான் அழைத்து வந்து விட்டான்.
ரீவா இல்லாது விரிச்சோடியிருந்த மனையை கயல் தீராவோ அழிச்சாட்டியங்கள் கொண்டு கலவரமாக்கினாள்.
சோகத்தோடு சந்தோஷமும் கூடிப்போனது மனநலம் பாதிக்கப்பட்ட சுஜியோ, கணவனை போலவே இருக்கும் கெய்டனை பாடாய் படுத்திட. விஞ்ஞானி அவனோ சுயம் மறந்த சுஜியை குழந்தையாகவே பார்த்தான்.
மகன்கள் இருவரும் பெரியவர்களை பார்த்து சிரித்தே காலத்தை கடத்தினர் பல பிரச்சனைகள் கொண்டாலும் தினசரி நாளில்.
ஔகத்தின் இருபத்தி மூன்றாவது வயதில் அவனோடு ஒன்றாக மருத்துவம் படித்த ஆர்செனியோ என்ற மாணவனோ பேரழகனின் பின்னாடியே சுற்றி திரிந்தான் டவுட்ஸ் கேட்டு.
படிப்பு என்பதால் ஔகத்தும் முகம் சுளிக்காது நண்பனாகி போனவனின் அத்தனை சந்தேகத்தையும் பொறுமையாய் தீர்த்து வைத்தான். ஆனால், சுரஜேஷுக்கோ அண்ணனோடு புதியதாய் கூட்டு சேர்ந்திருந்த ஆர்செனியோவை சுத்தமாய் பிடிக்கவில்லை.
மூத்தவனிடம் மனதின் நெருடலை சொல்லிய சின்னவனோ, புதியவனோடு ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி எச்சரித்தான் அண்ணன் அவனை. தம்பியின் பேச்சுக்கு மறுப்பேச்சு கொண்டிடா சகோதரனோ, ஆர்செனியோவை தள்ளி வைத்தான் அவன் வாழ்விலிருந்து.
ஆனால், அதற்கு அவசியமே இல்லாதபடி செய்து விட்டார் கடவுள். புதியவன் அவன் குடும்பத்துடன் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தான். நண்பர்கள் இருவரும் மொத்தமாய் தொடர்பற்று போயினர் சில மாதங்களிலேயே.
காலங்கள் வெகு வேகமாய் ஓட, இருபத்தி நான்கு வயதில் டாக்டராகி பட்டமளிப்பு விழா கொண்டான் ஔகத். பணியை தொடங்கும் முன், டாக்டர் லைசன்சுக்கான கட்டாய தேர்வை எழுத வேண்டி அவனை தயார் செய்துக் கொண்டான் ஆணவன்.
அதையும் நல்லப்படியாய் எழுதி முடித்தவன், அவனின் இருபத்தி ஐந்தாவது வயதில் ஜெனரல் டாக்டராக ஜப்பானின் பொது மருத்துவமனையில் பதவியேற்றான். எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்க தம்பிக்கான மருந்து கண்டுப்பிடிக்கும் ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்திட ஆரம்பித்தான் ஔகத்.
பல வகையான கனிமங்கள், ரத்தினக்கற்கள் மற்றும் வைரங்கள் அவனின் ஆராய்ச்சிக்கு தேவைப்பட்டன. ஒன்று, ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாது என்று கருதியவன் இதை ஒரு தொழிலாகவே உருவாக்கி விட்டால் கணக்கில்லாமல் இஷ்டத்திற்கு ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டிடலாம் என்று நினைத்தான்.
இதைப்பற்றி கெய்டனிடம் சொல்லி அவனின் கருத்தை கேட்டான் ஔகத். மகன் கேட்க டபுள் ஓகே என்ற டேடியோ, சட்ட ரீதியான விடயங்களுக்கு மீகனையும், கர்ணாவையும் கலந்தாலோசிக்க சொன்னான்.
பெரியவர்கள் மூவரின் ஆசியோடு மூர்த்திகன் குரூப்ஸ் என்ற சாம்ராஜியத்தை உருவாக்கினான் ஔகத். கேடியின் வாரிசாக அவனுக்கு சேர வேண்டிய சொத்தின் ஒரு பங்கை தொழிலுக்காக அவனிடத்தில் கொடுத்தான் மீகன்.
சுறாமீன்கள் குழுமியிருக்கும் தீவை சுரஜேஷ் தேர்தெடுக்க அவ்விடத்தை மூர்த்திகன் குரூப்ஸின் தலைமை செயலகமாய் உருமாற்றினான் ஔகத்.
அதே வேளையில் ஆழ்கடலில் கோட்டையொன்று வேண்டுமென சின்னவனவன் கேட்க, அதற்கான ஏற்பாடுகளையும் செவ்வென செய்தான் டாக்டர், திறமையான டிசைனர்களை கொண்டு.
மூர்த்திகன் என்ற பெயரே கீத்துவிற்காகத்தான். அதன் அர்த்தமோ குமரன் என்று பொருள்படும்.
இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் அவளுக்கும் இப்பெரிய ராஜ்யத்தில் பங்குண்டு என்பதைக் கருத்தில் கொண்டே, பாவையவளுக்கு பிடித்தாற்போன்ற முருகன் பெயரையே தொடங்கியிருந்த புதிய தொழிலுக்கு சூட்டியிருந்தான் ஔகத்.
இதுநாள் வரைக்கும் எதற்குமே கேடியின் பெயரை பயன்படுத்திடா மகனுக்காய் நிமலனே களத்தில் இறங்கி உடன் பிறவா தம்பியான தராதீஷின் மூலம் ஔகத்திற்கு தேவையான கற்கள், மரகதங்கள், வைரங்கள் என்று அத்தனையையும் கொடுத்திட கோரிக்கை வைத்தான்.
கேடி என்னதான் உலக வாழ்க்கையைத் துறந்தவனாகி தனித்திருந்தாலும், நடக்கும் அத்தனையையும் அறிந்து, மற்றவர்களுக்கு வேண்டிய நேரத்தில் தவறாது உதவிக்கரம் நீட்டிடுவான்.
அவனோடு தொழில் செய்த அனைவருக்கும் தெரியும் பிஸ்னஸில் அவன் அசைக்க முடியா சிங்கமென்று. ஆகவே, வியாபார கோஷ்டிகளுக்கு எப்போதுமே அவன் சொல்லின் மீது ஒரு மரியாதை உண்டு.
ஆகவே, டாக்டரின் தொழிலுக்கு பழைய வியாபாரிகளால் பெரிய போட்டிகள் ஏதுமில்லை, அவன் கேடி மகன் என்பதால்.
ஔகத்தும் அப்பனின் பெயருக்கு கடுகளுவும் களங்கம் ஏற்படுத்திடாது தொழிலில் கைசுத்தம் கொண்டான். யார் பார்வைக்கும் தெரியாது லேப்பிலேயே இருந்தான். பல இடங்களிலிருந்து அவனின் ஆராய்ச்சிக்கான கற்கள் வந்து குவிந்தன ஆய்வகத்தில்.
சின்னவனோ அலுவலக பொறுப்பை கையிலெடுத்தான். ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சிக் கொண்ட மூர்த்திகன் குரூப்ஸின் தனியொரு சக்ரவர்த்தியாக காட்சியளித்தான் சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா, பார்ப்போருக்கு.
ஆனால், அவனுக்கு பின்னால் அண்ணன் ஔகத் இருப்பது குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே அறிந்த விடயமாகும். முன்னாளில் இருந்து காய் நகர்த்துவது மட்டும்தான் சுரஜேஷ்.
ஆராய்ச்சி வெற்றிக் கண்டதோ இல்லையோ, சகோதரர்களின் வைரக்கல் பிஸ்னஸ் பிச்சுக்கொண்டு போனது. ஒரு வருட சம்பாரிப்பெல்லாம் அசல்ட்டாய் மூன்றே மாதங்களில் கல்லா கட்டியது.
அலுவலகத்தை விரிவாக்கினார்கள் அண்ணனும் தம்பியும் தொழில் தொடங்கிய ஆறே மாதங்களில். பல படித்த பட்டதாரிகளை பணியில் அமர்த்தினான் சுரஜேஷ்.
அப்படி வந்து மூர்த்திகனில் ஒட்டிக் கொண்டவள்தான் ஓவியா. சுரஜேஷின் செயலாளினியாக பொறுப்புக் கொண்டவளோ, அவனை எப்படியாவது வளைத்து போட்டு மொத்த சொத்தையும் ஆட்டையைப் போட்டிட எண்ணங்கொண்டாள்.
கேடியிடம் வேலை பார்த்த பத்ராவின் மகனானே பீஷ்மரே, சின்னவனின் பர்சனல் காவலாளியாக நியமிக்கப்பட்டான்.
வியாபாரம் சூடு பிடித்து அது பாட்டுக்கு சமூகமாய் போக, ஔகத்தோ ஜப்பானுக்கு டாட்டா சொல்லி ஜெர்மனியில் போய் செட்டிலாகினான் அவன் தாய் சுஜியோடு.
தம்பி சுரஜேஷோ மூத்தவனை புரிந்துக் கொள்ளும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்தான். ஆதலால், வாரம் ஒருமுறை மட்டும் ஜெர்மனி பறந்து போய் அண்ணனை பார்த்து வந்தான்.
தம்பிக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் கடமை ஒருப்பக்கம் இருந்தாலும், மனித மூளையை ஆராய்ச்சி செய்யும் ஆர்வமும் ஔகத்திடம் வேரூன்றி இருந்தது.
ஆகவே, நியூரோவில் மேற்படிப்பு படித்திட விருப்பங்கொண்டான் ஔகத். பகுதி நேரத்தில் படிப்பைத் தொடர்ந்து முழு நேர ஜெனரல் டாக்டராய் அங்கிருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்தான்.
இப்படியான நிலையில் நியூரோ சம்பந்தமான மாநாடு ஒன்றில் கலந்துக் கொள்ள கேனடா செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஔகத்திற்கு. ஆகவே, புத்தி சுவாதீனம் இல்லா தாயை கூட்டிப்போய் ஜப்பானில் விட்டுவிட்டு அவனின் பயணத்தை தொடர்ந்தான் ஔகத் கேனடாவிற்கு.
அக்கூட்டச்சந்திப்பில்தான் கண்டான் கேடி மகன் முதன் முதலாய் மமாடியை. ஒப்புக்கு மட்டுமே புன்னகைத்துக் கொண்டனர் அருகருகே அமர்ந்திருந்த இருவரும்.
மமாடி ஒரு மீநுண் ஆராய்ச்சியாளனாவான். புற்றுநோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்கும் கடமையை பிரதானமாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றில்தான் அவனுக்கே வேலையே.
பேர் போன நிறுவனத்துக்கு தொழில் முறை எதிரிகள் அதிகம் என்பதால் மமாடி அவன் பணியை பற்றியோ அவனைப் பற்றியோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டான்.
பக்கமாய் அமர்ந்து கைக்கூட குலுக்கிக் கொள்ளாத இருவருக்கும் ஒரே தங்கும் அறையை ஏற்பாடு செய்திருந்தது மாநாட்டு குழு.
அறைக்குள்ளோ யார் பேச்சை ஆரம்பிப்பது என்ற தாயகத்தை மமாடியே உடைத்தான், ஔகத்திடம் ஸ்விங் கம்மை நீட்டி. முறுவலித்து இட்ஸ் ஓகே, தேங்கியூ என்று ஆரம்பித்த அவர்களின் அன்றைய உரையாடல் மாநாட்டுக்கு பின்னும் நட்பாய் தொடர்ந்தது.
போனில் கதைத்தவர்கள் பின்னாளில் ஒரே மருத்துவமனையில் பணிபுரிய ஆரம்பித்தனர். கேனடா வாழ் குடிமகனான மமாடி மாற்றலாகி வந்தான் ஜெர்மனுக்கு, தோழன் ஔகத் அழைக்க.
ஆசிரமத்தில் பிறந்து வளர்ந்த மமாடி, டபுள் என் என்ற பவுண்டேஷன் மூலமாகத்தான் அவன் மேற்கல்வியை தொடர்ந்திருந்தான்.
அதாவது, கேடியின் மம்மியான மது ஆரம்பித்து, பின், நிமலனின் தலைமையில் செயல்பட்டு இப்போது தேவ்வின் மேற்பார்வையில் இருக்கின்ற தனியார் இலவச கல்வியமைப்பு நிறுவனம்தான் அதுவாகும்.
டபுள் என், என்ற வார்த்தையை ஒரு முறை ஔகத்தை சந்திக்க அவன் வீடு வரைக்கும் சென்ற பொழுது கண்டான் மமாடி, காஃபி டேபிளின் மீதிருந்த சில இன்விடேஷன்களில்.
வந்தவனை வரவேற்று பேச்சு கொடுத்த கெய்டனிடம், வளர்ந்துக் கெட்டவன் வெளிப்படையாய் கேள்வித் தொடுக்க, பதிலளித்தான் சுரஜேஷின் தந்தை, டபுள் என் பவுண்டேஷன் அவன் குடும்ப நிறுவனமே என்று.
நெகிழ்ந்து போனான் மமாடி. நன்றியுணர்ச்சிக் கொண்டான், இதுநாள் வரைக்கும் சோறு போட்டு படிக்க வைத்த நல்லுள்ளங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்க.
சாதாரண நட்பை பரிமாறிக்கொண்ட டாக்டரும் மமாடியும், பின்னாளில் ரொம்பவே நெருக்கமாகி போனார்கள். கறுப்பின கலவைக்காரன் அவனோ, உண்மையை சொன்னான் ஔகத்திடம் அவன் யார், இதற்கு முன்னர் செய்த ஆராய்ச்சி என்னவென்று.
மெய்யறிந்த நொடி, அறிவியலில் ஆர்வங்கொண்ட இருவரும் நகமும் சதையுமாய் ஆகிப்போயினர். சுரஜேஷ் கூட மமாடியின் மீது நல்லதொரு அபிப்பிராயமே கொண்டான்.
நண்பர்கள் இருவரும் சேர்ந்து பல ஆராய்ச்சிகள் புரிந்தனர், உயிர்கொல்லி நோயான கேன்சருக்கு மருந்து கண்டுப்பிடித்திடும் வகையில்.
அப்படியானதொரு நாளில் டாக்டருக்கு உடம்பு முடியாது போய் ரத்த வாந்தியெடுக்க, பதறிய ஆரூயிர் நண்பனோ சுரஜேஷுக்கு தகவல் கொடுத்தான், அவன் ஜெர்மன் வந்திருக்க.
நல்ல வேலை சின்னவனால், மூத்தவனை மருத்துவமனைக்கு தூக்கி போகவிருந்த மமாடியின் பயணமோ தடுத்து நிறுத்ததப்பட்டது.
காரணம் புரியாதவன் சுரஜேஷிடம் வாக்குவாதம் கொள்ள, எதையும் காதில் போட்டுக் கொள்ளா தம்பியோ முதலில் மமாடியை அங்கிருந்து வெளியேற்றினான்.
நடப்பதேதும் புரியதவனோ மனம் உடைந்தவனாய் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். போன் எடுக்காத ஔகத்திற்கு அழைத்து சோர்ந்து போனான் மமாடி. ரெண்டு நாட்களுக்கு பித்து பிடித்தவன் கணக்காய் ஆய்வகத்தையே சுத்தி வந்தான்.
சுரஜேஷோடு முட்டி மோதினான். உயிர் நண்பனை காணத் துடித்தான். கெய்டனை சந்தித்து நடக்கும் கூத்துக்கு விளக்கம் கேட்டான். யாருமே அவனை மதித்திடாத பட்சத்தில் கோபம் தலைக்கேற, அவன் பிழைப்பை பார்த்திட சித்தம் கொண்டான்.
ஔகத்தே தேடி வரட்டும் என்று விட்டுவிட்டான் மமாடி. அதே வேளையில், நண்பனின் ரத்த வாந்தி அவன் ஆடையில் கறையாய் ஒட்டியிருக்க, அதைக் கொண்டு நண்பனுக்கு என்ன பிரச்சனை என்று ஆராய தொடங்கினான்.
புற்றுநோயாக இருக்குமோ என்றெண்ணியவனோ ஆடிப்போனான் வந்த அறிக்கையைக் கண்டு. குழப்பங்கொண்டவன் ஓடினான் ஔகத்தை தேடி. அப்போதுதான் குணமாகியிருந்தான் டாக்டரவன் நடக்க கூடா சம்பவம் நடந்து முடிந்திருக்க.
சுரஜேஷ் சொல்லாமலேயே உணர்ந்துக் கொண்டான் ஔகத், கண் விழித்த மூன்றாவது நாள், வழக்கமாய் எடுத்துக் கொள்ளும் இன்ஜெக்ஷனை எடுத்துக் கொள்ளாததால் வந்த வினைதான், குருதி வாந்தியென்று.
நண்பனை கண்ட நிமிடம் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய மமாடியோ, நேரடியாகவே கேட்டு விட்டான் தோழனவன் மறைக்கும் ரகசியம் என்னவென்று.
ஏதேதோ காரணம் சொன்ன ஔகத்தோ நிஜத்தை ஒளித்தான் நண்பனிடமிருந்து. புரிந்தவனோ அதற்கு மேலும் டாக்டரை நச்சரிக்காது வாய் மூடிக்கொண்டான்.
வலித்தது மமாடிக்கு, டாக்டர் அவனை மூன்றாவது நபர் போல் பிரித்து பார்த்த நிதர்சனம். நண்பனின் ரிசால்ட்ஸ் கையிலிருந்தும் அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாது அங்கிருந்து நகர்ந்தான் வேதனையில் உழன்றவனாய்.
ஒன்னும் மண்ணுமாய் இருந்தவர்களின் உறவிலும் சிறு விரிசல் விழக்கண்டான் ஔகத் அச்சந்திப்பிற்கு பிறகு. வெளிப்படையாகவே தெரிந்தது டாக்டருக்கு மமாடி விலகி போகிறான் என்று. வருத்தங்கொண்டான் ஆணவன். ஆறுதல் சொன்னான் சின்னவன்.
மமாடியோ காணாமலே போனான் ஒரு நாள், சொல்லாமல் கொள்ளாமல். தேடியலைந்தான் டாக்டர் நண்பனவனை, தகவல் சொல்லாது போனவன் மீது கடுப்பே கொண்டாலும்.
சுரஜேஷும் கூட அவன் பங்கிற்கு அண்ணனின் உயிராகி போன தோழனை தேடினான். ஆனால், மமாடியோ எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
உடைந்துப் போனான் ஔகத். கெய்டனோ மகனை சமாதானப்படுத்தினான். சுரஜேஷோ மூத்தவனை எண்ணி கவலைக்கொண்டு படுத்த படுக்கையாகினான்.
தொலைத்தவனை தேடி, இருப்பவனை இழக்க நேர்ந்த முட்டாள்தனத்தை உணர்ந்த ஔகத்தோ குற்ற உணர்ச்சிக் கொண்டு வருந்தினான்.
கெய்டனோ சின்னவனின் சரீரம் கொண்டிருக்கும் இக்கட்டான நிலையை எடுத்துரைத்தான் பெரியவனிடத்தில். சுரஜேஷின் தேகத்துக்குள் ஏற்படுகின்ற ரணகளமான வேதியல் மாற்றங்களை தடுத்திட, வீரியமான மருந்துகள் வேண்டுமென்றான்.
பெத்தவனின் வயிற்றில் பாலை வார்த்திட முடிவெடுத்தான் ஔகத். வேலையை பகுதி நேரமாக்கி படிப்பை முழு நேரமாக்கினான். அதன் சாக்கில் எந்நேரமும் லேப்பிலேயே குந்திக் கிடந்தான். ஆராய்ச்சிகள் பலப்புரிந்தான்.
இருப்பினும், எதுவுமே சுரஜேஷின் நிலையை மாற்றிடவில்லை. மாறாக, அவனுக்குள்ளிருந்த விவகாரமான செல்களோ, ஔகத்தின் கண்டுப்பிடிப்புகளை தின்று தீர்த்தது.
படாஸ்...

Author: KD
Article Title: படாஸ்: 116 (பாகம் 1)
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.